Quantcast
Channel: Savukku
Viewing all 244 articles
Browse latest View live

கருணாநிதி விரும்பி வைத்துக் கொண்ட ஆப்பு.

$
0
0

2 ஆகஸ்ட் 2011 அன்று, ஜாபர் சேட் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்ததைக் கண்டித்து, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஜாபர் சேட் பழிவாங்கப்படுகிறார் என்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கை. 

AVN_KARUNA_120812f

பழிவாங்கும் பொய் வழக்கு நடவடிக்கைகளில் அதிமுக அரசு எந்த அளவிற்கு ஈடுபடுகிறது என்பதற்கு மற்றும் ஓர் உதாரணத்தை விளக்கிட விரும்புகிறேன். கடந்த கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் புலனாய்வுத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பணியாற்றியவர் தான் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஜாபர்சேட்,

ஐ.பி.எஸ். அரசுக்கு எந்த அளவிற்கு உண்மையாக, விசுவாசமாக பணியாற்ற வேண்டுமோ அந்த அளவிற்கு அவர் பணியாற்றினார் என்பது உண்மை. ஆனால் தற்போதுள்ள ஆட்சியினர் நேர்மையாகவும், திறமையாகவும் பணி புரிந்ததையே ஒரு குற்றமாக எடுத்துக் கொண்டு, நீ எப்படி அரசுக்கு விசுவாசமாகப் பணியாற்றலாம்? அது தவறல்லவா? அதனால் நீ இருக்க வேண்டிய இடம் மண்டபம் முகாம் தான்! எனவே உன்னை அங்கே மாற்றுகிறேன் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; பழி வாங்கும் அஸ்திரம் பாய்ந்துள்ளது. கூடுதல் டி.ஜி.பி. நிலையிலே பணியாற்றும் அந்த அதிகாரியின் மீதான குற்றச்சாட்டு தமிழக அரசின் வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டினைப் பெற்று அதன் மூலமாக பல கோடி ரூபாயைச் சம்பாதித்துவிட்டார் என்பதுதானாம்!

இந்த வீட்டு வசதி வாரிய மனைகள் ஒதுக்கீடு என்பதில் - அரசு விருப்புரிமை அடிப்படையில் வழங்கலாம் என்று முடிவெடுத்ததே அதிமுக ஆட்சியிலேதான். அதற்கான அரசாணை 25-1-1979-ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் அல்லது மனைகளில் 85 சதவிகிதத்தை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்வதும் - மீதியுள்ள 15 சதவிகிதத்தை அரசு, தனது விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்வதும் தொடர்ந்து நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறையாகும். அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ் தரப்படும் வீடுகள் அல்லது மனைகள் சலுகை விலையிலே தரப்படுவதில்லை. குலுக்கல் முறையிலே விற்கப்படுபவர்களிடம் பெறப்படும் அதே தொகைதான் - அதாவது சந்தை மதிப்பைத்தான், விருப்புரிமை அடிப்படையில் பெறுபவர்களிடமும் வசூலிக்கப்படுகிறது. அதிலும் தற்போது தி.மு.கழக அரசின் ஆட்சிக் காலத்தில் விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ் வீட்டுமனை பெற்றவர்கள், அவர்கள் மனையின் விலையாகக் கட்ட வேண்டிய தொகை மிக அதிகமாக இருப்பதாகக் கூறி, அந்தத் தொகையை கட்ட முடியாத நிலையில் வீட்டு வசதி வாரியத்திற்கே மீண்டும் அந்த வீட்டுமனைகளை ஒப்படைத்து விட்டார்கள் என்பதற்கு பல எடுத்துக் காட்டுகள் உண்டு.

எந்த விதிமுறைகளையும் மீறி இந்த வீட்டுமனைகள் கழக ஆட்சிக்காலத்தில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சியிலே என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவோ, அவற்றில் ஒன்றைக்கூட கழக ஆட்சிக் காலத்திலே மாற்றவில்லை. இந்த அரசாங்கம் பழி வாங்கும் நடவடிக்கைக்கு உச்சக் கட்டமாகச் சென்று, இந்தக் குறிப்பிட்ட அதிகாரியைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்ததோடு, அவர் மண்டபம் முகாமிலேதான் பணி நீக்கக் காலத்திலே இருக்க வேண்டும், சென்னையிலே உள்ள அவரது குடும்பத்தினரோடு இருக்கக் கூடாது என்றால் அதற்கு என்ன பெயர்? அதிலும் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் அவர். தற்போது அவர்களுக்கு நோன்பு காலமாகும். இந்த நேரத்தில் அவர் குடும்பத்தினரைக் காணக் கூடாது என்றெல்லாம் உத்தரவிடுவது எந்த அளவிற்கு நெறிக்குட்பட்டது? ஏன் இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள்? அரசுக்கு விசுவாசமான அதிகாரிகளையெல்லாம் பழி வாங்கினால், மற்ற அதிகாரிகள் எல்லாம் ஒரு அரசுக்கு விசுவாசமாக நாம் பணியாற்றினால், அடுத்து வரும் ஆட்சியிலே தாங்கள் பழி வாங்கப்பட நேரிடும் என்று நினைத்தால், தங்கள் பணியினை முறையாகவும் நிறைவாகவும் ஆற்ற முடியுமா? ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கெல்லாம் சங்கங்கள் எல்லாம் இருப்பதாகச் சொல்கிறார்களே?

jaffer_sait3

அந்தச் சங்கங்கள் எல்லாம் இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதிக்கிறதா? ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குரிய அதிகாரிகள் என்று சொல்லப்படுகிறதே, அந்த மத்திய அரசாவது இதுபோன்ற நிலைமைகளில் கவனம் செலுத்துமா? இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி எப்போது? பழிவாங்குவதிலே நிர்வாகத்திறனைக் காட்ட முயற்சிப்பதை, நிர்வாக வரலாறு நிச்சயமாக ஏற்காது!


ஜாபர் சேட் மீதுள்ள புகார்களுக்கு விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை

$
0
0

சவுக்கு தளத்தில், முன்னாள உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட் மற்றும், கலைஞர் டிவியின் மேலாண் இயக்குநர் சரத் குமார் ரெட்டி இடையேயான உரையாடல் சனியன்று வெளியிடப்பட்டது. 

இந்த உரையாடல் அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாபர் சேட், காவல்துறை அதிகாரியாக செயல்படாமல், ஒரு அரசியல் தரகர் போல செயல்பட்டு வருவது குறித்தும், காவல் துறை அதிகாரியாக தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது குறித்தும், நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்து, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு புகார் அனுப்பப் பட்டுள்ளது. 

cuj1

CUJ_-_audio_encl.2

CUJ_-_audio_encl.3

CUJ_-_audio_encl.4

CUJ_-_audio_encl.5

டாஸ்மாக் தமிழ் குறித்த அறிவிப்பு

$
0
0

தவிர்க்க இயலாத காரணங்களினால், இந்த வாரம் டாஸ்மாக் தமிழ் வெளிவராது. 

சிரமத்திற்கு வருந்துகிறோம்.  அடுத்த வாரம் வழக்கம் போல வெளி வரும் 

சொம்பொலி....

$
0
0

1623719_810184319007481_1493203556_n

சூரியனின் அஸ்தமனத்தை விரும்புகிறவர்கள் யார்?'

 

தி.மு.க. உடைய வேண்டும், அழிய வேண்டும் என்று ஏன் இத்தனை பேர் ஆசைப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. தி.மு.க.விற்கு எப்போதெல்லாம் பிரச்சினை வருகிறதோ அப்போதெல்லாம் அந்தக் கட்சி இத்தோடு அழிந்துவிடும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுப்பார்கள். தி.மு.க. எப்போதெல்லாம் பிரச்சினைகளைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் அதை அழிப்பதற்கான சக்திகளை ஒருங்கிணைப்பார்கள்.பிரச்சினைகளே இல்லாதபோது, கலைஞருக்கு வயதாகி விட்டது, அவர் பொறுப்புகளை உதறிவிட்டு ஓய்வெடுக்கலாமே? என்று அக்கறையைப் பொழிவார்கள். “வயோதிகத்தின் காரணமாக கலைஞரின் எந்த அரசியல் செயல்பாடு தடைபட்டது?” என்று கேட்டால் அவர்களிடம் பதில் இருக்காது. அதே நேரம் ஜெயலலிதா ஆண்டின் பெரும்பகுதி கொடநாட்டில் ஓய்வெடுத்தால்கூட ‘ஏன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நிம்மதியாக ஓய்வெடுக்கலாமே’ என்று நமது மதிப்பிற்குரிய விமர்சகர்கள் யாரும் இதுவரை எழுதியதாக சரித்திரம் இல்லை. கலைஞர் ஓய்வெடுக்க வேண்டும் என்பதன் அர்த்தம்; அவர் அரசியலில் இருந்து இல்லாமல் போனால் தி.மு.க. இல்லாமல் போய்விடும் என்கிற அற்பக் கனவைத் தவிர அந்தக் கோரிக்கையில் எந்த நியாயமும் இருந்ததில்லை.

 

கடந்த இரண்டு வாரங்களாக தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்கள்தான் எல்லா ஊடகங்களிலும் தலைப்புச் செய்தி. தமிழக அரசியல் என்பது எப்போதும் தி.மு.க.வையும் கலைஞரையும் சுற்றித்தான் நடக்கவேண்டும் என்பது நீண்டகாலமாக எழுதப்படாத விதி. அந்த விதியை முறியடிக்கும் சக்தி எதுவும் இன்னும் பிறந்து வரவில்லை. கலைஞரை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்ற இரண்டு நிலைகளுக்கு அப்பால் இதுவரை தமிழகக் கட்சிகளுக்கு மூன்றாவது அரசியல் என்ற ஒன்று இருந்ததுமில்லை.

 

சிறிது காலத்திற்கு முன்பு பரிதி இளம்வழுதி தி.மு.க.வை விட்டு விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்து கலைஞரைப் பற்றியும் தி.மு.க.வைப் பற்றியும் ஆபாசப் பேச்சுகளை வரன்முறை யின்றி பேசினார். அவரை சில நாட்களுக்கு தமிழகத்தின் பல பத்திரிகைகள் உற்சாகத் துடன் எப்படி ஆதரித்தன என்பதைக் கண்டோம். கலைஞரை இப்படி யார் திட்டினாலும் அவர்களுக்கு ஊடகங்களின் சலுகை உடனடியாகக் கிடைக்கும். அது சீமானாக இருக்கலாம், வைகோவாக இருக் கலாம், ராமதாசாக இருக்கலாம், இவ்வளவு ஏன், நேற்று முளைத்த தமிழருவி மணியனாகக் கூட இருக்கலாம். தி.மு.க.வை அழிக்கும் வேலைகளை யார் செய்தாலும் ஊடகங்கள் நிழலை உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம். கலைஞரை வசைபாடி பத்தி எழுதத் தயாராக இருந்தால் தமிழகத்தின் எந்த முன்னணிப் பத்திரிகையிலும் எந்த அரசியல் விமர்சகருக் கும் உடனே இடம்கிடைக்கும். கலைஞர் மீது வன்மத்துடன் தாக்குதலில் ஈடுபடும் பத்திரிகை ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு,பஞ்சப்படி உயர்வு எல்லாம் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

சும்மா இருக்கும்போதே வாயை மெல்லும் ஊடகங்கள், ஒரு பிரியாணி பொட்டலம் கிடைத்தால் சும்மா விடுவார்களா? ஸ்டாலின் - அழகிரி விவகாரத்தில் அழகிரியைத் தூண்டிவிடும் வேலையை ஊடகங்கள் படுஉற்சாகமாகச் செய்து வருகின்றன. அவர் அமைச்சராக இருந்தபோது அவருக்குத் தரப்படாத முக்கியத்துவம் இப்போது எல்லா ஊடகங்களிலும் தரப்படுகிறது.

ஸ்டாலினுக்கு எதிரான அவரது பேட்டிகள், கலைஞரின் நடவடிக்கைக்கு எதிராக அவரது உணர்ச்சிக்குமுறல்கள் உடனுக்குடன் விரி வாகப் பதிவு செய்யப்படுகின்றன. முன்னெப் போதும் இருந்திராத வகையில் அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உள்ளூர் ஊடகங்களால் மட்டுமல்ல, தேசிய ஊடகங்களாலும் கவனப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதற் கெல்லாம் பின்னே இருப்பது ஒன்றே ஒன்றுதான். அழகிரியாவது தி.மு.க.விற்கு கொஞ்சம் சேதாரத்தை உண்டு பண்ணமாட்டாரா என்ற நப்பாசைதான் அது. எந்த அளவிற்கு நமது ஊடகங்கள் வெறுப்பைக் கக்குகின்றன என்றால், இத்தோடு தி.மு.க. அஸ்தமித்துவிடும் என்கிற அளவிற்கு அவை எழுதுகின்றன.

உள்கட்சிப் பிரச்சினை ஒன்றால் ஒரு அரசியல் கட்சி அழிந்துபோக வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்சிகள் அழிந்து போயிருக்க வேண்டும்.

இந்திரா காந்தியின் மரணத்தின்போது காங்கிரஸ் அழிந்து போய்விடும் என்றார்கள். அப்போது காங்கிரசில் இந்திராகாந்தியைத் தவிர்த்து மக்கள் செல் வாக்குள்ள தலைவர்கள் யாரும் இல்லை. ஆனால் இன்றளவும் காங்கிரஸ் அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர். இறந்தபோது எம்.ஜி.ஆரைத் தவிர அந்தக் கட்சியில் ஆளுமை என்று யாரும் இல்லை. ஜானகியும் ஜெயலலிதாவும் அதி காரத்திற்காக நேரடியாக மோதிக் கொண்டார்கள். அ.தி.மு.க. என்ற கட்சியே இரண்டாகப் பிளந்தது. ஆனால் அந்தக் கட்சியின் அடித்தளம் வலுவாக இருந்தது. மேல் மட்டத்தில் நடந்த சண்டைகள் எதுவும் அந்தக் கட்சியின் அடித்தளத்தைப் பாதிக்கவில்லை. அது மீண்டும் வந்து மிருக பலத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

அ.தி.மு.க.வோடு ஒப்பிட்டால் தி.மு.க. வலுவான உள்கட்சி அமைப்பைக் கொண்ட இயக்கம். உட்கட்சித் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டு பல்வேறு நிலைகளில் கட்சிப் பொறுப்புகளுக்கு தலைமைகள் தேர்ந்தெடுக்கப் பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய ஒரு நடைமுறை எத்தனை பிரதானக் கட்சிகளிடம் இருக்கிறது? அடுத்தக்கட்டத் தலைவர்கள் என்று பலரையும் கொண்ட கட்சி தி.மு.க.தான். இன்றைக்கு தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சியின் தலைவருக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவர்கள் யார் என்று இருக் கிறார்கள்? கட்சியின் அதிகாரபூர்வ நடைமுறைகளைத் தாண்டி ஸ்டாலின்கூட உயர் பொறுப்புகள் எதற்கும் நீண்ட காலம் வர முடியவில்லை என்பதுதான் உண்மை.

தி.மு.க. மிகக் கடுமையான சோதனைக் காலங்களை கடந்து வந்திருக்கிறது. கலைஞர் முதலமைச்சராக இருந்த பிறகு 13 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். தி.மு.க. ஒரேயொரு சட்டமன்ற உறுப்பினருடன் 5 ஆண்டுகள் சட்டசபையில் போராடிய காலம் இருந்திருக்கிறது.

எமெர்ஜென்சியை எதிர்த்ததற்காக ஆட்சி கலைக்கப்பட்டு கொடுங்கோன்மைகளை அந்த இயக்கம் சந்தித்திருக்கிறது. விடுதலைப்புலி களைக் காரணம் காட்டி எந்த நியாயமும் இல்லாத வகையில் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனநாயகம் படுகொலைக்கு ஆளான இயக்கமும் தி.மு.க.தான். அப்போதெல்லாம் தி.மு.க. அழியவும் இல்லை. நொறுங்கவும் இல்லை. அதற்குக் காரணம், கலைஞர் என்ற தனிநபர் மட்டுமல்ல, அவரால் படிப்படியாக உருவாக்கப்பட்ட உருக்குப் போன்ற கட்சி அமைப்புதான் முக்கியக் காரணம். இன்று அழகிரி சச்சரவிடுவதால் தி.மு.க. அஸ்தமித்துவிடும் என்று நம்புகிறவர்கள், இந்த வரலாறு எதுவும் தெரியாதவர்கள் அல்லது ஒரு கட்சி என்பது அதன் ஒற்றைத் தலைவரின் பலத்தினால் மட்டுமே நின்று கொண்டிருக்கிறது என்று நம்புகிறவர்கள்.

தே.மு.தி.க.வினால் இரண்டாண்டுகள்கூட எதிர்க்கட்சி என்ற நிலையை முழுமையாகக் காப்பாற்ற முடியவில்லை. கட்சி எம்.எல்.ஏ.க்களில் நான்கில் ஒருபகுதியினர் ஜெயலலிதா ஆதரவாளர்களாக மாறி துரோகம் செய்தபோது தே.மு.தி.க. இத்தோடு அழிந்துவிடும் என்று யாரும் எழுதவில்லை. வாரிசு அரசியல் பற்றியும், 2ஜி பற்றியும் கலைஞரிடம் முகத்திற்கு நேராகக் கேள்வி கேட்கும் நமது மானமிகு பத்திரிகை யாளர்கள், ஜெயலலிதாவை ஒரே ஒருமுறை சந்தித்து, சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிப் பது பற்றியும், சசிகலா என்ன காரணத்திற்காக நீக்கப்பட்டு, பிறகு சேர்க்கப்பட்டார் என்பது பற்றியும், சுதாகரனுக்கு பல கோடி செலவில் திருமணம் செய்து வைத்துவிட்டு, பிறகு போதைப் பொருள் வைத்திருந்ததாக ஏன் சிறைக்கு அனுப்பப்பட்டார் என்பது பற்றியும், அமைச்சர்கள் மாதத் திற்கு ஒருமுறை மாற்றப் படுவதன் காரணம் குறித்தும், அவர்களில் சிலர் மறுபடி சேர்க்கப்படுவதன் மர்மம் குறித்தும், சசிகலாவின் கணவர் நடராஜன் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டதன் ரகசியம் குறித்தும் கேள்விகள் எழுப்பலாமே?

தி.மு.க.வின் உட்கட்சி ஜனநாயகம் பற்றி இவ்வளவு கவலைப்படுகிறவர்கள்; அமைச்சர் களோ, அரசு அதிகாரிகளோ சுயமாக முடிவெடுக்க அஞ்சி ஒட்டுமொத்த நிர்வாகமும் ஒரு தனிநபரின் காலடியில் வைக்கப்பட்டு அரசு எந்திரத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டிருக்கின்றனவே, இதைப்பற்றி ஏன் வாயைத் திறக்க மறுக்கிறீர்கள்? காரணம், பயம். கலைஞரிடம் அவருக்கு எதிரான எதையும் பேசிவிட்டு பயம் இன்றி இருக்கலாம். ஜெயலலிதாவிடம் அப்படி நடக்குமா?

இலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலை யையே கலைஞர்தான் நடத்தியதுபோல அவதூறு செய்தார்கள். அந்த அவதூறின் வெற்றிக் கனியை ஜெயலலிதாவின் காலடியில் சமர்ப் பித்தார்கள்.

இவ்வளவு பெரிய இயக்கத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, தமிழக அளவில் பெரிய போராட்டங்களை நடத்தி மத்திய அரசுக்கு அப்போது நெருக்கடி கொடுத்து இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தியிருக் கலாமே என ஏன் யாரும் கேட்கவில்லை? அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகப்போகிற இந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிடிந அகதிகளின் உரிமையைக்கூட பாதுகாக்க ஏன் முன்வர வில்லை?” என ஏன் யாரும் கேட்கவில்லை?

முள்ளிவாய்க்கால் முற்றச் சுவரை இடித்துத் தள்ளியது கலைஞராக இருந்திருந்தால் இந்நேரம் என்ன நடந்திருக்கும்? வைகோவிற்கும், நெடுமாறனுக்கும், சீமானுக்கும் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக கலைஞர் மீதான விஷ அம்புகளுக்கு கூர் தீட்டுவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது. ஜெயலலிதா ஆட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நடந்த கண்டனத்திற்குரிய எண்ணற்ற செயல்கள் குறித்து இவர்கள் பெரும்பாலும் மவுனமாக இருந்தார்கள் அல்லது பூனையைப் போல யாருக்கும் கேட்காத வண்ணம் ஓசை எழுப்பினார்கள்.

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரும் போராட்டம், எவ்வாறு தி.மு.க.வை மத்தியில் ஆட்சியிலிருந்து விலகச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது என்பதைக் கண்டோம். காமன்வெல்த் மாநாடு குறித்த பிரச்சினை வந்தபோது எந்தப் பெரிய அழுத்தமும் தமிழகத்திலிருந்து ஏன் உருவாகவில்லை? இந்தியா அந்த மாநாட்டில் பங்கேற்றது.

தேசிய அளவிலும் தி.மு.க.விற்கு எதிரான சக்திகள் தீவிரமாக வேலை செய்தன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அடுக்காக ஊழல்கள் வெடித்தபோதும் 2 ஜி அளவுக்கு எதுவும் கடுமையாக அணுகப்படவில்லை. நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமர் மீதே நேரடியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அது எல்லாமே பிசுபிசுத்துப் போகச் செய்யப்பட்டன. ஆனால் ஆ.ராசாவும், கனிமொழியும் விசாரணை அளவிலேயே சிறைக்கு அனுப்பப் பட்டனர். தி.மு.க. மத்தியில் ஆட்சியிலிருந்தும் பெரிதும் அவமானப்படுத் தப்பட்டது.

2 ஜி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு தன்னை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்ற ஆ.ராசாவின் கோரிக்கை ஏன் ஏற்கப்படவில்லை? இந்த வழக்கிற்குப் பின்னே இருக்கும் சதி அம்பலமாகிவிடும் என்பதால்தான். காங்கிரஸ் மட்டுமல்ல, வேறு எந்த வடமாநில தேசியக் கட்சிகளாலும், தி.மு.க. தொடர்ந்து மத்தியில் அதிகாரத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பொறுப்பு வகிப்பதைச் சகிக்க முடிவதில்லை. இதில் தென்னகத்தின் மீதான – குறிப்பாக தமிழகத்தின் மீதான வெறுப்பு அரசியல் ஒளிந்திருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை உயர்சாதி அரசியல் சக்திகளுக்கு, பிற்படுத்தப்பட்டோர் நலன்களை முன்னிறுத்தும் தி.மு.க.வின் மீதான வெறுப்பு ஆழமாக உறைந்து போயிருக்கிறது. அது பெரியாரின் மீதான வெறுப்பு. பகுத்தறிவுக் கொள்கைகள் மீதான வெறுப்பு. சமூகநீதிக் கருத்துகள் மீதான வெறுப்பு. எனவே, அவை தி.மு.க.வின் அழிவை எப்போதும் விரும்பி வந்திருக்கின்றன. திராவிட இயக்கக் கருத்தியல்கள் இன்னும் ஏதோ ஒரு வடிவில் மிஞ்சியிருக்கும் இயக்கமாக தி.மு.க. இருப்பதால் அது அவர்களின் கண்களை உறுத்துகிறது. ஒருபுறம் உயர்சாதி அரசியல் கொண்ட ஊடகங்கள், அறிவுஜீவிகள். இன்னொரு புறம் திராவிட இயக்க அரசியலை அழிப்பதற்காக தமிடிந தேசிய அரசியலை முன்னெடுக்கும் சக்திகள். இவர்களின் கூட்டுச் செயல்பாடுதான் தி.மு.க.விற்கு எதிரான இந்தத் தொடர் தாக்குதல்கள்.

இன்னொரு முக்கியமான காரணம்; தி.மு.க. இருக்கும்வரை தங்களால் தலையெடுக்க முடியாது என்று தமிழகத்தில் புதிதாக முளைத்த, முளைக்க விரும்புகிற அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. தி.மு.க.வின் அழிவில் கிடைக்கும் வெற்றிடத்தை தாங்கள் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று அவை கருதுகின்றன.

தி.மு.க. ஒவ்வொரு நெருக்கடியிலும் தன்னை வலிமையுடன் புதுப்பித்துக் கொண்டு எழுந்து வந்திருக்கிறது. ஆனால் இப்போது ஏற்பட்டிருப்பது நெருக்கடிகூட அல்ல. ஒரு சின்னக் குழப்பம். அதை அது எளிதில் கடந்து வந்துவிடும். அதுவரை தி.மு.க.வின் அழிவு குறித்த வெற்றுப் பிலாக்கணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கட்டும்.

 

மனுஷ்ய புத்திரன்

- நன்றி : ‘நக்கீரன்’

பிப். 5, 2014

 

 

 

2ஜி விவகாரத்தில் கருணாநிதி மீது சிபிஐ விசாரணை நடத்தக் கோரி புகார்

$
0
0

Karunanidhi

2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பான வழக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததற்கு கைமாறாக, கலைஞர் டிவிக்கு லஞ்சமாக 200 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது என்று சிபிஐ குற்றம் சாட்டியது.  அந்த 200 கோடி ரூபாய் லஞ்சமல்ல, சினியுக் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடன்.  அந்தக் கடனை வட்டியோடு திருப்பிச் செலுத்தி விட்டோம் என்று கலைஞர் டிவி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நமது சவுக்கு தளத்தில் ஜாபர் சேட் மற்றும், கலைஞர் டிவியின் மேலாண் இயக்குநர் சரத் குமார் ஆகியோர் இடையே நடைபெற்ற உரையாடல்கள் ஒலிநாடாக்களாக வெளியாகின.    இதன் பின்னர், இந்த உரையாடலையும் சேர்த்து, கனிமொழி மற்றும் ஜாபர் சேட், மற்றும் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மற்றும் ஜாபர் சேட், ஆகியோரிடையே நடைபெற்ற உரையாடல்களை, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வெளியிட்டார்.

இந்த உரையாடல்களில் 2ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட கலைஞர் டிவி, 200 கோடி ரூபாயை கடனாகப் பெற்றது போல, ஆவணங்களை தயாரித்ததும், இவ்வழக்கிலிருந்து தப்பிக்க பல்வேறு ஆவணங்களை முறைகேடாக தயாரித்ததும் வெளியாகியது.    2ஜி முறைகேடுகளில், நடைபெற்ற பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும், திமுக தலைவர் கருணாநிதியின் அனுமதி மற்றும், ஆலோசனையோடுதான் நடைபெற்றது என்பதையும் அந்த உரையாடல்கள் வெளிப்படுத்தின.

இதையடுத்து, 2ஜி ஊழல் விவகாரத்தில், கருணாநிதி, சரத் குமார் ரெட்டி, ஜாபர் சேட், கனிமொழி, மற்றும் சண்முகநாதனின் பங்கு என்ன என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு, மத்திய புலனாய்வுத் துறை இயக்குநருக்கு இன்று புகார் ஒன்று அனுப்பப் பட்டள்ளது.   அந்தப் புகாரோடு, உரையாடல்கள் அடங்கிய குறுந்தகடுகளும், அந்த உரையாடல்களின் ஆங்கில மொழி பெயர்ப்பும் அனுப்பப் பட்டுள்ளது.

அந்தப் புகார் மனு பின்வருமாறு :

To

The Director,

Central Bureau of Investigation

Plot No. 5-B,

CGO Complex

Lodhi Road

New Delhi 110 003

 

Sir,

The Aam Admi Party, released four audio conversations in a press meet in New Delhi on 04.02.2014.    The audio conversations were recorded on various dates.  The audio files were in an .amr format, which shows that they were recorded on a Nokia mobile phone.

2) The person figuring in all the conversations is one Shri.Jaffer Sait, IPS., a 1986 batch IPS officer borne on the cadre of Tamil Nadu.  He was heading the Intelligence Wing of Tamil Nadu, as Inspector General of Police and then as Additional General of Police.  He is now under investigation following the registration of a criminal case against him by the Directorate of Vigilance and Anti-Corruption, Tamil Nadu for the offences of criminal conspiracy, criminal breach of trust, and criminal misconduct.    He has been placed under suspension.

3) The first conversation was recorded on 13.02.2011, at 16.42 Hrs. between Shri. Jaffer Sait, IPS and Shri.Sharad Kumar Reddy (A.16).  In the conversation, A.16 Sharad Kumar discusses with Shri.Jaffer Sait about the 2G investigation conducted by the CBI at that time.   Shri.Sharad Kumar, tells Jaffer Sait, that he had been informed by Cineyug films about the impending arrival of CBI and that this time, they would make arrests.  Sharad also talks about how he signed more than 100 pages, anti-dating the documents and  how he had been manipulating records to manage the queries raised by the CBI in this regard.

4) The second conversation is recorded on 16.02.2011, three days after the first conversation between Shri.Sharad Kumar Reddy and Shri.Jaffer Sait.  This conversation is between, Ms.Kanimozhi Karunanidhi (A.17) and Shri.Jaffer Sait, IPS.  In this conversation,  Mr.Jaffer Sait, gets the approval of Ms.Kanimozhi Karunanidhi, for a statement to be released on behalf of the management of Kalaignar TV, following the mention of involvement of Kalaignar TV by the CBI in A.Raja (A.1)'s remand extension arguments.   Jaffer Sait, informs Kanimozhi Karunanidhi that this statement has the approval of Boss (M.Karunanidhi, former TN Chief Minister and DMK President).    The statement says.  "We have clarified that there is no connection between the transaction and the 2G spectrum issue and that the amount had been returned with interest to Cineyug. Despite this, the CBI has referred to the transaction in court.

“If either the CBI or the Income Tax department has any suspicion in this regard, Kalaignar TV has no objection to its accounts and documents being verified by the agencies,” the channel's managing director Sharad Kumar said in a statement.

Kalaignar TV maintains that Cineyug had paid the amount for purchase of shares in the channel, but the deal fell through due to differences over valuation. Thereafter, Kalaignar TV treated the advance as a loan and returned the money with Rs.31 crore as interest.

The transaction was reported to Income Tax authorities and tax paid".   As seen from the conversation, the statement which has been issued by the Kalaignar TV, is a clear afterthought and a 'coverup' to save Kanimozhi Karunanidhi (A.17) from CBI's clutches.   The statement issued by Kalaignar TV was actually prepared by Shri.Jaffer Sait,  IPS with the approval of former Chief Minister Karunanidhi and with the approval of A.17 Kanimozhi Karunanidhi.

Shri.Jaffer Sait, IPS., is also found to be telling in the tape that he would be 'tipped off'  by the CBI, before arrests, if any, which shows that Jaffer Sait, IPS had a mole inside the CBI.

5)       The third conversation too, is between Jaffer Sait and Kanimozhi Karunanidhi.  This conversation took place on 23.11.2010.  This conversation revolves around deals with the TATAs and the Voltas building, which figured in the Radia tapes.  It is also discussed in the conversation that DMK Chief Karunanidhi was abreast of all the developments and he had been kept in the loop about all the developments with regard to Kalaignar TV.   Shri.Jaffer Sait, also boasts about him, developing a contact in Delhi to manage the 2G fiasco and do some public relation work to highlight the favourable aspects in the CAG report, to manage the adverse public opinion against DMK, and government.

6)       The fourth conversation happens between Shri.Shanmuganathan and Shri.M.S.Jaffer Sait, IPS on 31.12.2010.  Shri.Shanmuganathan, is an aide and personal secretary for Shri.Karunanidhi for more than 3 decades. He was the eyes and ears of DMK Chief Karunanidhi.  He will handle all phone calls on behalf of Karunanidhi and he looks after all affairs relating to Karunanidhi and his family.    His words are nothing but the words of Shri.M.Karunanidhi himself.

7)   In the conversation between Shri.Shanmuganathan and Shri.M.S.Jaffer Sait, IPS, Jaffer Sait, when Shanmuganathan asks Jaffer Sait, as to what happened, Jaffer Sait explains to him, that he has arranged 60 crores and is in the process of arranging another 40.  The 60 will be adjusted in the next five years as advertisements, Jaffer Sati, IPS was found saying.   According to my information the 60 crores Jaffer Sait, refers to was provided by Shri.N.Srinivasan, Vice President and Managing Director.  Sources also reveal that the entire amount of Rs.214 crores repaid by Kalaignar to Cineyug Films was obtained from Shri.N.Srinivasan, and liquor baron Vijay Mallya, and that the money was laundered through 18 shell companies based in Kolkatta. It is also pertinent to note that Shri.N.Srinivasan is an accused in the DA (disproportionate assets case) case against Shri.Jegan Mohan Reddy, for receiving undue favours to his firm to India Cements in the form of renewal of lease of land and allotment of water from Kagna and Krishna rivers by violating norms and procedure.   As a quid pro quo for these favours, N.Srinivasan made investments to the tune of more than 150 crores in Jagan's companies viz.  Raghuram Cements, Jagathi Publications and Carmel Asia Holdings Pvt Ltd.

8)       The pattern of investments made by Shri.N.Srinivasan, in Kalaignar TV is similar to the investments he made in Jagan's companies.    No businessman with a little sense of sanity would make payment for advertisements in advance to a television channel, which was in the dock, and where there is no guarantee that the television would be alive or not.   Sources also reveal that business baron MAM.Ramasamy and liquor baron Vijay Mallya too had paid money to Kalaignar TV to return the loan obtained from Cineyug Films.

9)       The loan theory adopted and argued by Kalaignar TV is a sham and is a result of a criminal conspiracy between Shri.M.Karunanidhi, Shri.Shanmuganathan, Shri.Sharad Reddy, Ms.Kanimozhi Karunanidhi and Shri.Jaffer Sait IPS.  This act of these people constitutes a cognizable offences of criminal conspiracy, destruction of records, and falsification of evident. It is pertinent to note that Shri. Jaffer Sait, IPS., undertook a an unofficial trip to Chicago, during the time of 2G scam, for reasons not known.  Sources say, he had undertook the trip to funnel out the 2G funds abroad.  Further, Shri.Jaffer Sait, had undertook several trips to New Delhi at the time of investigation of 2G scam by CBI.

10)     I request that a case under the relevant sections of law may kindly be registered and investigated by the CBI.  I have enclosed a copy of the audio files and also English transcripts for the purpose of investigation.

Sincerely

டாஸ்மாக் தமிழ் 36.

$
0
0

tas_boy_run

"ஊழல் ஒழிப்பே பிரதான லட்சியம்.  ஊழலை ஒழித்தே தீருவேன்" என்று முஷ்டியை உயர்த்திக் குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.

"என்ன மச்சான். ஆம் ஆத்மி பார்ட்டியில சேந்துட்டியா ? " என்றான் ரத்னவேல்.

"ஊழலை ஒழிக்க ஆம் ஆத்மி பார்ட்டியில் சேர வேண்டும் என்று அவசியம் இல்லை.   டெல்லியில் வேணா ஆம் ஆத்மி ஊழலை ஒழிக்கலாம்... ஆனா தமிழகத்தில் ஊழலை ஒழிக்க ஒரே கட்சி கேப்டன் கட்சிதான்.  அதனால அவர் தலைமையில ஊழலை ஒழிக்கப் போறேன். " என்று சொல்லி சிரித்தான் டாஸ்மாக் தமிழ்.

"ஏன்டா சிரிக்கிற... ?  கேப்டன் ஊழலை ஒழிக்க மாட்டாரா ? "

"கேப்டன் அரசியல்வாதியா உருவானதும் தமிழக மக்கள், இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக இந்த நபராவ ஏதாவது செய்யறாரான்னு பாக்கலாம் னு நம்பி ஓட்டு போட்டாங்க. 2011 சட்டமன்றத் தேர்தலில், திமுக மீது இருந்த கடும் எதிர்ப்பலையில், தனியா நின்னாவே ஜெயலலிதா ஜெயிச்சிருப்பாங்க.  ஆனா, ஒரு வேளை தோத்துடுவோமோன்ற பயத்துல, ஜெயலலிதா கேப்டன் கூட கூட்டணி வைச்சாங்க.  அந்த தேர்தலில் 27 எம்.எல்.ஏக்களை பெற்றதும், கேப்டனுக்கு தலையும் புரியலை... காலும் புரியலை.

மக்களவை தேர்தலுக்காக, ஒரு பெரிய தேசிய கட்சியான பிஜேபியும், இன்னொரு பெரிய கட்சியான திமுகவும், மாறி மாறி கெஞ்சறது, கேப்டனுக்கு, நாம பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒழிச்ச மாதிரி, இதுவும் ரொம்ப ஈசின்னு முடிவு பண்ணிட்டாரு.

சினிமாவுல, என்ன நடந்தாலும் கடைசியில ஹீரோ ஜெயிக்கிற மாதிரி நாமளும் ஜெயிச்சிடலாம்னு நினைச்சிருக்கார். அந்த ஐடியாவுலதான், மீட்டிங்குல பேசறார்....

கேப்டனோட ஊழல் ஒழிப்பு மாநாடே ஒரு பெரிய நகைச்சுவை.  எதுக்காக அவர் இந்த மாநாட்டை நடத்துனாருன்னு யாருக்குமே தெரியலை.  தேர்தல் சமயத்தில் ஒரு பில்டப் குடுத்து, டெவலப் பண்ணலாம்னு நெனைச்சாரா என்னன்னு தெரியலை.  ஊழல் எதிர்பபை மனதில் வைத்து, ஆம் ஆத்மி பார்ட்டி டெல்லியில் பெரிய வெற்றியை அடைந்ததும், நாம ஊழலை பத்தி பேசுனா, தமிழ்நாட்டுல பெரிய அளவுல வொர்க் அவுட் ஆகும்... அதை வைச்சு ஒரு மொமென்டம் டெவலப் பண்ணி, தமிழ்நாட்டின் ஆம் ஆத்மின்னு பத்திரிக்கைகளை பேச வச்சுடலா... பெரிய மாஸ் உருவாகும்னு நெனைச்சார்"

"சரி அவர் நெனைச்சபடி நடந்துச்சா ? " என்றான் ரத்னவேல்.

V-K-S-V-071

"அவர் நெனைச்சதே அவருக்கு ஞாபகம் இல்ல.  நிதானத்துல இருந்தாத்தானே தெரியும் ?  எதுக்காக மாநாடு போட்டாங்களோ, அதைப் பத்தி பேசாம, டிஜிபி ராமானுஜத்தையும், ஜெயலலிதாவையும் சகட்டு மேனிக்கு திட்றதுலயே தங்களோட நேரத்தை செலவிட்டாங்க. ஊழலைப் பத்தி எந்த விதமான தெளிவான விவாதமும் இல்ல..  பேசுன விஜயகாந்த் கட்சியின் எம்எல்ஏக்களும் "கேப்டன் சிரிச்சா செங்கோட்டை, முறைச்சா ஜார்ஜ் கோட்டைன்னு " பன்ச் டயலாக் பேசினாங்க. பேசிய பல பேர் நாகரீகமே இல்லாம பேசினாங்க.  ஜெயலலிதாவை, "எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியில் புகுந்த கருநாகம் னு" விஜயகாந்த் பேசறாரு.  இது மாதிரி சம்பந்தம் சம்பந்தம் இல்லாமதான், ஒட்டுமொத்த மாநாடே நடந்தது.. "

"நடந்தது ன்னு சொல்லாதடா.. தள்ளாடியதுன்னு சொல்லு" என்று சொல்லி சிரித்தான் பீமராஜன்.

"சரி... கூட்டணி பற்றி அறிவிக்கிறேன்னு சொன்னாரே.... அறிவிச்சாரா ? " என்றான் வடிவேல்.

"எங்க அறிவிச்சாரு ?  அதைப் பற்றி என் தொண்டர்கள் முடிவு செய்வார்கள்னு சொல்லிட்டாரு"

"தொண்டர்கள் முடிவு பண்ணுவாங்களா ? "

"கிழிப்பாங்க.  தலைவன் எவ்வழியோ, தொண்டன் அவ்வழி.  சுயநினைவு உள்ள யாராவது ஒருத்தன், தேமுதிகவுல இருப்பானான்னு சொல்லு.  அதனாலதான் கேப்டனே தொண்டரகளை கேட்டு முடிவு பண்றேன்னு சொல்லிட்டாரு.  தொண்டர்கள் ஒரு வேளை தப்பா சொல்லிட்டாங்கன்னா, பாவம், போதையில சொல்லிட்டாங்க விட்டுடுன்னு சொல்வாரு"

"விளையாடதாடா... உள்ளதை சொல்லு" என்று எரிச்சல்பட்டான் ரத்னவேல்.

"கேப்டனுக்கு இன்னும் அவர் கேட்ட தொகை வந்து சேரல.  பிஜேபி கூட போறதா இருந்தா, அவரை பிப்ரவரி எட்டு அன்னைக்கு மோடி கூட்டத்துல அவரை ஏத்தணும்னு பிஜேபி முடிவு பண்ணியிருந்தாங்க."

"சரி.. இப்போ ஏத்தறாங்களா ? "

"அவர் 'ஏத்திட்டு' பேசுனதை பாத்துட்டு, நல்ல வேளை ஏத்தலைன்னு நினைக்கிறாங்க"

"நீ வேற வெளையாடிக்கிட்டு. இருக்காத டா... கூட்டணி என்ன ஆச்சு" என்று கோபமாக கேட்டான் ரத்னவேல்.

"திமுக தரப்புல இருந்து, திருமாவளவன், திராவிடக் கழக தலைவர் வீரமணி, மனிதநேய மக்கள் கட்சியின் ஹைதர் அலி ஆகியோர் கிட்ட எப்படியாவது பேசி,  விஜயகாந்தை கூட்டிட்டு வந்திடுங்கன்னு சொல்லியிருக்கார்.  அவங்களும், எப்போ எப்போல்லாம் நேரம் கிடைக்குதோ, அப்போல்லாம் கேப்டனை பாத்து கெஞ்சி பாக்கறாங்க.  ஆனா, அவர், அவங்ககிட்ட மாநாடு முடிஞ்சதுக்கப்புறம் பாக்கலாம்னு சொல்லிட்டாரு இப்போ மாநாடும் முடிஞ்சுடுச்சு"

"சரி... விஜயகாந்த் பெரிய தொகையை கேட்டுக்கிட்டு இருந்தாரே... அது என்ன ஆச்சு ? " என்றான் ரத்னவேல்.

"விஜயகாந்தோட இப்போதைய தொகை 400 கோடி.  இதை யாரு தர்றாங்களோ, அவங்களோடதான் கூட்டணின்ற முடிவுல இருக்கார்.  பிஜேபி பணம் தர்றதுக்கு தயாரா இருந்தாலும், 400 கோடின்னு மலைக்கிறாங்க."

"அப்போ கேப்டனுக்கு பணம் கிடையாதா ? "

"யாரு சொன்னது.. ?  காங்கிரஸ் 500 கோடி கொடுத்தா, காங்கிரஸ் கூட கூட்டணி அமைச்சு, ஐந்தாவது ஆறாவது அணியெல்லாம் அமைக்க கேப்டன் தயாரா இருக்காரு.  டெல்லிக்கு ஒரே ஒரு எம்.பியை அனுப்பி ஒன்னும் கிழிக்கப் போறதில்லன்றது, கேப்டனுக்கு நல்லாவே தெரியும். அதுக்கு பதிலா, 500 கோடியை வாங்கிட்டா, நிம்மதியா இன்னும் நாலு வருஷத்துக்கு பொழப்பை நடத்தலாம்.... அதுக்குள்ள இன்னொரு தேர்தல் வரும். அப்போ நம்ப ரேட்டை கூட்டிக்கலாம்னு இருக்காரு..."

"டேய்... கேப்டன் புராணம் போதும்டா... டேப் மேட்டர் பத்தி சொல்லுடா... அதுதானே பரபரப்பா இருக்கு? " என்று பரபரத்தான் பீமராஜன்.

”அதான் ஊரே சொல்லுதே... ஃபேஸ் புக், ட்விட்டரெல்லாம் போய் பாத்தியா ? திமுகவை கழுவி கழுவி ஊத்தறாங்க. திமுக இந்த மிகப்பெரிய சிக்கலில் இருந்து எழுந்து வருவது கஷ்டம்னு சொல்றாங்க..

2ஜி ஊழல் 2010ம் ஆண்டு வெளியில் வந்தபோது, திமுக அதிலிருந்து எப்படியோ மீண்டு வந்தது.  கனிமொழி கைது செய்யப்பட்ட போதும் சரி, அதற்குப் பிறகும் சரி, திமுக கட்சியினர் பலரே, காங்கிரஸ் கட்சியின் சதி காரணமாகத்தான் 2ஜி விவகாரத்தில் திமுக சிக்கியதுன்னு நினைச்சிக்கிட்டு இருந்தாங்க.

2G_1744771g

04_2g_graphics_1744280g

ஆனா, ஜாபர் சேட்டோட உரையாடல்கள் வெளியானதும், அந்த நம்பிக்கை முழுக்க முழுக்க பொய்யாயிடுச்சு.  யாரும் இப்போ, திமுகவை நம்பத் தயாராக இல்லை.  திமுக தொண்டர்களிலேயே பல பேர், என்ன இவ்வளவு மோசமா இருந்திருக்காங்க.. நம்பளையெல்லாம் இப்படி ஏமாத்திட்டாங்களேன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க.

1991ம் ஆண்டு தேர்தலில், ராஜீவ் காந்தி மரணத்தின் பிறகு நடந்த தேர்தலில் கூட, வாக்கு வங்கி குறையாத திமுக, இந்த முறை கடுமையான தோல்வியை சந்திக்கும் னுதான் பரவலா பேச்சு இருக்கு"

"திமுக தலைவர் கருணாநிதி மேல 2ஜி குறித்து விசாரணை நடத்தணும்னு புகார் அளிக்கப்பட்டிருக்காமே..... ? "

"ஆமாம் ஆமாம். இந்த ஊழலை வெளியிட்ட நபரே, கருணாநிதி, சண்முகநாதன், சரத் குமார், கனிமொழி உள்ளிட்டோர், 2ஜி ஊழலில் ஆதாரங்களை அழிக்க என்ன முயற்சிகள் எடுத்தார்கள் என்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்தணும்னு ஒரு புகார் அனுப்பப் பட்டிருக்கு. இந்தப் புகாரைத் தொடர்ந்து, பிரசாந்த் பூஷணும், இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவாருன்னு சொல்றாங்க.

இது போக, கலைஞர் டிவிக்கு வந்த 200 கோடியும், கடன் தொகை, அது லஞ்சம் இல்லைன்னு கலைஞர் டிவி தரப்புல சொன்னாங்க.  ஆனா, அதை கடன்னு மாத்த, என்னென்ன ஏற்பாடு பண்ணாங்கன்னுதான் ஜாபர் சேட்டும், மத்தவங்களும் விவாதிச்சது இப்போ வெளியாகியிருக்கு.

இது போக, கலைஞர் டிவி திருப்பிக் கொடுத்த 214 கோடி ரூபாயும் கலைஞர் டிவியோட பணம் கிடையாது. பல்வேறு இடங்களில் வாங்கிக் கொடுத்தது.    அதில் முதல் நபர், இந்திய சிமென்ட்ஸின் என்.சீனிவாசன்.  இந்த ஆள் ஏற்கனவே, ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி.  அடுத்த நபர், கருணாநிதி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான எம்ஏஎம்.ராமசாமி.  சாராய அதிபர் விஜய் மல்லையா ஆகியோர் பணம் கொடுத்திருக்காங்க.  இந்த 214 கோடியும், பல்வேறு பேப்பர் கம்பெனிகள் மூலமா, சினியுக் பிலிம்ஸை அடைந்திருக்கு. பணம் திருப்பி வந்ததைப் பத்தி சிபிஐ விசாரணை நடத்வேயில்ல.  ஆரம்பிச்சு இரண்டே வருஷம் ஆன ஒரு சேனலுக்கு, அதுவும் ஆரம்ப கட்டத்துல இருக்க ஒரு சேனலுக்கு, எப்படி 214 கோடி ரூபாயை வந்துச்சு.. அதுவும், 5 வருஷத்துக்கு, அட்வான்ஸா, 60 கோடியை விளம்பரத்துக்கான முன் பணமா, எந்தத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் தர மாட்டாங்க.

அதுவும், அஞ்சு வருஷத்துக்கு ஒரு டிவி நடக்குமா நடக்காதான்னு தெரியாத நிலையில், எந்த முட்டாள் நிறுவனமும் 60 கோடியை தூக்கி கொடுக்க மாட்டாங்க"

"அப்புறம் எதுக்குப்பா சீனு மாமா 60 கோடி கொடுத்தாரு ? " என்று கிண்டலாக கேட்டான் வடிவேல்.

"தகவல் என்னன்னா...  80 கோடி ரூபாய், கருப்புப் பணமா, சீனு மாமாவுக்கு திமுக தரப்புல கொடுக்கப் பட்டிருக்கு. அதுக்கு பதிலாத்தான், சீனு மாமா 60 கோடி கலைஞர் டிவிக்கு விளம்பரத் தொகையா கொடுத்திருக்கார்.  இதே மாதிரி பணம் வாங்கிய எல்லா இடங்களிலும், கருப்புப் பணத்தைக் கொடுத்து, வெள்ளையா மாத்தியிருக்காங்க"

"சரி... ஜாஃபர் என்ன பண்றார் ? " என்றான் பீமராஜன்.

7_3

"டேப் வெளியானதுல ரொம்ப கலங்கிப் போயிட்டார்.  இதை அவர் எதிர்ப்பார்க்கவே இல்ல..  தன்னோட உரையாடல்களே இப்படி வெளியாகி தன்னை அசிங்கப்படுத்தும்னு அவர் நினைக்கவே இல்லை. சஸ்பென்டாகி இருந்தாலும், ஜாபர் சேட்டை இன்னும் சில அதிகாரிகள் போய் பாத்துக்கிட்டு இருந்தாங்க.  இப்போ இந்த டேப் வெளியானதும், எந்த அதிகாரியும் யாரையும் போய் பாக்கறது இல்லை. எல்லாரும் அவரை தவிர்க்கிறாங்க.

ரவி மட்டும், ஜாபர் தேவையில்லாமல் பழி வாங்கப்படுகிறார்னு சொல்லிக்கிட்டு இருக்காரு"

"ரவி ன்னா எந்த ரவி... ?  ஆவின் விஜிலென்ஸ்ல இருக்காரே அந்த ரவியா ? "

அவரேதான்... ஜாபர் பாவம்.. அவரை தேவையில்லாமல் பழி வாங்கறாங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு"

Ravi_IPS

ரவி ஐபிஎஸ்

ஜாபருக்கா சப்போர்ட் பண்ற..... உனக்கு இருக்குடி மாப்ள..

"இன்னுமா ஜாபரை ஊரு நம்புது ? " என்றான் ரத்னவேல்.

"என்ன பண்றது... ? நம்பறாங்களே.. அடுத்து ஜாபரோட குரல் சாம்பிளை கொடுக்கச் சொல்லி, சிபிஐ உத்தரவு போடுவாங்க.  அதுக்கப்புறம் ஜாபருக்கு தொடர்ந்து தலைவலிதான்.  மகளோட திருமணம் நிச்சயம் பண்ண இருக்கிற இந்த நேரத்துல, ஜாபருக்கு சோதனைதான்"

"திருமணம் நிச்சயமாயிடுச்சா ? "

"பேச்சுவார்த்தைகள் நடந்துக்கிட்டு இருக்கு. லைட் ரூப் நிறுவனத்தை நடத்தும் க்ரூப் வீட்டுலதான் சம்பந்தம் நடக்குது.  திருமண சம்பந்தம் பேசிக்கிட்டு இருக்க இந்த நேரத்துல போய் இப்படிப் பண்ணிட்டானுங்களேன்னு கடுமையான வருத்தத்துல இருக்காரு"

"பாவம்தான்.. செய்த பாவம் அவரை வாட்டுது... என்ன பண்றது ? "

"சரி... பத்திரிக்கைகள், இந்த டேப் விவகாரத்தை எப்படி  கையாண்டன ?

"இந்த உரையாடல், தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான உரையாடல். தமிழக ஊடக வரலாற்றில், ஏன் இந்திய ஊடக வரலாற்றிலேயே, ஒரு உளவுத்துறை தலைவரோட உரையாடல்கள் இது வரை வெளியிடப்பட்டதேயில்லை.  இதை ஊடகங்கள் கொண்டாடியிருக்கணும்.  இந்தியாவின் மிகப் பெரிய ஊழலான 2ஜி வழக்கில், சம்பந்தப்பட்ட கருணாநிதி குடும்பத்தை காப்பாற்ற நடந்த சதியை இந்த உரையாடல் அம்பலப்படுத்தியிருக்கு.   இதை ஊடகங்கள் கொண்டாடியிருக்கணும்.  ஆனா, தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா  நாளேடுகளைத் தவிர, பெரும்பாலான ஊடகங்கள் அடக்கியே வாசிக்குது.

இந்த உரையாடலை வெளியிட்ட ஜுனியர் விகடன் கழுகார் பகுதியில இந்த மாதிரி எழுதியிருக்காங்க

1798534_642961235741591_1951525906_n

"திடீரென சி.டி.. வருகிறதே?''

''காங்கிரஸ் தனது அஸ்திரங்களை ஆரம்பித்து விட்டது என்றே சொல்கிறார்கள். அதனுடைய அஸ்திரங்கள்தான் இவையாம்! இதுவரை ஏதாவது ஒரு குதிரையில் சவாரி செய்துவந்த காங்கிரஸ் நிலைமைதான் இந்த தடவை பரிதாபமாக உள்ளது. அவர்களுடன் தேர்தல் கூட்டணி வைக்க தமிழக அரசியல் களத்தில் யாரும் தயாராக இல்லை. தமிழகத்தில் அவர்கள் தி.மு.க-வுடன்தான் கூட்டணி வைக்க முடியும். ஆனால், தி.மு.க-தான் பிகு பண்ணுகிறது. அதை வழிக்கு கொண்டுவர புதிய சில அஸ்திரங்களை இப்போது கையில் எடுத்துள்ளார்கள். அதன் வீச்சுக்களைக் கேள்விப்பட்ட கருணாநிதி கலங்கித்தான் போயிருக்கிறார்”

இந்த டேப் எப்படி வந்துச்சு, எங்க வந்துச்சு, யார் மூலமா அவங்களுக்கு கிடைச்சது, இது மாதிரி எந்த விபரமும், இதை எழுதியவருக்கு தெரியாது. கண்ணை மூடிக்கிட்டு, வாய்க்கு வந்ததை எழுதறதுதான் அந்த பத்திரிக்கைக்கு வேலையே... இந்த டேப்புக்கும் காங்கிரஸுக்கும் என்ன சம்பந்தத்தை இதை எழுதுனவரு கண்டுபிடிச்சாருன்னு தெரியலை."

"கழுகார் எழுதனும்னா, ரெண்டு பேருக்கு ஃபோன் போட்டுப் பேசறது.  அந்த வாரத்துக்கு எம்.டி என்ன உத்தரவு போட்றாருன்னு பாத்துக்கறது.  எம்.டி மோடிக்கு சப்போர்ட்டா எழுதுன்னாருன்னா, மோடி அலை வீசுதுன்னு எழுதறது.  மாறன் பத்தி ஒரு வார்த்தை எழுதக் கூடாதுன்னா, ஒரு வார்த்தை எழுதாம தவிர்க்கறது. மாறன் சொன்னா, ஸ்டாலினை திட்டி கட்டுரை போட்றது,  மாறன் சொன்னா, கனிமொழியை விமர்சித்து கட்டுரை போட்றது.. இதுதானே இவங்களுக்கு வேலையே.. அதே மாதிரிதான் டேப் வெளியீடு காங்கிரஸோட சதின்னு எழுதியிருக்காங்க".

"சரி. கருணாநிதி குடும்பத்தோட ரியாக்சன் என்ன ?"

"ஸ்டாலின் வெளிப்படையாவே சொல்லிட்டார்... இந்த ஜாபர் சேட்டை ஒழிக்காம விட மாட்டேன்னு. டேப்புகள் வெளியானதும், அழகிரி, தன்னோட ஆதரவாளர்கள்கிட்ட, யார் இதை வெளியிட்டது, எப்படி டெல்லி போனதுன்னு கேட்டிருக்கார். இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட பிறகு, சென்னைக்கு போன் போட்டு, "நான் அப்பவே இந்தப் பயலை நம்பாதீங்கன்னு சொன்னேன்.  நம்ப குடும்பத்துக்கு விசுவாசம், விசுவாசம்னு சொல்லிட்டு, இப்போ கழுத்தறுத்துட்டான்.  நான் எது சொன்னாலும் கேக்காத மாதிரியே, தலைவரும் இதைக் கேக்காம போனதோட விளைவுதான் இந்த சிக்கல் னு சத்தம் போட்டிருக்கார்."

2450802473_02c046146b_o

"சரி.... தலைவரோட ரியாக்சன் என்ன ? "

"இதையெல்லாமா போன்ல பேசுவீங்க ன்னு சிஐடி காலனிக்குப் போய் ஒரே சத்தம்.  கனிமொழி ஏற்கனவே மருத்துவமனைக்கு போய் வந்தததால, அவங்கள திட்டல.  ராசாத்தி அம்மாளை கடுமையா திட்டியிருக்கார்.  உன்னோட வளப்புத்தான் சரியில்ல... இப்படி கட்சியையே நாசம் பண்ணிட்டீங்களேன்னு திட்டியிருக்கார்"

"அவரே சரியில்ல... அவர் குடும்பத்தைத் திட்டறார்" என்றார் கணேசன்.

"என்னண்ணே இப்படி சொல்றீங்க ? "

"ஆமாம்பா...  கருணாநிதி தன்னோட சரித்திரத்திலயே இந்த மாதிரி ஒரு அதிகாரியை என்னைக்குமே முழுக்க முழுக்க நம்புனதே கிடையாது.  இந்த அதிகாரிங்க, ஆட்சிக்கு தகுந்த மாதிரி மாறிக்குவானுங்கன்னு அவருக்கு தெரியும். அதனால, எந்த அதிகாரியையும் அவர் நம்பியதே கிடையாது. எல்லாரையும், கையெட்டும் தூரத்துலதான் வைச்சிருப்பார்.

ஆனா, 2006ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகுதான், ஜாபர் சேட்டோட தொலைபேசி டேப்புகளைப் பாத்து மயங்கினார்.  ராமதாஸ் அந்த கால கட்டத்துல கருணாநிதிக்கு ரொம்ப தொல்லை கொடுத்துக்கிட்டு இருப்பார்.  தினமும் ஏதாவது அறிக்கை விட்டு, தொல்லை பண்ணிக்கிட்டு இருப்பார்.  அப்போ, ராமதாஸ் என்னென்ன பண்றாருன்னு டேப்பை கொடுத்ததும், கருணாநிதி, நீதான்டா உளவு துரைன்னு பாராட்டினார்.  அதுக்கப்புறம், ஜாபர் வச்சதுதான் சட்டம்.

ஒரு கட்டத்தில் கருணாநிதி, தன்னோட மகன், மனைவி தொலைபேசியையை ஒட்டுக் கேட்டு தரச் சொன்னார்.   அந்த அளவுக்கு ஜாபரை நம்பினார்.  ஜாபர் சொல்றதைக் கேட்டுத்தான் கூட்டணி முடிவுகள் எடுக்கும் வரை கருணாநிதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தார்.  காங்கிரஸ் கட்சியில் சேர இருந்த குஷ்புவை, கடைசி நேரத்தில், திமுக பக்கம் அழைத்து வந்தது, ஜாபர்சேட்தான்.  குறிப்பாக குஷ்புவை கட்சிக்கு அழைத்து வந்தது,

kushboo_20100514

இதுக்கு பிறகுதான், கருணாநிதி ஜாபரை ரொம்பவும் நம்பினார்.  இந்த நம்பிக்கை எந்த அளவுக்கு போச்சுன்னா...  2011 சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக எதிர்ப்பு அலை கடுமைய வீசிக்கிட்டு இருக்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சபோதும், தேர்தல் அன்னைக்கு கருணாநிதியை சந்திச்ச ஜாபர், திமுக கூட்டணி 100 இடங்களில் வெற்றி பெறும்னு சொன்னார்.

அப்படி ஜாபர் சேட்டை முழுமையா நம்பிய பாவத்துக்குத்தான் கருணாநிதி இப்போ அனுபவிச்சிக்கிட்டு இருக்கார்"

"தனி நபர் அந்தரங்கங்களை ஒட்டுக் கேட்கிறது தப்பு ன்னு பிஜேபி தலைவர் இல கணேசன் சொல்லியிருக்காரே ? " என்றான் ரத்னவேல்.

"அதிமுகவுக்கு தா.பாண்டியன் மாதிரி, திமுகவுக்கு இல.கணேசன்.  இல கணேசனுக்கு இது கடைசி தேர்தலா இருக்கலாம். திமுகவோட கூட்டணி வைச்சா நாம எம்பி யாகிடலாம். மோடி பிரதமரா ஆனா, அமைச்சராகிடலாம்னு நினைச்சுக்கிட்டு இருக்கார்.

Untitled-2

இல.கணேசன், இது மாதிரி பேசியதுக்குப் பின்னாடி கருணாநிதி இருக்கிறார்.  அவர் சொல்லித்தான் இது போல, பேசியிருக்கார் கணேசன்.  ஆனா, திமுக, பிஜேபி கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை.  அதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதைக்கு இல்லை"

"சரி... காவல் துறையில் டேப் விவகாரத்தைப் பத்தி என்ன பேசிக்கறாங்க ? " என்றான் பீமராஜன்.

"காவல் துறையில் இந்த டேப் எப்படி வெளியில வந்துச்சுன்னு தான் பரபரப்பான பேச்சு.   அதுவும் இதை வெளியிட்ட நபர் கைக்கு எப்படிப் போச்சுன்னுதான் பெரிய பரபரப்பா இருக்கு.  நல்லா வச்சாண்டா ஆப்பு ஜாபருக்குன்னு பேசிக்கிறாங்க.

பல அதிகாரிகளுக்கு உள்ளுக்குள்ள ரொம்ப சந்தோஷம்.  ஆனா, அந்த சந்தோஷத்தையும் போன்ல பகிர்ந்துக்க வேண்டாம்னு பயப்படறாங்க" என்று சொல்லி சிரித்தான் தமிழ்.

"உண்மைதானேப்பா.... அன்னைக்கு ஜாபர் சேட் போட்டு வைச்ச வழியத்தானே, இன்னைக்கும் உளவுத்துறை பின்பற்றுது"

"டேய்.. இந்த உரையாடல்கள் போலி ன்னு கலைஞர் டிவி அறிக்கை கொடுத்திருக்காங்களே... பாத்தியா" என்றான் வடிவேலு.

kalaingar_tv

"பாத்தேன் பாத்தேன்.   இந்த உரையாடல்கள் போலியா இல்லையான்றதை, சரிபார்க்க, இப்போ எவ்வளவோ விஞ்ஞான பரிசோதனைகள்லாம் வந்துடுச்சு.   போலியான உரையாடல்களை பாத்து பயந்தா, கனிமொழி தற்கொலைக்கு முயன்றாங்க ?  போலியான உரையாடல்களா, உண்மை உரையாடல்களா ன்ற விபரங்கள், சிபிஐ விசாரணையை கையில் எடுத்த பிறகு, தெரிய வந்துடும்.

அப்போ, எதை வச்சுப்பா இது போலின்னு சொன்ன ன்னு, இந்த அறிகைகையை கலைஞர் டிவியி சார்பா வெளியிட்ட அந்த நபரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். அப்போ தெரியும்"

"சரி... நீதிபதி சி.டி.செல்வம் என்ன பண்றாரு ?.  எப்படியாவது அந்த டேப் வெளியீட்டை தடுக்கணும்னு முயற்சி பண்ணாரே.... அவர் முயற்சி வெற்றி பெறலை போல இருக்கே.. ? " என்றான் ரத்னவேல்.

"டேப் விவகாரம் சிடி.செல்வத்துக்கு தெரிஞ்ச உடனேதான், இன்னைக்கே கைது பண்ணுங்கன்னு உத்தரவு போட்டது.  எப்படியும் காவல்துறையில் கைது பண்ணிடுவாங்கன்னு நினைச்சிருக்கார்.  அவங்க, இந்த டேப்புக்கு சம்பந்தமே இல்லாத தள வடிவமைப்பாளரை கைது பண்ணி சிறையில் அடைத்து விட்டோம் னு பெருமையா சொன்னாங்க.  சி.டி.செல்வத்துக்கு கொஞ்சம் சந்தோஷமா இருந்துச்சு.  சரி... தலைவர் குஷியாயிடுவாருன்னு நினைச்சுக்கிட்டு இருந்தப்போவே, முதல் டேப் சவுக்கு தளத்தில் வெளியாகவும் பயங்கர டென்ஷனாயிட்டாரு செல்வம்.

pr300309b

அன்னைக்கு வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தப்போ, வழக்கை புதன் கிழமைக்கு தள்ளி வைக்கிறேன்னு சொன்னவரு, தன் சேம்பருக்கு காவல் துறை அதிகாரிகளைக் கூப்பிட்டு கன்னா பின்னான்னு திட்டியிருக்காரு.... என்னய்யா போலீஸ் நீங்க.. பாண்டிச்சேரியில இருக்கிறவன அரெஸ்ட் பண்றீங்க.. இங்க இருக்கவனை அரெஸ்ட் பண்ண முடியாதா ?  எதுக்குய்யா வேலையில இருக்கீங்க ன்னு கடுமையா சத்தம் போட்டிருக்கார்.

இதுக்கு நடுவுல, சவுக்கு நடத்துபவரை, திமுக வழக்கறிஞர்கள் அணுகியிருக்காங்க. சி.டி.செல்வத்திடம் இருக்கும் வழக்கை முடித்து வைக்கிறோம்.  தலைவரை, செல்வத்திடம் பேசச் சொல்கிறோம். மீதம் உள்ள டேப்பை வெளியிடாதீர்கள்.  உங்களுக்கு "என்ன வேண்டுமோ" அதை செய்து தருகிறோம்னு சொல்லியிருக்காங்க"

"அதுக்கு சவுக்கு என்ன சொன்னாராம் ? "

"சிடி செல்வத்தை, சவுக்கு தளம் மீது இன்னும் 10 வழக்குகளை போடச் சொல்லுங்கள்.  அதை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியும் னு சொல்லிட்டாராம்"

"இது நடந்ததுக்கு மறுநாள், டெல்லியில டேப்புகள் வெளியியாகியது.  திமுக கூடாரமே ஆட்டம் கண்டு விட்டது.  இந்த டேப்புகளால, மற்றவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை விட, சிடி.செல்வத்துக்குத்தான் கடுமையான பாதிப்பு.

சில திமுக வழக்கறிஞர்கள், கருணாநிதிக்கிட்ட போயி, அந்த நீதிபதிதான் அவனை கோபப்படுத்திட்டார்.   நீதிபதி அவனை கைது செய்ய உத்தரவு போடலன்னா, இது நடந்திருக்கவே நடந்திருக்காதுன்னு சொல்லியிருக்காங்க.

செல்வத்தை, காது கூசுற அளவுக்கு திட்டியிருக்காரு.   இவனையெல்லாம் ஜட்ஜ் ஆக்கினேன் பாரு... எனக்கே ஆப்பு வச்சுட்டான் னு கழுவி கழுவி ஊத்தியிருக்காரு.

KARUNANIDHI_1540750f

இதுக்கு நடுவுல, சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும், டேப் விவகாரம் பெரிதாக பேசப்பட்டது.  தலைமை நீதிபதிக்கு, பல்வேறு இடங்களில் இருந்து வழக்கை சி.டி.செல்வத்திடமிருந்து மாற்ற வேண்டும் என்று புகார் மனுக்கள் போயிருக்கு.   போன வாரம் இந்த வழக்கு வந்தப்போ, 'மனித உரிமைப் போராளி' சங்கரசுப்பு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுங்கள் னு கேக்கும்போதே, சி.டி.செல்வம் எழுந்து போயிட்டாரு.  இதற்குப் பிறகு, இந்த வழக்கு திரும்ப வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருது.

திமுகவின் கைத்தடியாக சி.டி.செல்வம் செயல்பட்டு வருகிறார் என்ற விபரம், எல்லோரிடமும் பரவியிருக்கு.  பல்வேறு வழக்கறிஞர்களும், பல நீதிபதிகளும், தனிப்பட்ட முறையில் பேசும்போது, செல்வத்துக்கு எதுக்கு இந்த வேலைன்னு சொல்றாங்க. ஒரே ஒரு வழக்குல, செல்வம் இப்படி பேரை கெடுத்துக்கிட்டாருன்னுதான் நீதிமன்ற வளாகத்தில் பேச்சா   இருக்கு."

"ஏய் தம்பி... அவரு நீதி அரசர்ப்பா.... என்னாப்பா நீ இப்படிப்   பேசற..? " என்றார் கணேசன்.

"அண்ணே... நான் பேசுனதுக்கே இப்படி சொல்றீங்களே.... கருணாநிதி பேசறதைக் கேட்டா, உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும் ?  முடிஞ்சா செல்வத்தை, கருணாநிதி மேல, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கச் சொல்லுங்க. "

"சரி... ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு என்னடா ஆச்சு ? எந்த நிலையில இருக்கு ? " என்றான் ரத்னவேல்.

"ஜெயலலிதாவோட ஆடிட்டரா இருந்த பாஸ்கரன் என்பவர், ஜெயலலிதாவுக்கு சொந்தமான சில வெள்ளிப் பொருட்களை எடுத்துச் சென்று விட்டார். அந்த பொருட்கள் நீதிமன்றத்தால் கைப்பற்றப்பட்டவை.  தற்போது பாஸ்கரன் இறந்து விட்டார்.  அதனால், அந்த சொத்துக்களின் மதிப்பை கண்டறிய வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் சொல்றாங்க. "

"இது எதுக்குப்பா.. அது என்ன அவ்வளவு மதிப்பா இருக்கும் ? "

"எல்லாம் வழக்கை தாமதப்படுத்தும் தந்திரம்தான்ணே....  ஆனா, இது பெரிய அளவில் ஜெயலலிதாவுக்கு எந்த உதவியும் செய்யாது.  அந்த வெள்ளிப் பொருட்களின் மதிப்பு வழக்கின் தன்மையை பெரிதாக பாதிக்காது"

jjsasikalanakeeran

"யாருடா அந்த பாஸ்கரன் ? " என்றான், பீமராஜன்.

"அப்படிக்கேளு.  1996 தேர்தலில் படுதோல்வி அடைந்த ஜெயலலிதா, ஒரு ஆங்கில பத்திரிக்கை ஆரம்பிக்கலாம் ன்ற முடிவுக்கு வர்றாங்க.  அவுட்லுக் மாதிரியான ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கணும் ன்றது அவங்களோடு ஐடியா.  அதுக்காக, பத்திரிக்கை எப்படிப் போகும், என்ன வடிவமைப்பில் இருந்தால், தமிழகத்தில் அது வரவேற்பை பெறும், உள்ளடக்கம் எப்படி அமைய வேண்டும், எத்தனை விற்கும், இது பற்றியெல்லாம் ஒரு சர்வே எடுத்து வரச் சொன்னாங்க.  சர்வே எடுப்பதில் பாஸ்கரன் நிபுணர்.

பாஸ்கரனும், இது பத்தி ஒரு சர்வே எடுத்து, எல்லா விபரங்களையும் திரட்டிக்கிட்டு ஜெயலலிதாவை பாக்க 7 டிசம்பர் 1996 அன்னைக்கு போயஸ் தோட்டம் வர்றாரு. அங்க வந்து ஜெயலலிதாவை பாக்க காத்திருக்கும்போதுதான், சிபிசிஐடி போலீசார், டான்சி வழக்கில் ஜெயலலிதாவை கைது செய்ய வர்றாங்க.

போலீஸ் வந்ததைப் பாத்ததும், ஜெயலலிதாவுக்கு ஒன்னும் புரியலை.  உடனே பாஸ்கரனை அழைத்து, நான் வரும் வரை, நீங்களே எல்லாவற்றுக்கும் பொறுப்பாக இருங்கள் னு சொல்லிட்டுப் போயிட்டார்.  அதுக்கு அப்புறம், லஞ்ச ஒழிப்புத் துறை 5 நாட்கள் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையின் போது எல்லா மகஜரிலும் கையெழுத்து போட்டது, பாஸ்கரன்தான். ஜெயலலிதா வீட்டிலிருந்து ஒரு குண்டுமணி கூட வெளியில போகாம பாத்துக்கிட்டார்.

அதுக்கு அப்புறமா, ஜெயலலிதாவுக்கு பாஸ்கரன் மேல ஒரு மரியாதை வந்துடுச்சு.  ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இருந்தார் பாஸ்கரன்.   சசிகலாவுக்கு இது பொறுக்குமா... ?  ஜெயலலிதா கிட்ட சொல்லி, பாஸ்கரனை வீட்டுக்குள்ள வர விடாம செய்துட்டாங்க.

அதற்குப் பிறகு பாஸ்கரனை ரத்தப் புற்றுநோய் தாக்கியது.  படுத்த படுக்கையாவே கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேல கிடந்தார் பாஸ்கரன்.  ஜெயலலிதா அவரைப் போய் பாக்கவே இல்லை.  குறைந்தபட்சம் பண உதவி கூட செய்யலை.

இப்படிப்பட்ட நன்றி கெட்டவர்தான் ஜெயலலிதா"

"சசிகலா பண்ணதுக்கு அவங்க என்னடா பண்ணுவாங்க ? " என்று வக்காலத்துக்கு வந்தான் ரத்னவேல்.

"அதிமுக அடிமை மாதிரி பேசாத டா இடியட்.  ஜெயலலிதா என்ன குழந்தையா... ?  அவங்களுக்குத் தெரியாது ?  தனக்கு நெருக்கடியான காலத்தில் உதவி செய்தவங்களை கை விடற நபர் என்ன மாதிரியான நபரா இருப்பாங்க ?  இதுதான் ஜெயலலிதா"

"சரி.. கனிமொழி சரத் குமாரோட ஜாமீன் ரத்தாகுமா ? " என்றார் கணேசன்.

"அண்ணே... ஜாமீன் ரத்தாவதற்கு வாய்ப்பு இல்ல.  ஜாமீன் வழங்கப்பட்ட நாள் முதலா, சாட்சிகளை கலைப்பதற்கோ, ஆவணங்களை அழிப்பதற்கோ, முயற்சிகள் எடுத்திருந்தால்தான், ஜாமீனை ரத்து செய்ய முடியும்.  இந்த உரையாடல்கள், பதிவு செய்தது, இவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பு என்பதால், அதற்கான வாய்ப்பு இல்லை"  என்று கூறி விட்டு தமிழ் எழுந்தான்.

சபை கலைந்தது.

வெட்கப்படுங்கள்.

$
0
0

pr300309b

சவுக்கு தளத்தை முடக்குவதற்காக நடைபெற்று வரும் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது,  சென்னை மாநகர சைபர் பிரிவு போலீசார், இந்த தளத்தை நடத்துபவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். எங்களால் பிடிக்க முடியவில்லை, என்று தெரிவித்தனர்.

இதையடுத்து இப்படிப்பட்ட நபரையெல்லாம் எப்படி இன்னும் விட்டு வைத்திருக்கிறீர்கள்.  இது போன்ற நபர்களெல்லாம் மிகப்பெரிய சமூக விரோதிகள்.  இதற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்றார்.  மூத்த வழக்கறிஞர் ரமேஷ் எழுந்து, இது நீதித்துறைக்கே விடப்பட்ட சவால்.  இதை தடுக்க வேண்டும்.  கண்டுபிடிக்க முடியவில்லை என்று அப்படியே விட்டு விட முடியாது. கண்டுபிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

சிபிஐ வழக்கறிஞர் சந்திரசேகர் எழுந்து, யார் நடத்துகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.  ஆனால், எவ்விதமான ஆதாரங்களும் இல்லை.  எல்லோருக்கும் தெரிந்தும் தெரியாத விவகாரம் இது என்றார்.

நீதிபதி சி.டி.செல்வம், வழக்கறிஞர்களைப் பார்த்து, இப்படி ஒரு நபர் நீதித்துறையை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார், நீதித்துறைக்கே சவாலாக இருக்கிறார்.   அவருக்கு எதிராக நீங்கள் போராட வேண்டாமா ?  என்று கேட்டார்.  எஸ்... எஸ்... எஸ்..... என்று ஆமோதித்தனர் வழக்கறிஞர்கள்.

இருப்பதிலேயே மோசமான மனிதர்கள் இரண்டு வகை.  ஒருவன் அடுத்தவனின் வீட்டைக் கொளுத்துபவன்.  இன்னொன்று இவனைப் போல கீழ்த்தரமாக எழுதுபவன்.  இவர்கள் இருவர்தான் சமூகத்துக்கு மிகப்பெரிய விரோதிகள் என்றார் செல்வம்.  மெரட்டிக் கேட்டாலும் அரெஸ்ட் பண்ண மாட்றாங்க... அதட்டிக் கேட்டாலும் அரெஸ்ட் பண்ண மாட்றாங்க என்று மனமுடைந்த சி.டி.செல்வம், வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.

நீதித்துறையைப் பொறுத்தவரை, அதுவும் குறிப்பாக, உயர்நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, ஒரு வழக்கில் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்டிருந்தாலோ, அல்லது, அந்த நீதிபதி மீது நம்பிக்கை இல்லை என்று வழக்கறிஞர்கள் கூறினாலோ, உடனடியாக அந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதுதான், இந்தியா முழுக்க கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு.   கொஞ்சமாவது சட்டம் தெரிந்த நீதிபதிகள் இதைத்தான் செய்வார்கள்.

சவுக்கு தளம் குறித்த இந்த வழக்கு சி.டி.செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வரும்போதே, செல்வத்துக்கு, தன்னைப் பற்றி சவுக்கு தளத்தில் பல முறை எழுதப்பட்டிருக்கிறது என்பது தெரியும்.  இருந்தும், கூச்சம், நாச்சம், எதுவுமே இல்லாமல், மிகுந்த ஆர்வத்தோடு வழக்கை விசாரித்து வந்தார்.  ஒரு ஐந்து அல்லது ஆறு முறை இந்த வழக்கு இவர் முன்னிலையில் வந்தபோதெல்லாம், என்ன ஆயிற்று.... என்ன முன்னேற்றம் என்று கேட்டு விட்டு, வழக்கை தள்ளி வைப்பார்.

கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதுதான், பாண்டிச்சேரியில் உள்ள அந்த வடிவமைப்பாளரை உடனடியாக கைது செய்யுங்கள் என்றார்.  வடிவமைப்பாளர் பாண்டிச்சேரியில் இருக்கிறார் என்பதை, பல முறை வழக்கு தொடுத்த சங்கரசுப்பு சொல்லியிருக்கிறார்.  ஆனால் அப்போதெல்லாம் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத சி.டி.செல்வம், கடந்த வாரம், இன்றே கைது செய் என்று துடித்ததன் காரணத்தை நாம் விரிவாக எழுதியிருக்கிறோம்.  காவல்துறை அதிகாரிகளை கடுமையாக பேசி, மிரட்டி, நாளை கைது செய்த விபரத்தை சொல்லுங்கள் என்று செல்வம் மிரட்டிய காரணத்தால், சவுக்கு தளத்தின் வடிவமைப்பாளர் முருகைய்யனை கைது செய்தது காவல்துறை.  சவுக்கில் வரும் கட்டுரைகளுக்கும், அந்த வடிவமைப்பாளருக்கும், துளியும் தொடர்பில்லை என்பது, சட்டம் முட்டாளான சி.டி.செல்வத்துக்கு நன்றாகவே தெரியும்.  எவனோ ஒருவன் செய்த தவறுக்காக, சம்பந்தமில்லாத நபரை கைது செய்ய உத்தரவிடுவது, அடிப்படை உரிமையை மீறும் செயல் என்பதும் சி.டி.செல்வத்துக்கு தெரியும்.  இருந்தும், ஒரு அப்பாவியை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார் என்றால், இது எத்தகைய அயோக்கியத்தனம் ?  தன்னுடைய சொந்த பழிவாங்குதலுக்காக, இத்தகைய ஒரு உத்தரவை பிறப்பிக்கும் சி.டி.செல்வம், நீதிபதியாக அல்ல... நீதிபதிகளுக்கு முன் கம்பு ஒன்றை தூக்கிக் கொண்டு உஸ்ஸு... உஸ்ஸூ என்று கத்திக் கொண்டு செல்வார்களே..... அந்த வேலைக்குக் கூட தகுதியில்லாதவர்.

MA07CITY-MACE_BEAR_1355779f

கடந்த ஒரு வாரமாக, செய்யாத குற்றத்துக்காக ஒரு அப்பாவி சிறையில் இருக்கிறார்.  அவருக்கு ஏற்பட்ட இழப்புக்கு இந்த சி.டி.செல்வம் என்ன நஷ்ட ஈடு கொடுத்து விட முடியும் ?  அவரை கைது செய்யுங்கள் என்று அடாவடியாக சி.டி.செல்வம் பிறப்பித்த உத்தரவின் காரணமாகவே, இன்று அவர் சிறையில் இருக்கிறார்.

இப்படி தன்னுடைய சொந்த கோபத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக, ஒரு அப்பாவியை சிறையில் அடைக்க உத்தரவிட்ட, அதுவும், அப்படி உத்தரவிட தனக்கு அதிகாரமே இல்லாதபோது அப்படி உத்தரவிட்ட, சி.டி.செல்வம், நீதியைப் பற்றியும், நீதித்துறையின் மாண்பைப் பற்றியும் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

இப்படி ஒரு மோசமான மனிதராக இருந்து கொண்டு, தன்னைப் போய் மை லார்ட், மை லார்ட் என்று அழைக்கிறார்களே என்று சி.டி.செல்வம் வெட்கப்பட வேண்டும்.    ஆனால் அவர் வெட்கப்படுவாரா என்ன ?  கருணாநிதியின் காலைப் பிடித்து நீதிபதியாகி, கருணாநிதியின் துதிபாடியாக, உள்ள சி.டி. செல்வம் போன்ற நபர்களிடம் இதையெல்லாம் எதிர்ப்பார்க்க முடியுமா   என்ன ?

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

$
0
0

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின.

2g-tape

சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். 

அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில், "கலைஞர் டி.வி. முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் தமிழக உளவுத் துறை முன்னாள் ஏ.டி.ஜி.பி ஜாபர் சேட்டும் 2011 பிப்ரவரி 13-ந் தேதி டெலிபோனில் பேசியதன் பதிவு, தி.மு.க ராஜ்யசபா எம்.பி. கனிமொழியும் ஜாபர் சேட்டும் 2010 நவம்பர் 23ந் தேதி பேசியதன் பதிவு, அவர்கள் இருவரும் 2011 பிப்ரவரி 16ந் தேதி பேசிய மற்றொரு பதிவு, கலைஞரின் செயலாளர் சண்முக நாதனும் ஜாபர்சேட்டும் 2010 டிசம்பர் 31ந் தேதி பேசிய பதிவு ஆகிய நான்கு டேப்கள்தான் அதில் இருந்தன. 

இவை முதன்முறையாக வெளியிடப்படும் தொலை பேசி உரையாடல்கள் என்ற பிரசாந்த் பூஷண், 2008-ல் ஆ.ராசா தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது தனியார் நிறுவனத்துக்கு 2ஜி அனுமதி பெற்றுத் தந்ததில் ஆதாயம் அடைந்ததற்கான ஆதாரம் உள்ளது. கடன்வாங்கியதாக சரத்குமார் ரெட்டியால் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இது ஜாபர்சேட் மற்றும் சரத்குமாருக்கு இடையே நடந்த உரையாடல் பதிவில் தெரியவருகிறது. 

நம்பகமான இடத்தில் இருந்து இந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தையும் உச்சநீதிமன்றத் தில் ஒப்படைக்க உள்ளோம். இந்தப் பதிவுகள் அனைத்தும் ஜாபர் சேட்டின் செல்போனில் பதிவு செய்ததாக இருக்க லாம். இதன் மீது தீவிர விசாரணை நடத்தப்படவேண்டும். இந்த ஆதாரங்களை சி.பி.ஐ. அல்லது லோக்பால் போன்ற பொது அமைப்புகளும் விசாரிக்கலாம்' என்றார் அதிரடியாக. கலைஞர் டி.விக்கு வந்த 200 கோடி ரூபாய் பணம் தொடர்பான பேச்சுகள்தான் அவை.

"ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான ஹாட் நியூஸ் என்றபோதும், தமிழகத்தில் அதன் அலை பெரிதாக இருந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நிலைப்பதற்கு ஆதர வாக இருந்தவர் கலைஞர். அவருடைய மகள் கனி மொழியின் பேச்சு டேப் செய்யப்பட்டிருக்கிறது. கலைஞ ரின் செயலாளர் சண்முகநாதன் பேச்சு டேப் செய்யப் பட்டிருக்கிறது. அவரது பெயரிலான டி.வி.நிறுவனத்தின் நிர்வாகியுடன் பேசியதும் டேப் ஆகியுள்ளது. இத்தனை யும் மாநில உளவுத்துறையின் உயரதிகாரியாக இருந்த ஜாபர்சேட்டின் போனிலிருந்து டேப் செய்யப்பட்டிருக்க லாம்' என்று சொல்கிறார் பிரசாந்த் பூஷண்.

தமிழக உளவுத்துறைதான் மற்றவர்களின் பேச்சுகளை ஒட்டுக்கேட்பது வழக்கம். ஆனால், அதன் அதிகாரியாக இருந்தவரின் பேச்சே ஒட்டுக்கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்குமே பேரதிர்ச்சியைக் கொடுத் தது. அதிகாரிகளிடையே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது சிலநேரங்களில் அவர்களே தங்கள் செல்ஃபோனில் பதிவு செய்வதுண்டு. அப்படி டேப் செய்தார்களா? அல்லது மத்திய உளவுத்துறையான ஐ.பி. டேப் செய்ததா? சி.பி.ஐ. டேப் செய்ததா என அதிகாரிகள் மட்டத்தில் கேள்விகளுக்குப் பஞ்சமில்லை.

இந்தக் கேள்விகளை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளிடம் முன்வைத்தோம். நீண்ட தயக்கத்திற்குப் பிறகு பேசத் தொடங்கி, பல விவரங்களைத் தந்தனர்.

""2ஜி விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், 2010ஆம் ஆண்டு நவம்பர்  14-ஆம் நாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து ஆ.ராசா ராஜினாமா செய்தார். அதன்பிறகு நடந்த பேச்சுவிவரங் கள்தான் டேப் செய்யப்பட்டுள்ளன. 2011 பிப்ரவரி 2ந் தேதி ஆ.ராசா சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டார். 2011 ஏப்ரல் 2ந் தேதி சி.பி.ஐ. தனது முதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இந்த அடிப்படையில், போன் பேச்சுக்கள் டேப் செய்யப்பட்ட  விதத்தை ஆராய்ந்தபோது, சி.பி.ஐயின் தென்மண்டல அதிகாரிகள்தான் சென்னை ராஜாஜி பவன் அலுவலகத்தை மையமாகக்கொண்டு இந்த ஒட்டுக்கேட்பு பணியைச் செய்திருக்கிறார்கள் என்பது தெரிந்துள்ளது.

சி.பி.ஐ.யின் ஸ்பெஷல் டிவிஷனைச் சேர்ந்த அதிகாரிகள்தான் இந்த டேப் பணியைக் கையாண்டுள்ளனர். அப்போது சி.பி.ஐயின் தென்மண்டல ஜாயிண்ட் டைரக்டராக இருந்தவர் அசோக்குமார். மத்திய அரசின் சி.பி.ஐயிலிருந்து தமிழக அரசின் பணிக்கு மாற்றம் பெற்ற அசோக்குமார், தமிழக உளவுத்துறை டி.ஜி.பியாக தற்போது இருக்கிறார். அப்போது சி.பி.ஐ.யின் லஞ்ச கண்காணிப்பு பிரிவில் எஸ்.பி.யாக இருந்த முருகன், தற்போது ஜெ. ஆட்சியில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக இருக்கிறார். டேப் செய்ததில் பங்கெடுத்த மற்றொருவர் சி.பி.ஐ. ஸ்பெஷல் டிவிஷனில் எஸ்.பி.யாக இருந்த ராஜு. இவர் தற்போது ரிட்டையர்டாகிவிட்டார். 

லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களைப் பயன் படுத்தி இந்த ஒட்டுக்கேட்பு பதிவுகளை செய்திருக்கிறது சி.பி.ஐ. டீம். இதற்காக முருகன் உள்ளிட்டோரை அமெரிக்காவுக்கு அனுப்பிய அசோக்குமார் அங்கு சில மாதங்கள் பயிற்சி எடுக்கச் செய்திருக்கிறார் என்கிறது சி.பி.ஐ வட்டாரத் தகவல். அந்தப் பயிற்சியில் கிடைத்த அனுபவத்துடன் புதிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு டேப் செய்துள்ளனர். 

 


பலரது போன்களையும் ஒட்டு கேட்கும் மாநில உளவுத்துறையினருக்குத் தங்களது போன் கள் ஒட்டுக்கேட்பது பற்றி விவரம் தெரியாதா? அதைக் கண்டுபிடிக்கும் சாஃப்ட்வேரும் இன்னபிற கருவிகளும் தமிழக போலீசிடம் இல்லையா? என்றெல்லாம் அதிகாரிகள் மட்டத்திலேயே கேள்விகள் எழுகின்றன. தமிழக உளவுப் போலீசால் ஒருவரது போனை ஒட்டுக்கேட்கவும் முடியும். தங்களது போன் ஒட்டுக்கேட்கப்படுகிறதா இல்லையா என்பதைத் தகுந்த சாஃப்ட்வேர் மூலம் தெரிந்துகொள்ளவும் முடியும். இந்நிலை யில், தமிழக உளவுத்துறை அதிகாரியின் போன் உரையாடல்கள் பதிவாகியுள்ளன. அப்படியென்றால், தங்களுடைய போன் ஒட்டுக்கேட்கப் படவில்லை என உறுதி செய்துகொள்ள  உளவுத்துறை பயன்படுத்திய சாஃப்ட் வேரும் இன்னபிற கருவிகளும் செயலிழந்துவிட்டனவா எனவும் அதிகாரிகள் வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது. 

இதுபற்றி நம்மிடம் விவரித்த சில உயரதிகாரிகள், ""ஒட்டுக் கேட்பது தொடர்பாகவும் ஒட்டுக் கேட்கப்படுகிறதா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வதற்காகவும் மாநில அரசின் உளவுத்துறை சிலவகை சாஃப்ட்வேர்களையும் அது சார்ந்த கருவிகளையும் மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு தனது உள்துறை மூலம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு மேல் நிலையிலுள்ள நவீன கருவிகளை மாநில அரசு வாங்க முடியாது. மத்திய அரசிற்குத் தெரியாமல் வாங்கிப் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர் சர்வர் எளிதாகக் காட்டிக் கொடுத்து விடும். இதுதான், மாநில உளவுத்துறையின் நிலை. கட்டுப்பாடு தன் கையில் இருக்கவேண்டும் என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. சி.பி.ஐ அதிகாரிகள் டீம் அமெரிக்காவுக்கு சென்று பயிற்சி எடுத்துத் திரும்பியபிறகு, இஸ்ரேல் நாட்டிலிருந்து நவீன ஒட்டுக்கேட்பு கருவிகளை மத்திய அரசு வாங்கிப் பயன்படுத்தியது.

இந்தக் கருவிகள், மாநில அரசுகள் தம் வசம் வைத்துள்ள கருவிகளைவிட மேம்பட்டவை. ஒரு போன் ஒட்டுக்கேட்கப்படுகிறதா இல்லையா என்பதைக் கண்டறிய மாநில உளவுத்துறை பயன்படுத்தும் சாஃப்ட்வேரை ஏமாற்றிவிட்டு, அந்த போன்களை ஒட்டுக்கேட்கும் தன்மை வாய்ந்தவை. இதைத்தான் சி.பி.ஐ பயன்படுத்தியுள்ளது. அதனால்தான், தமிழக உளவுத்துறையினர் தங்களது போன் ஒட்டுக்கேட்கப்படவில்லை என்ற நம்பிக்கை யிலும் தைரியத்திலும் பேசியுள்ளனர். அனுமதி பெற்று டேப் செய்யப்படும் பேச்சுகளைத்தான் வழக்குகளுக்குப் பயன்படுத்த முடியும். அதனால், சி.பி.ஐ. இதுகுறித்து மத்திய உள்துறையிடம் உரிய அனுமதி பெற்றே இந்த போன் பேச்சுகளைப் பதிவு செய்துள்ளது'' என்கிறார்கள் விரிவாகவே.
இதுபற்றி நாம் மேலும் விசாரித்தபோது, மாநில உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. ஜாபர்சேட்டின் போன் பேச்சுக்களைப் பதிவு செய்ய வேண்டும் என 2010 அக்டோபர் 8-ந்தேதியன்று சி.பி.ஐ. தரப்பு மத்திய அரசில் இதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டுமோ அவர்களிடம் உரிய அனுமதி பெற்றுள்ளது. 

இத்தகைய அனுமதிகள் குறிப்பிட்ட சில காலம் வரை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.  ஆ.ராசா கைது செய்யப்பட்ட பிறகு, அவருடன் தொடர்புபடுத்தப்பட்ட க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தின் சாதிக்பாட்சா 2011 மார்ச் 16 அன்று தற்கொலை  செய்து கொண்டார். அப்போது இந்த மரணம் சர்ச்சையாக்கப்படவே, 2011 மார்ச் 28-ல் இந்த மரணம் தொடர்பான விசாரணைக் காக ஜாபர்சேட்டின் போன் டேப் செய்யப்பட வேண்டும் என மீண்டும் அனுமதி பெற்றிருக்கிறது சி.பி.ஐ. தரப்பு.

அரசியல்வாதியாகி விட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வெளியிட்ட நான்கு பேச்சுகளும் சி.பி.ஐயால் டேப் செய்யப்பட்டது. 2010 நவம்பர், டிசம்பர், 2011 பிப்ரவரி ஆகிய காலகட்டங் களில்தான். இதன்பிறகே 2011 ஏப்ரலில் 2ஜி வழக்கு தொடர்பான முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பேச்சுகள் குறித்து குற்றப்பத்திரிகையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்தப் பேச்சுகளிலிருந்து வலுவான ஆதாரங் கள் எதுவும் இல்லை என்பதால் குறிப்பிடப்பட வில்லையா? என்பது குறித்து அதிகாரிகள் வட்டா ரத்தில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

வெளியிடப்பட்ட 4 பேச்சுக்களுமே போன் டேப் செய்ய சி.பி.ஐ. பயன்படுத்தும் கருவியிலிருந்தே பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதுபோல மொத்தம் 18 பதிவுகள் பதிவிறக்கப் பட்டிருக்கின்றன. இந்த பதிவிறக்கங்கள் செல்ஃபோனிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது போல் ஸ்பெஷல் சாஃப்ட்வேர்கள் மூலம் மாற்றப்பட்டுள்ளன. அதில் சில பதிவுகளை சுப்ரமணியசாமி வெளியிட இருப்பதுடன், சுப்ரீம் கோர்ட்டுக்கும் இதைக் கொண்டு செல்ல இருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டின் நேரடிப் பார்வையில் நடைபெறும் 2ஜி வழக்கு தொடர்பான ஆவணங்கள், மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நிலையில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் எப்படி வெளியாயின என்பதற்கும், ஏன் வெளியாயின என்பதற்கும் பல்வேறு அரசியல் காரணங்கள் டெல்லியிலும், சென்னையிலும் அலசப்படுகின்றன.

கூட்டணிக்கு மீண்டும் வர மறுக்கும் தி.மு.க.வை கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுபோல இப்போதும் கொண்டுவருவதற்காக, சி.பி.ஐ.யை காங்கிரஸ் தலைமை பயன்படுத்துகிறதா? போன் ஒட்டுக்கேட்பு நடந்த போது சி.பி.ஐ. டீமில் இருந்த முக்கிய அதிகாரிகள் தற்போது தமிழக அரசுப் பணியில் இருப்ப தால் மாநில ஆளுங்கட்சி யான அ.தி.மு.க வரும் எம்.பி. தேர்தலில் தி.மு.கவுக்கு எதி ரான பிரச்சார ஆயுதமாக இத னைக் கையிலெடுக் கும் நோக்கத்தில் இதன் பின்னணி  யில் செயல்பட் டுள்ளதா? சி.பி.ஐயில் உள்ள சில அதிகாரிகளே தங்களது சொந்த லாபங்களுக்காக இதனை வெளியிட உதவியிருக்கிறார் களா? என்பன உள்ளிட்ட கேள்விகள் வலம் வரும் நிலையில், தி.மு.க தலைமைக்கு இந்த டேப் விவகாரம் கடும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

2ஜி வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரும் கனிமொழியின் மனு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆ.ராசாவின் வாக்குமூலங்கள், அரசுத் தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்ட தயாளுஅம்மா மீதான விசாரணை பார்வை இனி மாறுமா என்ற கேள்வி, உளவுத்துறை முன்னாள் ஏ.டி.ஜி.பி ஜாபர்சேட் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் உள்பட பல அம்சங்கள், தற்போது வெளியான ஒட்டுக்கேட்பு பேச்சுகளால் முக்கியத்துவம்  பெற்றுள்ளன. இவை குறித்து, சுப்ரீம் கோர்ட் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதால் இந்திய அரசியலின் ஒட்டுமொத்த பார்வையும் இப்போது சுப்ரீம் கோர்ட்டை நோக்கித் திரும்பியுள்ளன. 

-காமராஜ்


 

போலியானது...!


ஒட்டுக்கேட்பு தொடர்பான பின்னணி களைஅதிகாரிகள் தரப்பில் ஒரு மாதிரியாக விளக்கியுள்ள நிலையில், இந்த டேப் விவகாரமே முற்றிலும் பொய்யானது என நிருபர்களுக்கு பதிலளித்தார் கலைஞர். இது போலியானது என கலைஞர் டி.வி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எம்.பி.தேர்தலில் தி.மு.க.வின் பிழைப்பை கெடுக்க எதிரிகள் நடத்தும் சதி செயல் என துரைமுருகனும், இதனை பிரசாந்த் பூஷண் கோர்ட்டில் சமர்ப்பிக்காமல் ஊடகங்களிடம் கொண்டு சென்றது உள்நோக்கம் கொண்டது என்று டி.ஆர்.பாலுவும் தெரிவித்துள்ளனர்.

 

நன்றி.  இந்தியாவின் நம்பர் ஒன் புலனாய்வு நக்கீரன் வாரமிருமுறை இதழ்.


கடைசி ஆணி.

$
0
0

ஆம் ஆத்மி கட்சி கடந்த செவ்வாயன்று வெளியிட்ட உரையாடல்கள், நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, தமிழகத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.   திமுக கூடாரமே கலங்கிப் போயிருக்கிறது.

அரசியல் கட்சிகள், திரை மறைவு பேரங்களில் ஈடுபடுவது, சகஜமான விஷயமே என்றாலும், இத்தகைய பேரங்கள் எப்படி நடத்தப்படுகின்றன என்பது ஒலிநாடாவோடு தற்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.  இதில் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒரு விவகாரம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய ஒரு ஐபிஎஸ் அதிகாரி, இந்திய அரசியல் அமைப்பிடம் விசுவாசமாக இருக்க வேண்டிய ஒரு காவல்துறை அதிகாரி இந்தியாவின் மிக மோசமான ஒரு ஊழல் குடும்பத்தின் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார் என்பதும், அதிர்ச்சி அளிக்கக் கூடிய விவகாரங்கள்.  இந்தியாவில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரியும், ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் காவல்துறை பயிற்சிப் பள்ளியில் பயிற்சி எடுக்க வேண்டும்.

jaff

அந்த பயிற்சிப் பள்ளி தனது நோக்கமாக என்ன கூறுகிறது   தெரியுமா ?

"இந்திய காவல் துறைக்கு, துணிவு, நேர்மை, அர்ப்பணிப்பு, இந்திய மக்களுக்கு சேவை மனப்பான்மை ஆகியவற்றோடு கூடிய சிறந்த காவல் துறை அதிகாரிகளை உருவாக்குவதே இந்த பயிற்சி மையத்தின் நோக்கம்.

இந்த பயிற்சி மையம், மக்களுக்கு சிறப்பாக சேவை செய்யும் வகையில்,  இந்த அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சிகளும், அறிவுரைகளும் வழங்கப்படும்.  குறிப்பாக, உச்சபட்ச நேர்மை, மாறி வரும் சமூக பொருளாதார சூழலில் மக்களின் தேவைகளை புரிந்து கொள்ளும் பக்குவம்,  குறிப்பாக மனித உரிமைகள் குறித்தும், சட்டம் மற்றும் நீதி குறித்தும், சிறந்த காவல்துறை அதிகாரியாவதற்கான தகுதிகள் குறித்தும், சிறந்த உடல் மற்றும் மன நிலை குறித்தும், இந்த பயிற்சி மையத்தில் பயிற்சிகள் அளிக்கப்படும்"

இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்தவர்தான் ஜாபர் சேட்.   ஜாபர் சேட் அடிப்படையிலேயே ஒரு நேர்மையற்ற மனிதர்.  தன்னை மிக மிக புத்திசாலி என்று கருதிக் கொள்பவர்.  அது ஒரு வகையில் உண்மையும் கூட.  அவர் மிக மிக திறமையானவர்தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்தத் திறமையை எதற்குப் பயன்படுத்தினார் என்பதுதான் கேள்வியே.

2007ம் ஆண்டு முதல், 2011 வரை, அவர் தமிழகத்தை ஆண்டார் என்றால் அது மிகையான சொல் அல்ல.    ஒரு காவலர் மாறுதல் முதல், ஆய்வாளர், டிஎஸ்பி, எஸ்.பி, டிஐஜி, ஐஜி, கூடுதல் டிஜிபி தவிர, யார் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக வேண்டும் என்பதையும் ஜாபர் சேட் தான் முடிவு செய்வார்.  யார் உள்துறை செயலாளராக இருக்க வேண்டும், யார் தலைமைச் செயலாளராக இருக்க வேண்டும் என்பதையும் ஜாபர் சேட்தான் முடிவு செய்வார்.

முதுமை காரணமாகவோ, அல்லது வேறு காரணமாகவோ, மிக மிக அறிவு கூர்மையுடைய கருணாநிதி, தன் நிதானத்தை இழந்தது 2006ல் ஆட்சிக்கு வந்த பிறகுதான்.  1997ம் ஆண்டு முதல், 1999 வரை, ஜாபர் சேட், கருணாநிதியின் பாதுகாப்பு எஸ்.பியாக இருந்தார்.  அப்போதே, ஜாபர் சேட்டுக்கும், 2006ம் ஆண்டு வாக்கில், தமிழக ஆளுனர் மாளிகையில் கோலோச்சிய நஜிமுத்தீனுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. நஜிம்முதீன் அப்போது, கம்ப்யூட்டர் சிப்புகளை கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.  முதல்வரின் பாதுகாப்பு எஸ்.பியாக இருந்த ஜாபர் சேட், நஜிம்முதீனின் சரக்குகள் விமானம் மூலமாக வந்தடையும்போது, சுங்கத்துறை அதிகாரிகளிடம் பேசி, அதை பிடிபடாமல் வெளியே கொண்டு வரும் வேலையை ஜாபர் செய்து தருவார்.

2001ல் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றதும், கருணாநிதியை கைது செய்யும் வேலை, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.  கருணாநிதியை கைது செய்யும் வேலை, ஜாபரிடம் ஒப்படைக்கப்பட்டது.  ஜாபர் எதற்காக இந்த டீமில் சேர்க்கப்படுகிறார் என்றால், கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த காரணத்தால், அவரின் வீடு, அவர் செல்லும் பாதை, வீட்டின் நுழைவாயில்கள் உள்ளிட்ட அத்தனை விபரங்களும் அவருக்குத் தெரியும் என்பதற்காகவே.

30pic330pic2

கருணாநிதி கைது செய்யப்பட்ட அன்று நள்ளிரவு, ஜாபர் சேட், மைலாப்பூர் காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு, கைது நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தார்.   ஆனால், எந்த ஜாபர் சேட், தன்னுடைய கைது நடவடிக்கைகளில் முக்கிய பொறுப்பு வகித்தாரோ, அந்த ஜாபர் சேட்டையே, அதி முக்கியத்துவம் வாய்ந்த, உளவுத்துறையின் தலைவராக நியமித்தார் கருணாநிதி.   இப்படி ஜாபர் சேட் உளவுத்துறைக்கு வருவதற்கு முக்கிய காரணம், கருணாநிதியின் வண்டியை தள்ளிக் கொண்டு செல்லும் ட்ராலி பாய்ஸ் என்று அழைக்கப்படுபவர்களில் ஒருவரான பாண்டியன்.  பாண்டியன் 15 வருடங்களுக்கும் மேலாக கருணாநிதியோடு இருக்கிறார்.   அவருக்கு பணி ரீதியாக ஜாபர் சேட் சில உதவிகளைச் செய்து கொடுத்த காரணத்தால், பாண்டியன் ஜாபர் சேட்டுக்கு விசுவாசமான நபராக மாறுகிறார்.

கருணாநிதியோடே எப்போதும் இருப்பதால், கருணாநிதியை யார் சந்திக்க வருகிறார்கள், யாரோடு பேசுகிறார், என்ன பேசுகிறார் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் எடுத்து ஜாபர் சேட்டிடம் சொல்வார் பாண்டியன்.  மேலும், வண்டியை தள்ளிச் செல்கையிலேயே, அய்யா, ஜாபர் சேட் மிக மிக திறமையான அதிகாரி.  அவரை உளவுத் துறைக்கு நியமித்தால், அரசை திறமையாக வழி நடத்துவார் என்று ஓதிக் கொண்டே இருந்தார் ஒரு கட்டத்தில், கருணாநிதி ஜாபர் சேட்டை உளவுத்துறை தலைவராக நியமிக்கிறார்.  ஐ.ஜி அந்தஸ்தில் இருந்த ஜாபர் சேட், உளவுத்துறையை கையாண்டு கொண்டு இருக்கிறார்.  2007.  உளவுத்துறைக்கு டிஐஜியாக நியமிக்கப்பட்டவர் மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியான சங்கர் ஜிவால்.  சங்கர் ஜிவால் அதற்கு முன்பாக, மத்திய அரசின் போதைத் தடுப்புப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.  அப்போது, போதைப் பொருள் கடத்துபவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்க, டி3டி டெக்னாலஜிஸ் என்ற ஒரு தனியார் நிறுவனத்தைப் பயன்படுத்தினார் சங்கர் ஜிவால்.  அந்த டி3டி டெக்னாலஜிஸ் நிறுவனத்தில், சங்கர் ஜிவால் மனைவி, மம்தா சர்மா ஒரு இயக்குநர் என்பது கூடுதல் தகவல்.  சுருக்கமாக சொல்லப்போனால், ஒரு அரசு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு, தனக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திடமே, கான்ட்ராக்ட் கொடுக்கும் வேலையை சங்கர் ஜிவால் செய்து வந்தார்.

Shankar_Jiwal

சங்கர் ஜிவால்

சங்கர் ஜிவால், மாநில உளவுத்துறைக்கு நியமிக்கப்பட்டதும், தனியார் நிறுவனத்தைப் பயன்படுத்தி, ஒட்டுக் கேட்ட விபரங்களை கூறுகிறார். 'அருமையான யோசனையாக' இருக்கிறதே என்று அந்த தனியார் நிறுவனத்தை வைத்து, ஒட்டுக் கேட்பு விவகாரத்தை தொடங்குகிறார்.  தன்னைப் பற்றிய விவகாரங்கள் கருணாநிதிக்குத் தெரிந்து, ஒரு வேளை தன்னை மாற்றி விடப் போகிறார்களோ என்று எப்போதும் பதட்டத்திலேயே இருந்த ஜாபர் சேட், கருணாநிதியின் மதிப்பைப் பெற கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டார்.  அப்படி ஒரு முயற்சியின் வெளிப்பாடுதான், மருத்துவர் ராமதாஸின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டது.  மருத்துவர் ராமதாஸூக்கு தியாகராய நகரில் உள்ள ஒரு செவிலியரோடு பழக்கம் உண்டு.  அந்த செவிலியரின் தொடர்பு வெளியுலகில் யாருக்கும் தெரியாது.   இந்த செவிலியருடனான, ராமதாஸின் உரையாடலை ஜாபர் சேட் பதிவு செய்து கருணாநிதியிடம் போட்டுக் காட்டியபோது, மகிழ்ச்சியில் திளைத்தார் கருணாநிதி.

ஜாபர் சேட் போன்ற நபர்களை கருணாநிதி எப்போதும் இல்லாத வகையில் நம்பியதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.  வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில், திமுக 2006ம் ஆண்டு ஒரு சிறுபான்மை அரசாக இருந்தது. ராமதாஸ் போன்றவர்கள், திமுக மைனாரிட்டி அரசாக இருக்கிறது என்ற காரணத்தால் அவ்வப்போது கருணாநிதியை மிரட்டி வந்தார்கள்.  அந்த நிலையில், ராமதாஸ் மறைக்க விரும்பிய ஒரு ரகசியத்தை ஜாபர் சேட் எடுத்துக் கொடுத்ததும் அகமகிழ்ந்தார் கருணாநிதி.

ராமதாஸ் நாளொரு அறிக்கை வெளியிட்டு, கருணாநிதியியை எரிச்சலூட்டிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு முறை ஜி.கே மணி கருணாநிதியை சந்திக்கிறார்.  அப்போது, 'ஏன்யா நானெல்லாம் சொன்னா உங்க டாக்டர் கேக்க மாட்டாரா ?  அந்த நர்ஸ் சொன்னாத்தான் கேப்பாரா ?' என்று சொன்னதும், ஜி.கே மணி அதிர்ந்து போனார். அதற்குப் பிறகே மருத்துவர் ராமதாஸ் தனது நேரடியான தாக்குதலை ஜாபர் சேட் மீது தொடுத்தார்.  ஜாபர் சேட் எனது தொலைபேசிகளையும், எனது உறவினர் தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்கிறார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

ஒரு கட்டத்தில் இனியும் ராமதாஸை கூட்டணியில் வைக்கக் கூடாது என்று கருணாநிதி முடிவெடுத்ததும், காடுவெட்டி குரு, ஒரு உள் அரங்கக் கூட்டத்தில் பேசிய விபரங்களை எடுத்துக் கொடுத்து, இதை காரணமாக வைத்து ராமதாஸை கூட்டணியை விட்டு வெளியேற்றலாம் என்று அறிவுரை கூறுகிறார் ஜாபர் சேட்.  காடுவெட்டி குருவை கைது செய்யலாம் என்றும் கூறுகிறார். அதன்படி, ஒரு திருமண விழாவில் பேசுகையில் காடுவெட்டி குருவை கடுமையாக கண்டித்து பேசி, பாமக வை கூட்டணியை விட்டு வெளியேற்றியதோடு, காடுவெட்டி குருவையும் கைது செய்கிறார்.  பின்னர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் குரு கைது செய்யப்படுகிறார்.

கருணாநிதியின் வரலாறே தன் குடும்பத்துக்காக யாரையும் விட்டுக் கொடுக்காதது.  தன் குடும்பத்துக்காக கொலையும் செய்யத் தயங்க மாட்டார் கருணாநிதி.  கேடி சகோதரர்களின் தினகரன் வெளியிட்ட கருத்துக் கணிப்புக்காக, மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு, மூன்று அப்பாவி ஊழியர்கள் கொல்லப்பட்ட போது, சன் டிவி நிருபர், கருணாநிதியிடம் "அய்யா அழகிரிதான் மூணு பேரையும் கொலை செய்துட்டதா சொல்றாங்களே... " என்று கேட்டபோது இடைமறித்த கருணாநிதி, "யாருடா சொன்னது... ?  நான் சொல்றேன்... நீதான் கொலை செஞ்ச ?" என்று வெளிப்படையாக பேசியவர் கருணாநிதி.

அப்படிப்பட்ட கருணாநிதி, தன் மகன் அழகிரி மற்றும் மனைவி ராசாத்தி அம்மாளின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கும் பணியை ஜாபர் சேட்டிடம் ஒப்படைத்தார். அழகிரி, தன் ஆதரவாளர்களோடு பேசி, ஏதாவது திட்டமிடும் போது, அதை முன்கூட்டியே தொலைபேசி வழியாக அறிந்து, அழகிரியை மடக்குவார் கருணாநிதி.  ஒரு கட்டத்தில், தன் மனைவியில் தொலைபேசியையே ஒட்டுக் கேட்கும் பணியை ஜாபர் சேட்டிடம் பணித்தார் கருணாநிதி.  ராசாத்தி அம்மாளின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டு தன்னிடம் தரும்படி, கருணாநிதி பணித்ததும், யோக்கியன் போல, எவ்வித சலனமும் இல்லாமல், அதை அப்படியே சிரமேற்கொண்டு செய்தார் ஜாபர் சேட்.

மனைவி ஏதோ கடுமையான திட்டமிடுகிறார், அதை கண்டுபிடிக்கலாம் என்று காத்திருந்த கருணாநிதிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.  "எல்லாத்தையும் கொண்டு அந்த வீட்டுலயேதான் குடுக்குறான் இந்த ஆளு.   நானும் என் மவளும், என்னதான் பண்றது, என்ற தொனியில், காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு கருணாநிதியை அர்ச்சித்தார் ராசாத்தி அம்மாள்."

இதையடுத்து 2010ம் அல்லது 2009ம் ஆண்டு வாக்கில், ஒரு வாரத்துக்கு சிஐடி காலனிக்கே போகாமல் தவிர்த்தார் கருணாநிதி.  இந்த நேரத்தில்தான், திமுகவின் மிகப்பெரிய சவாலாக 2ஜி ஊழல் வெடித்தது.

விமானம் மூலமாக பூச்சி மருந்து தெளித்து விவசாயிகள் வயிற்றில் அடிப்பதை எழுபதுகளிலயே கருணாநிதி கற்றுக் கொண்டார். இந்தியாவின் மிகச் சிறந்த நீதிபதிகளில் ஒருவரான சர்க்காரியா விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதில் கைதேர்ந்தவர் கருணாநிதி என்று சான்றளிக்கும் அளவுக்கு ஊழல் செய்வதில் நிபுணராகத் திகழ்ந்தார் கருணாநிதி.   பூச்சி மருந்துகளிலேயே ஊழல் செய்தால் அள்ளி அள்ளித் தரும் அலைக்கற்றையில் என்னென்ன செய்வார் ?. கருணாநிதி நினைத்ததை, அவர் வழித்தோன்றல் ஆ.ராசா செய்து முடித்தார்.

அந்த அலைக்கற்றை ஊழல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மிக மோசமான ஒரு மாஃபியா கூட்டணி உருவாகிறது.   அந்த மாஃபியா கூட்டணியின் தலைவர் ஜாபர் சேட்.  தளபதி நக்கீரன் காமராஜ்.  செயலாளர் ஆ.ராசா.  எடுபிடிகள்  காலம் சென்ற சாதிக் பாட்சா மற்றும் கருணாநிதியின் ட்ராலி பாய் பாண்டியன்.  இந்த ஐவர் கூட்டணி, 2ஜி ஊழலில் வந்த பணத்தை வெளிநாட்டுக்கு கடத்திச் செல்வது முதல், உள்நாட்டில் பத்திரமாக முதலீடு செய்வது வரை அத்தனையையும் பார்த்துக் கொண்டது.

2881309555_1e6e1850c5_b

ட்ராலி பாய் பாண்டியன்

கருணாநிதி வீட்டில் நடப்பவற்றை பாண்டியன் ஜாபர் சேட்டிடம் சொல்வார்.  அதற்கு ஏற்றார்ப் போல, காய் நகர்த்துவார் ஜாபர்.  பண முதலீட்டை ஒரு பக்கம் கவனித்துக் கொண்டே, மக்களை திசைத் திருப்பி, பொய்யையும் புரட்டையும் வெளியிடும் கோயபல்ஸ் வேலையை செய்து வந்தார் காமராஜ்.  டெல்லியில் இருந்து பணத்தை வாங்கி வருவார் ஆ.ராசா.  அந்தப் பணத்தை தொழில் நிறுவனங்களை தொடங்கி, முதலீடு செய்து, கருப்பை வெள்ளையாக்கும் பணியை செய்தார் சாதிக் பாட்சா.

இந்தக் கூட்டணியே 2ஜி ஊழலில் மொத்தமும் எனலாம்.   பண வரவு, முதலீடுகள், ஊடக மேலாண்மை என அத்தனை வேலைகளையும் ஜாபர் ஒருவராகவே செய்து முடித்ததைக் கண்ட கருணாநிதி வியந்தார்.  ஜாபர் சேட்டை உச்சிமுகர்ந்தார். இப்படி கருணாநிதி, தன்னை சார்ந்தே இருக்கத் தொடங்கி விட்டார் என்பதை அறிந்ததும், ஜாபர் சேட்டுக்கு ஆணவம் அதிகமாகியது.  அகங்காரம் தலைக்கேறியது.

ஸ்டாலின், அழகிரி, துரை முருகன், பொன்முடி என்று திமுகவில் உள்ள அத்தனை பேரும் தனது அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவர்கள் என்று நினைத்தார்.  தன் சக அதிகாரிகளையும், தன்னை விட பதவியில் மூத்தவர்களையும் இழிவு படுத்தத் தொடங்கினார்.

அனூப் ஜெய்ஸ்வால் என்ற அதிகாரி, 2009ம் ஆண்டில் கூடுதல் டிஜிபியாக இருந்தார்.  இவர் மத்திய உளவு நிறுவனமான ஐ.பி யில், 12 ஆண்டுகள் பணியாற்றியவர்.  இதை விட முக்கியமாக, இலங்கையின் ராணுவத் தளபதி, சரத் பொன்சேகாவோடு, ராணுவ அகாடமியில் படித்தவர்.   இலங்கையில் போர் உச்சத்தை அடைந்தபோது, அங்கே நடக்கும் விவகாரங்களின் முழு விபரங்கள் தெரிய வேண்டும் என்பதற்காக, இவரை உளவுத்துறையின் கூடுதல் டிஜிபியாக நியமிக்கிறார் கருணாநிதி.  அதாவது, ஜாபர் சேட் ஐஜி, அனூப் ஜெய்ஸ்வால் கூடுதல் டிஜிபி.   ஈழப் போர் முடியும் வரை அனூப் ஜெய்ஸ்வால் உளவுத்துறையில் வைக்கப்பட்டிருந்தார்.  ஈழப் போர் முடிந்து ஒரு சில மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 2009ல், அவர் டெல்லியில் பாதுகாப்பு தொடர்பாக நடந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தபோது, உளவுத்துறை பதவியில் இருந்து தூக்கப்பட்டார். இணைப்பு.   இப்படி அனூப் ஜெய்ஸ்வால் தூக்கப்பட்டற்கு முக்கிய காரணம், ஜாபர் சேட்.   உளவுத்துறையில் தனக்கு மேல் ஒரு உயர் அதிகாரி இருக்கக் கூடாது என்ற ஒரே காரணமே அனூப் ஜெய்ஸ்வாலை ஜாபர் சேட் மாற்ற வைத்ததற்கு காரணம்.   அனூப் ஜெய்ஸ்வாலை மாற்றியதோடு ஜாபர் சேட் நிற்கவில்லை ஜாபர் சேட்.  அவர் மீது ஒரு அபாண்டமான புகாரையும் சுமத்தினார்.  ஜாபர் சேட்டின் தொழில் கூட்டாளியும், ஊடக வியாபாரியுமான காமராஜை வைத்து, அனூப் ஜெய்ஸ்வால் மீது ஒரு பச்சைப் பொய்யை குற்றச்சாட்டாக சுமத்தினார்.  அதாவது என்னவென்றால், அனூப் ஜெய்ஸ்வால், தமிழக உளவுத் துறை கூடுதல் டிஜிபியாக இருந்து கொண்டே, தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாராம்.  உலகத்தில் எவனாவது ஒரு கடைந்தெடுத்த முட்டாள் இப்படிச் செய்வானா ?  கருணாநிதி அரசில் பணி புரிந்து கொண்டு, கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று, திமுகவோடு பின்னிப் பிணைந்துள்ள காங்கிரஸ் அரசுக்கு எழுதுவானா ?  அப்படித்தான் எழுதினார் காமராஜ்.  நக்கீரனில் செப்டம்பர் 2009ல் ராங் கால் பகுதியில் வந்த அந்த செய்தி இதோ.

rang2

"தமிழக உளவுத்துறையில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒரு அதிகாரி, டெல்லி ஐ.பிக்கு ஒரு ரிப்போர்ட் அனுப்பியிருந்தார். அதில், தி.மு.க.வில் அழகிரியும் ஸ்டாலினும் தனித்தனியா செயல்படுறாங்க. கலைஞரால் தமிழகம் முழுக்க டூர் போக முடியாது. ராகுல் காந்தி இங்கே வந்ததில் ஒரு எழுச்சி ஏற்பட்டிருக்குது. அவர் தொடர்ந்து தமிழகம் வரணும். தேர்தலுக்கு 6 மாதம் முன்னாடி, தி.மு.க. அரசுக்கான ஆதரவை காங்கிரஸ் கட்சி வாபஸ் வாங்கிவிட்டு, ஆட்சியை டிஸ்மிஸ் பண்ணி, கவர்னர் ஆட்சியை அமல்படுத்தினால், 2011 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்பிருக்குதுன்னு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறார். அந்த அதிகாரி ஏ.டி.ஜி.பி. அனுப் ஜெயிஸ்வால். இவர் ஏற்கனவே ஐ.பி.யில் பணியாற்றியவர். அந்தப் பாசத்தில் இவர் இப்படி ரிப்போர்ட் அனுப்பிய தகவல், மாநில அரசுக் குத் தெரிஞ்சிடிச்சி. அந்த அதிகாரி டெல்லி சென்றிருந்த நேரத்தில் அதிரடியா மாற்றப்பட்டதன் பின்னணி இதுதான்.''

 DSC02094

""நானும் கேள்விப்பட்டேம்ப்பா.. தமிழகத்தில் ஆட்சிங்கிற அந்த அதிகாரியின் ரிப்போர்ட்டை டெல்லி காங்கிரசே காமெடியாகத்தான் பார்த்ததாம். இப்போதைய நிலையில் தி.மு.க அரசு மீது மக்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை. இந்த நேரத்தில், அரசாங்கத்தில் வேலை பார்த்துக்கொண்டு, அரசுக்கு எதிரா செயல்படும் அதிகாரிகளும் இருக்கத்தான் செய்றாங்க. அரசாங்கம் கவனமா இருக்கணும்.''

இந்த செய்தியை வெளியிட்டு, அனூப் ஜெய்ஸ்வாலை பழி வாங்கினாராம் ஜாபர்.  இப்படிப்பட்ட அற்பத்தனமான மனிதர் ஜாபர் சேட்.  ஜாபர் சேட், ஜெகத் கஸ்பர், நக்கீரன் காமராஜ், ட்ராலி பாய் பாண்டியன் ஆகியோரின் கூட்டணி, தமிழகத்தையே ஆட்டிப் படைத்தது என்றால் அது மிகையாகாது.

அதிகாரிகள் நியமனம், அமைச்சரவை மாற்றம், அரசியல் நிகழ்வுகள் என்று அத்தனையிலும் ஜாபரின் முத்திரை இருந்தது.  அரசியலையும், அதிகார வர்க்கத்தையும் எப்படி ஆட்டிப் படைத்தாரோ, அதே போல, தன்னுடைய எதிரிகளை பழிவாங்குவதில் மிக மிக கேவலமான நிலைக்கும் இறங்கிப் போவார் ஜாபர் சேட்.

ஜாபரின் செயல்களையும், ஜாபர் சேட் சட்டவிரோதமாக தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதையும் எதிர்த்தவர் ஒரு காவல்துறை அதிகாரி.  அந்த அதிகாரியின் மீது கடும் கோபம் கொண்டார் ஜாபர் சேட்.   முதல்வரே என் சொல் கேட்டு நடக்கையில், ஒரு சாதாரண ஐபிஎஸ் அதிகாரியான நீ, என்னை எதிர்த்துப் பேசுவதா என்று கடும் சினமடைந்தார்.

தொலைபேசி ஒட்டுக் கேட்பு முதன் முதலில் அம்பலமானது, முன்னாள் தலைமைச் செயலாளர், திரிபாதி மற்றும், முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி. உபாத்யாய் ஆகியோரிடையே நடைபெற்ற உரையாடல் ஊடகங்களில் வெளியானபோது. அப்போதுதான் சட்ட விரோத தொலைபேசி ஒட்டுக் கேட்பு வெளிச்சத்துக்கு வந்தது. ஒட்டுக் கேட்பில் ஈடுபட்ட தனியார் நிறுவனமான டி3டி டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பெயரும் ஊடகங்களில் அம்பலமானது.   கோபத்தின் உச்சிக்கே சென்றார் ஜாபர்.   இப்படி வெளியானதற்கு காரணம், தன்னை எதிர்த்த அந்த அதிகாரி மட்டுமே என்று முடிவு செய்தார்.  அந்த அதிகாரியை பழிவாங்கியே தீருவது என்று முடிவு செய்தார்.

14_04_2008_001_018

அந்த உரையாடல் வெளியானது தொடர்பாக அமைக்கப்பட்ட சண்முகம் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை தனக்கு ஏற்றபடி அளிக்க வைத்தார். அந்த உரையாடலை வெளியிட்டது டெக்கான் க்ரானிக்கிள் நாளேடு.  அந்த செய்திக் கட்டுரையை எழுதியவர், வி.பி.ரகு என்ற மூத்த பத்திரிக்கையாளர்.  அந்த ரகுவை சிறையில் அடைத்துப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார் ஜாபர்.

1794609_10151934879374716_1791225007_n

வி.பி.ரகு

இந்த உரையாடல் வெளியான காரணத்துக்காக லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர் சங்கர் என்பவரை கைது செய்ய பரிந்துரை செய்தது சண்முகம் ஆணையம்.  சண்முகம் என்பவர் நீதிபதி.  அவரை ஏன் நீதிபதி சண்முகம் என்று குறிப்பிடவில்லை என்றால், நீதிபதிகள் நீதிபதிகளாக நடந்து கொண்டால்தான் அவர்களை அவ்வாறு அழைக்க இயலும்.  சண்முகம் போல, எலும்பு துண்டுக்கு அலையும் நாய்கள் போல நடந்து கொண்டால், அவர்களை நீதிபதிகள் என்று அழைக்க இயலாது.  சண்முகமும், ஜாபர் சேட் என்னென்ன சொன்னாரோ, அப்படியே பரிந்துரைகள் செய்தார்.

ஜாபர் சேட்டின் பழிவாங்கும் உணர்ச்சி அத்தோடு நின்று விடவில்லை.   ஜாபர் சேட் சட்டவிரோத ஒட்டுக் கேட்பை செய்த விபரங்களை உலகுக்கு உரத்துச் சொன்னவர், டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழின் நிருபர் வி.பி.ரகு.  அந்த ரகுவை சிறையில் அடைத்துப் பார்க்க விரும்பினார் ஜாபர் சேட்.  ரகு மட்டுமில்லாமல், தனக்கு எதிராக குரல் கொடுத்த, கொடுக்கத் துணிந்த அத்தனை பத்திரிக்கையாளர்களையும் சிறையில் அடைக்க விரும்பினார்.   என்னை எதிர்த்தால் உங்களுக்கு சிறைதான் என்ற விபரத்தை அவர்களுக்கு உணர்த்த விரும்பினார்.  அவர் விரும்பியபடியே, பத்திரிக்கையாளர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்தார் சண்முகம்.  சண்முகம் குற்ற வழக்கு பரிந்துரை செய்த மற்றொரு பத்திரிக்கையாளர் பெயர் வினோஜ்.  இவர் டெஹல்காவில் பணியாற்றியவர்.   இவருக்கும், அந்த தொலைபேசி உரையாடல் வெளியீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.   ஆனால், டெக்கான் க்ரானிக்கிளின் ரகு, டெஹல்காவின் வினோஜ், மக்கள் டிவியின் கோமல் அன்பரசன், ஜுனியர் விகடனின் விகேஷ் ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு தாக்கல் செய்ய பரிந்துரை செய்தார் சண்முகம்.  இப்படிப்பட்ட பழிவாங்கும் உணர்ச்சி படைத்தவர்தான் ஜாபர் சேட்.

1075723_10151707756234435_471943234_n

வினோஜ் குமார்

தன்னை எதிர்த்த அந்த காவல்துறை அதிகாரியை எப்படியாவது பழிவாங்க நினைத்து, சண்முகம் பரிந்துரையின் படி, கைது செய்யப்பட்ட அந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர் சங்கரிடம் இருந்து ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்று, அந்த அதிகாரியை கைது செய்ய திட்டமிட்டார் ஜாபர் சேட்.    சங்கரை கைது செய்த சிபி.சிஐடி அதிகாரிகளிடம், வெளிப்படையாகவாவது, எந்த அதிகாரியை இதில் சிக்க வைக்க வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும்.  அப்படிச் சொல்லாமல், அவன் ஒரு சாதாரண க்ளெர்க்.  அவனால் இதைச் செய்திருக்க முடியாது.  அவன் பின்னால் சில அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை அவனிடமிருந்து வாங்குங்கள் என்று மட்டும் சொன்னார் ஜாபர்.

அந்த அப்பரசண்டிகள், என்ன ஏது என்றே தெரியாமல், சகட்டு மேனிக்கு அந்த சங்கரை இரவு முழுக்க வெளுத்தார்கள்.   என்ன வேண்டும் என்று தெரிந்தால்தானே ஒப்புதல் வாக்குமூலம் பெற ?   "டேய்.. XXXXX பையா...  உன்னால இதைப் பண்ணியிருக்க முடியாது.  உனக்கு பின்னாடி சில ஆபிசர்ஸ் இருக்காங்க.  யாருன்னு சொல்லுடா ?  உன்னை அடிக்க மாட்டேன்" என்று சொன்ன உடன்,  வைக்கோல் போரில் ஊசியைத் தேடுகிறார்கள் இந்த அப்பரசண்டிகள், என்று உணர்ந்து கொண்ட அவனும், ஜாபர் சேட்டுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்று சொன்னான்.  "என்னடா இது....  அய்யா பெயரையே சொல்கிறான்" என்று இன்னும் நாலு மிதி மிதித்தார்கள்.  .அப்போதும் உண்மை வராத காரணத்தால், சார் அவன் எதுவும் சொல்ல மாட்டேன்கிறான், அடிச்சுக் கேட்டாலும் சொல்ல மாட்டேன்கிறான் என்று அய்யாவிடம் விபரத்தைக் கூறினார்கள்.   சரி.... விட்டு விடுங்கள் என்று ஜாபர் சேட்டை எதிர்த்த அந்த அதிகாரியை பழிவாங்க வேறு வழியைத் தேடத் தொடங்கினார் ஜாபர்.

அந்த சமயத்தில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், காவல்துறையினர் உள்ளே புகுந்து, காட்டுமிராண்டித்தனமாக வழக்கறிஞர்களைத் தாக்கினர்.  அது தொடர்பான வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். அந்த சமயத்தில், ஜாபர் சேட், 'இந்த பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று களம் இறங்கினார்.  திமுக அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடியாக அந்த விவகாரம் அமைந்தது.  தமிழகமே, வழக்கறிஞர்கள் போராட்டத்தால் கொந்தளித்த தருணத்தில், அதைத் திசைத் திருப்ப அவரை மருத்துவமனையில், முதுகெலும்பு அறுவை சிகிச்சை என்று அறிவித்து அனுமதி பெறச் செய்தார் ஜாபர் சேட்.  உலகமே, கருணாநிதிக்கு முதுகெலும்பு இருக்கிறது என்று உணர்ந்து கொள்ளும் வகையில், அவருக்கு அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவிக்கப்பட்டது.  ஆனால் அந்த அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவித்த சமயத்தில், கலைமாமணி விருதுகளை அறிவித்தார்.

__1_1

ஆபரேஷன் பண்ணிக்கிட்டாராமா.. 

வழக்கறிஞர் போராட்டத்தை எப்படி ஒடுக்குவது என்று கருணாநிதி  சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஜாபர் சேட், சிஐடி காலனியை எப்படி சமாளிப்பது என்று அறிவுரை கூறினார்  நாடார் சமூகத்தைச் சேர்ந்த பூங்கோதை, சுப்ரமணிய சுவாமி வெளியிட்ட ஒலிநாடா காரணமாக ராஜினாமா செய்திருந்தார்.   பூங்கோதை ராஜினாமா செய்து, வெறும் எம்.எல்.ஏவாக இருந்தபோது,  பூங்கோதையை, மீண்டும் அமைச்சராக்க இதுவே தருணம் என்று ஆலோசனை கூறினார்.  அறுவை சிகிச்சை செய்ததாக நடித்து, ராமச்சந்திரா மருத்துவமனையில் படுத்திருந்த கருணாநிதி, அந்த நேரத்தில் பூங்கோதையை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ஆக்கினார்.   வழக்கறிஞர் தாக்குதல் தொடர்பாக தமிழகமே அந்த விவகாரத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த வேளையில், பூங்கோதையை அமைச்சராக்கினார் கருணாநிதி.  நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று புழுங்கிக் கொண்டிருந்த சிஐடி காலனிக்கு, இது அருமருந்தாக அமைந்தது.  பூங்கோதை, கனிமொழி பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்த காலம் அது.

வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மத்தியில் மோதல் ஏற்படுகிறது.  ஒரு காவல்துறை உயர் அதிகாரிக்கு அழகு, தலைமைப் பண்பு.  இது என்னுடைய கட்டளை.  இது சரியோ, தவறோ.  இதற்கு நானே பொறுப்பு என்று சொல்வதே ஒரு உயர் அதிகாரிக்கு அழகு.  வழக்கறிஞர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும், அவர்கள் கை கால்களை ஒடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது, அப்போதைய மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன்.  விவகாரம் கை மீறிப் போனதும், இதற்கு நான் பொறுப்பல்ல என்று தப்பிக்கப் பார்த்தார் ராதாகிருஷ்ணன்.  ஜாபர் சேட்டை ஒரு அதிகாரி எதிர்த்தார் அல்லவா ?  அந்த அதிகாரி அப்போது சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.  அந்த அதிகாரிதான் அத்தனை விவகாரங்களுக்கும் பொறுப்பு.  அவர்தான் தவறாக முடிவெடுத்தார் என்று அறிக்கை அளித்தார் ராதாகிருஷ்ணன்.   அப்போது, ராதாகிருஷ்ணன், கிட்டத்தட்ட ஜாபர் சேட்டின் அடிமையாக இருந்தார்.  ஜாபர் சேட் சொல்வதை சிரமேற்கொண்டு முடிப்பார்.  அவரும், அவர் சகோதரர்களும், தமிழகம் முழுக்க பின்னாளில் நடத்திய நில அபகரிப்புகளுக்கு, ஜாபர் சேட், முழுமையாக துணை நின்றார்.

இதையடுத்து, வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலுக்கு, காரணமான ஒரே நபர், ஜாபர் சேட்டை எதிர்த்த அந்த அதிகாரி என்று கருணாநிதி முடிவெடுத்து, ஜாபர் சேட்டை எதிர்த்த அந்த அதிகாரிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள்.

அந்த அதிகாரி மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஜாபர் பரிந்துரைக்கிறார்.  அதன் படி, லஞ்ச ஒழிப்புத் துறை ஊழல் வழக்கை அந்த அதிகாரி மீது பதிவு செய்கிறது.   ஊழல் வழக்கை விசாரித்த புலனாய்வு அதிகாரி, சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி மீது குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அறிக்கை அளிக்க, ஜாபர் சேட் கொதிக்கிறார்.   அந்த அதிகாரியை கைது செய்தே ஆக வேண்டும் என்று துடிக்கிறார்.   ஒரு கட்டத்தில் ஆதாரம் இருக்கிறதோ, இல்லையோ, அந்த அதிகாரியை கைது செய்தே ஆக வேண்டும் என்று ஜாபர் சேட் முடிவெடுக்கிறார். அதன்படி முடிவெடுத்து, அந்த அதிகாரியை கைது செய்ய முடிவெடுத்ததும், மத்திய உளவுத்துறையோடு நெருக்கமாக தொடர்புள்ள அனூப் ஜெய்ஸ்வால் மற்றும் வேறு சில அதிகாரிகளிடம் தகவல் தெரிகிறது.  அவர்கள் டெல்லியில் உள்ள அவர்கள் தொடர்புகளை பயன்படுத்தி, கைது நடவடிக்கையைத் தவிர்க்கிறார்கள்.

கைது நடவடிக்கை தடுக்கப்பட்டதும், ஜாபரின் ஆத்திரம் அதிகமாகிறது.   அந்த அதிகாரியை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.  அதன்படி, ஜாபர் சேட்டிடம் இருந்த தொழில்நுட்ப பிரிவு களத்தில் இறங்குகிறது.    அந்த அதிகாரியின் மின்னஞ்சலை ஹேக் செய்கிறார் ஜாபர் சேட்.   ஹேக் செய்து, இன்னொரு, பெண் அதிகாரிக்கு, இந்த காவல் துறை அதிகாரியின் மின்னஞ்சலில் இருந்த காதல் கடிதம் சென்றது போல பல்வேறு மின்னஞ்சல்களை அனுப்புகிறார் ஜாபர் சேட்.   இது, இந்த காவல்துறை அதிகாரியின் குடும்பத்திலும், மின்னஞ்சலைப் பெற்ற அந்த பெண் அதிகாரியின் குடும்பத்திலும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்த வல்லது.  ஆனால், அந்த பெண் அதிகாரியின் கணவர், மிக மிக இயல்பாக, அந்த மின்னஞ்சலை அப்படியே எடுத்து வந்து, அதை அனுப்பியதாக சித்தரிக்கப்பட்ட காவல்துறை அதிகாரியிடம் அளிக்கிறார்.  அதிர்ச்சியடைந்த காவல்துறை அதிகாரி, உண்மையை விளக்கியதும், பிரச்சினை அத்தோடு முடிவடைந்தது.

இப்படிப்பட்ட கேவலமான மனிதர்தான் ஜாபர் சேட்.  ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் விரல் நுனியில் வைத்திருந்த ஜாபர் சேட்டை எதிர்க்கத் துணிந்தவர்கள் அன்று இரண்டே இரண்டு பேர்.  ஒருவர் அந்த காவல் துறை அதிகாரி.  இன்னொன்று சவுக்கு இணையதளம்.  இவர்கள் இருவரும், ஜாபர் சேட்டுக்கு அந்த காலத்தில் சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள்.

ஜாபர் சேட்டைப் பார்த்து பம்மி, பயந்து, அஞ்சி, நடுங்கி, அத்தனை பேரும் வாலை காலிடுக்கில் சொருகிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த நிலையில், சவுக்கு இணையதளம், ஜாபர் சேட்டின் காதில் புகுந்த எறும்பாக அவருக்கு தலைவலி கொடுத்தது.  ஜாபர் சேட் எப்படி சவுக்கு இணையதளத்தை பின்தொடர்ந்தபடி இருந்தாரோ, அதை விட, இரண்டு மடங்கு, சவுக்கு இணையதளம், ஜாபர் சேட்டை பின் தொடர்ந்தது.  செம்மொழி மாநாட்டில், ஜாபர் சேட், சரக்கடித்து விட்டு, சல்லாபத்தில் ஈடுபட்டது, ஒரு நாள் ஐந்து நட்சத்திர விடுதிக்கு சென்ற ஜாபர் சேட்டுக்கு இடம் கிடைக்காமல் அவதிப்பட்டது உட்பட, ஜாபர் சேட், எப்போதெல்லாம் சறுக்கினாரோ, அப்போதெல்லாம், சவுக்கு தளம், ஜாபர் சேட்டை சவுக்கால் அடித்தது போல துடிக்க வைத்தது.

ஆங்கிலத்தில் LAST NAIL IN THE COFFIN என்று சொல்வார்கள்.  அது போல, ஜாபர் சேட்டின், சவப்பெட்டியில் இறுதி ஆணியை சவுக்கு அடித்துள்ளது என்பதை பெருமகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறது.

ஒரு காவல்துறை அதிகாரி எப்படியெல்லாம் செயல்படக் கூடாதோ, அப்படியெல்லாம் செயல்பட்டார் ஜாபர் சேட்   கருணாநிதியின் குடும்பத்துக்கு அடியாளாக, சேவகனாக, வேலையாளாக ஜாபர் சேட் செயல்பட்டதாக கருணாநிதி நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், கருணாநிதியின் குடும்பமே என்னை நம்பித்தான் இருக்கிறது.  கருணாநிதியின் குடும்பமே, எனது கைப்பாவைகள் என்ற எண்ணத்தில்தான் ஜாபர் சேட் செயல்பட்டார் என்பதை, கருணாநிதியும், ஸ்டாலினும், அழகிரியும், இதர தொண்டர் அடிப்பொடிகளும், மிக மிக தாமதமாகவே புரிந்து கொண்டார்கள்.   அப்படி கருணாநிதியின் குடும்பத்தை தனது கைப்பாவையாக ஜாபர் சேட் கருதியதன் வெளிப்பாடே கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தன்னிடம் பேசும் தொலைபேசி உரையாடல்களை ஜாபர் சேட் பதிவு செய்து வைத்தது.   அந்த உரையாடல்களில் ஒன்றுதான், ஜாபர் சேட் மற்றும் சண்முகநாதன் இடையே நடைபெற்றது.


ACS

சண்முகநாதன்

இந்த உரையாடலை கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், இதில் சண்முகநாதன் வணக்கம், சண்முகநாதன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.   உடனே ஜாபர் சேட் பேசத் தொடங்குகிறார். சார், அவர் 60 முதலில் தந்து விடுகிறேன் என்கிறார்.  அது தயாராக இருக்கிறது.  ஐந்து வருடத்துக்கு விளம்பரமாக தந்து விடுகிறேன் என்கிறார். இன்னொரு இருபது வேண்டும் என்றேன்.  அவர் உடனே முடியாது என்கிறார்.  இன்னொரு நாற்பது வேண்டும் என்றேன். நீங்கள் அனுமதி அளித்தீர்கள் என்றால், வேறு ஒரு இடத்தில் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார் என்று அந்த உரையாடல் போகிறது..

உரையாடலின் இணைப்பு

உரையாடலின் விபரங்கள்

இந்த உரையாடல் ஜாபர் சேட்டுக்கும், கருணாநிதியின் அந்தரங்க உதவியாளர் சண்முகநாதனுக்கும் இடையே நடைபெறுகிறது.

மணி ஒலிக்கிறது.

ஜாபர் சேட் : ஜாபர்...

சண்முகநாதன் : சார் வணக்கம்... சண்முகநாதன்.

ஜாபர் சேட் :  சார் பேசிட்டேங்க சார். அவர் மொதல்ல அறுபது பண்ணிட்றேங்கறாராம்.

சண்முகநாதன் :  சரி.

ஜாபர் சேட் :  அறுபதுக்கெல்லாம் ரெடியா இருக்குது. அட்வர்டைஸ்மென்ட் மாதிரி குடுத்துட்றேங்கறாராம்.  அஞ்சு வருஷத்துக்கு அட்வர்டைஸ்மென்டுக்கு போட்டு குடுத்துட்றேங்கறராம். இன்னொரு இருபதுக்கு வழி பண்ணித் தர்றேன்.  உடனே பண்ண முடியாதுங்கறாராம். என்ன சொல்றாருன்னா, அறுபது கன்ஃபர்ம் ஆயிடுச்சு.  நான் சரி அந்த அறுபதுக்கு மொதல்ல வொர்க் அவுட் பண்ணுங்கன்னு சொன்னேன்.  மீதி நாப்பதுக்கு வேற வழி வேணும்னு சொன்னேன். மொதல்ல இருபதை பேசுவோம். நான் இன்னொரு தடவை அவர்கிட்ட பேசிப் பாத்துட்டு சொல்றேன்னு சொல்லிட்டு, அஞ்சு வருஷத்துக்கு அட்வர்டைஸ்மென்ட் மாதிரி குடுத்துட்றாருங்க சார். குடுத்து அறுபதை குடுத்துட்றாரு இவங்க கம்பெனிக்கு.

சண்முகநாதன் :  அட்வர்டைஸ்மென்டுனா கரெக்டா இருக்காதே...

ஜாபர் சேட் :  நான் நேரா இப்போ இன்னொரு தடவை பேசிட்றேன் சார். ஈவ்னிங் பேசிட்றேன் சார். அறுபது ரெடி பண்ணிட்டாரு.  அறுபது ரெடி சார். இன்னும் இருபது ரெடி பண்ணிட்றேன்னு சொன்னாரு சார். இன்னொன்னு சொன்னாராம்.  நீங்க பர்மிஷன் வாங்கி சொன்னீங்கன்னா எனக்கு தெரிஞ்சு இன்னொருத்தர் இருக்காரு. அவர் மூலமா இன்னொரு நாப்பது ரெடி பண்ணிடலாம்னு சொன்னாரு.  அது யாருன்னு போன்ல வேணாம். நான் நேரா பாத்துட்டு  ஈவ்னிங் சொல்றேன் சார். தேங்க்யூ சார்.

சண்முகநாதன் :  தேங்க்யூ. "

சண்முகநாதன் போனை எடுத்தவுடன், ஜாபர் பல்வேறு விபரங்களை சொல்கிறார் என்றால், அது கருணாநிதி பிறப்பித்த உத்தரவு.   கருணாநிதியிடம் சொல்வதற்காகவே, ஜாபர் சேட் பல்வேறு விபரங்களை சொல்கிறார்.   சண்முகநாதனும், அது விளம்பரமாக கொடுத்தால் சரியாக வருமா, வராதா என்று விவாதிக்கிறார்.  கலைஞர் டிவியோ, கருணாநிதி குடும்பமோ, நன்றாக இருந்தாலும், நாசமாகப் போனாலும் சண்முகநாதனுக்கு எந்தக் கவலையும் கிடையாது.  அவர் இவ்வளவு அக்களையோடு பேசுகிறார் என்றால், அவர் பேசுவது கருணாநிதியின் சார்பாகவே.   ஆக, கருணாநிதிக்கு தெரியாமல் இந்த 60 அல்லது 40 கோடி தொடர்பாக ஜாபர் சேட் பேசியிருக்கவே முடியாது.

கருணாநிதி சார்பாகவே, ஜாபர் சேட் அந்த நிதியைத் திரட்டியிருக்கிறார்.  அவருக்காகத்தான், பல்வேறு தொழில் அதிபர்களிடம் பேசி நிதி பெற்றிருக்கிறார் ஜாபர் சேட்.  அப்படிப்பட்ட உரையாடலை ஜாபர் சேட் பதிவு செய்து வைத்திருக்கக் காரணமே, பின்னாளில், கருணாநிதியை மிரட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால், இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற காரணமே.  அப்படி பதிவு செய்து வைத்திருந்த உரையாடல்கள்தான் இப்போது வெளியாகியுள்ளது.  இப்படி வெளியாகிய உரையாடல்களை பதிவு செய்து வைத்திருந்தது ஜாபர் சேட்தான் என்ற விபரம், திமுக தலைமைக்கும், கருணாநிதி குடும்பத்துக்கும் தெரிந்து, ஜாபர் சேட் மீது கடும் கோபத்தில் இருந்தார்கள், இருக்கிறார்கள்.    அந்த கோபத்தை மட்டுப்படுத்தவும், அந்த உரையாடல்கள் ஜாபர் சேட்டால் பதிவு செய்யப்பட்டவை அல்ல என்று நம்பவைத்து, ஜாபர் சேட்டைக் காப்பாற்றவும் எழுதப்பட்ட கட்டுரையே, இந்த வாரம் நக்கீரனில் காமராஜ் எழுதியுள்ள கட்டுரை.  இணைப்பு.  அதில் கூசாமல் பொய்யையும் புரட்டையும் சகட்டு மேனிக்கு எழுதியுள்ளார் காமராஜ். சிபிஐ ஒரு போதும் ஜாபர்சேட் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதில்லை. மாறாக, ஜாபர் சேட்தான், 2ஜி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், சிபிஐ அதிகாரிகளின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.  இப்படி ஒரு கட்டுரையை எழுதியதன் மூலம், ஜாபர் சேட்டை காப்பாற்றி விட முடியும் என்று காமராஜ் மனப்பால் குடித்தால், அவரை விட ஒரு முட்டாள் யாருமே இருக்க முடியாது. இந்தக் கட்டுரையை திமுகவில் உள்ளவர்களும் நம்ப மாட்டார்கள், சிபிஐ அதிகாரிகளும் நம்ப மாட்டார்கள்.  சிபிஐ அதிகாரிகள், ஜாபர் சேட்டின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டார்கள் என்ற பொய் கட்டுரையால், சிபிஐ அதிகாரிகள் மேலும் கோபமடைந்து விசாரணையை தீவிரப்படுத்துவது மட்டுமே, காமராஜ் ஜாபர் சேட்டுக்கு தற்போது செய்துள்ள உதவி.

வெளியாகியுள்ள உரையாடல்கள் காரணமாக, ஏற்கனவே அதிமுகவின் கோபப்பார்வையில் சிக்கியுள்ள ஜாபர் சேட், தற்போது திமுகவின் கடுங்கோபத்துக்கும் ஆளாகியுள்ளார்.   இதிலிருந்து ஜாபர் சேட் மீண்டு வருவது குதிரைக்கொம்பே.  இந்த உரையாடல்களே, ஜாபர் சேட்டின் சவப்பெட்டியில் இறுதி ஆணி.  அந்த இறுதி ஆணியை ஜாபர் சேட்டின் சவப்பெட்டியில் அடித்ததில்,பெருமகிழ்ச்சி கொள்கிறது சவுக்கு.

ஜாபர் சேட்டுக்கு இந்த பாடல் அர்ப்பணம் 

 

 

டாஸ்மாக் தமிழ் 37

$
0
0

tas_boy_run_e

"ஓயாது இந்த அலை... சாயாது இந்த சிலை" என்று பேசியபடியே மொட்டை மாடிக்குள் நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.

"வாடா வா.... போன வாரம் மாதிரியே லேட்டா வர்ற... கரெக்ட் டையத்துக்கு வர வேண்டாமா ? "

"பற்பல, சிற்சில வேலைகள் இருந்தது.  அதான் லேட்டு.  "

"சரி.. சரி... விஷயத்துக்கு வா... வைகோ என்ன ஆனாரு... ஏன் மோடி கூட்டத்துக்குப் போகாம, மல்லை சத்யாவை அனுப்பி வைத்தாரு ? "

யாரோடு கூட்டணி சேரப்போகிறார் ன்ற விஷயத்தை இறுதி வரைக்கும் சொல்லாமல் வைத்திருப்பது வரை, அவருக்கு மரியாதை.  எங்கே சேரப்போகிறார் என்று ஒரு ஹைப் உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.  நேற்று அரசியலுக்கு வந்த விஜயகாந்துக்குக் கூட, இந்த விபரங்கள் தெரிந்திருக்கிறது.

ஆனால், எந்த விதமான தயக்கமும் இல்லாமல், முதன் முதலாகப் போய் பிஜேபி கூட்டணியில் சேர்ந்தேன் என்ற அறிவித்ததோடு, பிஜேபி அலுவலகத்துக்கும் போய், நான் வந்துட்டேன் பாருங்கன்னு பாரத மாதா சிலைக்கு பூஜையெல்லாம் பண்ணியிருக்கார்.  பிஜேபி பேரணி நடத்துவதற்கு, இவர் கட்சியில் கமிட்டி போட்டு, அதற்கான ஏற்பாடுகளை கவனித்தார்.

இவர் இப்படி நடந்து கொள்வதற்கான முக்கிய காரணம், நான்தான் உங்களுக்கு ரொம்ப விசுவாசம் என்று நிரூபித்தால், பிஜேபியினர் அவர்களாகவே வைகோவுக்கு அதிக சீட்டுகளை தருவார்கள் என்ற வைகோவின் நம்பிக்கையே.  ஆனால், வைகோ எதிர்ப்பார்த்தது போல, பிஜேபி தரப்பிலிருந்து எந்த சிக்னலும் வரவில்லை. இதனால் கோபமடைந்த வைகோ, மோடியின் கூட்டத்தை புறக்கணிச்சுட்டார்"

1186733_10201550357707137_361118309_n

"சரி... பிஜேபி காரங்க அவரை சமாதானப்படுத்தலையா ?"

"பிஜேபி காரங்க எதுக்கு சமாதானப்படுத்தனும் ?  அதான் அவரே போயி மோடியை கட்டிப்புடிச்சு போஸ் குடுத்துட்டு வந்துட்டாரே"

"என்னடா சொல்ற ? "

"ஆமாம்டா.. இதுதான் வைகோ.  வெண்டைக்காயை வெட்டி, விளக்கெண்ணையில் போட்ட மாதிரிதான் அவரோட நடவடிக்கைகள் இருக்கு.   தன்னை மதிக்காத கட்சியின் பொதுக்கூட்டத்தை புறக்கணிக்கணும்.  நான் திமுகவோடு பேசப்போகிறேன்ற மாதிரி, கலைஞர் நல்லவருன்னு ஒரு பேட்டி கொடுத்தா, பிஜேபி காரங்க அலறி அடிச்சிக்கிட்டு வருவாங்க.  அதை விட்டுட்டு, கூட்டத்தை புறக்கணிக்கிறது.. அப்புறம் அன்னைக்கு இரவே, மோடியை கட்டிப் புடிக்கிறதுன்னு இவரோட தெளிவில்லாத நிலைபாடுகளால்தான், வைகோ ஒரு தலைவராகவே உருவாக முடியாம, வட்டச்செயலாளர் மாதிரி முடங்கிப் போயிட்டாரு. "

"கேப்டன் என்ன சொல்றாரு ?" என்று கேப்டன் சப்ஜெக்டுக்கு தாவினான் ரத்னவேல்.

"ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா.. மனச நீ கொஞ்சம் தேத்திக்கண்ணா..

காங்கிரஸூம், கேப்டனும் சேந்திச்சின்னா, கொட்டுது கொட்டுது கோடிகள்ணா... "

"டேய்... விளையாடாம சொல்லுடா... "

"மச்சான்.  நான் விளையாடல.  உண்மையைத்தான் சொல்றேன்.  கேப்டன் ரொம்ப முறுக்கறதைப் பாத்துட்டு,  பிஜேபி தரப்பும் எரிச்சலாயிடுச்சு.

V-K-S-V-084

சமீபத்துல சென்னை கூட்டத்துக்காக வந்த மோடிக் கிட்ட, கேப்டனும், பாட்டாளி மக்கள் கட்சியும், வைக்கக் கூடிய நிபந்தனைகள் பற்றி சொல்லியிருக்காங்க.  இதைக் கேட்டதும் மோடி, நாம ஒரு தேசிய கட்சி. தேசிய கட்சி போல நடந்து கொள்ள வேண்டும்  அவர்களிடம் போய் கெஞ்சுவதை முதலில் தவிருங்கள்.  தானாக வழிக்கு வருவார்கள்.  அப்படி வராவிட்டாலும் பரவாயில்லை.  விட்டு விடுங்கள் னு சொல்லியிருக்கார்.

இந்தத் தகவல் கேப்டனுக்கும் போயிருக்கு.  கேப்டன், உடனே மதச்சார்பற்ற கூட்டணி ன்னு முடிவெடுத்து, காங்கிரஸ் கூட சேரலாம்னு முடிவெடுத்துட்டார்.  விரைவில் டெல்லி போயி காங்கிரஸ் தலைவர்களை சந்திப்பதா சொல்றாங்க."

"திமுக என்ன நிலைபாட்டுல இருக்காங்க ? "

"காங்கிரஸோடு இனி ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாதுன்னு அறிவித்த கருணாநிதிக்கு, மிகப்பெரிய நெருக்கடியாக அமைந்தது சமீபத்தில் வெளியான டேப்புகள்.

2ஜி வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கனிமொழி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கணும் னு ஒரு மனு தாக்கல் பண்ணியிருந்தார்.   அந்த மனு விரைவில் விசாரணைக்கு வருது.  அந்த மனு விசாரணைக்கு வரும் நிலையில், தற்போது இந்த டேப்புகள் வெளியாகியிருக்கு.  இந்த டேப்புகளை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வேன் னு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சொல்லியிருக்கும் நிலையில், 2ஜி விவகாரத்தில், கருணாநிதி மற்றும் ஜாபர் சேட்டின் பங்கை விசாரிக்கணும்னு அனுப்பப் பட்ட புகார், சிபிஐ வசம் சனிக்கிழமை போய் சேந்திருக்கு.  இந்தப் புகாரின் மீது சிபிஐ விசாரணை தொடங்கினால், கருணாநிதியை விசாரித்தே ஆக வேண்டும்.   கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்கிறார்களோ இல்லையோ, 2ஜி விவகாரத்தில் வந்துள்ள இந்த புகார் தொடர்பாக கருணாநிதியை விசாரித்தே ஆக வேண்டும்.

சிபிஐ விசாரணை நடத்தவில்லையென்றால், புகார் கொடுத்தவரும், பிரசாந்த் பூஷணும், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வார்கள் ன்ற விபரம் கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும். இதையெல்லாம் சமாளிக்க காங்கிரஸின் தயவு தேவைன்றதும் கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும்.

மேலும், தற்போது உள்ள கட்சிகளை வைத்து, தேர்தலை சந்திப்பதை விட, காங்கிரஸ் மற்றும் தேமுதிக வோடு கூட்டணி அமைத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் னு கருணாநிதி நினைக்கிறார்.

Karuna-Sonia-Manny_494836f

காங்கிரஸ் என்ன நினைக்குதுன்னா, தனியா போட்டியிட்டா 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்துக்கு போயிடும் னு அவங்களுக்கு தெரியும்.  ஒரு தேசிய கட்சி, இப்படி மோசமாக தோற்பது நல்லா இருக்காது.  அதனால, திமுகவோட கூட்டணி அமைத்தால், தோல்வியடைஞ்சாலும், அது நாகரீகமான தோல்வியா இருக்கும்.  இந்த நேரத்தில் வெளியாகியுள்ள 2ஜி டேப்புகள், திமுகவை மிரட்ட காங்கிரஸ் கட்சிக்கு பேருதவியா இருக்கு.

இதை அடிப்படையா வைத்து, நேரடியாவே திமுகவோடு பேச்சுவார்த்தை நடத்தலாம்னு காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருக்கு. வரும் புதன் கிழமை அன்று, டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ஏகே.அந்தோணியும், வீரப்ப மொய்லியும் சென்னை வர்றாங்க.  அனுபவம் வாய்ந்த இரண்டு தலைவர்களை அனுப்பறதே, கருணாநிதியை சம்மதிக்க வைக்கத்தான் என்ற சொல்லப்படுகிறது. அதனால் விரைவில், திமுக காங்கிரஸ்  கட்சியோடு கை கோர்க்க வாய்ப்புகள் இருக்கு.  மதச்சார்பற்ற சக்திகளை ஒன்று திரட்டுவதற்காக, சிறுபான்மையினரை பாதுகாப்பதற்காக, நாட்டின் நலன் கருதி, இந்த கூட்டணியை அமைக்கிறேன்னு, கருணாநிதியிடம் இருந்து விரைவில் அறிக்கை வெளியானால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.  அநேகமாக திமுக, காங்கிரஸ், தேமுதிக கூட்டணி உறுதின்றதுதான் இறுதிக் கட்ட தகவல்.  திமுகவுக்கு 15, தேமுதிகவுக்கு 12, விடுதலைச் சிறுத்தைகளுக்கு 2, புதிய தமிழகத்துக்கு 1,  முஸ்லீம் லீகுக்கு 1, முஸ்லீம் முன்னேற்றக் கழகத்துக்கு 1, பாண்டிச்சேரியோடு சேர்த்து காங்கிரஸ்க்கு 8.  இதுதான் கடைசி நிலவரம்.  இந்த விவகாரம், இந்த வாரத்தில் தெளிவடையும்.

"ஜெயலலிதா என்ன பண்றாங்க ?  அதிமுகவோட நிலைபாடு  என்ன ?  "

"தேவர் வாக்குகளை கவரணும்னு நினைச்சு, ஜெயலலிதா சமீபத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக சார்பாக, தங்கக் கவசம் அணிவிச்சாங்க.  இது முக்குலத்தோர் வாக்குகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் னு சொல்லப்படுது.  ஆனா, ஜெயலலிதாவோட இந்த நடவடிக்கையால, ஏற்கனவே அதிமுக மேல கோபத்துல இருக்கக் கூடிய பள்ளர்கள் மற்றும் நாடார்கள் கடும் கோபத்துல இருக்காங்க.  பல்வேறு நாடார் சமூக தலைவர்கள், ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை, தென் மாவட்டங்களில் கணிசமாக இருக்கக் கூடிய பள்ளர்கள் மற்றும், நாடார்கள் மத்தியில், ஜெயலலிதாவுக்கு பின்னடைவை உண்டாக்கும்"

09-jayalalitha-pasumpon35445-600-jpg

"சொத்துக் குவிப்பு வழக்கு என்ன நிலையிலடா இருக்கு ? " என்றான் ரத்னவேல்.

"சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கு.  ஜெயலலிதா இந்த வழக்கு பத்தி ரொம்ப கவலையில இருக்காங்க.  தேர்தல் நேரத்துல இது சிக்கலை உண்டு பண்ணிடுமோன்ற கவலை அவங்களுக்கு இருக்கு.  இந்த வழக்கை இனியும் இழுத்தடிக்க வாய்ப்பு இல்லைன்ற நிலைமையில், என்னோட சொத்துக்களை திருப்பிக் கொடுங்கன்னு ஒரு மனு தாக்கல் பண்ணினாங்க.  வழக்கமா இது போன்ற மனுக்கள், வழக்கின் தொடக்கத்தில் அல்லது வழக்கு முடிந்த பின்னாடிதான் தாக்கல் பண்ண முடியும்.  ஆனா, ஜெயலலிதா இந்த நேரத்துல இந்த மனுவை தாக்கல் பண்ணியிருக்காங்க.   ஜெயலலிதா, இந்த நேரத்துல தாக்கல் செய்த இந்த மனு வேடிக்கையானது.  மேலும், ஒரு வழக்கின் சொத்துக்களை, வழக்கின் தன்மை பொறுத்து, இது என்னுடையதே அல்ல என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் சொல்வதும் உண்டு.  ஆனா, ஜெயலலிதா என்னோட பொருட்களை திருப்பிக் குடுங்கன்னு தாக்கல் செய்த மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார்.  தன்னோட உத்தரவில், "“நீண்ட காலமாக நடைபெற்றுவரும் இவ்வழக்கில் இரு தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிந்து விட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரிடமும் விசாரணை நடை பெற்று, விளக்கமும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் நடந்திருக்கும் ஒரே மாற்றம், புதிய நீதிபதி பொறுப்பேற்றதுதான். இது போன்ற புதிய மனுக்களை வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் மீண்டும் தாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நினைவுப் பொருள்கள் தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறேன். அதே நேரத்தில் இவ்வழக்கின் தீர்ப்பிற்கு பிறகு, நினைவுப் பரிசு பொருள்கள் மீதான தனது உரிமையை ஜெயலலிதா சட்டப்படி நிலைநாட்டலாம்' இப்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். "

"இப்படி ஒரு மனுவை இந்த நேரத்தில் தாக்கல் செய்ததற்கு என்ன காரணமா இருக்கும் ? " என்று ஆச்சர்யமாக கேட்டான் பீமராஜன்.

_MG_9328

"வழக்கை இந்த மாதிரி மனுவின் மூலமாக மேலும் தாமதப்படுத்தத்தான். தற்போதைய சிறப்பு நீதிபதி மைக்கேல் குன்ஹா நியமனம் தொடர்பான வழக்கும், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருது.  சிறப்பு நீதிபதி நியமனம் தொடர்பா இந்த வழக்கில் ஏதாவது விடிவு கிடைக்காதான்னு காத்திருக்காங்க ஜெயலலிதா"

"பாட்டாளி மக்கள் கட்சியோட நிலைபாடு என்ன ?  அவங்க எந்தப் பக்கம் போகப் போறாங்க ? " என்றான் ரத்னவேல்.

"பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி, செப்டம்பர் மாதம் 2013ல் பேசும்போது, "தனியாக தான் போட்டியிட போகிறோம். யாருடனும் கூட்டணி கிடையாது. 2016-ல் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி நடக்கும். இதற்கு ஒவ்வொருவரும் சபதம் ஏற்றுக்கொள்ள வேண்டும்" னு சொன்னாரு. ராமதாஸ் பேசும்போது, "வரும் லோக்சபா தேர்தலில், பா.ம.க.., தனித்து போட்டியிடும். குறைந்தது, 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். தவிர, பா.ம.க., தலைமையில் மூன்றாவது அணி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் வரும் 2016ல், பா.ம.க., ஆட்சியை பிடிக்கும்" னு சொன்னாரு.  விஜயகாந்த் தண்ணியைப் போட்டுட்டு உளறுகிறார்னா, அப்பாவும் அப்பாவும் மகனும், தண்ணி போடாமயே உளறுகிறார்கள்.  கூட்டணி கிடையாது, பாமக தலைமையில் கூட்டணி ன்னு அறிவிச்சிட்டு, பிஜேபி கூட தொடர்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க.

DSC_6616_1

அவங்ககிட்ட பேசும்போதும், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது போல பேசாமல், நாங்க வச்சதுதான் சட்டம் னு பேசறாங்க.  இதனால, பிஜேபி அணியிலயும் சேருவது சிக்கலாயிட்டு இருக்கு.  இப்படியே போச்சுன்னா, பாட்டாளி மக்கள் கட்சி, பி.டி.அரசகுமார் கூட கூட்டணி அமைச்சுதான் தேர்தலை சந்திக்கும்.  அப்படி பாராளுமன்றத் தேர்தலில் பாமக வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்ததென்றால், அது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்"

"அப்போ தமிழகத்தில் தேர்தல் களம் நான்குமுனை போட்டியாக இருக்குமா ? " என்றான் வடிவேல்.

"இந்த வார நிலவரப்படி, திமுக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, புதிய தமிழகம், முஸ்லீம் லீக் தமுமுக ஒரு அணி.  அதிமுக மற்றும் இடதுசாரிகள் ஒரு அணி.   பிஜேபி, மதிமுக, பாமக ஒரு அணி என்று தமிழகத்தைப் பொறுத்தவரை மும்முனைப் போட்டியாக இருக்கும்"

"ஏம்பா நாலாவது ஒரு அணியை உட்டுட்டியே.. ? " என்றார் கணேசன்.

"என்னண்னே... நாலாவது அணி.. புரியலையே ? "

"அனைத்திந்திய நாடாளும் மக்கள் கட்சியாக இருந்து, தற்போது நாடாளும் மக்கள் கட்சியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நடிகர் கார்த்திக்கின் கட்சியை மறந்துட்டியே... பத்து தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளாரே... " என்று சொல்லி விட்டு சிரித்தார் கணேசன்.

"போங்கண்ணே... தமாஷ் பண்ணிக்கிட்டு. " என்று சொல்லி விட்டு அடுத்த செய்திக்குத் தாவினான்.

"அர்ச்சனா ராமசுந்தரத்தை சிபிஐ கூடுதல் இயக்குநரா நியமிச்சிருக்காங்களே பாத்தீங்களா ? " என்று கேட்டான் தமிழ்.

"பாத்தேன்பா... அதுல கூட பெரிய சர்ச்சை உருவாகியிருக்குதே..?  என்ன விவகாரம் அது ? "

3810

"சிபிஐ கூடுதல் இயக்குநர்கள் போன்ற பதவிகளுக்கான நபர்களை, மத்திய கண்காணிப்பு ஆணையம் பரிந்துரை செய்யும்.  அப்படி மத்திய கண்காணிப்பு ஆணையம் பரிந்துரை செய்த நபர். மேற்கு வங்க கேடரைச் சேர்ந்த ஆர்.கே.பச்நந்தா.  ஆனால், இவர் பெயரை நிராகரிச்சிட்டு, அர்ச்சனா ராமசுந்தரத்தை நியமிச்சிருக்காங்க.  இந்த நியமனம் பிரதமரின் ஒப்புதலோடு நடைபெற்றிருக்கு.

சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவும், அர்ச்சனா ராமசுந்தரத்தின் பெயரைத்தான் பரிந்துரை பண்ணியிருக்காரு.  பச்நந்தாவை விட, அர்ச்சனா ராமசுந்தரம், அரசுக்கும், சிபிஐ இயக்குநருக்கும் உதவியா இருப்பாங்கன்னு காங்கிரஸ் அரசு நம்புது.

அர்ச்சனா ராமசுந்தரத்தோட கணவர், ராமசுந்தரம் ஐஏஎஸ், கருணாநிதி அரசில் பொதுப்பணித் துறை செயலாளரா இருந்தார்.  அந்த காலகட்டத்துல, கருணாநிதிக்கு முழு நேர வேலையே, தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளை பார்வையிடுவது மட்டும்தான்.  அந்த கட்டுமானப் பணிகளை, பொதுப்பணித் துறை செயலாளர் என்கிற முறையில், முழு நேரமும் பார்த்துக் கொண்டது ராமசுந்தரம்தான்.

அந்த கட்டுமானப் பணிகளில் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்பது, ராமசுந்தரத்துக்கு நல்லா தெரியும்.  எப்படியும் பின்னாளில் சிக்கல் வரும் என்பதை எதிர்ப்பார்த்து, 2010ம் ஆண்டிலேயே விருப்ப ஓய்வு பெற்று போயிட்டார்.  விருப்ப ஓய்வு பெற்றுக்கிட்டு, நாகார்ஜுனா கட்டுமான நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியா பல லட்ச ரூபாய் சம்பளத்தில் சேந்துட்டார்.

2qdtnra

40703310

ramu

தலைமைச் செயலக கட்டுமானத்தில் நடந்த ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், நாளை இதில் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்று அறிக்கை அளித்தால், முதலில் பாதிக்கப்படப் போவது ராமசுந்தரம்தான்"

"சரி... அவர் ஊழல் பேர்விழியா இருந்தா, அதுக்கு அவங்க மனைவி என்ன பண்ணுவாங்க ? " என்றான் ரத்னவேல்.

"என்னடா லூசு மாதிரி கேள்வி கேக்கற ?  புருஷன் பண்றது பொண்டாட்டிக்கு தெரியாம இருக்குமா ? இந்த அம்மாவும் நேர்மையான ஆளெல்லாம் கிடையாது.  சந்தோஷ் கே மிஸ்ரா என்ற ஐஏஎஸ் அதிகாரி, ஊட்டியில் கலெக்டரா இருந்தபோது, ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவுக்கு சட்டவிரோத கனிம சுரங்கங்கள்தான் காரணம்.... அந்த இடத்துக்கு சட்டவிரோதமாக வெடிபொருட்கள் எடுத்து வரப்படுகிறது னு, சிபி.சிஐடி ஒரு விசாரணையை தொடங்கறாங்க. அந்த விசாரணை கலெக்டர் கழுத்துக்கே வந்துச்சு.

அந்த நேரத்துல, சிபி சிஐடியோட கூடுதல் டிஜிபியா இருந்தது அர்ச்சனா ராமசுந்தரம்.  அவங்க, அந்த வழக்கை விசாரிக்கிற புலனாய்வு அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரை மிரட்டி, சந்தோஷ் கே மிஸ்ராவுக்கு சாதகமா அறிக்கை தர வைச்சாங்க.  இதுதான் அர்ச்சனா ராமசுந்தரம்.

ராமசுந்தரம் கருணாநிதிக்கு எவ்வளவு நெருக்கமா இருந்தாருன்றது, எல்லோருக்கும் தெரியும்.  ஆனா, ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்றதும், முதலில் பூங்கொத்தோட போனது ராமசந்தரம் தம்பதியினர்தான்"

"ஏன்டா.. தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து சொல்றது தப்பா ? " என்றான் ரத்னவேல்.

"தப்பு இல்லடா.  அந்த சமயத்தில் இருக்கக் கூடிய டிஜிபி, உள்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் போன்றவர்கள் வாழ்த்து சொல்வதும், முதல்வர் பொறுப்பேற்க இருக்கும் நபரை, நேரில் சந்திப்பதும் சகஜம்.  ஆனா, ராமசுந்தரம் ஐஏஎஸ் அரசுப் பணியிலயே இல்ல.  அர்ச்சனா ராமசுந்தரம் அப்போ, பயிற்சி பள்ளி கூடுதல் டிஜிபியா இருந்தாங்க.  அவங்கள்லாம் பாக்கணும்னு கட்டாயமே இல்லை.  அவங்க முதல் நாள் பூங்கொத்தோட போனது, பச்சையான சந்தர்ப்பவாதம். இணைப்பு

1-BABU

இந்த அடிப்படையிலதான் சொல்றேன், அர்ச்சனா ராமசுந்தரம் காங்கிரசோட கைக்கூலியாத்தான் சிபிஐ உள்ளே அனுப்பப் பட்டிருக்காங்க.  அதனாலதான், காங்கிரஸ் அர்ச்சனாவின் நியமனத்துக்கு இப்படி வக்காலத்து வாங்குது.

அது மட்டுமில்லாம, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டவரையே மத்திய கண்காணிப்பு ஆணையரா நியமித்த ஒரு அரசு, நேர்மையான அதிகாரிகளை சிபிஐக்கு நியமிப்பாங்கன்றதை நம்பவே முடியலை"

"சரி... இன்னொரு அதிகாரி  சிபிஐக்கு போகப் போறாராமே.. அது பத்தி தகவல் இருக்கா ?" என்றான் ரத்னவேல்.

"ஆமாம்.  ஷகீல் அக்தர் ஐபிஎஸ் சிபிஐக்கு போக கடும் பிரயத்தனம் பண்ணிக்கிட்டு இருக்கார்.  இவர் ஜாபர் சேட்டுக்கு ரொம்ப நெருக்கமான அதிகாரி.   இந்த நேரத்தில் சிபிஐக்கு போனா ஜாபர் சேட்டுக்கு உதவியா இருக்கலாம்னு நினைக்கிறார்"

"அவர் எப்படிப்பட்ட அதிகாரி ? "

1932053_10152164321238911_810156198_n

ஷகீல் அக்தர் ஐபிஎஸ்

"மத்திய உள்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.  அப்போ, அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரியோடு இவருக்கு நெருக்கம் ஏற்பட்டது.   அப்போ, இவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.  அப்போ அவரை, எப்படியாவது காப்பாற்றணும்னு கருணாநிதி முயற்சி செய்து, அப்போது மத்திய அரசில் உள்துறை இணை அமைச்சராக இருந்த ரகுபதி மூலமாக, ஷகீல் அக்தரை இரவோடு இரவாக மாற்றி தமிழகம் அழைத்து வந்தார்.

அப்போது ஜெயலலிதா, இதைப் பற்றி ஒரு நீண்ட அறிக்கை கொடுத்தாங்க.  அந்த அறிக்கையில் " மத்திய உள்துறை இணை அமைச்சர் ரகுபதியின் தனிச் செயலாளர் முகம்மது ஷகீல் அக்தர், உளவு பார்த்த விவகாரத்தில் சிக்கி, மத்திய உளவுத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இரவோடு இரவோக தமிழகப் பணிக்கு மாற்றியது குறித்து நேற்று முன்தினம் அறிக்கைவிட்டிருந்தேன். கடந்த 2002ம் ஆண்டு மத்திய சுகாதார துறை அமைச்சராக சத்ருகன் சின்ஹா இருந்தபோது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஷகீல் அக்தரை, மத்திய அமைச்சக பணிக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று ஷகீல் அக்தரை மத்தியப் பணிக்கு எனது அரசு அனுப்பி வைத்தது. பா.ஜ.க. ஆட்சி முடிந்து காங்கிரஸ் கூட்டணி அரசுஆட்சிக்கு வந்ததும், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ரகுபதி ஷகீல் அக்தரை தனது அந்தரங்கச் செயலாளராக நியமித்துக் கொண்டார். உளவுத்துறைக்கு ஷகீல் அக்தர் மீது ஏன் சந்தேகம் வந்தது?. அவர் இரவோடு இரவாக ஏன் தமிழக பணிக்கு மாற்றப்பட்டார் என்பதுதான்இப்போதைய பிரச்சினை. இதற்கு ரகுபதியும், மத்திய அரசும்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் அமைதியாக இருக்க கருணாநிதி அவசரப்பட்டு பதிலளித்து முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் அவர்கள் மீது சந்தேகம் மேலும் வலுக்கிறது. அவருக்கு நான் வீரப் பதத்தகம் வழங்கியதாக கருணாநிதி கூறுகிறார். குடியரசுத் தலைவரின் வீரப் பதக்கத்தை பெறுபவர்களை தேர்வு செய்ய தனியாக ஒரு குழு இருக்கிறது. அந்த குழுவின் பரிந்துரையின் பேரில்தான் பதக்கம் பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர் அவர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரித்து,அதன் பின்னர் சம்பிரதாய முறையில் பதக்கம் அளிக்கப்படுகிறது. அப்படித்தான் ஷகீல் அக்தருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது. ஆனால் ஏதோ, நான்தான் தேர்வு செய்தது போல கருணாநிதி பேசியுள்ளார். மத்திய அரசுப் பணியிலிருந்து மாநிலங்களுக்குத் திரும்பும் அதிகாரிகளை குறைந்தது சில வாரங்களாவது காத்திருப்போர் பட்டியலில்வைத்திருப்பார்கள். ஆனால் இரவோடு இரவாக, மின்னல் வேகத்தில் ஷகீல் அக்தர் பதவிக்கு வருகிறார் என்றால், அதற்கான பின்னணி என்ன? எத்தனை அதிகாரிகளுக்கு இவ்வாறு சில மணித் துளிகளில் மாநிலத்திற்கு வரவழைத்து கருணாநிதி பதவி கொடுத்திருக்கிறார் என்பதை அவர் பட்டியலிட வேண்டும். ஷகீல் அக்தரின் பழைய புகைப்படத்தைக் காட்டி அப்போது நல்லவர் என்று சொல்வதும் எந்த விதத்தில் நியாயம்? அவரை அவசர அவசரமாக பணி அமர்த்த வேண்டிய அவசியம் என்ன? அதற்கான நிர்ப்பந்தம் என்ன ? சந்தேகம் என்றால் ரகுபதி ஓடி ஒளிய வேண்டிய அவசியமோ, கருணநிதி இரவோடு இரவாக பதவி கொடுக்க வேண்டிய அவசியமோ என்ன? ஷகீல் அக்தரை கருணாநிதி விழுந்தடித்துப் பாதுகாக்கிறார் என்றால், அதில், ஆழமான, பயங்கரமான, கற்பனைக்கும் எட்டாத, கண்ணுக்குப் புலப்படாத பல மர்மங்கள் இருக்கும் என்பது அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் கருத்தாகும். இத்தனை பேரும் கருணாநிதியும், ரகுபதியும் நான் அனுப்பி வைக்கும் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு பத்திரிக்கையாளர்கள், டிவி நிருபர்கள்

முன்னிலையில், முன் பதில் சொல்லத் தயாரா ?"  இதுதான் ஜெயலலிதாவோட அறிக்கை.

"இப்படிப்பட்ட அதிகாரி சிபிஐக்கு போனா வௌங்காதே...? "

"இப்படிப்பட்ட அதிகாரிகளைத்தான் சிபிஐக்குள்ள கொண்டு போக காங்கிரஸ் அரசு நினைக்குது. என்ன பண்றது ? "

"சரி. ஐபிஎல் பெட்டிங் விவகாரம் சூடு பிடிச்சிருக்கே... ?  என்ன விவகாரம் அது ? " என்றான் பீமராஜன்.

"அது பத்தி சவுக்கு தளத்துல விரிவா கட்டுரை வர இருக்குது.  வெயிட் பண்ணு"

"சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகர்வால் உச்சநீதிமன்றம் போயிடுவாரு.   அப்புறம் யாரு, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வர்றது ? "

"கேரள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி கே.எம்.ஜோசப், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார் னு பேச்சு.  அந்த மாறுதல் உத்தரவோட, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள சில ஊழல் நீதிபதிகளும், வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுவார்கள் ன்றதுதான், உயர்நீதிமன்ற வட்டாரத்தில் பேச்சு.  பாப்போம் நல்லது நடக்குதான்னு"

"ஏம்பா...  யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்துக்கு மாறியது பற்றி, பரபரப்பா பேச்சு அடிபடுதே.... என்ன விஷயம் ? " என்றார் கணேசன்.

Idam_Porul_Eval_1

"இஸ்லாத் என்னை அழைத்தது.  அதனால் மதம் மாறினேன்னு அவர்தான் சொல்லிட்டாரே.... அப்புறம் என்ன ? "என்றான் தமிழ்.

"விளையாடாதப்பா.  விபரத்தை சொல்லு. "

"அண்ணே.. யுவன் சங்கர் ராஜா ஒரு மோசமான ஸ்த்ரீ லோலன்.  இந்தியா, மலேசியா, தாய்லாந்து ன்னு போயி பொறுக்கறதுதான் அவருக்கு வேலை. இவருக்கு நெருங்கிய தோஸ்து சிம்பு.

இவருக்கு ஏற்கனவே இரணடு முறை திருமணமாகி விவாகரத்து ஆகி விட்டது.  மூன்றாவதா, ஒரு பிரபலத்தோட மகளை திருமணம் பண்ணனும்னு முடிவு பண்றார்.  அந்தப் பெண்ணும், நான் பண்ணிக்கிறேன் ஆனா, முஸ்லீம் மதத்துக்கு மாறு ன்னு சொல்லியிருக்கார்.  இவரும், முஸ்லீமா மாறி, காதலாகி கசிந்துருகியிருக்கார்.  ஆனா, அந்தப் பெண் வீட்டுல, இந்த மாதிரி ஒரு ஆளுக்கு திருமணம் பண்ணி வைக்க சம்மதிக்கல.  இதையடுத்து அந்தப் பெண்ணும் முடியாதுன்னு சொல்லிடுச்சு.

1497044_613420928706903_377960463_n

அந்தப் பெண்ணின் மனதை மாத்தறதுக்காகத்தான் யுவன் இப்போ, நாலு வேளை பல்லு விளக்கறேன்.  ஐஞ்சு வேளை தொழுகை நடத்தறேன்னு, பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட வைச்சிக்கிட்டு இருக்காரு.  ஆனா, யுவனோட கனவு கைகூடாது.  அந்தப் பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கு"

கொஞ்ச நாளுக்கு சோக பாட்டு பாடிக்கிட்டு சுத்துவாரு யுவன்.  அப்புறம், தாய்லாந்து போயி, சோகத்தை தீத்துக்குவாரு." என்று சொல்லி விட்டு தமிழ் எழுந்ததும், சபை கலைந்தது.

பஞ்சாப் திருடன்.

$
0
0

nps

பாக்தாத் திருடன், 1960ம் ஆண்டு, எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்த திரைப்படம். பிரபல இயக்குநர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய திரைப்படம் இது.   எம்.ஜி.ஆர், வைஜெயந்தி மாலா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் இது.   1924ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பேசா படமான The Thief of Bagdad என்ற திரைப்படத்தை உள்வாங்கி எடுக்கப்பட்ட படம் பாக்தாத் திருடன்.

ஆனால் நாம் இன்று பார்க்கப் போவது பஞ்சாப் திருடனைப் பற்றியது.   பாக்தாத் திருடன், அலிபாபா, மலைக்கள்ளன் ஆகிய அனைவரையும் தூக்கிச் சாப்பிடும் திருடன்தான் பஞ்சாப் திருடன்.

ஸ்ரீசாந்த், அஜீத் சான்டிலா மற்றும் அங்கீத் சவான்,  என்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர் முதன் முறையாக ஐபிஎல் சூதாட்டத்திற்காக மே 2013ல் கைது செய்யப்பட்டபோது, இந்தியாவே அதிர்ந்து போனது.  தேசிய ஊடகங்கள், 24 மணி நேரமும் இந்த செய்திகளை ஒலி ஒளிபரப்பின.  செய்தித்தாள்களில் முதல் பக்கத்தை இந்த விவகாரம் நெடுநாட்கள் ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.

IPL-fixing-point-Sreesanth-Ajit-Chandila-Ankeet-Chavan-Amit-Singh-convicted-in-the-report

ஆனால், டெல்லி போலீசார் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுப்பதற்கு காரணமே, தமிழக காவல்துறை என்ற விவகாரம், பலருக்கு வியப்பாக இருக்கும்.

தமிழகத்தின் க்யூ பிரிவு காவல்துறை, நெடு நாட்களாகவே போலி பாஸ்போர்ட் குறித்த விவகாரங்களை விசாரித்து வந்தது.  இந்தியா முழுவதும் நெட்வொர்க் உள்ள ஒரு கும்பல், போலி பாஸ்போர்ட்டுளை தயாரித்து, வெளி நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஆட்களை கொண்டு வருவதும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதும் என்று நெடு நாட்களாக நடந்து கொண்டிருந்தது.  இந்த விவகாரத்தில், மத்திய அரசு உள்துறை, வெளியுறவுத் துறை ஆகிய அமைச்சகங்களில் சில அதிகாரிகளின் தொடர்பும் இருந்தது தெரிய வந்தது. இந்த விசாரணையை தொடர்ந்து நடத்தி, மத்திய அதிகாரிகளின் பங்கு குறித்த ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றதும், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து விடலாம் என்ற கோணத்தில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அப்படி விசாரணை நடைபெற்றபோது, சிக்கிய நபர்தான், ஜாபர் என்கிற ஜபருல்லா. இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.  இவர் விசாரிக்கப்படுகையில், இவர் தன்னுடைய மொபைல் போன் (98840 88814) என்ற மொபைல் போனிலிருந்து ஹரீஷ் பஜாஜ் என்ற நபரை தொடர்பு கொள்கிறார்.  இந்த ஹரீஷ் பஜாஜ் என்ற நபர், சென்னையில் உள்ள மார்வாடிகள் அனைவருக்கும் ஏஜென்ட். இவரின் பணி, சென்னையில் நிழலான காரியத்தில் ஈடுபடும் மார்வாடிகளிடம் இருந்து பணம் வசூல் செய்து, காவல்துறைக்கு கொடுப்பது.  காவல்துறையிடம் சிக்கல் ஏற்பட்டால், அவர்களை காப்பாற்றுவது.

கைது செய்யப்பட்ட ஜபருல்லா, ஹரீஷ் பஜாஜை தொடர்பு கொள்கிறார் என்பது தெரிய வருகிறது.  யார் இந்த ஹரீஷ் பஜாஜ் என்று ஜபருல்லாவிடம் விசாரித்ததும் ஹரீஷ் பஜாஜ், டெல்லியில் உள்ள சில இடைத்தரகர்கள் மூலமாக, போலி பாஸ்போர்ட் மற்றும் விசா பெறுவதில் உதவி செய்வார் என்று கூறுகிறார்.  ஹரீஷ் பஜாஜ், ஐந்துக்கும் மேற்பட்ட செல்போன்களை பயன்படுத்துவது தெரிய வருகிறது. ஹரீஷ் பஜாஜின் ஏஜென்டாக, ஈஸ்வரன் என்ற நபர் செயல்பட்டு வந்ததும் தெரிய வருகிறது.  ஈஸ்வரனை பிடிக்கலாம் என்று முயற்சி எடுக்கின்றனர்.  ஈஸ்வரன் கைது செய்யப்படுகிறார். ஈஸ்வரனிடமிருந்து 9.39 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. ஹரீஷ் 1

மோகனகிருஷ்ணன்

பஜாஜ் தொலைபேசியை கண்காணித்ததில், அவர் பிரசாந்த் என்ற நபரை கடைசியாக தொடர்பு கொண்டு விட்டு, செல்பேசியை அணைத்து விட்டு தலைமறைவாகி விடுகிறார் என்ற விபரம் தெரிய வருகிறது.

ஹரீஷ் பஜாஜை கைது செய்ய தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்படுகிறது.  அந்த நேரத்தில்தான் அப்போது தஞ்சாவூர் எஸ்.பியாக இருந்த அன்பு ஐபிஎஸ் இந்த விசாரணையில் தலையிடுகிறார். இந்த வழக்கை விசாரித்த க்யூ பிரிவு எஸ்.பி சம்பத் குமாரை தொடர்பு கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் சென்னை வந்து உங்களைப் பார்ப்பார்.  அவருக்கு தேவையான உதவிகளை செய்து தாருங்கள் என்று அன்பு கேட்டுக் கொள்கிறார். அதன்படி, மோகனகிருஷ்ணன், ஹரீஷ் பஜாஜை அழைத்துக் கொண்டு, க்யூ பிரிவுக்கு செல்கிறார்.

 

ஹரீஷ் பஜாஜ் தான் தேடப்படுவதை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைகிறார்.  வாரா வாரம் 5 கோடி ரூபாயை காவல்துறைக்கு வழங்கும் நம்மை எப்படி காவல்துறை தேடும் என்பது பஜாஜுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  பிறகு சென்னை மாநகர காவல்துறையில் விசாரித்ததும், இந்த விசாரணையை மேற்கொள்வது க்யூ பிரிவு சிஐடி என்றும், பாதுகாப்புப் பணம் வழங்கப்பட்டது சென்னை மாநகர காவல்துறைக்குத்தான் என்றும், அந்த பாதுகாப்புப் பணம், க்யூ பிரிவுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மோகனகிருஷ்ணன் க்யூ பிரிவு போலீசாரிடம், ஹரீஷ் பஜாஜ், ஹவாலா போன்ற விவகாரங்களில் ஈடுபடுபவர் அல்ல என்றும், ஐபிஎல் விவகாரத்தில் அவர் புக்கியாக செயல்பட்டது மட்டுமே உண்மை என்றும் கூறுகிறார்.  பஜாஜை விசாரித்ததும், அவருக்கும் பல்வேறு காவல்துறை அதிகாரிகளுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது தெரிய வருகிறது.

ஹரீஷ் பஜாஜ் யாருடனெல்லாம் பேசியிருக்கிறார் என்ற விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.  அந்த விசாரணையில், பிரசாந்த் என்ற புக்கி இதில் முக்கியப் பங்கு வகித்திருப்பது தெரிய வருகிறது.  பிரசாந்துக்கு என்ன வேலை என்றால், புக்கிகளிடமிருந்து ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே, வாரம்தோறும் 30 ஆயிரம் ரூபாயை பிரசாந்திடம் தந்து விட வேண்டும்.  பிரசாந்த் இந்த பணத்தை மொத்தமாக சேகரித்து, அந்த நேரத்தில் சென்னையில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு அளிப்பார்.  ஐபிஎல் முடியும் வரை, இந்தப் பணம் வழங்கப்படும்.  சென்னையில் எந்த இடத்தில் பெட்டிங் நடந்தாலும், போலீஸ் சோதனை செய்யாமல், பாதுகாக்கவே இந்த ஏற்பாடு.  சமீபத்தில் முடிந்த ஐபிஎல் மேட்சுகளில் மட்டும் 168 புக்கிகள் செயல்பட்டு வந்தார்கள்.   168 புக்கிகளும் வாரந்தோறும் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மொத்தம் எத்தனை தொகை என்பதை கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். வாரத்துக்கு 5 கோடி.  ஐபிஎல் நடந்த 10 வாரங்களும் இந்த தொகை காவல்துறை அதிகாரிகள், குறிப்பாக சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இந்த கிரிக்கெட் பெட்டிங் www.cricketlivebet.com என்ற இணையதளம் மூலமாக நடத்தப்பட்டது.  எந்த மேட்சில் பெட் கட்டுவது, யார் மூலம் கட்டுவது, எந்த அணி வெல்ல வாய்ப்பு உள்ளது, அல்லது அல்ல என்ற விபரங்களை புக்கிகளுக்கு சொல்ல, வாரந்தோறும் அவர்கள் 4 ஆயிரம் ரூபாயை பிரசாந்த்துக்கு தர வேண்டும். இந்த இணையதளம் லண்டனிலிருந்து முதலில் செயல்பட்டு வந்தது.  பின்னாளில், ரஷ்யாவுக்கு மாற்றப்பட்டது. இந்த புக்கிகள் அனைவரும் சஞ்சீவ் அஹுஜா என்பவர் தலைமையில் பணியாற்றி வந்தார்கள். இந்த சஞ்சீவ் அஹுஜாவுக்கு தலைவராக இருந்து செயல்பட்டவர், டெல்லியைச் சேர்ந்த ரமேஷ் வியாஸ்.  இந்த விபரங்கள் அனைத்தும், க்யூ பிரிவு போலீசார் மூலமாக, மத்திய உளவுத்துறையான இன்டெலிஜென்ஸ் ப்யூரோவுக்கும் பகிரப்படுகிறது. அப்படி பகிரப்பட்ட தகவல்கள், மத்திய உளவுத்துறையால் டெல்லி காவல்துறையோடு பகிரப்படுகிறது.  இந்த தகவல்களின் அடிப்படையில்தான் டெல்லி காவல்துறை ஸ்ரீசாந்த் உள்ளிட்டோரை கைது செய்கிறது.

இந்த விசாரணையை க்யூ பிரிவு போலீசார் செய்து கொண்டிருந்தபோது தெரிய வந்த மற்றொரு விவகாரம், ஐபிஎல் பெட்டிங்கில் ஈடுபட்டு, பின்னால் இருந்து இயக்கி வருவது, தாவூத் இப்ராஹிம் என்ற விவகாரம்.  தாவூத் இப்ராஹிம் மூலமாக, தீவிரவாதச் செயல்களில் ஈடுபட, நிதி இந்தியாவுக்கு வருவது வழக்கமான ஒன்று என்பதால், அந்த விவகாரத்தை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்ற முடிவெடுக்கப்படுகிறது.

விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியதும், விசாரணையை சிபி.சிஐடிக்கு மாற்ற டிஜிபி ராமானுஜம் உத்தரவிடுகிறார். சிபி.சிஐடிக்கு விசாரணையை மாற்றிய அதே நேரம், தீவிரவாதம் தொடர்பான விவகாரங்களை மட்டும், க்யூ பிரிவு தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார் ராமானுஜம்.

அப்படி இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த சூழலில், டெல்லி மும்பாய் என்று, கிரிக்கெட் புக்கிங் தொடர்பாக பல்வேறு புக்கிகள் கைது செய்யப்படுகிறார்கள்.  17.05.2013 அன்று, சிபி.சிஐடி போலீசார், ஐபிஎல் பெட்டிங் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொள்கிறார்கள். சோதனையில் 2 கம்ப்யூட்டர்கள், 5 லேப்டாப்புகள், 12 மொபைல் போன்கள், 5 வயர்லெஸ் போன்கள் மற்றும் 14 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்படுகிறது. பெட்டிங்கில் ஈடுபட்டதற்காக 6 பேர் கைது செய்யப்படுகிறார்கள்.

TH18_BOOKIE_1460367f

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிடும் சிபி.சிஐடி எஸ்.பி ராஜேஸ்வரி

இவர்களுக்கெல்லாம் தலைவராக செயல்பட்ட நபராக கிட்டி என்கிற உத்தம் ஜெயினை காவல்துறை தேடுகிறது.  கிட்டி, மகேந்திர சிங் ராங்க்கா என்கிற இடைத்தரகர் மூலமாக, க்யூ பிரிவில் சரணடைய விரும்புவதாக தெரிவிக்கிறார்.  வழக்கின் புலனாய்வு, சிபி.சிஐடிக்கு மாற்றப்பட்டு விட்டதால், சிபி.சிஐடி அங்கே சரணடையுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

கிட்டிக்கு சிபி.சிஐடியில் சரணடைய பயம். இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய புள்ளிகளின், தொடர்புகள் காரணமாக, தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும், அதனால், நான் க்யூ பிரிவு போலீசாரிடம்தான் சரணடைவேன் என்று கிட்டி சொல்லுகிறார்.  அந்த அடிப்படையில், கிட்டி முதன் முதலாக க்யூ பிரிவு போலீசாரால் விசாரிக்கப்படுகிறார்.

12 ஆண்டுகளுக்கு முன்னால் பெட்டிங் விவகாரத்தில் ஈடுபட்டதாகவும், அதன் பிறகு ஹரீஷ் பஜாஜ் உள்ளிட்ட பலரை பெட்டிங்கில் ஈடுபடுத்தியதாகவும், கூறிய கிட்டி, அடுத்து கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் உறைந்தனர்.  சென்னையில் உள்ள ரேடிஸ்ஸன் ப்ளு ஹோட்டலின் அதிபர் விக்ரம் அகர்வால் என்பவர்தான், இந்த பெட்டிங்கின் தலைவர் என்றும் www.betfair.com எனற் இணையதளத்தில், விக்ரம் அகர்வாலுக்கு கணக்கு இருப்பதாகவும், அதன் மூலம் அவர் பெட்டிங்கில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். விக்ரம் அகர்வாலோடு சேர்ந்து பெட்டிங் தொழிலில் ஈடுபடுபவர்கள் சையத் இர்ஃபான் மற்றும் முகம்மது நாசர் ஆகிய இருவர் என்றும், அவர்கள் மூலமாகவே பணப்பரிவர்த்தனை நடப்பதாகவும் தெரிவித்தார்.

பெட்டிங்கில் ஏராளமான பணம் புழங்குவது தெரியவந்ததும், மேட்சின் முடிவுகளை மாற்றும் வகையில் மேட்சி பிக்சிங்கில் விக்ரம் அகர்வால் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.    விக்ரம் அகர்- வாலுக்கு, கிரிக்கெட் கேப்டன் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் குருநாத் மெய்யப்பன், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரய்னா, ஆகியோரை நன்றாகத் தெரியும் என்றும் கூறினார் கிட்டி. மேலும், விக்ரம் அகர்வாலுக்கு தாவூத் இப்ராஹிமோடு தொடர்பு இருப்பதாகவும், டெல்லியில் கிரிக்கெட் பெட்டிங்கை விசாரித்து வந்த பதீஷ் தத் என்ற காவல்துறை ஆய்வாளரை கொன்றது தாவூத்தான் என்றும், பெட்டிங் தொடர்பாக காவல்துறையில் ஏதாவது சொன்னால், தன்னையும் தாவூத் கொலை செய்து விடுவார் என்று மிரட்டியதாகவும், தற்போது உளவுத்துறை ஐஜியாக உள்ள, அம்ரேஷ் பூஜாரி விக்ரம் அகர்வாலுக்கு நெருக்கம் என்றும், அதனால், விக்ரம் அகர்வால், எப்படியும் தப்பித்து விட்டு தன்னை மாட்டி விட்டு விடுவார் என்றும் கூறுகிறார் கிட்டி.

MS-Dhoni

கிரிக்கெட் பெட்டிங்கை விசாரித்த டெல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் பதீஷ் தத் மற்றும் அவர் காதலி கீதா சர்மா ஆகியோர் மர்மமான முறையில் டெல்லியில் இறந்து கிடந்தனர்.  அவர்களை முடித்தது, தாவூத் கேங்கை சேர்ந்த அனீஸ் இப்ராஹிம்தான் என்றும், அது போல கிட்டி வாயைத்திறந்தால், தாவூத் இப்ராஹிம் கிட்டியின் கதையையும் முடித்து விடுவார் என்றும் விக்ரம் அகர்வால் கிட்டியை மிரட்டியிருக்கிறார்.

விக்ரம் அகர்வாலின் மனைவி வந்தனா அகர்வால் மற்றும், குருநாத் மெய்யப்பனின் மனைவி ரூபா மெய்யப்பன் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள்.  விக்ரம் அகர்வால், கிரிக்கெட் வீரர்களுக்காக, ரேடிஸ்ஸன் ப்ளு அல்லது அடையார் கேட் ஹோட்டல்களில் கேளிக்கை விருந்து நடத்துவது வழக்கம், அந்த விருந்துகளில், விக்ரம் அகர்வாலோடு சேர்ந்து கிட்டியும் கலந்து கொள்வதுண்டு.  21.04.2013 மற்றும் 23.04.2013 அன்று, ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர், விக்ரம் அகர்வாலை அவருடைய ரேடிஸ்ஸன் ப்ளு ஹோட்டலில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.  அப்படி அந்த நபர் பேசிவிட்டு சென்ற பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் 12.05.2013 அன்று நடக்க இருக்கும் மேட்சில், சென்னை அணியை தோற்கடிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும், குருநாத் மெய்யப்பனிடம் விபரத்தை தெரிவித்தால், அவர், தோனியிடம் பேசி, வேலையை கச்சிதமாக முடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

IN10_VIKRAM_1482203f

விக்ரம் அகர்வால்

27.04.2013 அன்று, ரேடிஸ்ஸன் ப்ளு ஹோட்டலில் நடந்த ஒரு விருந்தில், விக்ரம் அகர்வால், குருநாத் மெய்யப்பன் மற்றும் கிட்டி பங்கேற்கிறார்கள். அப்போது, குருநாத் மெய்யப்பன், விக்ரம் அகர்வாலிடம், தோனியிடம் பேசி விட்டதாகவும், தோனி 140 ரன்களுக்குள் அடிக்க ஒப்புக் கொண்டதாகவும், தகவலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இந்தத் தகவல் பின்னாளில் கைது செய்யப்பட்ட விந்தூ தாராசிங் மூலமாக, ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் குந்த்ராவிடம் சொல்லப்பட்டதாக தெரிகிறது.

இந்தத் தகவல்கள் அனைத்தையும், கிட்டி க்யூ பிரிவு காவல்துறையிடம் சொல்கிறார்.  இந்தத் தகவல்கள் வாக்குமூலமாக க்யூ பிரிவினரால் பதிவு செய்யப்படுகிறது. இந்த வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், கிட்டி சிபி.சிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்படுகிறார்.

10 ஜுன் 2013 அன்று, விக்ரம் அகர்வால், சிபி.சிஐடி போலீசாரால், கைது செய்யப்படுகிறார்.  விக்ரம் அகர்வால் பஞ்சாபைச் சேர்ந்தவர்.  சென்னையில் உள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், உயர் உயர் அதிகாரிகள் போன்றவர்கள் ஒரு நெருக்கமான குழுவை வைத்திருக்கிறார்கள்.  மார்வாடி சமூகத்தினர் எப்படி தங்களது தேவைகளை நெருக்கமாக இருந்து பூர்த்தி செய்து கொள்கிறார்களோ, அதே போல, தமிழகத்தில் உள்ள பஞ்சாபிகளும் இதே போல தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.  பஞ்சாபியர்கள் குழுவில் உள்ள ஒருவருக்கு பிரச்சினை என்றால், உடனடியாக தலையிட்டு அதை சரி செய்வார்கள்.  விக்ரம் அகர்வால் விவகாரத்திலும், சிபி.சிஐடியின் தலைவராக உள்ள மற்றொரு பஞ்சாபியரான நரேந்திரபால் சிங்கிடம் இந்த விவகாரம் எடுத்துச் சொல்லப்படுகிறது.

Narendarpal_Singh_IPS

நரேந்திர பால் சிங்

மலை முழுங்கி மகாதேவன் என்ற பெயருக்கு பொருத்தமானவர் யாரென்றால், அது நரேந்திரபால் சிங் தான்.   காவல்துறையில், உள்ள பல அதிகாரிகளுக்கு, பண மோகத்தோடு சேர்ந்து விளம்பர மோகமும் உண்டு.   தங்கள் பெயர்கள் நாளேடுகளில், வார இதழ்களில் வர வேண்டும் என பெரிய லாபி செய்வார்கள். ஆனால், நரேந்திரபால் சிங்குக்கு அது போன்ற விளம்பர மோகமெல்லாம் கிடையாது.  அவருக்கு வாழ்வில் ஒரே லட்சியம், லஞ்சம் வாங்கியே எப்படி அம்பானி ஆவது என்பதுதான்.  நரேந்திர பால் சிங்கின் தந்தை, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் அமைச்சராக இருந்தவர் என்பத குறிப்பிடத் தக்கது.  காங்கிரஸ் பாரம்பரியத்தைப் பற்றி சொல்ல வேண்டுமா ? விக்ரம் அகர்வால் சிபி.சிஐடி வசம் சிக்கியதும், நரேந்திர பால் சிங் அறைக்கு கொண்டு செல்லப்படுகிறார். அவரிடம் நேரடி பேரத்தில் இறங்குகிறார் சிங்.   எங்களுக்கு எல்லா விபரங்களும் தெரியும்.  ஒப்புக் கொண்டால், மரியாதையாக நடத்தப்படுவாய்.   ஒப்புக் கொள்ள மறுத்தால், எல்லா கைதிகளையும் போல நடத்தப்படுவாய் என்று கூறுகிறார். விக்ரம் அகர்வால், பெட்டிங் விவரங்களையும், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே, நடந்த போட்டி எப்படி தோனி, ரூபா மெய்யப்பன், குருநாத் மெய்யப்பன், விந்தூ தாராசிங், மற்றும் பலரது உதவியுடன் ஃபிக்சிங் செய்யப்பட்டது என்றும், அப்படி ஃபிக்சிங் செய்ததனால், எப்படி 200 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது என்றும், ஸ்ரீசாந்த் கைதானதும் அந்தப் பணம் பரிமாற்றம் செய்ய முடியாமல் நிற்கிறது என்ற விபரத்தையும் கூறுகிறார்.  சிங், அந்தப் பணத்தை தனக்குத் தருமாறு கூறியதும், போலீஸ் ட்ரீட்மென்டிலிருந்து தப்பிக்க அப்படியே செய்கிறார் விக்ரம் அகர்வால்.  விக்ரம் அகர்வாலுக்கு மூன்று நாள் போலீஸ் கஸ்டடி கேட்கப்படுகிறது.  அந்த மூன்று நாட்களும், விக்ரம் அகர்வால், புது மாப்பிள்ளையை, மாமியார் வீட்டில் கவனிப்பது போல கவனிக்கப்படுகிறார்.  மூன்று நாட்களும் வீட்டு சாப்பாடு மட்டுமல்லாமல், விசாரணை முடிந்ததும் இரவு வீட்டுக்கு சென்று, மனைவியோடு தங்கி விட்டு மறுநாள் காலையில் சிபி.சிஐடி அலுவலகம் வந்தால் போதும் என்ற அளவுக்கு சலுகைகள் காட்டப்பட்டன.

வழக்கமாக போலீஸ் கஸ்டடியில் இருக்கும் நபர்களை, ஜட்டியோடு படுக்க வைப்பார்கள்.   அது கைதிகளை சிறுமைப்படுத்தவது என்ற நோக்கம் மட்டுமல்லாமல், பாதுகாப்பு காரணங்களுக்காகவும்.  ஆனால், விக்ரம் அகர்வால், புது மாப்பிள்ளை போல கவனிக்கப்பட்டார்.  10 ஜுன் 2013 அன்று கைது செய்யப்பட்ட விக்ரம் அகர்வால் 13.06.2013 அன்று விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.  இதே போல இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட புக்கிகள் அனைவரும் ஒரு சில நாட்களிலேயே சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படுகிறார்கள்.  இவர்களை விடுதலை செய்த நீதிபதி சரவணன், புக்கிகளை விடுதலை செய்ய தலா 20 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு விடுதலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் அகர்வாலை கைது செய்து ரிமாண்ட் செய்ய சிபி.சிஐடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடைப்பு அறிக்கையில், விக்ரம் அகர்வால் இந்த சூதாட்டத்தின் மூளையாக செயல்பட்டுள்ளார், இவரின் ரேடிஸ்ஸன் ப்ளு ஹோட்டலில் நடந்த விருந்துகளில்தான் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது, தோனி மற்றும் விந்தூ தாரா சிங் ஆகியோர் இதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர், அந்த சதித்திட்டத்தை வெளிக் கொண்டு வர, விக்ரம் அகர்வாலை மேலும் விசாரிக்க வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும்.

ஆனால் சிபி.சிஐடி போலீசார் அடைப்பு அறிக்கையில் என்ன சொன்னார்கள் தெரியுமா ?  விக்ரம் அகர்வால் தடை செய்யப்பட்ட சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார், அதனால் அவரை சிறையில் அடையுங்கள் என்று கூறியிருந்தார்கள்.  தடை செய்யப்பட்ட சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு என்ன தண்டனை தெரியுமா ?  500 ரூபாய் அபராதம்.  இப்படி ஒரு  அடைப்பு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் சிபி.சிஐடி போலீசார்.   கிட்டி என்ற உத்தம்சந்த் ஜெயின் க்யூ பிரிவு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சொல்லியிருந்த அத்தனை விஷயங்களும், மறைக்கப்பட்டன.

விக்ரம் அகர்வால் விடுதலை செய்யப்பட்ட அன்று, இரவு, நரேந்திர பால் சிங், ஒரு தனியார் காரில், விக்ரம் அகர்வால் வீட்டுக்கு சென்று, அவரை தனிமையில் சந்தித்து இரண்டு மணி நேரம் பேசியிருக்கிறார்.   இப்படி நரேந்திர பால் சிங், விக்ரம் அகர்வாலை சந்தித்த விபரம், விக்ரம் வீட்டை கண்காணிப்பில் வைத்திருந்த க்யூ பிரிவு போலீசார் மற்றும் மத்திய உளவுப் பிரிவுக்கு தெரிகிறது.  க்யூ பிரிவு போலீசார், இந்த விசாரணையை தொடர்ந்து கவனித்து வருகிறார்கள் என்ற விபரம் நரேந்திர பால் சிங்குக்குத் தெரிந்ததும், க்யூ பிரிவு போலீசாரை சிக்கலில் இழுத்து விட்டால்தான், தான் அபகரித்த 200 கோடியைக் காப்பாற்ற முடியும் என்று முடிவெடுக்கிறார்.

சிபி.சிஐடி போலீசார் ஐபிஎல் விசாரணையை நடத்தி வருகையில், விசாரணையை மேற்பார்வை செய்து நடத்திய இரண்டு அதிகாரிகள், தனக்கு  தொல்லையாக இருப்பார்கள் என்று கருதுகிறார் நரேந்திரபால் சிங்.  அந்த இரண்டு அதிகாரிகள் ஐஜியாக இருந்த மஞ்சுநாதா மற்றும், எ.ஸ். பியாக இருந்த ராஜேஸ்வரி. ராஜேஸ்வரி தலைமையில்தான், இந்த விசாரணையே நடைபெற்றது.

ஐபிஎல் விவகாரத்தில், தொடக்கம் முதலே மூக்கை நுழைத்து, பணத்தை பங்கு போட காத்திருந்த அம்ரேஷ் பூஜாரி, உளவுத்துறை ஐஜியாக இருந்து, இந்த இரண்டு அதிகாரிகளையும் மாற்றுவதற்கு உதவியாக இருக்கிறார்.  அடுத்தடுத்து மஞ்சுநாதாவும், ராஜேஸ்வரியும், சிபி.சிஐடியை விட்டு வெளியே அனுப்பப் படுகிறார்கள். ராஜேஸ்வரி இடத்துக்கு யார் வருகிறார்கள் என்பதை அறிந்தால் வியப்படைவீர்கள். அது வேறு யாரும் அல்ல.   முதன் முதலாக ஹரீஷ் பஜாஜை காப்பாற்றுவதற்காக தலையிட்டார் அல்லவா ?  தஞ்சாவூர் எஸ்.பி அன்பு.  அவர்தான்.  அவர் சிபி.சிஐடிக்கு நியமிக்கப்படுகிறார்.  மஞ்சுநாதா இடத்துக்கு ஆபாஷ் குமார் நியமிக்கப்படுகிறார்.   ஆபாஷ் குமார், அன்பு ஆகிய இருவரும், கூட்டுக் கொள்ளைக்கு ஏதுவானவர்கள் என்ற அடிப்படையிலேயே, இவர்கள் இருவரும், நரேந்திர பால் சிங் மற்றும் உளவுத்துறை ஐஜி அம்ரேஷ் பூஜாரி ஆகிய இருவரின் பரிந்துரையிலேயே அன்பு மற்றும் ஆபாஷ் குமார் நியமிக்கப்படுகிறார்கள்.  மஞ்சுநாதா மற்றும் ராஜேஸ்வரியை, சிபி.சிஐடியிலிருந்து மாற்றுவதற்கான அவசியமே இல்லை.

1779461_10152165017853911_2032608002_n

அன்பு ஐபிஎஸ்

சிபி.சிஐடிக்கு நியமிக்கப்பட்டதுமே, அன்பு தன் வேலையைத் தொடங்குகிறார்.   அன்புக்கு, நரேந்திர பால் சிங் அளித்த கட்டளை, சம்பத் குமார் வாயைத் திறக்கக் கூடாது.  என்ன செய்ய முடியுமோ... செய்யுங்கள் என்பதுதான்.  25.06.2013 அன்று மகேந்திர சிங் ராங்கா என்ற நபரை, அன்பு மதிய உணவு அருந்தலாம் என்று அழைக்கிறார்.  இந்த மகேந்திர சிங் ராங்கா யார் என்றால், இவர் மார்வாடிகளுக்கான மற்றொரு ப்ரோக்கர்.  வட இந்தியாவைச் சேர்ந்த உயர் உயர் அதிகாரிகளோடு பழக்கம் ஏற்படுத்திக் கொள்வார்.  மார்வாடிகளுக்கு பிரச்சினைகள் ஏதாவது வந்தால் உயர் அதிகாரிகளை சந்தித்து அந்த வேலைகளை முடித்துத் தருவார்.  முடித்துத் தருவதற்கு, கணிசமான தொகையை அந்த மார்வாடிகளிடம் கமிஷனாக பெற்றுக் கொள்வார்.  இதுதான் மகேந்திர சிங் ராங்க்கா.  இவருக்கு வட இந்திய அதிகாரிகளோடு, தமிழ் அதிகாரிகள் பலரும் நெருக்கம்.  உயர் உயர் அதிகாரிகளுக்கு பண நெருக்கடி ஏற்படும்போதெல்லாம், வட்டியில்லாமல் பண உதவி செய்வார்.  இதன் மூலம் பல அதிகாரிகளோடு நெருக்கமானார் ராங்க்கா.

இந்த ராங்க்காவைத்தான் மதிய உணவு சாப்பிடலாம் என்று அழைக்கிறார் அன்பு. ராங்க்கா சென்றதும், அன்பு, கிட்டி ராங்க்காவிடம் என்ன கூறினார், பெட்டிங் மற்றும் மேட்ச் ஃபிக்சிங் பற்றி என்ன கூறினார், விக்ரம் அகர்வாலைப் பற்றி என்ன கூறினார் என்று விசாரிக்கிறார்.  பின்னர், ஐபிஎல் பெட்டிங் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட புக்கி ஒருவரிடம் ஒரு புகார் வாங்கப்படுகிறது.  அந்தப் புகாரில் மகேந்திர சிங் ராங்க்கா, காவல்துறையிலிருந்து தன்னை காப்பாற்றுவதாக கூறி, ராங்க்கா பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக சிபி.சிஐடியில் எப்ஐஆர் பதிவு செய்யப்படுகிறது.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைப் பார்க்க வேண்டும்.   சிபி.சிஐடி என்பது ஒரு சிறப்பு வாய்ந்த புலனாய்வு ஏஜென்சி. இந்த ஏஜென்சி எடுத்த எடுப்பில் யார் மீதும் எப்ஐஆர் பதிவு செய்ய முடியாது.  இந்த ஏஜென்சி, விசாரணையை தொடங்குவதற்கென்று டிஜிபி அல்லது உள்துறை செயலாளர் உத்தரவிட்டால் மட்டுமே முடியும்.  தன்னிச்சையாக சிபி.சிஐடி வழக்கு பதிவு செய்யவே இயலாது.  அப்படிப்பட்ட சூழலில், மகேந்திர சிங் ராங்க்கா மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.  ராங்க்காவை, சிபி.சிஐடி போலீசார், நரேந்திர பால் சிங் உத்தரவின் பேரில் அடி வெளுக்கிறார்கள். ராங்க்காவின் சித்திரவதையை, எஸ்.பி அன்பு மற்றும் நரேந்திர பால் சிங் நேரடியாக மேற்பார்வை செய்கிறார்கள். ராங்க்காவிடமிருந்து ஒரு ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படுகிறது.   அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில், க்யு பிரிவு எஸ்.பி சம்பத் குமாருக்கு, ராங்க்கா 60 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகையை லஞ்சமாக கொடுத்ததாகவும், அது, ஐபிஎல் பெட்டிங்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் காப்பாற்றுவதற்காக கொடுக்கப்பட்ட தொகை என்றும் கூறப்படுகிறது.  அந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், அறுபது லட்ச ரூபாய் பணம், மூன்று நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படுகிறது.   இந்த விபரங்கள் அத்தனையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்தத் தகவல் ரகசியமாக வைக்கப் பட்டிருக்க இயலும்.  ஆனால், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில், இந்தத் தகவல் வேண்டுமென்றே வெளியிடப்படுகிறது.   அந்தத் தகவலை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் வெளியிட்ட பத்திரிக்கையாளர் பெயர் ஜெயராஜ் சிவன்.  இணைப்பு இந்த ஜெயராஜ் சிவனைப் பற்றி ஏற்கனவே சவுக்கு தளத்தில் எழுதப்பட்டுள்ளது. இணைப்பு.  ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ஜாங்கிட் இது வரை போட்ட லே அவுட்களிலேயே மிக மிக வெற்றிகரமான லே அவுட், சென்னை போரூர் அருகிலுள்ள மணப்பாக்கத்தில் போடப்பட்ட லே அவுட்தான்.  அந்த லே அவுட், உயர் உயர் அதிகாரிகளுக்காகவே போடப்பட்டது.  ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுக்காகவே போடப்பட்ட லே அவுட் அந்த லே அவுட்.   அந்த லே அவுட்டில் வீட்டு மனை ஒதுக்கப்பட்ட ஒரே பத்திரிக்கையாளர் ஜெயராஜ் சிவன் மட்டுமே.  இந்த ஜெயராஜ் சிவன், தனக்கு ஒதுக்கப்பட்ட இந்த வீட்டு மனையை சமீபத்தில் 5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.  சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே, டேஸ்ட் ஆப் கேரளா என்ற பணக்கார உணவு விடுதியையும் நடத்தி வருகிறார் இந்த ஜெயராஜ் சிவன் என்பது கூடுதல் செய்தி.

541581_105720796239630_2071318973_n

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையாளர் ஜெயராஜ் சிவன்

இப்படிப்பட்ட ஒரு நேர்மையான பத்திரிக்கையாளராக ஜெயராஜ் சிவன் இருப்பதால், இந்த செய்தி அவரை வைத்து, டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் வெளியிடப்பட்டது.  அந்த செய்தி வெளியானதற்குப் பிறகு, சம்பத் குமார் க்யூ பிரிவை விற்று மாற்றப்படுகிறார்.  சம்பத் குமார் இடத்துக்கு பவனீஸ்வரி நியமிக்கப்படுகிறார்.  அதன் பிறகு, ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி முத்கல் தலைமையிலான குழு முன்பாக சம்பத் குமார் சாட்சியம் அளிக்கிறார்.  அப்போது கிட்டி என்கிற உத்தம் சந்தின் வாக்குமூலம் கடைசி வரை அளிக்கப்படவேயில்லை.  ஒரு கட்டத்தில், நாளை மாலை 4 மணிக்கு வாக்குமூலம் வழங்கப்படும் என்று நீதிபதி முன்பு தெரிவித்த பவனீஸ்வரி, அதை வழங்கவேயில்லை.  கிட்டியின் வாக்குமூலம், நீதிபதி ஆணையம் முன்பு வழங்கப்படாமல் தடுத்ததும், நரேந்திர பால் சிங் என்ற மலைக்கள்ளன்தான்.

இந்த சூதாட்ட விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி, குருநாத் மெய்யப்பன், ரூபா மெய்யப்பன், என்.சீனிவாசன், விக்ரம் அகர்வால், வந்தனா விக்ரம், விந்தூ தாராசிங் ஆகியோர் அனைவரையும் காப்பாற்ற, சிபி.சிஐடியின் ஒட்டு மொத்த அலுவலகமும் விழுந்து விழுந்து வேலை செய்கிறது.   இந்த விவகாரம் முடிந்து விட்டது என்று இவர்கள் நினைத்திருந்த வேளையில், நீதிபதி முத்கல் கமிட்டியின் அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, மலைக்கள்ளனுக்கும், இதர பெருச்சாளிகளுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த பஞ்சாப் திருடன் குழுவினர், எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர்.  இதற்காக இவர்கள் செய்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பல்வேறு ஊடகங்களில் ஐபிஎல் ஊழலில் எவ்வித ஆதாரமும் சிக்கவில்லை என்று தகவலை கசிய விட்டுக் கொண்டிருக்கின்றனர்.   நரேந்திர பால் சிங் தரப்பில் சொல்லப்படும் தகவல், சம்பத் குமார் கேட்டதாக சொல்லி, மகேந்திர சிங் ராங்க்கா பணம் கொடுத்தது உண்மை, அந்தப் பணம் கைப்பற்றப்பட்டும் இருக்கிறது என்பதே.   சம்பத் குமாருக்கும், மகேந்திர சிங் ராங்க்காவுக்கும், பல ஆண்டுகளாக பழக்கம் உள்ளது.  சம்பத் குமாருக்கு தேவைப்படும் சமயங்களில் பண உதவி செய்து வந்துள்ளார்.  அந்தப் பணப்பரிவர்த்தனையை, ஐபிஎல் விசாரணையோடு சேர்த்து இணைத்துள்ளார்கள் என்கிறது சம்பத் குமார் தரப்பு.  க்யூ பிரிவு போலீசாருக்கு ஐபிஎல் விசாரணை தொடர்பாக எந்த சம்பந்தமும் இல்லாதபோது, எதற்காக, அவர் இதில் தலையிட வேண்டும் என்றும், எதற்காக இந்த விசாரணையை கவனித்து வர வேண்டும் என்றும் சிபி.சிஐடி தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.

Sampath__Kumar_DC

சம்பத் குமார் ஐபிஎஸ்

சம்பத் குமாரை, இந்த விசாரணையை கவனிக்க உத்தரவிட்டது, தமிழக டிஜிபி ராமானுஜம்.  உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக எப்போதுமே அதீத கவனத்தோடு இருக்கும் ராமானுஜமே, இந்த விசாரணையை கவனிக்கச் சொல்லி சம்பத் குமாரை பணித்துள்ளார்.  ஐபிஎல் தொடர்பான விசாரணை சிபி.சிஐடி வசம் மாற்றப்பட்டாலும், தாவூத் இப்ராஹிம் தொடர்பு தொடர்பான விசாரணையை க்யூ பிரிவே தொடர்ந்து கவனிக்கட்டும் என்று உத்தரவிட்டதும் ராமானுஜமே.  க்யூ பிரிவு சேகரித்த அத்தனை தகவல்களும், மத்திய உள்துறையோடு பகிர்ந்து கொள்ளப்பட்டது என்பதும் உண்மை.

ஆனால், ஐபிஎல் தொடர்பாக, டெல்லியில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  மும்பையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   இந்த மூன்று வழக்குகளிலும் தொடர்புள்ள முக்கிய நபர்கள், குருநாத் மெய்யப்பன் மற்றும், விக்ரம் அகர்வால். ஆனால், சிபி.சிஐடி போலீசார், இது தொடர்பாக எந்தத் தகவலையும், டெல்லி மற்றும் மும்பை போலீசாரோடு பகிர்ந்து கொள்ளவேயில்லை.  அவர்கள் விசாரணை தீவிரமா நடந்தபோதும், தமிழக சிபி.சிஐடி, இந்த விசாரணையை எப்படி இழுத்து மூடுவது என்பதிலேயே தீவிரமாக இருந்தது.   செப்டம்பர் 10 அன்று இந்து பத்திரிக்கையாளரை அழைத்துப் பேசிய பஞ்சாப் திருடன் நரேந்திர  பால் சிங் என்ன சொன்னார் தெரியுமா ?

"Meiyappan was interrogated for a couple of days in connection with the betting scandal. As of now, nothing concrete has come out to prove his involvement with the bookies. Since there were frequent telephonic conversations between him and the hotelier, we issued summons to examine him,” a CBCID official told The Hindu."

அதாவது, மெய்யப்பனுக்கும், சூதாட்ட புக்கிகளுக்கும் தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.   அடிக்கடி மெய்யப்பனும், விக்ரம் அகர்வாலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளதால் அவரை அழைத்து விசாரித்தோம்.  இந்த  செய்தி இந்து நாளேட்டில் வெளியான நாள் 10 செப்டம்பர் 2013 இணைப்பு. ஆனால், இதே ஐபிஎல் தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த மும்கை காவல்துறை, குருநாத் மெய்யப்பன், பாகிஸ்தான் அம்பையர் அப்துல் ரவூஃப் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இணைப்பு.

எப்படி இருக்கிறது சிபி.சிஐடியின் யோக்கியதை பார்த்தீர்களா ?   இது அத்தனையும் பஞ்சாப் திருடன்வேலை.  விக்ரம் அகர்வால் மூன்றே நாட்களில் ஜாமீனில் வந்தது, புக்கிகள் அத்தனை பேரும், ஒரு சில நாட்களில் ஜாமீனில் வந்தது எப்படி புரியாத புதிரோ... அதே போல புரியாத மற்றொரு புதிர், சிபி.சிஐடி தானாகவே பதிவு செய்த எப்ஐஆரில் கைது செய்யப்பட்ட மகேந்திர சிங் ராங்க்கா ஜாமீனில் வர 45 நாட்கள் ஆனதும்.   சூதாட்டத்தின் மூளையான விக்ரம் அகர்வால் மூன்று நாட்களில் ஜாமீனில் வருகிறார். ஆனால் ராங்க்காவின் ஜாமீன் மனுவை, சிபி.சிஐடி கடுமையாக ஆட்சேபித்து, மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்படுகிறது.  அமர்வு நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்படுகறிது.  45 நாட்கள் கழித்து, உயர்நீதிமன்ற ஜாமீனில்தான், ராங்க்கா வெளியே வருகிறார்.

சிபி.சிஐடி விசாரணைகளை  பொறுத்தவரை, வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் வெளியே சொல்லப்படாது. ஆனால்,

இந்த விவகாரத்தில் மட்டும், பத்திரிக்கையாளர்களை அழைத்து, குருநாத் மெய்யப்பனுக்கு உத்தமர் பட்டம் சூட்ட வேண்டிய அவசியம், பஞ்சாப் திருடன் நரேந்திர  பால் சிங்குக்கு ஏன் வந்தது ?

அகர்வால் கணக்கு வைத்திருக்கும் www.betfair.com என்ற இணையதளத்தை விசாரிக்க பஞ்சாப் திருடன் ஏன் முயலவில்லை ?

சிபி.சிஐடி கஸ்டடியில் இருந்த விக்ரம் அகர்வால் வீட்டுக்கு செல்ல யார் அனுமதியில் அனுப்பப்பட்டார் ?

விசாரணையை முடித்த மும்பை போலீசார் மற்றும் டெல்லி போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையில்,  தமிழக சிபி.சிஐடி இன்னும் மாவரைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன ?

தற்போது பத்திரிக்கையாளர்களை தொலைபேசியில் அழைத்து, சம்பத் குமார் கைது செய்யப்பட உள்ளார் என்று சொல்ல வேண்டிய அவசியம் பஞ்சாப் திருடன் நரேந்திர  பால் சிங்குக்கு ஏன் வந்தது ?

இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது.  இந்த வழக்கை மாநிலத்தில் எந்த பிரிவு காவல்துறை விசாரித்தாலும் நியாயம் கிடைக்காது. நியாயமான விசாரணை நடைபெறாது.  ஆகையால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுவது ஒன்றே, சரியான நடவடிக்கையாக அமைய முடியும்.  சிபிஐ விசாரணையில், விக்ரம் அகர்வாலுக்கும், புக்கிகளுக்கும் மூன்றே நாளில் ஜாமீன் கொடுத்த மேஜிஸ்ட்ரேட் சரவணனும் விசாரிக்கப்பட வேண்டும்.

ஆனால், கருணாநிதிக்கு சற்றும் வேறுபாடு இல்லாத ஜெயலலிதாவிடம் இதை எதிர்ப்பார்க்க முடியுமா என்ன ?

ஏன் நடத்த வேண்டும் சவுக்கு ?

$
0
0

savukku_image

 

சவுக்கு என்ற தளம் ஊர் கூடி இழுக்கும் தேர் என்பது பல முறை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.  இது ஒரு தனி நபரோ, ஒரு சிலரோ நடத்தும் தளம் அல்ல.

மனித சமுதாயம் தோன்றி, குடும்பம், தனிச்சொத்து, அரசுரிமை என்று சமுதாயம் மாறிய பிறகு, சமுதாயத்தில் கபடு, சூது, வஞ்சகம், பேராசை என்று அத்தனை தீய குணங்களும் குடியேறின.  மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்று நிரந்தரமாக இந்த பூமியில் வாழத்தான் போகிறோம் என்று மனித இனம், அலையத் தொடங்கியது.

அன்று தொடங்கி இன்று வரை, வரலாறு நெடுக, பேராசையும், வஞ்சகமும், அது தொடர்பான கொடுங்குற்றங்களும் நிறைந்து கிடக்கின்றன.  இந்த தீயகுணங்கள் இல்லாத நல்லவர்களும் வரலாறு நெடுக நிறைந்தே இருக்கின்றனர். இந்த தீய குணங்களையும், தீய மனிதர்களையும் எதிர்த்து குரல் கொடுத்த, போராட்டங்களை நடத்திய மனிதர்களை வரலாறு தொடர்ந்து பதிவு செய்தே வந்திருக்கிறது.

நாகரீகம் வளர்ந்து, வித விதமான நுகர்வுப் பொருட்கள் ஏராளமாக கிடைக்கப்பெற்றதும், இந்த பேராசையும், நுகர்வுக் கலாச்சாரமும், மனித சமுதாயத்தை ஆக்ரமித்தன.   மிக மிக மோசமான நுகர்வுக் கலாச்சாரம் வளரத் தொடங்கியதையொட்டி நல்லவர்களின் சதவிகிதம் குறைந்து, நல்லவர்கள் அரிதாகி விட்டது போன்ற ஒரு நிலை ஏற்பட்டது.

சமகால சமூகத்தை எடுத்துக் கொண்டால், நல்ல மனிதர்கள் அருகிப் போய் விட்டார்கள் என்ற ஒரு சூழல் உருவாகியது.  ஒரு ஜனநாயக சமுதாயத்தில் முக்கிய அங்கமாக இருக்க வேண்டிய, நீதித்துறை, ஊடகம், அரசியல் என அனைத்தும், சீரழிந்து போய் விட்டதே என்று வேதனைப்படும் சூழலில், பொதுமக்களும், இந்த புரையோடிய ஊழலின் அங்கமாக மாறி விட்டார்கள் என்ற தகவல்தான், நல்லுள்ளம் படைத்தோர் அனைவரையும் வேதனையடையச் செய்தது.

குறிப்பாக தமிழக சூழலில் 2001ல் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நிலைமை மோசமடைந்தது.   அப்போது அதிகாரிகள் தங்கள் கடமைகளை மறந்து, ஜெயலலிதாவுக்கு துதி பாடினாலும், ஊடகங்கள், தங்கள் கடமைகளை வலுவாகவே செய்தன.   2006ல், கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், நிலைமை மிக மிக மோசமடைந்தது.  ஜனநாயகத்தை கட்டிக் காக்க வேண்டிய ஊடகங்கள், தங்கள் விழுமியங்களை இழந்து, ஆட்சியாளர்களின் கைப்பாவையாக மாறிப் போனதுதான் ஜனநாயகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு.

அரசுக்கு எதிராக ஒரு வரிச் செய்தியைக் கூட வெளிக் கொணர முடியாத ஒரு அவலச் சூழலில்தான் சவுக்கு தளம் தொடங்கப்பட்டது.  வெகுஜன ஊடகங்கள், தங்கள் பணியைச் செவ்வனே செய்திருந்தால், சவுக்கு போன்ற தளங்கள் உருவாகுவதற்கான தேவையே ஏற்பட்டிருக்காது.

அப்படிப்பட்ட சூழலில் தொடங்கப்பட்ட சவுக்கு தளம், தொடங்கிய காலத்தில் பெரிய அளவில் ஆதரவைப் பெறவில்லை.  ஆனால், உளவுத்துறை கூடுதல் டிஜிபி ஜாபர் சேட் மீதான வீட்டு வசதித் துறை ஆதாரங்களை பதிப்பித்த மறுநாள், பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகுதான், சவுக்கு தளம் விறுவிறுப்படைந்தது.   பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதும், சவுக்கு தளம் முடங்கி விடும் என்று மனக்கணக்கு போட்ட ஜாபர் சேட்டின் கணக்கு தவறானது.  சவுக்கு தளம், அந்த பொய் வழக்கை அடித்தளமாக வைத்து வீறுகொண்டெழுந்தது.    அன்று முதல், சவுக்கு தளத்துக்கு தயக்கமோ தொய்வோ கிடையாது.   அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றவர்களின் ஊழல்களை அம்பலப்படுத்துவதில் முன்னிலை வகித்தது சவுக்கு.   தொடர்ந்து இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுத எழுத சவுக்கு தளத்தின் ஆதரவு பெருகிக் கொண்டே சென்றது.

ஒரு கட்டத்தில், இந்தத் தளத்தை நடத்துபவர்கள், பொய்யுரைக்க மாட்டார்கள், நேர்மையாக உண்மையை வெளியிடுவார்கள் என்ற நம்பிக்கையை பெற்றது.  அதை விட மிக மிக முக்கியமாக, இந்தத் தளமும், இதை நடத்துபவர்களும், ஒரு காலத்திலும் விலை போக மாட்டார்கள் என்பதே இந்தத் தளத்தை நடத்தியதில் பெற்ற நம்பிக்கை.   இப்படி ஒரு நம்பிக்கையை பெற்ற பிறகு, இத்தளம் பெற்ற ஆதரவினை, வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது.   உலகெங்கிலும் உள்ள நல்லுள்ளம் படைத்தோர் நேரடியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் அளித்த ஆதரவை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது.

சமூகத்தில் அத்தனை விழுமியங்களும் பட்டுப் போய் விட்டன என்று பெரும்பாலானோர் அவநம்பிக்கை கொண்டிருந்த நேரத்தில், சவுக்கு தளம், மனித குலத்தின் மீது தளராத நம்பிக்கை கொண்டிருந்தது.  மிக மிக மோசமான அழிவு காலத்திலும் கூட, நல்லுள்ளங்கள் இருந்தே தீரும், அந்த நல்லுள்ளங்களை, ஆயிரம் கருணாநிதிகள், பத்தாயிரம் ஜெயலலிதாக்கள் வந்தாலும் கறைப்படுத்த முடியாது என்பதில் சவுக்கு தளம், தீவிர நம்பிக்கை கொண்டிருந்தது.   அந்த நம்பிக்கைக்கு சரியான உதாரணம், சமீபத்தில், சவுக்கு தளத்தை முடக்க, நீதிபதி சி.டி.செல்வம், வழக்கறிஞர் சங்கரசுப்பு, சன் டிவி செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி ஆகியோர் தீட்டிய சதித்திட்டம்.

எப்படியாவது விவாகரத்து கிடைக்க இரண்டு வருடம் ஆகும் என்பதற்காக, தன் கணவனின் கையெழுத்தை போலியாக போட்டு, ஆறே மாதங்களில் முடித்து, விவாகரத்து பெற்ற மகாலட்சுமி, நீதிபதிகளுக்கு ப்ரோக்கராக செயல்பட்டுக் கொண்டு மனித உரிமைப் போராளி என்று வேடமிடும் சங்கரசுப்பு, கயமையின் உருவான கருணாநிதியின் கைத்தடியாக செயல்படும் நீதிபதி சி.டி.செல்வம் ஆகியோர் தீட்டிய சதித்திட்டத்தின் விளைவே, சவுக்கு தள வடிவமைப்பாளர் என்று குற்றம் சாட்டப்பட்ட முருகைய்யனின் கைது மற்றும், ஆச்சிமுத்து சங்கரின் மீது காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டை.

இந்தியாவின் எந்த நீதிமன்றத்துக்கும், எந்த ஒரு நபரையும் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட அதிகாரமேயில்லாத போது, சி.டி.செல்வம், முருகைய்யனையும், சங்கரையும் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.   அந்த வாய்மொழி உத்தரவை நிறைவேற்ற வேண்டியதில்லை என்று சட்டம் சொன்னாலும், சவுக்கு தளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான உளவுத்துறை இணை ஆணையர் வரதராஜு மற்றும், சவுக்கு தளத்தால் பல முறை அம்பலப்படுத்தப்பட்ட ஊழலின் உறைவிடமான ஜார்ஜ் ஐபிஎஸ் ஆகியோரின் உத்தரவின் பேரில், முருகைய்யனை பாண்டிச்சேரியில் கைது செய்தனர் காவல்துறையினர்.   ஏற்கனவே முருகைய்யனை விசாரித்து, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த காவல்துறையினர், சம்பந்தமே இல்லை என்று தெரிந்தும், வேண்டுமென்றே அவரை கைது செய்தனர்.   ஒரு இணைய தளத்தில் வரும் கட்டுரைக்கு, முருகைய்யன் அத்தளத்தின் வடிவமைப்பாளராக இருந்தாலும் கூட, எப்படி பொறுப்பாக முடியும்?   இதையெல்லாம் நன்றாகத் தெரிந்தே, சி.டி.செல்வம் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.  அந்த உத்தரவை, வரதராஜுவும், ஜார்ஜும், சவுக்கு தளத்தை முடக்க பயன்படுத்திக் கொண்டனர்.

ஜாபர் சேட்டின் உரையாடல்கள் சவுக்கு தளத்தில் வெளியாக உள்ளது என்ற செய்தி, கருணாநிதி மற்றும் சிஐடி காலனியை ஆடிப்போக வைத்தது.  அதிரச் செய்தது.   அவர்களின் உத்தரவையே சி.டி.செல்வம் சிரமேற்கொண்டு நிறைவேற்றினார்.

நுகர்வுக் கலாச்சாரத்தின் காரணமாக, நல்லவர்களே அருகிப் போய் விட்ட ஒரு சூழலில், எதற்காக சவுக்கு நடத்த வேண்டும் என்ற கேள்விக்கான விடை, சமீபத்தில் கிடைத்தது.   கைது செய் என்று ஆணவத்தோடு சி.டி.செல்வம் உத்தரவு பிறப்பித்ததும், காவல்துறை தேடுதல் வேட்டையில் இறங்கியது.   கையில் டேப்பை வைத்துக் கொண்டு, காவல்துறையிடம் சிக்கினால், டேப்பை வெளியிட முடியாதே என்ற ஆதங்கம்.   எப்படியாவது இதை ஊடகங்களில் வெளியிட்டு விட வேண்டுமே என்ற வெறி.   இந்த நேரத்தில் காவல்துறையின் தேடுதல் வேட்டை.  சம்பந்தமே இல்லாமல் நண்பர் முருகைய்யன் சிறையில் உள்ளாரே என்ற வேதனை.

இப்படிப்பட்ட இக்கட்டான ஒரு சூழலில், உலகெங்கும் இருந்து குவிந்த ஆதரவு இருக்கிறதே.... அதை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது.  அதை அனுபவித்துத்தான் பார்க்க வேண்டும். அன்பு உள்ளங்களின் அன்பும் ஆதரவும் நெகிழச் செய்தது.  ஒரு நண்பர், செலவுக்கு பணம் வைத்துக் கொள் என்று அவசர அவசரமாக ஓடி வந்து கொடுத்தார்.  இன்னொரு நண்பர், எங்கேயும் போகாதே, இங்கே வா என்று வீட்டுக்கு அழைத்து தங்க வைத்தார்.  பத்திரிக்கை உலக தோழர்கள், பதறிப் போய் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தொடர்பு கொண்டனர்.   தங்கள் பத்திரிக்கைகளில், கைது குறித்து செய்தி வெளியிட முடியாத வேதனையை பகிர்ந்து கொண்டனர்.   எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம் உதவி வந்து குவிந்தது.  சுருக்கமாக சொன்னால், காவல்துறை நினைத்தே பார்த்திராத இடங்களில் இன்னும் குறைந்தது 20 வருடங்களுக்கு தங்கியிருக்க முடியும்.  அத்தனை உதவிகள்.

இது ஒரு புறமிருக்க, வழக்கறிஞர்கள் செய்த உதவி இருக்கிறதே.... அதை அளவிடவே முடியாது.   விவரிக்கவும் முடியாது.   செல்வம் போன்ற நீதிபதிகளை பகைத்துக் கொண்டால், தங்கள் தொழிலுக்கே ஆபத்து என்பதை நன்கு உணர்ந்தும், வழக்கறிஞர்கள், முருகைய்யனை வெளியே எடுக்க வேண்டும், சவுக்கு தளத்தை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்பதில், கடும் முனைப்போடு பணியாற்றினார்கள்.

குறிப்பாக, வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், ராஜா செந்தூர் பாண்டியன், சிவசுப்ரமணியன், மணிகண்டன், விஜயலட்சுமி, ராஜ்குமார், லோகநாயகி,  போன்றவர்கள் ஒரு சிறு உதாரணமே.   இவர்களைப் போல இன்னும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், இந்த தளத்தை காப்பாற்றுவதில், பெரும் முயற்சி எடுத்தார்கள்.  அவர்கள் திரை மறைவில் இருக்க விரும்புவதால், அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

பத்திரிக்கையாளராக இருந்து கொண்டு, அன்பழகன் அவர்கள் செய்த உதவிகளை என்றென்றும் மறக்க இயலாது.  அவரின் மக்கள் செய்தி மையம் இணைய தளத்தில், சவுக்கு தளத்தை முடக்க எடுக்கப்படும் முயற்சிகளை அவ்வப்போது வெளியிட்டதோடு, அநியாயமாக நடந்து கொண்ட நீதிபதி சி.டி.செல்வம் மீது, குடியரசுத் தலைவர், இந்திய தலைமை நீதிபதி ஆகியோருக்கு புகாரும் அனுப்பினார்.

சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை, வெறுமனே கமென்டுகளை போட்டு விட்டு, விலகிச் செல்வதே வழக்கம் என்ற கருத்து இருக்கிறது.   ஆனால், இப்படிப்பட்ட சம்பிரதாயமான நட்பைத் தாண்டி, நடைமுறையான பல்வேறு உதவிகளைச் செய்த நட்புகளை மறக்கவே முடியாது. குறிப்பாக அருமை நண்பர்கள், அன்பழகன் வீரப்பன், கிஷோர் கேசாமி,

சாத்தப்பன் போன்றோர் வழக்கறிஞர்களோடு தொடர்பில் இருந்ததோடு, சமூக வலைத்தளங்களில், சவுக்கு தளத்தை முடக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை முழுமையாக அம்பலப்படுத்தினர்.   அத்தோடு நில்லாமல், குடியரசுத் தலைவர், மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு, நீதிபதி சி.டி.செல்வம் மீது புகார்களை, உலகெங்கும் இருந்து மின்னஞ்சல் மூலம் அனுப்ப உதவி செய்தனர்.

இந்த பட்டியல் முழுமையான பட்டியல் அல்ல.   சவுக்கை எப்போதும் ஆதரித்து, ஆசி வழங்கி, அன்போடு உச்சி முகர்ந்து வாழ்த்தும் காவல் துறை அதிகாரிகள் தங்கள் பெயர்களை குறிப்பிடுவதை எப்போதும் விரும்ப மாட்டார்கள்.  அவர்கள் இல்லாவிட்டால் சவுக்கு உருவாகியிருக்காது.  செயல்பட்டுக் கொண்டும் இருக்காது.

ஒரு தறுதலைப்பயலை வைத்துக் கொண்டு என்ன செய்வது.... எப்போது பார்த்தாலும், போலீஸ் தேடுவது போலவே இருக்கிறானே.... என்று அங்கலாய்க்காமல், உண்மையைப் புரிந்து கொண்டு, நெருக்கடியான நேரத்தில் ஒத்துழைப்பு அளித்த, குடும்பத்தினருக்கு நன்றி கூறாமல் இருக்க இயலாது..

இப்போது சொல்லுங்கள்.... சவுக்கு தளத்தை முடக்க நினைக்கும் சக்திகள் வெற்றி பெற்று விடுமா என்ன ?  இத்தனை அன்பு உறவுகளின் ஆதரவு தொடர்ந்து இருக்கையில், சவுக்கு தளத்தை யார் முடக்கி விட முடியும் ?

என் அன்பார்ந்த உறவுகளே....   சவுக்கு தளத்தை தொடர்ந்து நடத்துவோம்.... இணைந்து பயணிப்போம்... ஜனநாயகத்தையும், இந்த சமூகத்தையும் காப்போம்.   நாம் வெல்வதற்கு இந்த உலகமே இருக்கிறது.

பாரதியாரின் இந்தப் பாடலை, சவுக்கு சி.டி.செல்வத்துக்கு காணிக்கையாக்குகிறது.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

எழுவர் விடுதலை : சட்டமும் அரசியலும்.

$
0
0

1618629_10152032562593303_132270080_n

தலைப்பைப் பார்த்ததும், தமிழ் இந்து மற்றும் உயிர்மை இதழ்களில் வருவது போல, பிரக்ஞை பூர்வமான கட்டுரை என்று நினைத்து பயந்து விடாதீர்கள்.   எளிமையாகவே விஷயத்தை அணுகலாம்.

முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அந்தத் தீர்ப்பின் இறுதியில், "ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் வரைதான்.  ஆனாலும், அது, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432ன் கீழ் வழங்கப்படும் தண்டனைக் குறைப்புக்கு உட்பட்டது.  மேலும், பிரிவு 433 Aன் கீழ் உள்ள கட்டுப்பாட்டுக்கு மீறாமல் இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது.

இதன் அடிப்படையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, 19.02.2014 அன்று சட்டப்பேரவையில், அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவை அறிவித்து, பின்வருமாறு அறிக்கை படித்தார். "இந்த விரிவான விவாதத்திற்குப் பின், இன்று, 19.2.2014, காலை எனது தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோர் 23 ஆண்டுகளாக சிறைச்சாலையில் இருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று, ஏற்கெனவே ஆயுள் கைதியாக 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இருப்பினும், இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி, தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.

எனவே, மத்திய அரசின் கருத்தினைப் பெறும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்."

இதுதான் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு.  இந்த அறிவிப்பைத் தொடர்ந்தே நாடு முழுக்க சட்ட விவாதங்களும் அறம் சார்ந்த விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

முதலில் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.   குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 432 என்ன கூறுகிறது

432. Power to suspend or remit sentences.

When any person has been sentenced to punishment for an offence, the appropriate Government may, at any time, without Conditions or upon any conditions which the person sentenced accepts, suspend the execution of his sentence or remit the whole or any part of the punishment to which he has been sentenced.

ஒரு குற்றத்திற்காக எவரேனும் தண்டிக்கப்பட்டிருக்கும்போது, தண்டிக்கப்பட்டவர் ஒத்துக்கொள்கிற எவற்றின் நிபந்தனைகளின் பேரிலோ, அல்லது நிபந்தனைகள் இல்லாமலோ, உரிய அரசு, எந்த சமயத்திலும் அவருடைய தண்டனை நிறைவேற்றப்படுதலை நிறுத்தி வைக்கலாம். அல்லது அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை முழுவதையும் அல்லது, அதன் பகுதி எதையுமோ தள்ளுபடி செய்யலாம்.

433 A என்ன சொல்கிறது ?

Section 433A in The Code Of Criminal Procedure, 1973

433A. 1 Restriction on powers of remission or Commutation in certain cases. Notwithstanding anything contained in section 432, where a sentence of imprisonment for life is imposed on conviction of a person for an offence for which death is one of the punishments provided by law, or where a sentence of death imposed on a person has been commuted under section 433 into one of imprisonment for life, such person shall not be released from prison unless he had served at least fourteen years of imprisonment.

இந்தப் பிரிவு சுருக்கமாக என்ன கூறுகிறதென்றால், ஆயுள் கைதி ஒருவரின் தண்டனை குறைக்கப்படும் நேரத்தில், அவர் குறைந்தது 14 வருடம் சிறையில் இருந்திருக்க வேண்டும்.

குற்றவியல் சட்டம் 435ன்படி மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என்ற பிரிவுதான் தற்போது சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.  பிஜேபி, காங்கிரஸ் மற்றும் வட இந்திய சட்டப்புலிகள் அனைவரும் ஒரே குரலில் சொல்வது, மாநில அரசுக்கு இந்தப் பிரிவில் விடுதலை செய்ய அதிகாரம் இல்லை.  ஜெயலலிதா தவறிழைத்து விட்டார் என்பதே.

பிரிவு 435 என்ன சொல்கிறது என்பதை பார்க்கும் முன்பாக, இந்த பிரிவின் வரலாறை பார்ப்போம்.

41வது சட்டக் கமிஷனின் பரிந்துரையின் படி, இந்த பிரிவு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

அந்த அறிக்கையின் பத்தி 29.13ல், தற்போதை சட்டப்பிரிவு 435 சேர்க்கப்பட்டதற்கான காரணங்கள் கூறப்பட்டுள்ளது.

It has been suggested that there are a few types of cases in which the central government is vitally concerned though the offence is against a law relating to a matter to which the executive power of the State Government extends and as such the authority to suspend, remit or commute the sentence is the State Government.   Important instances are offences investigated by the Delhi Special Police Establishment, offences involving misappropriation or destruction of, or damage to, Central Government property and offences committed by Central Government servants in the discharge of their official duties.  If a State Government chooses t take a lax view of these offences and to exercise its powers of remission and commutation unduly liberally, it is bound to create difficulties of administration for the Central Government.  We feel it desirable that in such cases where the Central Government is obviously concerned in the proper enforcement of the penal provisions, including the execution of sentences awarded by the Court, the State Government should be required to exercise its powers of remission and commutation only in consultation with the Central Government.

சில வழக்குகளில் தண்டனைக் குறைப்புக்கு மாநில அரசிடம் அதிகாரம் இருந்தாலும், மத்திய அரசு முக்கியமாக சம்பந்தப்பட்டுள்ள வழக்குகள் உண்டு என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது. சிபிஐ விசாரிக்கும் வழக்குகள், மத்திய அரசில் நிதி மோசடி செய்த வழக்குகள், மத்திய அரசின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்ட வழக்குகள், மத்திய அரசுப் பணி தொடர்பான குற்றங்கள் குறித்த வழக்குகள் போன்றவை முக்கிய வழக்குகள்.  ஒரு மாநில அரசு, இது போன்ற முக்கிய வழக்குகளின் முக்கியத்துவத்தை கருதாமல், அவ்வழக்கை எளிதாகக் கருதி, தண்டனைக் குறைப்பு செய்யுமேயானால், மத்திய அரசு சிறப்பாக நிர்வாகம்  செய்ய இயலாது.  அதனால், மத்திய அரசு சம்பந்தப்பட்டுள்ள வழக்குகளில், நீதிமன்றம் வழங்கிய தண்டனைகள் சரி வர நிறைவேற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக, மாநில அரசு தண்டனை குறைப்பு செய்தால், அது மத்திய அரசின் கலந்தாலோசனைக்குப் பிறகே செய்ய வேண்டும் என்று கருதுகிறோம்.

இது சட்டக் கமிஷனின் 41வது அறிக்கையில் அளிக்கப்பட்ட பரிந்துரை. இந்த பரிந்துரையை ஏற்று, கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம்தான் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 435.

அந்த பரிந்துரையின் படி ஏற்படுத்தப்பட்ட பிரிவு 435 இதுதான்.

435. State Government to act after consultation with Central Government in certain cases.

(1) The powers conferred by sections 432 and 433 upon the State Government to remit or commute a sentence, in any case where the sentence is for an offence-

(a) which was investigated by the Delhi Special Police Establishment constituted under the Delhi Special Police Establishment Act, 1946 (25 of 1946 ), or by any other agency empowered to make investigation into an offence under any Central Act other than this Code, or

(b) which involved the misappropriation or destruction of, or damage to, any property belonging to the Central Government, or

(c) which was committed by a person in the service of the Central Government while acting or purporting to act in the discharge of his official duty, shall not be exercised by the State Government except after consultation with the Central Government.

(2) No order of suspension, remission or commutation of sentences passed by the State Government in relation to a person, who has been convicted of offences, some of which relate to matters to which the executive power of the Union extends, and who has been sentenced to separate terms of imprisonment which are to run concurrently, shall have effect unless an order for the suspension, remission or commutation, as the case may be, of such sentences has also been made by the Central Government in relation to the offences committed by such person with regard to matters to which the executive power of the Union extends.

இதில் 435 (1) பகுதி 1 மற்றும் 2 வேறு வேறு.  இரண்டையும் தனித்தனியாக பார்க்க வேண்டும்.

முதல் பிரிவு 435 (1) (a) to (c) என்ன கூறுகிறதென்றால், மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த வழக்குகளிலும், மத்திய அரசின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்ட, அல்லது மத்திய அரசின் நிதி மோசடி செய்யப்பட்ட வழக்குகளிலும், மத்திய அரசு ஊழியராக உள்ளவர் சம்பந்தப்பட்ட வழக்குகளிலும், உள்ளவர்களை விடுதலை செய்யும் முன்னர், மாநில அரசு, மத்திய அரசோடு கலந்தாலோசனை செய்த பிறகே விடுதலை செய்ய வேண்டும்.

இது முதல் பகுதி.

இரண்டாவது பகுதி என்ன சொல்கிறது ?

மற்ற தண்டனைப் பிரிவுகளோடு சேர்த்து மத்திய அரசின் அதிகாரங்களுக்கு உட்பட்ட பிரிவுகளில் தண்டிக்கப்பட்டவர்கள், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டவர்கள், போன்ற வழக்குகளில், மாநில அரசு ஒருவரை முன் விடுதலை செய்யுமேயானால், மத்திய அரசும் ஒரு முன் விடுதலைக்கான உத்தரவை பிறப்பித்தால் மட்டுமே அப்படி முன் விடுதலை செய்ய இயலும்.

இதுதான் இரண்டாவது பிரிவு.  முதல் பிரிவுக்கும் இரண்டாவது பிரிவுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.  முதல் பிரிவு, மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என்கிறது.  இரண்டாவது பிரிவு மத்திய அரசு விடுதலை உத்தரவை பிறப்பித்தால் மட்டுமே விடுவிக்க முடியும் என்கிறது.

இரண்டு பிரிவுகளும் என்ன, எதற்காக என்பதை விளக்கங்களோடு பார்ப்போம்.   மத்திய அரசுக்கு சொந்தமான சாஸ்திரி பவன் கட்டிடம் இருக்கிறது.  தமிழகத்தில் அந்த கட்டிடத்துக்கு ஒருவர் வெடிகுண்டு வைத்து சேதப்படுத்தி விடுகிறார்.  தமிழ்நாடு காவல்துறை விசாரிக்கிறது.   விசாரித்து அவருக்கு தண்டனை வழங்கப்படுகிறது.  அவருக்கு வெடிமருந்துச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டும், குண்டு வைத்ததற்கு 15 ஆண்டும் தண்டனை வழங்கப்பட்டது என்று வைத்துக் கொள்வோம்.  மாநில அரசு அவரை எப்போது விடுவிக்க முடியும் ? ஒன்பதாவது ஆண்டில் மாநில அரசு அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றால், மத்திய அரசின் அனுமதி வேண்டும்.  ஏனென்றால், மத்திய அரசு சம்பந்தப்பட்ட வெடிமருந்துச் சட்டத்தின் படியான 10 வருட தண்டனையை அவர் முடிக்கவில்லை.  அதனால், மத்திய அரசு எழுத்துபூர்வமான உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே அவர் விடுதலை செய்யப் பட முடியும். இது இரண்டாவது பிரிவு.

11ம் ஆண்டில் அவரை மாநில அரசு விடுதலை செய்ய மத்திய அரசின் அனுமதி வேண்டுமா  என்றால், மத்திய அரசை கலந்தாலோசித்தால் மட்டும் போதும். ஏனென்றால், மத்திய அரசின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மை.   ஆனால் மத்திய அரசு சம்பந்தப்பட்ட வெடிமருந்துச் சட்டத்தின் கீழ் அவரின் தண்டனைக் காலம் முடிவடைந்து விட்டது. அதனால், மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. ஆனால், அதே நேரத்தில் மத்திய அரசிடம் கலந்தாலோசனை செய்ய வேண்டும். இது முதல் பிரிவு.

ஏன் மத்திய அரசிடம் கலந்தாலோசனை செய்ய வேண்டும் என்று இப்படி ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டதென்றால், மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளில் உள்ளவர்களை மாநில அரசு விடுதலை செய்து விட்டால், மத்திய அரசுக்கு எதுவுமே தெரியாமல் போய் விடக்கூடாது என்பதற்காகவே, இந்த பிரிவு.

இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.  ஒருவர் தபால் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்.  அவர் போலி நிதி நிறுவனம் நடத்தி மாட்டிக் கொள்கிறார்.  அவர் மீது மாநில அரசு  இந்திய தண்டனைச் சட்டம் 420ன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்கிறது.  அவருக்கு 7 ஆண்டுகள் தண்டனை என்று வைத்துக் கொள்வோம்.  அவரை மாநில அரசு 5 ஆண்டுகளில் விடுதலை செய்ய முடியுமா என்றால் முடியும். இந்த நேர்விலும், மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும்.  ஏன் என்றால், அவர் மத்திய அரசு ஊழியர்.   கலந்தாலோசனை மட்டுமே போதும்.   மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என்பதே இங்கு முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியது.

ஒருவர் பாஸ்போர்ட் மோசடி செய்து மாட்டிக் கொள்கிறார்.  அவர் மீது சென்னை மாநகர காவல்துறை பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்கிறது.  அவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை என்று வைத்துக் கொள்வோம்.   அவரை மாநில அரசு விடுவிக்க முடியுமா என்றால், முடியவே முடியாது.  மாநில அரசு அவர் மீது வழக்கு பதிவு செய்திருந்தாலும், பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட அவரை, மத்திய அனுமதி இல்லாமல் விடுவிக்க முடியாது.   இதுதான் சட்ட நிலைமை.

இப்போது ராஜீவ் வழக்குக்கு வருவோம்.   நளினி உள்ளிட்டோர் என்னென்ன சட்டத்தில் தண்டிக்கப்பட்டுள்ளார்கள் தெரியுமா ?

வெடிபொருட்கள் சட்டம்

ஆயுதச் சட்டம்

பாஸ்போர்ட் சட்டம்

வெளிநாட்டவர் சட்டம் (Foreigners Act)

வயர்லெஸ் மற்றும் டெலிக்ராஃப் சட்டம்

இது அத்தனையும் மத்திய அரசின் ஆளுகைக்குக் கீழ் வரும் சட்டப் பிரிவுகள்.  இப்போது ஜெயலலிதா எப்படி இவர்களை மத்திய அரசின் அனுமதி இல்லாமல் விடுவிக்க முடியும் ?  மத்திய அரசின் அனுமதி இல்லாமல் விடுதலை செய்ய முடியாதுதானே ?  ஜெயலலிதா தவறிழைத்து விட்டாரா ?

மேற்கூறிய சட்டப்பிரிவுகளுக்கு அதிகபட்ச தண்டனை எத்தனை ஆண்டுகள் தெரியுமா ?  10 ஆண்டுகள்.   வெளிநாட்டவர் சட்டம், பாஸ்போர்ட் சட்டம், வயர்லெஸ் சட்டத்துக்கெல்லாம் அதிகபட்ச தண்டனை 2 ஆண்டுகள்.

நளினி உள்ளிட்டோர் எத்தனை ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள் ?  23 ஆண்டுகள்.   பத்து ஆண்டுகளில் மேற்கூறிய அனைத்து சட்டங்களுக்கான தண்டனையும் முடிந்து விட்டது.   தற்போது நளினி உள்ளிட்டோருக்கு எஞ்சியிருப்பது, கூட்டுச் சதி எனப்படும் 120-B மற்றும் கொலைக்கான 302 மட்டுமே.   தடா சட்டம் இந்த வழக்குக்கு பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.  120-B மற்றும் 302 பிரிவுகளின் கீழ் நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்டோர் தண்டிக்கப்படாமல் இருந்திருந்தால், இந்நேரம் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள்.  433A என்ற பிரிவின் கீழ் ஒரு ஆயுள் தண்டனை கைதி 14 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலை செய்யக்கூடாது.  நளினி உள்ளிட்டோர் 23 ஆண்டுகளை முடித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, பிரிவு 435ன் படி, மாநில அரசுக்கு உள்ள ஒரே தடை, இந்த வழக்கை சிபிஐ விசாரித்த காரணத்தால், மத்திய அரசோடு "கலந்தாலோசிக்க வேண்டும்" என்பது மட்டுமே.  இது வெறும் ஆலோசனை மட்டுமே என்பதை ஏற்கனவே பார்த்தோம்.    மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என்பதன் உண்மையான பொருள், தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதே.  நிச்சயமாக, மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல.  இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை பார்த்தோம்.

இதைத்தான் ஜெயலலிதா செய்திருக்கிறார்.   குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432ன் கீழ் விடுதலை செய்தால், பிரிவு 435ன் கீழ் மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும்.

அரசியல் அமைப்புச் சட்ட உறுப்பு 161ன் கீழ் மாநில அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளது ?

161. Power of Governor to grant pardons, etc, and to suspend, remit or commute sentences in certain cases The Governor of a State shall have the power to grant pardons, reprieves, respites or remissions of punishment or to suspend, remit or commute the sentence of any person convicted of any offence against any law relating to a matter to which the executive power of the State extends.

இந்த உறுப்பின்படி, மாநில ஆளுநருக்கு, மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட வழக்குகளில், தண்டனைக் குறைப்பு, தண்டனை ரத்து, உள்ளிட்ட அதிகாரங்கள் உண்டு.

மாநில ஆளுனர் எடுக்கும் முடிவு, அமைச்சரவையின் பரிந்துரைக்குட்பட்டது.   இந்த அதிகாரத்தின்படி, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை, இரண்டு ஆண்டுகள் கழித்துக் கூட விடுதலை செய்யலாம்.  இது மாநில அரசின் முழு அதிகாரம்.  இதில் தலையிட நீதிமன்றத்துக்குக் கூட உரிமை இல்லை.  

இது மாநில அரசின் பிரத்யேக அதிகாரம் என்று ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, மாறுராம் என்ற வழக்கில் 1980ம் ஆண்டிலேயே தீர்ப்பளித்துள்ளது. குற்றவியர் நடைமுறைச் சட்டப் பிரிவு 433Aன் படி ஒருவரை 14 ஆண்டுகள் கழித்த பிறகே விடுதலை செய்ய முடியும்.  ஆனால் அரசியல் சட்டப் பிரிவு 161 மற்றும் 72ல் எப்போது வேண்டுமானாலும் விடுதலை செய்யலாம் என்று இருக்கிறதே என்ற அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஒய்.வி.சந்திரசூட், பி.என்.பகவதி, ஃபைசாலி சையத் முர்தாஸா மற்றும் ஏ.டி.கோஷல் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, தங்கள் தீர்ப்பில்,

vrkrishnaiyer

வி.ஆர்.கிருஷ்ணய்யர்

Doubtless, the President of India under Art. 72 and the State Government under Art. 161 have absolute and unfettered powers to grant pardon, reprieves, remissions, etc. This power can neither be altered, modified or interfered with by any statutory provision. But, the fact remains that higher the power, the more cautious would be its exercise. This is particularly so because the present enactment has been passed by the Parliament on being sponsored by the Central Government itself. It is, therefore, manifest that while exercising the powers under the aforesaid Articles of the Constitution neither the President, who acts on the advice of the Council of Ministers, nor the State Government is likely to overlook the object, spirit and philosophy of s. 433A so as to create a conflict between the legislative intent and the executive power. It cannot be doubted as a proposition of law that where a power is vested in a very high authority, it must be presumed that the said authority would act properly and carefully after an objective consideration of all the aspects of the matter. So viewed, I am unable to find any real inconsistency between s. 433A and Articles 72 and 161 of the Constitution of India as contended by the petitioners.

மாநில ஆளுநருக்கு அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 161 கீழும், குடியரசுத் தலைவருக்கு பிரிவு 72ன் கீழும், தண்டனையைக் குறைக்க, ரத்து செய்ய, மன்னிக்க அளவில்லாத அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மையே.  இந்த அதிகாரத்தை, எந்த சட்டத்தாலும், விதிகளாலும், மாற்றவோ, குறைக்கவோ, தலையிடவோ முடியாது.  எவ்வளவு அதிகமான அதிகாரம் உள்ளதோ, அந்த அளவுக்கு, இதை கவனமாகவும் பயன்படுத்த வேண்டும்.  ஏனென்றால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பிரிவு (433A) மத்திய அரசால் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.  ஆகையால் அரசியல் அமைப்புச் சட்ட உறுப்புகளின் கீழ், அமைச்சரவையின் பரிந்துரையின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கும் குடியரசுத் தலைவரோ, மாநில ஆளுனரோ, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 433Aன் நோக்கத்தையும், உணர்வையும் புரிந்து கொண்டு, அதிகார முரண் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். எந்த அமைப்பிடம் உச்சபட்ச அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ, அந்த அமைப்பு, அந்த அதிகாரத்தை, கவனமாகவும், எல்லா கோணங்களையும் கணக்கில் கொண்டு, அந்த அதிகாரத்தை பயன்படுத்தும் என்றும் ஊகிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 433A மற்றும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் முரண் உள்ளது என்பதை ஏற்பதற்கில்லை.

இது ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தீர்ப்பு. இத்தீர்ப்பு இன்று வரை மாற்றப்படவில்லை. இதுதான் இன்றைய சட்டம்.

ஜெயலலிதா அவசரப்பட்டு விட்டார், அவசரப்படாமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால், இவர்கள் இந்நேரம் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் என்று முதலைக்கண்ணீர் வடிக்கும் கருணாநிதி 2008ம் ஆண்டு என்ன செய்தார் தெரியுமா ?

"பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகச் சிறைச் சாலைகளில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்களில் 15.9.2008 அன்று 7 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துள்ளவர்களுக்கும், 60 வயதும் அதற்கு மேலாகவும் வயதுள்ள 5 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துள்ளவர்களுக்கும் அரசு நிர்ணயித்துள்ள விதிகளின்படி, விடுதலை அளிப்பதென ஆளுநர் ஒப்புதல் பெற்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தின் பல்வேறு சிறைகளிலிருந்தும் 22 பெண் கைதிகள் உட்பட 1405 ஆயுள் தண்டனைக் கைதிகள் 15.9.2008 அன்று விடுதலை செய்யப்படுவார்கள்"

DSC_9069

இது தமிழக அரசு 12.09.2008 அன்று வெளியிட்ட அறிவிப்பு.  வெறும் ஏழே ஆண்டுகள் சிறைவாசம் முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 433Aவுக்கு எதிராக, கருணாநிதி அன்று விடுதலை செய்தார்.  இதற்கு சுவையான பின்னணி இருக்கிறது.  1405 கைதிகள் விடுதலை செய்யப்பட்ட சமயத்தில் வந்த ஒரு கட்டுரையை பார்ப்போம்

"மேகச் சிறை கிழித்து மேலெழும்பும் `தியாகச்’ சூரியனே!’, `மருதுவை எங்களுக்கு மீட்டுத்தந்த மகத்தான தலைவா!’ என்பது போன்ற போஸ்டர்கள் மதுரையில் அண்மையில் அமளிதுமளிப் பட்டன.

“மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனைத் தெரியும்.. ஆனால் யார் இந்த மருது? அந்த மருதுவை மீட்டவர் யார்?” என்றெல்லாம் மதுரை மக்கள் குழம்பிக் கொள்ளவில்லை. மருது என்பவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் `உள்ளே’ சென்று தற்போது சிறை மீண்டிருப்பவர்களில் ஒருவர் என்பது மதுரை மக்களுக்கு நன்றாகவே தெரியும். மருதுவை வாழ்த்தி வரவேற்று அச்சடிக்கப்பட்ட சில போஸ்டர்களில் அவருக்கு `நல்லமருது’ என்று அமர்க்களமான அடைமொழியும் தரப்பட்டிருந்தது.

அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏழாண்டு சிறைத்தண்டனை முடித்த கைதிகளை விடுவிக்க அரசு உத்தரவிட்டது. அந்த ஹோதாவில் லீலாவதி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த மருது, சோங்கு முருகன், மீனாட்சி சுந்தரம் ஆகியோரும் விடுதலையாகி உள்ளனர். இவர்களது விடுதலையைக் கொண்டாடும் விதத்தில்தான் மதுரை முழுக்க இப்படி போஸ்டர்கள். இதில் நாம் நுழையும் முன்னால், 1997-ல் மதுரையை உலுக்கிய லீலாவதி படுகொலையை நம் மனக்கண் முன் ஒருமுறை ஓடவிட்டுக் கொள்வோமே!

மதுரையில் கைத்தறி நெசவுத் தொழிலை மட்டுமே நம்பி வாழும் சௌராஷ்டிரா சமூகத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் லீலாவதி. வறுமை காரணமாக பத்தாவது வரை மட்டுமே படித்தவர் இவர். தன் இருபதாவது வயதில் ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினரான குப்புசாமி என்பவரைக் கைப்பிடித்தார் லீலாவதி. அதுவரை தினமும் 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதிக்கொண்டிருந்த லீலாவதியை மெல்ல பொதுவுடைமைப் பாதைக்குத் திருப்பினார் கணவர்.

கணவரின் வழிகாட்டலால் கைநெசவுத் தொழிலாளர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் போன்றவற்றின் உறுப்பினராக மாறிய லீலாவதி, 1987-ல் சி.பி.எம். கட்சியின் உறுப்பினர் ஆனார். அதன்பின் மாநகர் மாவட்டக்குழு உறுப்பினர், இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர், மாவட்டப் பொருளாளர் என பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன.

leelavathi

தோழர் லீலாவதி

குப்புசாமி – லீலாவதி தம்பதியருக்கு கலாவதி, துர்கா, டான்யா என மூன்று மகள்கள். மதுரை வில்லாபுரத்தில் 32 ஒண்டுக்குடித்தனங்கள் கொண்ட ஒரு குடியிருப்பில் ஒரே ஓர் அறையில் இந்த ஐவரைக் கொண்ட குடும்பம் வாழ்ந்தது. அறையின் நடுவே நெசவுத்தறி. அதைச் சுற்றி பெட்டி படுக்கைகள், அடுப்பு, சமையல் பாத்திரங்கள். இரவில் தறிக்குக் கீழே தூக்கம். லீலாவதி நெசவு செய்வார். குப்புசாமி எவர்சில்வர் பட்டறைத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில்தான் வந்தது மதுரை மாநகராட்சித் தேர்தல். வில்லாபுரம் பகுதி வேட்பாளராக லீலாவதியை கட்சி நிறுத்தியது. மக்கள் செல்வாக்கால் 59-வது வார்டில் அமோக வெற்றி பெற்றார் லீலாவதி. வில்லாபுரம் பகுதிக்கு எப்படியாவது குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடைத் திட்டத்தைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று அதிகாரிகளுடன் மல்லுக்கட்டினார் லீலாவதி. அந்த வார்டில் 58 இடங்களில் குடிநீர் குழாய் பதிக்கப்பட வேண்டும் என்றார். இது அந்தப் பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்த சிலரை கொதிநிலைக்குக் கொண்டு சென்றது.

1997-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி! அன்று காலையில் வழக்கம்போல மாநகராட்சி மண்டல அலுவலகம் சென்று விட்டு வீடு திரும்பிய லீலாவதி, தனது மூன்று மகள்களுக்கும் காபி தயாரித்துக் கொடுத்தார். பின்னர் காலை உணவு தயாரிப்பதற்காக எண்ணெய் வாங்க, பாட்டிலை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள பலசரக்குக் கடைக்குக் கிளம்பினார். அவர் வீட்டை விட்டு வெளியே வந்ததுதான் தாமதம். ஒரு கொலைகாரக் கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டு அரிவாள்களால் சரமாரியாக வெட்டியது. சம்பவ இடத்திலேயே சடலமானார் லீலாவதி.

இந்தக் கொலை தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த முத்துராமலிங்கம், மருது, சோங்கு முருகன், பாம்பு முருகன், மீனாட்சி சுந்தரம், அண்ணாதுரை ஆகியோர் கைதானார்கள். இவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. இதில் முத்துராமலிங்கம் இறந்து விட்டார். பாம்பு முருகன் விடுதலையாகிவிட்டார். இந்த நிலையில்தான் தற்போது அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருது, சோங்கு முருகன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் இனிதே விடுதலையாகி உள்ளனர். பரோலில் சென்றபோது விதிகளை மீறியதால் அண்ணாதுரை மட்டும் விடுதலை செய்யப்படவில்லை.

இந்த மூன்று பேரின் விடுதலை, சி.பி.எம். கட்சியினரைக் கோபத்தில் முகம் சிவக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ள சி.பி.எம். கட்சி மாநிலச் செயலாளர் என். வரதராஜன், அந்தக் கடிதத்தில், `மக்கள் பிரச்னைக்காகப் போராடியதன் காரணமாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கொலை செய்யப்பட்டவர் லீலாவதி. அவரது வழக்கில் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட மூவர் விடுதலை செய்யப்பட்டது வேதனைக்குரியது. இந்த நிகழ்வு எங்களது கட்சித் தோழர்களின் மனங்களைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே, இந்த மூவரின் தண்டனைக் குறைப்பு உத்தரவை அரசு ரத்து செய்யவேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த முதல்வர் கலைஞர், `லீலாவதி கொலை வழக்கு விசாரணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யாரை வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்று கூறியதோ அவரையே அரசு நியமித்தது. அந்த வகையில் தன் கட்சியினர் தண்டிக்கப்பட தி.மு.க. அரசு காரணமாக இருந்தது. தற்போது அண்ணா பிறந்தநாளையொட்டி விடுதலை செய்யப்பட்ட அனைவரும் ஏழாண்டு தண்டனையை நிறைவு செய்தவர்கள்’ எனக் கூறியிருந்தார்.

மருது, சோங்கு முருகன், மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் விடுதலை பற்றி லீலாவதி குடும்பத்தினர் என்ன நினைக்கிறார்கள்? இதை அறிந்து கொள்ள அவரது குடும்பத்தினரை நாம் சந்திக்க முயன்றோம். லீலாவதியின் ஒரு மகள் அரசு ஊழியராகப் பணியாற்றும் நிலையில், இன்னொரு மகள் சென்னையில் ஒரு மருத்துவ மையத்தில் வேலை செய்கிறார். ஒரு மகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பப் பிரச்னை காரணமாகத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், லீலாவதியின் கணவர் குப்புசாமியை அவர் வேலை செய்யும் பாத்திரப் பட்டறையில் நாம் சந்தித்தோம். ஆரம்பத்தில் பேசவே தயங்கிய அவர் பின்னர் பேசினார்.

“அந்த மூன்று பேரையும் சட்டப்படி விடுவித்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கு நான் என்ன சொல்ல முடியும்? அதற்கு மேல் நான் பேசவும் கூடாது. பத்திரிகைகள்தான் பேச வேண்டும். லீலாவதியை நாடு முழுவதும் கொண்டு சென்றது பத்திரிகைகள்தானே? இது சமூகப்பிரச்னை. இதில் நான் ஏதாவது சொல்லி, அதைத் தனிப்பட்ட பிரச்னையாக மாற்ற விரும்பவில்லை. அதுமட்டுமில்லாமல், பாதிக்கப்பட்ட தரப்பில் இருந்து கருத்துச் சொல்வதும் சரியாக இருக்காது” என்றவர், “உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு, அதன்படி பொறுப்புக்கு வந்தவர்களில் ஒருவர் லீலாவதி. அப்படி பொறுப்புக்கு வந்து இந்திய அளவில் முதலில் பலியானவரும் அவர்தான். மக்கள் சேவையில் ஈடுபடும் பெண்களுக்கு அச்சுறுத்தல் இருக்கக்கூடாது. அப்படியிருந்தால், பெண்கள் அதிகாரத்துக்கு வரத் தயங்குவார்கள்” என்றார் அவர்.

குடும்பச் சூழல் குறித்துக் கேட்டபோது.. “பித்தளைப் பாத்திரம் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். பொருளாதாரரீதியாக எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார் கசப்பான புன்னகையுடன்.

`மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த விடுதலை தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப் போகிறதா?’ என அக்கட்சியின் நகரச் செயலாளர் அண்ணாதுரையிடம் கேட்டபோது.. “எங்கள் கருத்தை மாநிலச் செயலாளருக்குத் தெரிவித்திருக்கிறோம். மாநில நிர்வாகிகள்தான் முடிவெடுப்பார்கள்” என்றார் அவர்.

மக்களுக்காகப் பாடுபட்ட லீலாவதி கொலை சம்பவத்தை மதுரை மக்கள் முற்றாக இன்னும் மறக்காத நிலையில், இன்னொரு பக்கம் சிறை மீண்டவர்களை வாழ்த்தி வரவேற்கும் வண்ணமயமான போஸ்டர்கள் என்பது கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது.

திமுகவுடன் கூட்டணி அமைத்து கும்மியடித்த கம்யூனிஸ்ட்கள் இந்த விசயத்தில் என்ன செய்வார்கள்? ஒன்றுமே செய்ய முடியாது. மதுரையின் அதிகாரம் முதல் அமைச்சரை விட மிகவும் பெரிது."

இதுதான் கருணாநிதி.  கருணாநிதிக்கு, அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 161ன் கீழ் உள்ள அதிகாரங்கள் அனைத்தும் தெரியும்.  அந்த அதிகாரத்தினை பயன்படுத்தித்தான், தன் மகனுடைய நண்பர்கள், அடியாட்களை விடுவிப்பதற்காக 1405 பேரை ஒரே நாளில் விடுவித்தார்.  ஆனால், நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்யாதது மட்டுமல்ல, ஏப்ரல் 2000த்தில், நளினியை தவிர்த்து மற்ற மூவரையும் தூக்கிலிடலாம் என்று தீர்மானம் இயற்றியவர்தான் இந்தக் கருணாநிதி.  மூவர் தூக்கு விவகாரம் தொடர்பாக சவுக்கு தளத்தில் வந்த கட்டுரையின் இணைப்பு.

தற்போது ஜெயலலிதா எடுத்துள்ள முடிவு, முழுக்க முழுக்க சரியான முடிவு.  சட்டரீதியான முடிவு.

இந்த முடிவை கருணாநிதி இன்னும் 100 வருடங்கள் ஆகியிருந்தாலும் எடுத்திருக்க மாட்டார்.   இதன் காரணமாகத்தான் ஜெயலலிதாவுக்கு நன்றிகள் குவிகின்றன.  வாழ்த்துக்கள் குவிகின்றன.

1496756_612032922201662_1075748593_n

1959522_10201604448259367_1331522309_n

இந்த நன்றிகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் முழுமையாக தகுதியானவர் செல்வி ஜெயலலிதா.  23 ஆண்டுகள் வெளியுலகைப் பார்க்காமல் சிறையில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும், இந்த முடிவின் தாத்பரியம் என்னவென்று.  வெளியிலிருந்து கூக்குரலிடுபவர்களுக்குப் புரியாது.  நளினி சிறையிலிருந்து முன் விடுதலை செய்யப்பட்டால், அவர் குடியிருக்கும் பகுதியில் இருக்கும் முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு ஆபத்து என்று அறிக்கை அளித்தவருக்கும், நளினி அறையிலிருந்து செல்போனை கைப்பற்றியதாக பொய் வழக்கு போட்டு, நளினியை நிரந்தரமாக சிறையில் இருக்க ஏற்பாடு செய்தவருக்கும் அந்த வேதனை புரியாது. 

nalini-1

எழுவர் விடுதலை தொடர்பாக ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை விமர்சித்து கருணாநிதி இப்படிக் கூறினார்.

முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்

திறப்பா டிலாஅ தவர்"

செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.

கருணாநிதி அவர்களே... ஜெயலலிதாவுக்கு நீங்கள் சொன்ன குறள் பொருத்தமானதல்ல...

இந்தக் குறள்தான் பொருத்தமானது.

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.

எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.

விலகாத திரை.

$
0
0

சங்கர சுப்பு.  மனித உரிமைப் போராளி.  மனித உரிமைகள் எங்கே மீறப்பட்டாலும் அதற்காக குரல் கொடுப்பவர்.  பல நக்சலைட்டுகளை போலி என்கவுன்டர்களில் இருந்து காப்பாற்றியவர் என்று பல்வேறு புகழுக்கு சொந்தக்காரர் சங்கரசுப்பு.

தொடக்கத்தில் எல்லோருமே நன்றாகத்தான் தொடங்குகிறார்கள்.  அப்படித்தான் சங்கரசுப்புவும் தன் வழக்கறிஞர் தொழிலை தொடங்கினார்.   ஆனால், பெரிய வழக்குகளில் வரும் பெரும் பணம், அவரை நாளடைவில் பணத்தாசை பிடித்த மனிதராக மாற்றியது.  பணமும் புகழும் வந்து சேரத் தொடங்கியதும், சங்கர சுப்பு, நீதிபதிகளை மிரட்டி தனக்கு வேண்டிய உத்தரவுகளை பெரும் அளவுக்கு மாறிப்போனார்.  பல நீதிபதிகள் தனிப்பட்ட முறையில் பேசிக்கொள்கையில், சங்கரசசுப்பு நீதிமன்றத்தில் நடந்து கொள்ளும் முறை அவமானகரமாக இருக்கிறது, கோபப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார் என்று வருத்தப்பட்டிருக்கிறார்கள்.

தொடக்க காலத்தில் மனித உரிமை வழக்ககளில் ஆஜராகி புகழை சம்பாதித்த சங்கரசுப்பு,   பின்னாளில் மனித உரிமை வழக்குகளில் ஆஜராவதை, தன்னுடைய இமேஜுக்காக வைத்துக் கொண்டு, பசையுள்ள வழக்குகளில் ஆஜரவாதில் மிகவும் கவனம் செலுத்தத் தொடங்கினார் சங்கரசுப்பு.  இப்படி பணமும் பசையுமாக சங்கரசுப்புவின் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தபோதுதான், அவர் மகன் சதீஷ் குமார் திடீரென்று காணாமல் போகிறார்.

sankara-subbu-satish-kumar

சதீஷ் குமார் காணாமல் போனதும், திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.  இரண்டு நாட்களுக்கு பிறகு, சதீஷ் குமாரின் பைக் ஐசிஎப் ஏரியின் அருகே கிடைக்கிறது. அதற்கு சில நாட்களுக்குப் பிறகு, சதீஷ் குமாரின் உடல், அழுகிய நிலையில், ஐசிஎப் ஏரியிலிருந்து கண்டெடுக்கப்படுகிறது.  சாதாரண நபராக இருந்தால், மாநில காவல்துறை விசாரிக்கலாம்.  மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் வழக்கல்லவா ? உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. 20.06.2011 அன்று வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது.

சங்கரசுப்புவுக்கு இருக்கும் புகழ் காரணமாக, அனைத்து வழக்கறிஞர்களும் போராட்டத்தில் இறங்குகிறார்கள்.  நீதிபதிகளும், கருணையோடு வழக்கை அணுகுகிறார்கள்.   சிபிஐ அமைப்பில் இருந்த ஏறக்குறைய அத்தனை புலனாய்வு அதிகாரிகளும், இந்த வழக்கின் விசாரணைக்காக களமிறக்கப்படுகிறார்கள்.  இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, நீதிமன்றம் இந்த வழக்கின் முன்னேற்றம் என்னவென்று கேட்டறிகிறது.  உத்தரவுகள் பிறப்பிக்கிறது.   இந்த வழக்கில் என்ன உதவிகள் வேண்டுமென்றாலும் கேளுங்கள், உங்களுக்கு உடனே செய்து தருகிறோம்.  என்ன வசதிகள் வேண்டும், எந்த புலனாய்வு அதிகாரிகள் வேண்டும் என்றாலும் தருகிறோம் என்று நீதிபதிகள் கூறுகின்றனர்.

புலன் விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது.    ஒரு மகனை பறிகொடுத்த பெற்றோர் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பார்கள் என்பதை புரிந்து கொண்ட சிபிஐ அதிகாரிகள், விசாரணையை முழுமையான தீவிரத்தோடு நடத்துகிறார்கள்.

சங்கரசுப்புவும் அவர் குடும்பத்தினரும், இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், இந்த விசாரணையை திசை திருப்புவதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறார்கள்.  சதீஷ் குமார் இறந்த ஒரே வாரத்தில், சங்கரசுப்பு தன் வீட்டுக்கு புதிதாக வெள்ளையடிக்கிறார்.   வீட்டில் இருந்த படுக்கை விரிப்புகள் அத்தனையும் புதிதாக மாற்றப்படுகின்றன.   ஒவ்வொரு கட்டத்திலும், போலீசாரின் விசாரணையை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சிகள் செய்கிறார்.

விசாரணையின் தொடக்கம் முதலாக, சங்கரசுப்பு சொல்லி வந்த குற்றச்சாட்டு, மனித உரிமை போராட்டத்தின் பகுதியாக காவல்துறைக்கு எதிராக தொடர்ந்து வாதாடி வந்ததால், காவல்துறையினர் சில ரவுடிகளின் துணையோடு, தன் மகனை கடத்திக் கொலை செய்து விட்டார்கள் என்பது.   07.06.2011 அன்று சதீஷ் குமார் காணாமல் போனாலும், 13.06.2011 அன்றுதான் சதீஷ் உடல் கண்டுபிடிக்கப்படுகிறது. 13.06.2011 அன்றுதான் முதன் முறையாக காவல்துறை ஆய்வாளர்கள் ரியாஸுத்தீன், கண்ணன் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் தன் மகனை கடத்திக் கொலை செய்து விட்டார்கள், அவர்களை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் சங்கரசுப்பு.  இதற்கு என்ன ஆதாரம் என்றால், ஒரு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்த அதிகாரிகளுக்கு எதிராக வாதாடி 25 ஆயிரம் அபராதம் விதிக்க வழி செய்திருக்கிறார் சங்கரசுப்பு.  இதனால், அவர்கள் சங்கரசுப்பு மீது வன்மம் கொண்டு, அவர் மகனை கடத்திக் கொலை செய்து விட்டார்கள் என்பதே.  இந்த அடிப்படையில் இவர்களை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரினார் சங்கரசுப்பு.  இவர் சொன்னதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, உண்மை கண்டறியும் சோதனை நடத்தினார்கள்.  அந்த சோதனையில், அவர்கள் உண்மையை மறைக்க முயற்சி செய்யவில்லை என்பது தெரிய வந்தது.  இந்த விபரங்கள் சங்கரசுப்புவுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.  ஆனால், இதை காதில் வாங்கிக் கொள்ளாமல் சங்கரசுப்பு தொடர்ந்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.  இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வழக்கறிஞர்களையும் தூண்டி விட்டு, பல்வேறு போராட்டங்களை நடத்தினார்  சங்கரசுப்பு.   இதற்காக மூன்று நாட்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.  ஒவ்வொரு முறை இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போதும், 200-க்கும் குறையாத வழக்கறிஞர்களை நீதிமன்றத்துக்குள் குழும வைப்பார் சங்கரசுப்பு. கிட்டத்தட்ட நீதிபதிகளை மிரட்டுவது போல.

 579646_105188679665808_1960378276_n

சங்கரசுப்புவின் மகன் சதீஷ் குமார், மன நிலை சரியில்லாத காரணத்துக்காக  தி.நகரில் உள்ள ராஜு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துள்ளார்.  அவருக்கு அங்கே எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த விபரங்களையெல்லாம் சங்கரசுப்பு, காவல்துறைக்கு தெரியாமல் மறைத்தார். ஆனாலும், விசாரணையில் இந்த விவகாரங்கள் வெளியே வந்தன.  மகனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாத காரணத்தால், காவல்துறை ஆய்வாளர் சபாபதி என்பவரின் உதவியை நாடி, அவர் நான்கைந்து காவலர்களை அனுப்பி, குண்டுகட்டாக போலீஸ் ஜீப்பில் போட்டு அழைத்து சென்றுள்ளார்கள்.

அடுத்ததாக, சங்கரசுப்பு சொன்ன குற்றச்சாட்டு, தமிழர் நீதிக் கட்சித் தலைவர் சுப.இளவரசன் தன் மகனை கொலை செய்திருக்கலாம் என்பது.  சுப இளவரசன், சங்கரசுப்பு மகனின் மரணத்துக்கு வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றிருக்கிறார்.  அவர் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்படவில்லை என்பது தெரிய வருகிறது.

அடுத்ததாக சங்கரசுப்பு, ராஜீவ் காந்தி நகரில் ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது.  அந்த வீட்டில் வைத்துதான் என் மகனை கொலை செய்துள்ளார்கள் என்று கூறினார்.  சங்கரசுப்பு முன்னிலையிலேயே அந்த வீடு சோதனையிடப்பட்டது.  அந்த வீடு குழந்தைவேலு என்பவருக்கு சொந்தமானது என்றும், அந்த வீட்டில் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதும், சங்கரசுப்பு மகனுக்கும், அந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரிய வந்தது.

அதே இடத்தில் குரு ஸ்டோர்ஸ் என்ற மளிகை கடையை வைத்து நடத்துபவர், சதீஷ் குமார் காணாமல் போன அன்று வண்டியை தள்ளிச் செல்வதை பார்த்ததாகவும், அவரை கைது செய்து விசாரித்தால் உண்மை தெரிய வரும் என்றும் கூறுகிறார்.  அவர் சொன்னபடி, அந்த நபரை சென்று விசாரித்ததில் அந்த தகவல் முழுக்க முழுக்க பொய்யானது என்று தெரிய வருகிறது.  உங்களுக்கு யார் இந்தத் தகவலை சொன்னது என்று கேட்டால், சங்கரசுப்பு பாக்கியராஜ் என்ற வழக்கறிஞர் சொன்னதாக கூறுகிறார்.  பாக்கியராஜை அழைத்து விசாரித்தபோது, அவர் சங்கரசுப்புவின் ஜுனியராக 1995 முதல் 2004 வரை வேலை செய்தார் என்பதும், பின்னர், அவர் பண விவகாரத்தில் சண்டை ஏற்பட்டு விலகி விட்டார் என்றும், தெரிய வருகிறது.  தனது பழைய பகையை மனதில் வைத்தே, சங்கரசுப்பு இந்தத் தகவலை சிபிஐ அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார் என்பதும் தெரிய வந்தது.

அடுத்ததாக, சங்கரசுப்புவிடம் ஜுனியராக பணியாற்றிய மற்றொரு வழக்கறிஞர் சந்திரசேகர். ஒரு சூழலில், சங்கர சுப்பு குடும்பத்தினர் அவரை அடித்து விடுகின்றனர்.  அதனால், அவர் அதை மனதில் வைத்து பழிவாங்கி இருக்கக்கூடும் என்று ஒரு கதை சொல்லப்படுகிறது.  இதையும் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.  விசாரணையில், அதுவும் உண்மையல்ல என்பது தெரிய வருகிறது.  சங்கரசுப்பு குடும்பத்தினரிடம் அடிபட்ட வழக்கறிஞர் சந்திரசேகர், அந்த சம்பவத்துக்குப் பின், சேலத்துக்கு சென்று விட்டார் என்பதும், அவர் சென்னைக்கு திரும்பவேயில்லை என்பதும் தெரிய வருகிறது.

சென்னை, புழல் சிறையில் உள்ள ஒரு கைதி, தனக்கு சதீஷ் குமாரை கொன்றது யார்? என்று தெரியும் என்று கூறுகிறார்.  அதிகாரிகள் அவரை விசாரித்ததும், தண்டனை சிறையில் உள்ள பொழிலன் என்பவரின் வழக்கை சங்கரசுப்பு நடத்தியதாகவும், அவருக்கு அந்த வழக்கில் தண்டனை கிடைத்ததாகவும், அதன் காரணமாக அவர் பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலையை செய்திருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கிறார்.  அந்த நபர் யாரென்றால், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தலைவர் பொழிலன்.  அவர் கொடைக்கானல் டிவி டவர் குண்டு வெடிப்பு வழக்கில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுள் தண்டனை பெற்றவர்.  அந்த தகவல் முழுக்க முழுக்க பொய் என்பதும் தெரிய வருகிறது.  விசாரணைக் கைதியிடம் ஏன் இப்படிப் பொய் சொன்னாய்? என்று கேட்டதற்கு, சங்கரசுப்புதான் அப்படி சொல்லச் சொன்னதாக கூறினார்.

வழக்கு விசாரணை தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சங்கரசுப்பு, ஒரு வோடபோன் சிம் கார்டை எடுத்து சிபிஐ அதிகாரிகளிடம் தருகிறார்.  அந்த சிம் கார்டு, தனது மகன் சதீஷ் குமாரின் வண்டியில் இருந்தததாக கூறுகிறார்.  சதீஷ் குமாரின் பைக், கண்டெடுக்கப்பட்ட பிறகு, திருமங்கலம் காவல் நிலைய போலீசாரால், முழுமையாக சோதனை செய்யப்படுகிறது.  அதன் பின் சிபிஐ விசாரணையை மேற்கொள்ளத் தொடங்கியதும், சிபிஐ அதிகாரிகளும், அந்த வாகனத்தை முழுமையாக சோதனை செய்கிறார்கள்.  இத்தனை பேர் சோதனை செய்த பிறகு கிடைக்காத ஒரு சிம் கார்டு, சங்கர சுப்பு கையில் கிடைக்கிறது.   29.08.2011 அன்று அந்த சிம் கார்டை எடுத்து சென்று சிபிஐ அதிகாரிகளிடம் கொடுக்கிறார்.  அந்த சிம்கார்டை பயன்படுத்திய நபர், தன் மகனை கொன்றிருக்கக் கூடும் என்று கூறுகிறார்.  காவல்துறை அதிகாரிகள் விசாரித்ததில், அந்த சிம்கார்ட் மல்லிகா, என்பவர் பெயரில் வாங்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த சிம்கார்டை முன்னாள் நக்சலைட் சிவலிங்கம் என்பவர் சிறையில் பயன்படுத்தியது தெரிய வருகிறது.  சிவலிங்கம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர்.   அவருக்கு வயது 74.   அவர் சிறையிலிருந்து வெளியே வந்து என்ன வேலை செய்து கொண்டிருந்தார் தெரியுமா ?  சங்கரசுப்பு மகனை கொலை செய்த கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கான போஸ்டர்களை தயாரித்து ஒட்டும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.  சங்கரசுப்பு சொன்னதற்காக சிவலிங்கமும் அழைத்து விசாரிக்கப்படுகிறார்.  அவர், அய்யா, நான் மார்ச் மாதம் சங்கரசுப்பு அய்யாவை அவர் வீட்டில் சென்று சந்தித்தேன். நான் அந்த சிம்கார்டை சிறையில் பயன்படுத்தியது உண்மை.  ஆனால், அந்த சிம்கார்டை வெளியில் எடுத்து வரவேயில்லை. சிறையிலிலேயே விட்டு வந்து விட்டேன் என்று கூறுகிறார்.  சிவலிங்கத்தை விசாரித்த விபரத்தை, சங்கரசுப்புவிடம் தெரிவிக்கிறார்கள்.  மனித உரிமைக்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் சங்கரசுப்பு என்ன சொன்னார் தெரியுமா ? "இப்படி விசாரிச்சா எப்படி சார் சொல்லுவான் ?  கட்டி வைச்சு அடிச்சாதான் சார் சொல்லுவான்.  என்னா விசாரிக்கிறீங்க நீங்க" என்று சங்கரசுப்பு சிபிஐ அதிகாரிகளிடம் சண்டையிட்டு வந்திருக்கிறார்.  74 வயதான ஒரு நபரை, கட்டி வைத்து அடிக்க வேண்டுமாம்.....!!!!

இதை விட ஆச்சர்யமான அதிர்ச்சி சங்கர சுப்பு சிபிஐ அதிகாரிகளிடம் சொன்ன அடுத்த விஷயம்.   தன்னோடு கூடவே இருந்து, ஏராளமான உதவிகளை செய்து வரும் வழக்கறிஞர் ரஜினிகாந்தும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கும் சேர்ந்து தன் மகனை கொலை செய்து விட்டார்கள் என்பதுதான்.  ரஜினிகாந்த் ஏற்று நடத்தும் பெரும்பாலான வழக்குகளில், நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு சங்கரசுப்புவைத்தான் அமர்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.  சதீஷ் குமார் காணாமல் போனதும், சங்கரசுப்புவின் மனைவி முதலில் ரஜினிகாந்தைத்தான் உதவிக்கு அழைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  சதீஷ் குமாரின் இறுதிச்சடங்கு செலவுகளை முழுக்க முழுக்க ஏற்றது, ஆம்ஸ்ட்ராங்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.   இந்த நிலையில்தான் சங்கரசுப்பு, ரஜினிகாந்தும், ஆர்ம்ஸ்ட்ராங்கும் சேர்ந்து தன் மகனை கொலை செய்துவிட்டார்கள் என்று சொன்னார்.   சங்கரசுப்பு எப்படிப்பட்ட மனிதர் என்பதை இப்போது ஒரளவிற்கு நன்றாக புரிந்து கொள்ள முடிகிறதா?

அடுத்ததாக சங்கரசுப்பு, காவல்துறை அதிகாரிகள் சிலர் போலீஸ் ஜீப்பில் தன் வீட்டை தொடர்ந்து கண்காணித்தார்கள் எனவே, அவர்கள்தான்  தன் மகனை கடத்திச் சென்றிருக்கக்கூடும் என்றார்.  அதையும் விசாரித்ததில், சாதாரணமாக ரோந்துக்கு வரும் காவல்துறை வாகனம் அது, அந்த இடத்தில் இரண்டு நாட்கள் நின்றிருந்தது என்பது தெரிய வந்தது.

சங்கரசுப்புவின் மனைவி, தன் மகனோடு சட்டக் கல்லூரியில் படித்த தினேஷ் குமார் என்பவர், தன் மகன் ஒரு குடிகாரன் என்று எல்லோரிடமும் பரப்பி வருவதாகவும், அவன்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.   அந்த தினேஷ் குமாரை விசாரித்ததில், சங்கரசுப்புவின் மகன் சதீஷ் குமார் குடிகாரர்தான் என்றும், ஆல் இந்தியா சுற்றுலா சென்றபோது, ஒரு க்ளாஸ் ப்ராந்தி தரவில்லை என்பதற்காக மணிகண்டன் என்வரை, அடித்து ரத்தகாயம் ஏற்படுத்தியுள்ளார் என்பதும் தெரிய வந்தது. சதீஷ் குமாரோடு அந்த டூரில் யாருமே பேசவில்லை என்றும் கூறியிருக்கிறார்.  உயர்நீதிமன்றத்தில் இருந்த கவிதா என்ற வழக்கறிஞரை, சதீஷ்குமார் பின்னாலேயே தொடர்ந்து சென்று தொந்தரவு செய்ததாகவும், அவர் தொந்தரவு பொறுக்க முடியாமல், கவிதா, பெண் வழக்கறிஞர் சங்கத்தில் புகார் செய்ததாகவும், அதன் சங்கத் தலைவர் சாந்தகுமாரி, சங்கரசுப்புவை அழைத்து விஷயத்தை சொல்லி கண்டித்ததாகவும் கூறினார்.

சங்கரசுப்புவின் மனைவி மயிலம்மாள், சிபிஐ அதிகாரிகளிடம், திலீபன் என்ற வழக்கறிஞர் சங்கரசுப்புவிடம் ஜுனியராக பணியாற்றியதாகவும், அவர்தான் தன் மகனை கொன்றிருக்க வேண்டும் என்றும் கூறினார்.  அதன் அடிப்படையில் அதை விசாரித்ததில் அது முழுக்க முழுக்க பொய் என்பது தெரிய வருகிறது.

அடுத்ததாக மயிலம்மாள், சீனிவாசன் என்ற நபர் தங்களிடம் டிரைவராக பணியாற்றியதாகவும், அவர்தான் தன் மகனை கொன்றிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.  அதை விசாரித்ததில், மாதம் 4500 ரூபாய் சம்பளத்துக்கு அந்த சீனிவாசன், சங்கர சுப்பு வீட்டில் வேலை பார்த்துள்ளார் என்றும், ஒரு முறை, சதீஷ் குமார், தேர்வில் ஃபெயிலானது குறித்து அவருடைய தாயார் மயிலம்மாவிடம் தெரிவித்ததற்காக, தன்னை அடித்து விட்டதாகவும், அதோடு தான் வேலையை விட்டு நின்று விட்டதாகவும் கூறுகிறார்.

அடுத்ததாக, தன் மகனின் வண்டியில் காஞ்சி ஹோட்டலில் தங்கியதற்கான ரசீது இருந்தது என்று ஒரு ரசீதை கொடுக்கிறார்.  அந்த ரசீது குறித்து விசாரித்ததில், சுந்தரம் என்பவர், தன் வீட்டு விசேஷத்திற்காக, அந்த அறையில் தங்கியதாக கூறுகிறார்.  அவருக்கு சங்கரசுப்பு யாரென்றே தெரியாது.   இந்த ரசீதும், திருமங்கலம் காவல் நிலையத்தினர், சிபிஐ அதிகாரிகள் கண்ணுக்கு படாமல், சங்கரசுப்பு கண்ணுக்கு மட்டும் எப்படி பட்டது என்பது மர்மத்திலும் மர்மம்.

இதையெல்லாம் விட மிகப் பெரிய மர்மம் ஒன்றை சங்கரசுப்பு திட்டமிட்டு சிபிஐ அதிகாரிகளிடம் இருந்து மறைத்தார். அது என்னவென்றால், சதீஷ் குமார் காணாமல் போவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக, EYES தனியார் புலனாய்வு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி முருகைய்யா என்பவரை, சங்கரசுப்பு, அவர் மனைவியுடன் போய்  சந்தித்து, தன் மகனை பின் தொடர ஆட்களை நியமிக்கும்படி கேட்டுள்ளார் அவரும் சம்மதித்துள்ளார்.  பின்னர் அந்த திட்டத்தை சங்கரசுப்பு கைவிட்டுவிட்டார்..  சதீஷ் குமார் காணாமல் போன 07.06.2011 அன்று, மாலை ஏழு மணிக்கு முருகைய்யாவை தொடர்பு கொண்ட, சதீஷ் குமாரின் தாயார் மயிலம்மாள், தன் மகனை உடனே பின் தொடர ஆட்களை அனுப்பும்படி கேட்கிறார்.  அவர், இரவாகி விட்டதால், ஆட்கள் யாரும் இல்லை என்று கூறி, மறுநாள் ஆட்களை அனுப்புவதாக கூறுகிறார். அதன் பின் சதீஷ் குமார் காணாமல் போய் விடுகிறார்.

தனியார் புலயாய்வு நிறுவனத்தை அணுகிய விஷயத்தை கடைசி வரை சங்கரசுப்பு சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவிக்கவேயில்லை.   இது குறித்து அவரிடம் நேரடியாக விசாரித்தபோது மழுப்பியிருக்கிறார்.  இந்த விவகாரம் சிபிஐ அதிகாரிகளுக்கு தெரிய வந்து, விஷயத்தை அறிக்கையில் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்ததும், சங்கரசுப்பு கடும் கோபமடைகிறார்.  விசாரணையை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்று பதட்டமடைகிறார்.   அந்த விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அன்று, சிபிஐ அதிகாரிகள் ஒழுங்காக விசாரிக்கவில்லை, கொலை செய்த காவல்துறை அதிகாரிகளை காப்பாற்றுகிறார்கள் என்று நீதிமன்றத்தில் பெரும் பிரச்சினை எழுப்பப்படுகிறது.  அதை விசாரித்த நீதிபதிகள் என்னதான் வேண்டும் என்று கேட்கிறார்கள்.  தமிழ்நாட்டு அதிகாரிகள் இதை விசாரித்தால், விசாரணை ஒழுங்காக நடைபெறாது அதனால் வட இந்திய அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் சங்கரசுப்பு.   வழக்கறிஞர்கள் கூட்டமாக நின்று மிரட்டியதால், வேறு வழியின்றி நீதிபதிகள், தமிழக அதிகாரிகள் ஒருவர் கூட இல்லாமல், முழுக்க முழுக்க வட இந்திய அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து, கூடுதல் டிஜிபி சலீம் அலி தலைமையில், விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளே விசாரிக்க சிரமப்படுகையில், மொழி தெரியாத வட இந்திய அதிகாரிகள் என்ன செய்வார்கள்?  இதுதான் சங்கரசுப்புவுக்கு வேண்டும்.   வட இந்திய அதிகாரிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழிக்கிறார்கள். இறுதியாக, சதீஷ் குமார் கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.  கவிதா என்ற பெண் வழக்கறிஞரை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் அவர் புகார் தெரிவித்துள்ளார்.  பின்னர் சங்கரசுப்புவிடம் ஜுனியராக பணியாற்றிய அரிஸ்டா என்ற பெண்ணுக்கும் தொல்லை கொடுத்துள்ளார்.  அவரும், சதீஷ் குமாரை கடுமையாக எச்சரித்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து சதீஷ் குமார் விலை மாதர்களிடம் செல்லத் தொடங்கியுள்ளார்.   மனநல மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று, அந்த மருந்துகளின் தாக்கத்தால் சதீஷ் குமாருக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டுள்ளது. 29.05.2011 அன்று விடியற்காலை 2.47 மணிக்கு, செக்ஸ் மருத்துவர் உபயதுல்லா பேக் என்பவருக்கு, செக்ஸ் பிரச்சினை தொடர்பாக ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார் சதீஷ் குமார்.  இது போன்ற குழப்பமான மனநிலையில், ஐசிஎப் குளக்கரையில் அமர்ந்து சதீஷ் குமார் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று ஒரு அறிக்கை அளித்து விடுகிறார்கள்.

இதையடுத்து, மீண்டும். நீதிமன்றத்தில் பிரச்சினை கிளப்புகிறார் சங்கரசுப்பு.  நீதிமன்றம், முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன், முன்னாள் மும்பை ஆணையர் சிவானந்தன் உள்ளிட்ட ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்கிறது.   இந்த புலனாய்வுக் குழு இன்னமும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த புலனாய்வுக் குழுவுக்கு மாதந்தோறும் ஆகும் செலவு 40 லட்சம் ரூபாயைத் தாண்டுகிறது.

இந்த விசாரணை தொடங்கியதிலிருந்து துளியும் அதற்கு ஒத்துழைக்காமல், விசாரணையை திசை திருப்புவதிலேயே முனைப்பாக இருந்தார் சங்கரசுப்பு என்பது நமக்கு தெளிவாக தெரிய வருகிறது.  எதற்காக இந்த விசாரணையை திசை திருப்புவதில் முனைப்பாக இருக்கிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.  இந்த விசாரணையை நீதிமன்றம் தொடர்ந்து மேற்பார்வை செய்து வருவதால், காவல்துறை அதிகாரிகளாலும் சுதந்திரமாக விசாரணையை நடத்த முடியவில்லை.  சங்கரசுப்புவின் தூண்டுதலால் வழக்கறிஞர்கள் கூட்டமாக நின்று தகராறு செய்வதால், நீதிபதிகளும் வேறு வழியின்றி, இந்த வழக்கை விசாரித்து உத்தரவு போட்டுக் கொண்டே வருகிறார்கள்.   இதனால் நீதிமன்றத்தின் நேரம் விரயம் ஆவது மட்டுமல்ல, ஒரு விசாரணை சுதந்திரமாக நடத்தப்படுவதும் தடைபட்டுக் கொண்டிருக்கிறது.  வழக்கறிஞர்களை தூண்டி விட்டு தகராறு செய்வாரே என்ற அச்சத்தில், சங்கரசுப்பு முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை அளித்து, விசாரணையை திசை திருப்புவதை, நீதிபதிகள் கண்டும் காணாமலும் இருக்கின்றனர்.   இந்த வழக்கில் தனக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்காத நீதிபதிகளை ஒவ்வொரு முறையும் தகராறு செய்து மாற்றியுள்ளார் சங்கரசுப்பு.  இந்த வழக்கில் இது வரை பத்துக்கும் மேற்பட்ட நீதிபதிகள் விலகிக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணை என்ற பெயரில் மாதந்தோறும், மக்களின் வரிப்பணம் 40 லட்ச ரூபாய் விரயமாகிக் கொண்டிருக்கிறது என்பதை நீதிபதிகளும் கவனத்தில் கொள்ள மறுக்கின்றனர்.   நாட்டில் எத்தனையோ கொலைகள் கண்டுபிடிக்கப்படாமல், அப்படியே நிலுவையில் இருக்கின்றன. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தின் கொலை கூட இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கெல்லாம் இப்படி ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்திருக்கிறதா நீதிமன்றம் ?   2ஜி வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.   சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து, விசாரிக்க வேண்டிய அளவுக்கு, சதீஷ் குமார், மகாத்மா காந்தியா? பகத்சிங்கா? அல்லது சமூகப் போராளியா? ஊழல் ஒழிப்பு போராளியா?  சொல்லப்போனால், இந்த விசாரணையில் தெரிய வந்த விவகாரங்களை வைத்துப் பார்க்கையில், சராசரியை விட மிக மிக மோசமான நபராகவே சதீஷ் குமார் இருந்துள்ளார்.   அப்படிப்பட்ட நபரின் கொலையும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.  ஆனால், அது சாதாரணமாக, எல்லா வழக்குகளையும் போலத்தான் விசாரிக்கப்பட வேண்டும்.

IMG_8686

எதற்காக இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு என்பதை, நீதிபதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.   வீணாகும் மக்கள் வரிப்பணம் ஒவ்வொரு ரூபாய்க்கும், சென்னை உயர்நீதிமன்றமும், இதை விசாரிக்கும் நீதிபதிகளுமே பொறுப்பு என்பதை உணர்ந்து, நியாயமான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்  என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு.

சவுக்கு தளத்துக்கு மிரட்டல்

$
0
0

24 பிப்ரவரி 2014 அன்று இரவு 10 மணிக்கு தமிழா தமிழா பாண்டியன் என்பவர் அவசரமாக தொடர்பு கொள்ளுமாறு கூறியதால் தொடர்பு கொள்ளப்பட்டது.  அவரோடு ஏற்கனவே நேரில் பேசி அறிமுகம் உண்டு. 

பிச்சாவரம் காட்டுக்கு சென்று, அங்கே இருந்து யாரோ ஒருவரை பேட்டியெடுத்து விட்டு, விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டெழுந்து உள்ளது.  விரைவில் யுத்தம் தொடங்கும் என்று ஒரு செய்திக் கட்டுரையை நக்கீரன் இதழில் எழுதியவர்.  இணைப்பு

412_1

jouranlistpandian1

தொலைபேசியை எடுத்ததும், சங்கரசுப்புவை பற்றி எப்படி அப்படி ஒரு கட்டுரையை எழுதலாம்  அவரைப் பற்றி உனக்கு என்ன தெரியும்,   இதுதான் உன் கடைசி அத்தியாயம், மரியாதையாக அந்த கட்டுரையை நீக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.   உன்னைப் பற்றி போஸ்டர் அடித்து ஒட்டுவேன், நீ இருந்த தடமில்லாமல் செய்து விடுவேன் என்று கடுமையாக பேசினார்.   உங்களால் என்ன செய்ய முடியுமோ, அதை செய்யுங்கள்.   சங்கரசுப்புவின் மகன் மரணத்தைப் பற்றி எழுதிய கட்டுரை, இட்டுக் கட்டி எழுதியது அல்ல.  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் படி எழுதப்பட்டது.  இதில் உள்ள அத்தனையும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆவணமாக உள்ளது என்று கூறியும், தமிழா தமிழா பாண்டியன் தொடர்ந்து மிரட்டியபடி இருந்தார்.   உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என்று மீண்டும் மீண்டும் கூறியதும், இணைப்பை துண்டித்தார்.  அவர் பேசிய உரையாடல் பதிவு செய்யப்பட்டு உள்ளது.   

வாசகர்கள் தகவலுக்காக. 


டாஸ்மாக் தமிழ் 38

$
0
0

tas_boy_run_e

"வாடா தமிழ்.  என்ன விஷயம் முதல் விஷயம் ?" சொல்லு என்று ஆவலாக வரவேற்றான் பீமராஜன்.

"எல்லோருக்கும் முன்னதா, அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவிச்சி, தேர்தல் பிரச்சார தேதியையும் அறிவிச்சி, அனைத்து கட்சிகளையும் திக்குமுக்காட வெச்சிட்டாங்க ஜெயலலிதா.  மற்ற கட்சிகள் அனைத்தும் அதிர்ந்து போயிட்டாங்க"

14

"அவங்க மட்டுமா அதிர்ந்து போயிட்டாங்க.... கூட்டணி கட்சிகளும்தான் அதிர்ந்து போயிட்டாங்க" என்றான் ரத்னவேல்.

"கூட்டணி கட்சிகள் அதிர்ந்து போனது உண்மைதான். ஆனா, இடதுசாரிகளோடு பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு.  அது முடிந்ததும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் அறிவிக்கப்படும்னு சொன்னாலும், இடதுசாரிகள் வயிற்றில் இந்த அறிவிப்பு புளியைத்தான் கரைத்திருக்கிறது.

ஏற்கனவே சட்டமன்றத் தேர்தல் சமயத்திலும், இதே போல கூட்டணிக் கட்சிக்கான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவிச்சது, இவர்கள் மனசுல இன்னும் பசுமையா இருக்கு.  இப்படி ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளதால, அடுத்து என்ன செய்யறதுன்னு தெரியாம, இடதுசாரிகள் கடும் குழப்பத்துல இருக்காங்க."

1779869_620618787994096_47444276_n

"சரி... வேட்பாளர்கள் என்ன மனநிலையில் இருக்காங்க ? " என்றான் வடிவேல்.

"அதிமுக வேட்பாளர்கள் பெரும்பாலானோர் புதுமுகங்கள்.  அவங்களில் பெரும்பாலானோருக்கு, இன்னும் எத்தனை நாள் வேட்பாளரா இருப்போமோன்ற பயம் இருக்கு.   பட்டியல் வெளியான அடுத்த நிமிஷத்துல இருந்து, புகார்கள் தயார் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. எந்த வேட்பாளர் தலை உருளுமோன்னு யாருக்கும் தெரியலை. எல்லோரும் அந்த பதட்டத்துலயே இருக்காங்க.

அது போக, பல வேட்பாளர்கள் வலுவானவங்க கிடையாது. எந்த அடிப்படையில் இந்த வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாங்கன்னு எந்நத விபரமும் இது வரைக்கும் தெரியலை. ஆனா, சாதிய சமன்பாடுகள் சரிசமமா இருக்கிற மாதிரி பாத்துக்கிட்டு இருக்காங்க.  எட்டு வன்னியர்கள், ஏழு கவுண்டர்கள், தலித்துகள் ஏழு, தேவர் ஏழு, நாடார்கள் 3, முதலியார் 2, மீனவர், ரெட்டியார், நாயுடு, முத்தரையர், பிள்ளைமார், இஸ்லாமியர் மற்றும் யாதவருக்கு தலா ஒன்னுன்னு ஒதுக்கியிருக்காங்க. "

"சரி... ஜெயலலிதா இவ்வளவு விரைவா, வேட்பாளர்களை அறிவிச்சி, பிரச்சாரத்தை துவக்க காரணம் என்ன ? "  என்றான் ரத்னவேல்.

"ஜெயலலிதா மற்ற கட்சிகளை அப்செட் பண்ணணும் ன்றதுல கவனமா  இருக்காங்க.  மற்ற கட்சிகள் அத்தனையும் கூட்டணிக்காக அல்லாடிக்கிட்டு இருக்க சமயத்துல, தேர்தலுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே, தெளிவா எந்த கூட்டணின்னு முடிவெடுத்து, வேலையை தொடங்கிட்டாங்க. ஒரு வருடத்துக்கு முன்னாடி, சென்னையை அடுத்த வானகரத்துல நடந்த கூட்டத்துலயே, பாராளுமன்றம்தான் நம் இலக்குன்னு அறிவிச்சாங்க ஜெயலலிதா.  அந்த அடிப்படையில, அன்னையில இருந்து தெளிவா காய்களை நகர்த்தி இன்னைக்கு இந்த நிலைக்கு வந்திருக்காங்க. "

"பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து எடுத்த அடுத்த முடிவுதான், எழுவர் விடுதலையும் னு சொல்றாங்க... ஆனாலும், இந்த ஏழு பேர் விடுதலையைப் பொறுத்தவரை, இந்தத் தீர்ப்பை வழங்கிய தமிழரான நீதிபதி சதாசிவத்தை நாம எல்லோரும் பாராட்டத்தான் வேணும்"   என்றான் ரத்னவேல்.

"உண்மைதான்.  சதாசிவத்தின் மீது ஏராளமான ஊழல் புகார்கள்  இருக்கு.  ஆனாலும், இந்தத் தீர்ப்பு அவர் அளித்த சிறந்த தீர்ப்புகளில் ஒன்று.   இதற்காக அவரை பாராட்டித்தான் ஆகணும்" என்று அவனை ஆமோதித்தான் தமிழ்.

M_Id_403185_CJI_Sathasivam

"காங்கிரஸ் அரசாங்கம் சம்மதம் சொன்னதாலதான், சதாசிவம் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கியதா சொல்றாங்களே.... ? " என்றான், வடிவேல்.

"எந்த விஷயமா இருந்தாலும், அதுல ஏதாவது ஒரு சந்தேகத்தை கிளப்பறதே உனக்கு வேலையாப் போச்சுடா..... " என்று அலுத்துக் கொண்ட தமிழ்,  "சரி சொல்றேன் கேளு" என்று தொடர்ந்தான்.   இந்தியாவை பொறுத்தவரைக்கும், காங்கிரஸ் கட்சி இந்தியாவின் உரிமையாளர்.  காங்கிரஸ் கட்சி நினைச்சதைத்தான் செய்யும்.   நினைச்சதுதான் நடக்கும்.

பிஜேபியோட நீண்ட நாளைய கோரிக்கை, அஜ்மல் கசாப்பையும், அஃப்சல் குருவையும் தூக்கில் போடணும் என்பது.   இது காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட நாளைக்கு தலைவலியாவே இருந்துச்சு.  இவங்க ரெண்டு பேரையும் தூக்கில போட்டுட்டா, பிரச்சினை முடிஞ்சுதுன்னு காங்கிரஸ் நினைச்சுதான், ரெண்டு பேரையும் அதிகாலையில தூக்கில போட்டாங்க.  அவங்க ரெண்டு பேரும் தூக்கில் போடப்பட்டதும், பிஜேபி தொடர்ந்து பேசிக்கிட்டிருந்த ஒரு விஷயம் முடிஞ்சு போச்சு.

காங்கிரஸ் கட்சிக்கு இவர்கள் மூவரையும் சரி, புல்லாரையும் சரி, தூக்கில் போடும் எண்ணம் இல்லை.  போடுவதாக இருந்தால், அப்சல் குருவை தூக்கிலிட்டது போலவே, ரகசியமாக அதிகாலையில் தூக்கிலிட்டிருக்க முடியும். ஆனா, அப்படி பண்ணாம, கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதும், அந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாவது போல பாத்துக்கிட்டாங்க.  ஊடகங்களில் வெளியானதும், நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, மரண தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது.  மத்திய அரசு நினைத்திருந்தால், அதிகாலையில் யாருக்குமே தெரியாமல் தூக்கில் போட்டிருக்க முடியும்.

தேர்தல் நேரத்தில், இப்படி ஒரு முடிவை எடுத்தால், ஏற்கனவே பலவீனமாக இருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்படும் என்பது தெரியும்.  அதனால, உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவத்திடம், இந்த விவகாரம் சொல்லப்பட்டு, அவர் அளித்த தீர்ப்பே இந்தத் தீர்ப்பு.  ஆனா அவரே, இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் மாநில அரசு இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கும் ன்றதை எதிர்ப்பார்க்கல"

"நீதிபதி சதாசிவம் எதுக்காக மத்திய அரசு சொல்றதை    கேக்கணும் ? "

"என்னடா இப்படி முட்டாளா இருக்கிற ?   வரும் ஏப்ரல் மாதம் சதாசிவம் ஓய்வு பெறப் போறாரு....  ஓய்வு பெற்ற பிறகு வீட்டில் எப்படி சும்மா உக்காந்திருக்க  முடியும் ?  அதுக்காகத்தான் லோக்பால் அமைப்பின் தலைவராக அவரை நியமிக்கணும்னு மத்திய அரசு கிட்ட கோரிக்கை வைத்திருக்கிறார்.  அதுக்காக மத்திய அரசு, சொன்னதையெல்லாம், கேட்டுக்கிட்டு இருக்கார்.

நீதிபதி சதாசிவம் தன்னோட காரியத்துக்காக எது வேணாலும் செய்வார்.  ஜெயலலிதா கிட்ட காரியம் ஆகணும்னா, சொத்துக் குவிப்பு வழக்கில் உங்களுக்கு ஆதரவா செயல்படறேன்னு சொல்வார். கருணாநிதிக்கிட்ட, ஜெயலலிதா வழக்கை தள்ளுபடி பண்றேன்னு சொல்லுவார்.  அவருக்கு நியாய தர்மமெல்லாம் கிடையாது... சுயநலம் மட்டும்தான். "

"என்னடா.... இப்படி சொல்ற ? " என்று வியப்பாகக் கேட்டான் ரத்னவேல்.

"மச்சான்... நான் வழக்கறிஞர்கள் மத்தியில இருக்கிற பேச்சைத்தான் சொன்னேன்.  நானா எதுவும் சொல்லலை.  சென்னை உயர்நீதிமன்றத்தையே தன்னோட கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளணும்னு முயற்சி பண்ணார்.  வழக்கறிஞர்களோட போராட்டத்தால அது வெற்றி பெறலை.

இப்போ, நீதிபதிகளாகணும்னு சென்னை உயர்நீதிமன்றத்தில் பரிந்துரை செய்யப்பட்ட 12 பேரின் பட்டியலையும் திருப்பி அனுப்பிட்டார்.  இதுக்கு காரணம் வழக்கறிஞர்களின் போராட்டம்.  ஆனா, மதுரையில், நீதிபதியாகணும்னு வழக்கறிஞர்கள் புகழேந்தி மற்றும் சுந்தர் ஆகியோர் ஏராளமா பணம் செலவு பண்ணியிருக்காங்க.  தங்களோட பெயர் அடங்கிய பட்டியல் திரும்ப வந்ததால, அவர்களெல்லாம் கடுமையான கோபத்துல இருக்காங்க.

பெயர்கள் மீண்டும் பரிசீலனைக்கு அனுப்பப் படலைன்னா, பல உண்மைகளை வெளியே சொல்லுவோம்.  அதுக்கான ஆதாரங்கள் எங்ககிட்ட இருக்குன்னு மிரட்டிக்கிட்டு இருக்காங்களாம்"

"அப்போ நீதிபதி சதாசிவம், லோக்பால் தலைவராகறது, அவ்வளவு எளிது இல்லன்னு சொல்லு " என்றான் வடிவேல்.

"நீதிபதி சதாசிவம், காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான ஆளுன்றது, பிஜேபிக்கு நல்லாவே தெரியும். அதனால, முதன் முறையா உருவாகப் போற லோக் பால் அமைப்புக்கு அவர் தலைவராகக் கூடாதுன்றதுல, உறுதியா இருக்காங்க.  பிஜேபியும், சதாசிவத்தை கடுமையா எதிர்க்கும். இதுக்கு நடுவுல, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒரு க்ரூப்பும், சதாசிவத்துக்கு எதிராக களமிறங்கியிருக்கு.

இந்த எதிர்ப்புகளையெல்லாம் சமாளிக்கத்தான், சதாசிவம், நல்ல நீதிபதி மாதிரி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த இந்த மாதிரி தீர்ப்புகளை வழங்கினார். என்ன காரணத்துக்காக தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், இந்தத் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியதுன்றதுல சந்தேகம் இல்லை.  ஆனா, அதுக்குப் பின்னாடி இருக்கிற அரசியலையும் நாம கவனிக்கனும். "

"சரி பாப்போம்...  முருகன், சாந்தன், பேரறிவாளர் மூணு பேரோட தூக்கை ரத்து செய்ததோட, அவர்கள் மூணு பேரையும் முன் விடுதலை செய்வது குறித்து, தமிழக அரசு, குற்றவியல் சட்டத்தின் கீழ் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தலாம் னு சொல்லப்பட்டிருந்தது.  இதற்கு தமிழக அரசு இப்படித்தான் ரியாக்ட் பண்ணும்னு நெனைச்சாங்களா ?" என்றான் வடிவேல்.

"ஜெயலலிதா இப்படி ஒரு அதிரடியான முடிவை எடுப்பாங்கன்னு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவமும் சரி, மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி சுத்தமா எதிர்ப்பார்க்கல.

காங்கிரஸ் தலைவர்களுக்கு இதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணும்னு கூட தெரியலை.  அதிர்ச்சியில உறைந்து போய் இருந்தாங்க.  அந்த நேரத்துல ராகுல் காந்தி ஒரு பொதுக்கூட்டத்துல பேசும்போது, இந்த நாட்டின் பிரதமருக்கே நியாயம் கிடைக்கலன்னு பேசுன பிறகுதான் மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு ரோசம் வர ஆரம்பிச்சது.  அதுக்கப்புறம், ஞானதேசிகன், நாராயணசாமி, ஜிகே.வாசன் னு போட்டி போட்டுக்கிட்டு, தமிழக அரசை கண்டிச்சு பேச ஆரம்பிச்சாங்க.

bjp-plays-air-conditioned-and-industralised-politics-rahul-gandhi_241013035714

மத்திய அரசு அவசர அவசரமா ஆலோசனை நடத்தி, மறு நாளே, உச்சநீதிமன்றத்துல இதை எதிர்த்து மனு தாக்கல் பண்ணி, தடை உத்தரவு வாங்கினாங்க. "

"ஜெயலலிதாவோட ரியாக்சன் என்ன ? " என்றான் பீமராஜன்.

"ஜெயலலிதா எதிர்ப்பார்க்காத ரியாக்சன், பத்திரிக்கையாளர்கள் கிட்ட இருந்து.  தமிழ் பத்திரிக்கைகள்,  தவிர்த்து மற்ற தேசிய ஊடகங்களு அனைத்தும், ஜெயலலிதாவோட இந்த முடிவை கடுமையா எதிர்த்து விமர்சனம் பண்ணியது ஜெயலலிதாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கு.  இது தேர்தல் நேரமா மட்டும் இல்லாம இருந்தா இந்நேரம் நூற்றுக்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் தேசிய ஊடகங்கள் மேல பாய்ந்திருக்கும்.

ஆனாலும், இந்த எழுவர் விடுதலை தொடர்பாக ஒரே கல்லுல பல மாங்காய் அடிச்சிட்டாங்க ஜெயலலிதா.  ஒரு பக்கம், காங்கிரஸ் அநாதையா ஆக்கப்பட்டது.  இன்னொரு பக்கம் பிஜேபி அணி பலவீனமானது.  தமிழக பிஜேபி ஜெயலலிதாவோட விடுதலை முடிவை வரவேற்குது, ஆனா, தேசிய தலைவர்கள் எதிர்க்கிறாங்க.

எல்லா விஷயங்களிலும் வாயைத் திறந்து கருத்து சொல்லும் மோடி, இந்த விஷயத்துல வாயே திறக்கலை. ஜெயலலிதாவோட படம வைரியான திமுக தற்போது தனித்து விடப்பட்டு, என்ன செய்யறதுன்னு தெரியாம முழிக்குது"

"சரி.. கேப்டன் என்ன பண்றார் ? " என்றான் ரத்னவேல்.

"மச்சான் கேப்டன் டெல்லி விசிட்ல இருந்து ஆரம்பி டா" என்றான் ரத்னவேல்.

"அதுல என்னடா இருக்கு. கேப்டன்தான், மக்களோட குறைகளை எடுத்துச் சொல்றதுக்காக டெல்லி போனேன்னு சொன்னாரே... " என்று கிண்டலாக சிரித்தான் தமிழ்.

"விளையாடாதடா..... என்ன மேட்டர்னு சொல்லு" என்று அவனை கடிந்து கொண்டான் வடிவேல்.

"கேப்டனோட டெல்லி பயணம், கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு முன்னாடியே திட்டமிடப்பட்டிருக்கு.  மூன்று மாசத்துக்கு முன்னாடி, பிரதமரோட அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்காங்க. ஆனா, பிரதமர் அலுவலகத்துல அதை கண்டுக்கல"

அப்புறமா ஜி.கே. வாசன் முயற்சி பண்ணித்தான் இந்த அப்பாயின்ட்மென்டை வாங்கித் தந்திருக்காரு. இப்போ கேப்டன் டெல்லி போனதோட உண்மையான காரணம், பிஜேபியை மிரட்றதுக்காகத்தான்"

Captain_vijayakanth__52

"எப்படி சொல்ற... இதை வைச்சு பிஜேபியை எப்படி மிரட்ட முடியும்.  அவங்களுக்கு என்ன பிரச்சினை ? " என்றான் வடிவேல்.

"என்னடா... அரசியல் அரிச்சுவடி தெரியாதவனா இருக்கற ? சமீபத்தில் மோடி சென்னை வந்துட்டுப் போன போது, கேப்டன் கிட்ட, ஒரு முறை மோடியை சந்திச்சிடுங்கன்னு கெஞ்சி பாத்தாங்க. அவரு ரொம்பவும் முறுக்கிக்கிட்டே இருந்ததும், மோடி சொன்னதன் அடிப்படையில, தேமுதிகவை பிஜேபி தலைமை உதாசீனப்படுத்த தொடங்கிட்டாங்க.

திமுக ஒரு பக்கம் கெஞ்சிக்கிட்டு இருந்துச்சு.  பிஜேபி ஒரு பக்கம் கெஞ்சிக்கிட்டு இருந்துச்சு.  இதனால, ரொம்ப தெனாவட்டா திரிஞ்சிக்கிட்டு இருந்த கேப்டனுக்கு திடீர்னு என்ன பண்றதுன்னு தெரியலை.  சரி இந்த நேரத்துல பிரதமரை சந்திச்சா, பிஜேபி நம்பளை பாத்து பம்முவாங்க.  அப்படியே பிஜேபி தலைவர்களையும் டெல்லியில சந்திச்சுட்டு, அமெரிக்காவுல மைக்கேல் சாக்ஸன் கூப்டாக, சப்பான்ல சாக்கி சான் கூப்டாக ன்னு சீன் போடலாம்னு பாத்தாங்க.

ஆனா, பிஜேபி தலைவர்கள் கண்டுக்கவேயில்ல. இதனால கேப்டன், தமிழக மக்களின் பிரச்சினைகள் பத்தி விவாதிக்கப் போனதா சொல்லி, பிரதமரை பாத்தாரு"

"ஏம்ப்பா... இதைத்தானே கேப்டன் கட்சியோட ஏழு எம்.எல்.ஏக்கள் செய்தாங்க.   அவங்களும் தொகுதி மக்களின் பிரச்சினையைப் பேசத்தானே ஜெயலலிதாவை பாத்தாங்க... அதுக்கு ஏன் கேப்டன் கோபப்பட்டாரு ?"  என்றான் ரத்னவேல். அனைவரும் சிரித்தனர்.

"என்னதான்யா சொல்றாரு கேப்டன்..  கடைசியா எங்கதான் போகப்போறாரு ? " என்றான் வடிவேல்.

"மச்சான். கேப்டனும் அவர் மனைவியும் நம்ப மிகப் பெரிய ராஜதந்திரின்னு நெனச்சிக்கிட்டு இருக்காங்க.  பயங்கரமான ப்ளான் போட்டு அரசியல் காய் நகர்த்தகல்கள் பண்றோம் னு நெனைச்சிக்கிட்டு இருக்காங்க.  இவங்களோட நடவடிக்கையால, தேசிய கட்சிகள் உள்ளிட்ட பெரிய கட்சிகள் கடுமையான எரிச்சலடைஞ்சு, ஓவராப் பண்றாங்க. இவங்களை கழட்டி விட்டுடலாம்னு முடிவெடுத்துட்டாங்க.

அது மட்டுமில்லாம ஜெயலலிதாவோட முடிவு மற்ற அணிகளை பலவீனமாக்கவும், எதுக்காக கேப்டனை புடிச்சி தொங்ணும்னு பிஜேபியிலயே முடிவெடுத்துட்டாங்க"

"இப்போ கேப்டன் என்னதான் முடிவுல இருக்காரு ? "

"தற்போது சிங்கப்பூர் போயிருக்காரு. காங்கிரஸ் கூட சேர்வது தற்போது தற்கொலைக்கு சமமானது ன்றதால, பிஜேபி பக்கம் போலாமான்ற முடிவுல இருக்காரு.  இந்த நிலையில, பாட்டாளி மக்கள் கட்சி பிஜேபி அணியில இருக்கறதும், கேப்டன் அந்தப் பக்கம் போறதுக்கு பெரிய முட்டுக்கட்டையா இருக்கு"

"அதுல என்னடா முட்டுக்கட்டை ? "

"பா.ம.க ஏற்கனவே அறிவிச்சச 10 தொகுதிகளை மாற்ற முடியாது. அது தவிரவும், அனைத்து சமுதாய கூட்டமைப்புக்கு மேலும் 4 தொகுதிகள் வேணும்னு கேக்கறாங்க.  இது பிஜேபி தலைமைக்கு உடன்பாடா இல்ல.   அதனால, இப்போ பாமகவை கழட்டி விட்டுட்டு, தேமுதிகவை மட்டும் உள்ள இழுக்கலாமான்னு நினைக்கிறாங்க.

மேலும், தேமுதிக கடந்த தேர்தல்களில் வலுவாக வாக்குகள் பெற்ற தொகுதிகள் வட தமிழகத்துல இருக்கு. அதனால விஜயகாந்த் பாமக வைத்திருக்கும் பல தொகுதிகளைக் கேட்பார்.  இது பெரும் சிக்கலில் முடியும் ன்றதை பிஜேபி புரிஞ்சுதான்,  பாமகவை கழட்டி விடலாம்னு நினைக்கிறாங்க"

"பாமக இந்த தேர்தலிலும் தோத்துட்டா கட்சியே இருக்காதே... என்ன தைரியத்துல இப்படிப் பண்றாங்க ?"

2600015490_62dac8d8be_b

"என்ன தைரியத்துல பண்றாங்கன்றதுதான் யாருக்கும் புரியலை.  பிஜேபி அணியில இருந்து கழட்டி விடப்படப் போறது தெரிஞ்சு, முதல் கட்டமா, அதிமுக பக்கம் லேசா தூது விட்டுப் பாத்திருக்காரு மருத்துவர்.  இதை தெரிஞ்சுக்கிட்டுதான், தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர், வேல்முருகன் அவசர அவசரமா போய் முதல்வரை சந்திச்சார்.  இது பாமக அந்த அணியில் இடம் பெறுவதை தவிர்த்துடும்.  பாமகவுக்கு இக்கட்டான நிலைமைதான். "

"திமுக மாநாடு பத்தி சொல்லுப்பா " என்றார் கணேசன்.

"கொஞ்சம் பழைய செய்திதான் அண்ணே.  இருந்தாலும் சொல்றேன். திமுக மாநாடு, தங்களுக்கு உண்மையில் செல்வாக்கு இருக்கா இல்லையான்றதை தங்களுக்குத் தாங்களே நிரூபிச்சிக்கவும், விஜயகாந்த்துக்கு நாங்கதான் பெரிய கட்சின்றதை உணர்த்தவும்தான் இந்த மாநாடு.

வழக்கமாகவே திமுக மாநாடுகள் நிதி வசூல் பண்றதுக்காகத்தான் நடக்கும்.  இந்த முறையும் அதே மாதிரி நிதி வசூல்தான் நடந்திருக்கு.  106 கோடியை தேர்தல் நிதியா கொடுத்திருக்காங்க.  இந்த நிதியில் வழக்கறிஞர்கள் அணி மட்டும் 88 லட்சமும், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஏழரை கோடியும் தந்திருக்காங்க.  இவங்களுக்கெல்லாம் இந்த நிதி எங்க இருந்து வந்துச்சு, எப்படி வசூல் பண்ணாங்க, ரசீது இருக்கான்னு ஒரே ஒரு முறை வருமான வரித்துறை விசாரணை நடத்தினா, அத்தனை பேரோடு ஊழல் முகத்திரையும் கிழிக்கப்படும்.

ஆனா, மத்தியில் ஆளும், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட, அத்தனை கட்சிகளும், இதே உத்தியை கடைபிடிக்கிறதால, யாருமே இந்த விசாரணைக்கு கோரிக்கை வைக்கிறதில்ல.  சிபிஎம் கூட இந்த காரணத்துனாலதான், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து, அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கணும்னு கோரிக்கை வைச்சாங்க"

"சரி... திமுக மாநாட்டுல வேற என்ன சிறப்பு செய்திகள் னு சொல்லு"

"மாநாட்டுக்கான செலவுகள் ஏறக்குறைய 50 கோடியைத் தாண்டிடுச்சு.  இதில் பெரும் தொகையை ஆ.ராசா ஏத்துக்கிட்டதா சொல்றாங்க.  ஆ.ராசாவுக்கு தேர்தலில் டிக்கெட் நிச்சயம் என்றாலும், 2ஜி விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டால், கட்சி தனக்கு பின்னால் இருக்க வேண்டும் னு நினைக்கிறார்.  அதனால எல்லா செலவுகளையும் பின்னால் இருந்து கவனிச்சிக்கிட்டார்.  ஆனா, செலவுகளை செய்தது, கே.என். நேரு போல, ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுச்சு.

மாநாடு நடக்கறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே, திருச்சியில் உள்ள அத்தனை லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், என்று அனைத்தும் புக் செய்யப்பட்டு விட்டன.   பல ஓட்டல் உரிமையாளர்களுக்குத் தெரியாமலேயே, ஒரு லட்ச ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்கள், கார்கள், வேன்கள் என்று அத்தனையும் வாடகைக்கு மொத்தமாக எடுக்கப்பட்டன.

ஆனா இவ்வளவு செலவு பண்ணாலும், ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையில வேஸ்டாப் போச்சேன்ற வருத்தத்துல இருக்காங்க உடன்பிறப்புகள்.

ஜெயலலிதா, வேட்பாளர்களை அறிவிச்சி, வேக வேகமா பணிகளைத் துவக்கிய நிலையில், திமுக இன்னும் வேலைகளையே ஆரம்பிக்காம, விஜயகாந்தின் கடைக்கண் பார்வை கிட்டாதான்னு ஏங்கிக்கிட்டு இருக்காங்க."

"சரி.. திமுகவுல அண்ணன் தம்பி பஞ்சாயத்து முடிஞ்சுதா ? "

"அந்த பஞ்சாயத்து இப்போதைக்கு முடியுமா ? திமுக அறக்கட்டளையில் உள்ள பல ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களை நிர்வகிக்கும் இரண்டு அறக்கட்டளைகளிலும், ஸ்டாலினோட ஆதரவாளர்கள் நிரப்பப்பட்டிருக்காங்க.     கல்யாணசுந்தரம், மா.சுப்ரமணியம் எல்லாம், ஸ்டாலின் ஆட்கள்.  இது அழகிரியை கடுமையா கோபப்படுத்தியிருக்கு.  இந்த அறக்கட்டளையில் தன்னோட ஆதரவாளர்களை நியமிக்கணும் ன்றதுதான் அவரோட முக்கிய கோரிக்கை.  இந்த கோரிக்கையை திமுக ஏற்காவிட்டால், அறக்கட்டளையில் நடந்த ஊழல்களை விரைவில் வெளியிட இருக்கார்"

"ஜெயலலிதா பிரச்சாரத்துல இறங்கிட்டாங்க. அதிமுக பிரச்சார அணியெல்லாம் தயாராயிட்டுதா ?" என்றான் பீமராஜன்.

"இந்தத் தேர்தலில், தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப் பயணம் நடத்த சரத்குமாரின் மனைவி ராதிகா முன் வந்திருக்காங்க.  ஆனா அதுக்கு ஈடா 50 கோடி தரணும்னு சரத்குமார் கோரிக்கை வைச்சிருக்கார்"

"எதுக்குய்யா 50 கோடி ? "

Radhika_Sarathkumar_in_Vani_Rani_Tv_Serial_Photos__11_

"ராதிகா அதிமுகவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால், சன் டிவியில் ராடான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களையும் நிறுத்தி விடுவார்கள்.  அதனால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும்.  அதை ஈடு செய்யும் விதமாக, பணம் தரணும்னு சொல்லியிருக்காங்க.  ஜெயலலிதா, ஜெயா டிவியில ப்ரைம் டைம்ல ஸ்லாட் தர்றேன்னு சொன்னதுக்கு, சன் டிவி அளவுக்கு டிஆர்பி ரேட்டிங் கிடையாது. அதனால, பணமாத் தந்தா உதவியா இருக்கும்னு சொன்னதுக்கு, ஜெயலலிதா பாக்கலாம்னு சொல்லியிருக்காங்க"

"சரி... அந்த டேப் விவகாரம் என்னப்பா அப்படியே அமுங்கிப்   போச்சு ? எந்த விசாரணையும் நடக்கலையா ? "

"டேப் விவகாரம் அமுங்கிப் போகலை. சிபிஐ பூர்வாங்க விசாரணையை தொடங்கியிருக்காங்க. விரைவில் இந்த விவகாரத்தில் ஜாபர் சேட் சம்மன் அனுப்பி அழைக்கப்படுவார்.  இதோடு, சிபிஐயால் வீடு சோதனையிடப்பட்ட காமராஜும் இந்த முறை சிக்கலில் மாட்டுவார்னு சொல்றாங்க. தொடர்ந்து இந்த உரையாலை பதிவு செய்தது சிபிஐ அதிகாரிகள்னு நக்கீரன்ல செய்தி வெளியிட்டு வர்றார்.

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கூட,   "இது சம்பந்தமா சி.பி.ஐ., ஐ.பி., ரா என புலனாய்வு நிறுவனங்களும் உளவு நிறுவனங்களும் அவசர மீட்டிங் போட்டு பேசியிருக்குது. பதிவு செய்த பேச்சுகள் லீக் ஆகுதுன்னா அது உள்நாட்டு பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாயிடும். இதை நாம சீரியஸா கவனிக்கணும். 2ஜி டேப் எப்படி ரிலீஸ் ஆனதுன்னு கண்டுபிடிக்கணும்னு சொல்லி அது சம்பந்தமா டெக்னிக்கலா இறங்குனப்ப, சி.பி.ஐ.யி லிருந்துதான் இது லீக் ஆகியிருக்குங்கிறது உறுதியாகியிருக்குது. தமிழ்நாட்டில் அரசியல் காரணங்களுக்காக இது லீக் ஆகியிருந்தா, இதன் மூலம் லாபமடையக்கூடிய அரசியல் தலைமைகளுக்கும் சி.பி.ஐ.யில் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவங்களுக்கும் தொடர்புண்டா, பதவியில் இருக்கும்போது எத்தனை முறை சந்திப்பு நடந்திருக்குது, இப்ப பொறுப்பில் இருப்பவங்களுக்கும் இதில் தொடர்புஉண்டா இதையெல்லாம் நாம சீரியஸா கவனிக்கணும்னு அந்த மீட்டிங்குகளில் பேசப்பட்டிருக்குது."

இப்படி ஒரு செய்தியை காமராஜ் வெளியிட்டிருந்தார்"

kamaraj_5

"ஏம்ப்பா.... ஐபி, ரா அதிகாரிகள் மீட்டிங்ல நடக்கிறதெல்லாம் கரெக்டா தெரியிற காமராஜுக்கு அவர் வீட்டுக்கு சிபிஐ ரெய்ட் வர்றது மட்டும் எப்படிப்பா தெரியாம போச்சு ? " என்றார் கணேசன்.

"அண்ணே.. என்னண்ணே நீங்க.  நக்கீரன்ல வர்றதையெல்லாம் போய் சீரியசா எடுத்துக்கிட்டு"

"சரி.. ஜாபர் சேட் என்னப்பா பண்றார் ? " என்றார் கணேசன் தொடர்ந்து

"அண்ணே... 2009, 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் ஜாபர் சேட் உளவுத்துறையில் இருந்தது வரை, தமிழகத்தில் முக்கிய வேலைகளில் ஈடுபட்ட அனைவருமே, கையில் ரெண்டு மூணு செல்போன் வைச்சிருப்பாங்க. போன்ல பேசறதுக்கே பயந்தாங்.

ஆனா, இப்போ, காலச்சக்கரத்தோட சுழற்சி ஜாபர் சேட்டை போனைக் கண்டாலே அலற வைக்குது.  மத்திய உளவுத்துறை, மாநில உளவுத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகள் தன்னை கண்காணிக்கிது  என்று, ஜாபர் பயந்து போய் இருக்கார்.  போனை தொடறதே இல்லை.

அவர் குடும்பத்தினர் அவரோடு பேசுவதே, பொது தொலைபேசியிலன்னா பாத்துக்கங்களேன்.. "

photo

"என்னப்பா எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே.. ? "

"அண்ணே...  தீதும் நன்றும், பிறர் தர வாரா.    சிபிஐ விசாரணையில இருந்து தப்பிக்கிறதுக்கு, நாராயணசாமியோட மகன், வாசுவை அணுகியிருக்கார்.  வாசு மூலமா, நாராயணசாமியை அணுகி, சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவிடம் ஜாபர் விவகாரம் குறித்து பேசப்பட்டிருக்கு. "சரி பாக்கலாம்"   னு சிபிஐ இயக்குநர் சொன்ன பதில், ஜாபரை மகிழ்ச்சியடைய வைச்சிருக்கு.  ஆனா, சிபிஐ இயக்குநர், எந்த விசாரணையிலும் குறுக்கிடுவது இல்லைன்ற விஷயம் ஜாபருக்கு தெரியாது.   இந்த விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கினால், ஜாபர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருக்கு.  அவருக்கு தோளோடு தோள் நின்று உதவும், காமராஜும், முதன் முறையா கம்பிக்குள் வெளிச்சத்தைப் பார்ப்பார்.  சிபிஐ அதிகாரிகள்தான் வெளியான உரையாடலை பதிவு பண்ணாங்கன்னு எதை வச்சு எழுதுனீங்கன்னு, காமராஜிடம் விசாரணை நடத்தப்படும்"

"நீ சொன்னது சரிதாம்பா... தீதும் நன்றும், பிறர் தர வாரா" என்றார் கணேசன்.

"சிபிஐக்கு நியமிக்கப்பட்ட டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் ரிலீவ் ஆயிட்டாங்களா ? " என்றான் வடிவேல்.

"அர்ச்சனா ராமசுந்தரத்தை விடுவிப்பதில்லைன்ற முடிவில் தமிழக அரசு இருக்கு. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, அவரை விடுவிப்பதில்லைன்ற முடிவில் இருக்காங்க"

archana

"அடுத்த டிஜிபி யாருப்பா ?  ராமானுஜத்தை திமுக டிஜிபியா தொடர நிச்சயமா விட மாட்டாங்க"

"அநேகமா, தற்போது உளவுத்துறை டிஜிபியா இருக்கும் அஷோக் குமாருக்கு இதற்கான வாய்ப்புகள் இருப்பதா சொல்லப்படுது.  மாநில அரசு, முத்துக்கருப்பனை டிஜிபியா நியமிச்சாக் கூட, தேர்தல் ஆணையம், அவரை ஏத்துக்காது.  அதனால, தற்போது முதல்வரின் நற்பார்வையில் இருக்கும் அஷோக் குமாருக்கு அந்த வாய்ப்பு அமையலாம்"

"சரி நீதித்துறை செய்திகள் என்னப்பா இருக்கு ? " என்றார் கணேசன்.

"அண்ணே.... சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளா உள்ள, நீதிபதிகள் தனபாலன், கர்ணன், கே.கே.சசீதரன் மற்றும் சி.டி.செல்வம், ஆகியோர் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கு"

"சி.டி.செல்வம்தானே சவுக்கு தளத்தை முடக்க கடுமையா முயற்சி எடுத்துக்கிட்டு இருக்கார் ? "

"ஆமாம்ணே... அவரேதான்.  டேப் வெளியானதுனால கடுமையான பாதிப்படைஞ்ச திமுக தலைமை, சவுக்கு தளத்தை முடக்கியே தீரணும்னு சி.டி.செல்வத்துக்கு உத்தரவு போட்டிருக்காங்க.  அதனால, அவரும் எவ்வளவோ முயற்சி பண்ணியும் ஒண்ணும் முடியலை.  மாநில காவல்துறை, ஒத்துழைக்கலன்னு அவர் கடுமையா எரிச்சலடைஞ்சாரு.  மத்திய புலயாய்வுத் துறையான, சிபிஐ விசாரணைக்கு சவுக்கு தளத்தை உட்படுத்தணும்னு நாளை உத்தரவு பிறப்பிக்க இருக்காரு.  மேலும் இவர் உத்தரவின்படி, ஆச்சிமுத்து சங்கர் என்பவர் மீது மேலும் ஒரு வழக்கை சென்னை சைபர் க்ரைம் காவல்துறை பதிவு பண்ணியிருக்காங்க.  எப்படியாவது, அவரை உள்ள தள்ளணும்னு, செல்வம் குறியா இருக்கார்."

"சவுக்கு தளம் சிபிஐ அளவுக்கெல்லாம் வொர்த் இல்லையேப்பா... ? "

1240390_715198905168678_1445700448_n

"உங்களுக்குத் தெரியுது.  செல்வத்துக்கு தெரியலையே... என்ன பண்றது... ?   அவர் மேல கடுமையான புகார்கள் குவிஞ்சுக்கிட்டு இருக்கு.  ஏற்கனவே, அவர் திமுக வழக்கறிஞர்களுக்கு சாதகமா செய்லபட்றாருன்னு பல்வேறு புகார்கள் போயிருக்கு.

சமீபத்துல, திமுக தலைவர் கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய வழக்கு இவர் முன்னாடி வந்தப்போ, அரசு வழக்கறிஞரை வாதாடவே விடாம, எடுத்த எடுப்பிலேயே விலக்களிச்சு உத்தரவு போட்டாரு

Sathia_Chandra_1

Sathia_Chandra_2

கருணாநிதியின் வழக்கை சி.டி.செல்வம் விசாரித்தததை எதிர்த்து, வழக்கறிஞர் சத்தியசந்திரன் என்பவர் அளித்த புகார் மனு

நான் ஏற்கனவே, கேசி.பழனிச்சாமியோட மகன், கேசிபி சிவராமன் மீது இருந்த நில அபகரிப்புப் புகாரில், நிபந்தனை இல்லாம ஜாமீன் வழங்கினார், அந்த வழக்கின் எப்ஐஆரை ரத்து பண்ண சி.டி.செல்வம் முயற்சி எடுத்தார் என்பதை  சொன்னேன் ஞாபகம் இருக்கா ? "

"ஆமாம்பா.. நீதிபதி வீட்டில் சென்று கே.சி.பழனிச்சாமி சந்திச்சார்ன்ற விவகாரத்தையும் சொன்ன"

"அந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.   அந்த குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யணும்னு, கேசிபி.சிவராமன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  திமுக அரசில் அரசு தலைமை வழக்கறிஞரா இருந்த பி.எஸ்.ராமன் கேசிபி சிவராமனுக்காக வாதாடினாரு.   வாதாடினாருன்னு சொல்றதை விட வாயை திறந்தாருன்னு சொல்லணும்.  அவர் வாயை திறந்ததும், சி,டி.செல்வம், குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும், தடை விதித்து உத்தரவு போட்டார்.    வழக்கில் சம்பந்தப்பட்டவங்கள்லாம் வாயடைச்சு போயிட்டாங்க.

எப்படா சி.டி.செல்வம் இந்த நீதிமன்றத்தை விட்டுப் போவாருன்னு, தவமா தவமிருக்கிறாங்க"

"எப்படியோ நல்லது நடந்தா சரி.. " என்று கணேசன் எழுந்தார்.  அவர் எழுந்ததும் சபை கலைந்தது.

சொன்னா ஒதைப்பீங்க

$
0
0

புதனன்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்புவதற்காகவும், நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்க்கவுமே, தேர்தல் பிரச்சாரத்தை விரைவாகத் தொடங்குகிறார் என்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். "கேள்வி :- தேர்தல் கமிஷன் இன்னும் தேர்தலுக்கான தேதியைக் கூட அறிவிக்க வில்லை;  ஆனால் அதிமுக சார்பில், ஜெயலலிதா அவசர அவசரமாக நாற்பது தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்திருப்பதன் காரணம் என்ன ?

DSC_3837_2ஆதாயம் இல்லாமல் ஆற்றைக் கட்டி இறைப்பாரா?" என்று கிராமத்தில் கூறுவார்கள். சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீதி மன்றத்தில் ஆஜராகியே தீர வேண்டுமென்பதில் நீதிபதி கண்டிப்பாக இருக்கிறார். இந்த நிலையில் வழக்கில் ஆஜராகாமல் தப்பித்துக் கொள்ளப் புதுப் புதுக் காரணங்களை ஜெயலலிதா தேடுகிறார். இதற்காகத்தான் தமிழகச் சட்டப்பேரவையை அவசர அவசரமாகக் கூட்டி அதையே காரண மாகக் காட்டி சில நாட்களைத் தள்ளினார். தற்போது நாடாளுமன்றத் தேர்தலைக் காரணமாக வைத்து ஒரு மாதத்திற்கு மேல் சுற்றுப் பயணத் திட்டத்தை அறிவித்து, அதை நீதிமன்றத்திலே தெரிவித்து, வழக்கில் ஆஜராகாமல் இருக்கப் புது வழி தேடிக் கொண்டிருக்கிறார். வேட்பாளர் அறிவிப்பு - தேர்தல் சுற்றுப் பயண அறிவிப்பு போன்றவை அவசரமாக வெளிவரக் காரணம் பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்குதான் !"

கருணாநிதியின் இந்த அறிக்கை, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மிக மிக நியாயமானது.   ஆளுங்கட்சியினர் செய்யும் தவறுகளை விமர்சனம் செய்வதும், இடித்துரைப்பதும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவரது கடமையும் கூட. ஆனால், இப்படி இடித்துரைக்க கருணாநிதிக்கு என்ன தகுதி  இருக்கிறது ?

கருணாநிதியின் ஊழல்களை விசாரித்த நீதிபதி சர்க்காரியா, பூச்சி மருந்து ஊழல் தொடர்பான முடிவுகளில் இவ்வாறு தெரிவிக்கிறார்

“இந்தச் செயல்வகை எல்லாம் முதலமைச்சர், வேளாண்மைத்துறை அமைச்சர் ஆகியோரின் வாய்மொழி உத்தரவுகளினால் விளைந்ததாகும். மோசடியை அடிப்படையாகக் கொண்ட இந்த முறையற்ற தந்திரங்களினால் இந்த ஆப்பரேட்டர்கள் (கம்பெனிக்காரர்கள்) முதலில் கவரப்பட்டு மீளமுடியாத ஒரு சிக்கலில் மாட்டிவிடப்பட்டு, அவர்கள் “வழிக்குக் கொண்டுவரப்படும் வரை” நிர்பந்தப் படுத்தப் பட்டனர்.  முதலமைச்சர், வேளாண்மைத்துறை அமைச்சர் ஆகியோர் லஞ்சமாகப் பணம் பறிக்க, அவர்களது கோரிக்கைகளுக்குப் பணிய வேண்டியதாயிற்று.  இந்தக் கட்டாயக் கோரிக்கைகளுக்கு இணங்காவிட்டால், தங்கள் கதி சர்வநாசம்தான் என்ற ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.”

இது பூச்சி மருந்து ஊழல் மட்டுமே.  இது போல பல்வேறு ஊழல்களை நீதிபதி சர்க்காரியா விசாரித்து, கருணாநிதி ஊழல் புரிந்திருக்கிறார் என்று ஒரு விரிவான அறிக்கையை அளித்தார்.

இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவித்தபோது, திமுகவினர் அடைந்த இன்னல்கள் கொஞ்ச நஞ்சம் கிடையாது.  திமுக ஆட்சியின்போது அராஜகங்களில் ஈடுபட்டதால் கடுமையான கோபத்தில் இருந்த காவல்துறையினர், திமுகவினரை, சிறைக்குள் கடுமையாக தாக்கினர்.  அப்போது சிறையில் இருந்த நக்சலைட்டுகளை மரியாதையோடு நடத்திய சிறைத்துறை அதிகாரிகள், திமுகவினரை குறிவைத்து அடித்தார்கள்.   கடுமையான அடக்குமுறை காரணமாகவும், விழுந்த அடிகள் காரமணாகவும், திமுக தொண்டர் சிட்டிபாபு இறந்தே போனார்.  சிட்டிபாபு மீது விழுந்த அடிகள், மு.க.ஸ்டாலினுக்கு விழுந்திருக்க வேண்டிய அடிகள். தலைவர் மகன் மீது அடி விழுகிறதே என்று அந்த அடிகளை தான் வாங்கியதாலேயே சிட்டிபாபு இறந்தார்.

அப்படிப்பட்ட கொடுமைகளை திமுக மீது இழைத்த, இந்திரா காந்தியோடு அடுத்த தேர்தலிலேயே கருணாநிதி கூட்டணி வைப்பதற்கான காரணம் என்ன ?  சர்க்காரியா அறிக்கையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பது மட்டுமே. ஒரே நோக்கம்.  பெற்ற மகன் அடி வாங்கியே இறக்கும் சூழலில் இருந்தும், அதற்கு காரணமான அரசியல் கட்சித் தலைவரோடு, கூச்சமே இல்லாமல் கூட்டணி வைத்து "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக" என்று பேசியவர்தான் கருணாநிதி. அப்படிப்பட்ட கருணாநிதிதான் இன்று ஜெயலலிதா ஊழல் பேர்விழி என்கிறார்.   ஜெயலலிதா தான் இழைத்த தவறுகளுக்கு தண்டனை அனுபவிப்பார். அதிலிருந்து அவர் தப்ப முடியாது.  ஆனால், கருணாநிதி இழைத்த தவறுகளுக்கு என்ன தண்டனை ?  ஊழலைப் பற்றிப் பேச இவருக்கு என்ன அருகதை இருக்கிறது.

சமீபத்தில் வெளியான ஜாபர் டேப்புகள், கருணாநிதியின் வண்டவாளத்தை அம்பலமாக்குகிறது.   சரத் குமார் மற்றும் ஜாபர் சேட், ஜாபர் சேட் மற்றும் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோர் இடையே நடந்த உரையாடல்கள் ஏற்கனவே சவுக்கு தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.   கனிமொழி மற்றும் ஜாபர் சேட் இடையே நடைபெற்ற உரையாடல்களை தற்போது பார்ப்போம். முதல் உரையாடல் நடைபெற்ற நாள் 16 பிப்ரவரி 2011.  சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரம்.   திமுக எதிர்ப்பு அலை, தமிழகத்தில் பரவலாக வீசத் தொடங்கிய நேரம். குறிப்பாக, ஈழத் தமிழர் விவகாரத்திலும், மீனவர்கள் படுகொலை செய்யப்படும் விவகாரத்திலும், திமுக அரசின் துரோகங்கள், ஊடகங்கள் மற்றும் மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நேரம். 2ஜி விவகாரம் புயலாக வீசத் தொடங்கியிருந்தது.

ஆ.ராசா கைதாகி பத்து நாட்களே ஆகியிருக்கிறது. கலைஞர் டிவி சிபிஐ வளையத்தில் வந்து விட்டது என்ற விவகாரம், கனிமொழிக்கும், திமுகவுக்கும் தெரிய வருகிறது.   இப்படிப்பட்ட சூழலில், அதை திசைத் திருப்புவதற்காக, தமிழக மீனவர்களைக் காப்பாற்ற, இலங்கைத் தூதரகம் முற்றுகை என்ற நாடகத்தை, கருணாநிதியும், அவர் மகள் கனிமொழியும் அரங்கேற்றுகின்றனர். இலங்கைத் தூதரகத்தை கனிமொழி முற்றுகை இடுகிறாராம், கருணாநிதி அரசின் காவல்துறை அவரை கைது செய்கிறதாம்.  கைது செய்து, பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் வைத்திருக்கிறார்கள்.  இணைப்பு அப்படி வைத்திருக்கும்போதுதான், கனிமொழி, ஜாபர் சேட்டோடு உரையாடுகிறார்.

p42a


17TH_DMK_PROTEST_479781g

உரையாடலின் ஒலி இணைப்பு

கனிமொழி :  ஹாங் சொல்லுங்க.

ஜாபர் சேட் :    சொன்னா என்னை உதைப்பீங்க.. இருந்தாலும் சொல்றேன். (சிரிக்கிறார்)

கனிமொழி :  பரவாயில்ல சொல்லுங்க.

DSCF8253-horz

ஜாபர் சேட் :  ரெண்டாவது முறையா கஸ்டடியில் இருக்க ஆளுக்கிட்ட நான் பேசிக்கிட்டு இருக்கேன்.

கனிமொழி :   நானாவது உங்கள் கஸ்டடியில் இருக்கிறேன்..

ஜாபர் சேட் :  மேடம் நான் அந்த அறிக்கையை அப்படியே படிக்கிறேன்.  சரியாக இருக்கிறதா? என்று சொல்லுங்கள். நான் தலைவரிடம் சொன்னேன்.  அவர் சரி என்றார். நீங்கள் சரியாக இருக்கிறதா? என்று சொல்லுங்கள்.

கனிமொழி  : 10.02.2011 அன்று நான் விடுத்த அறிக்கையில் 2007-2008-ஆம் ஆண்டில், மத்திய தொலைத்தொடர்புத் துறை ஒதுக்கிய 2ஜி அலைக்கற்றை விவகாரத்திற்கும், 2009-ஆம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியுக் நிறுவனத்திற்கும் இடையே நடந்த பணப் பரிவர்த்தனைக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது என்றும், சினியுக் நிறுவனத்திடமிருந்து கடனாகப் பெறப்பட்ட 200 கோடி ரூபாய் திருப்பித் தரப்பட்டு விட்டது என்றும், அதற்கு வட்டியாக 31 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது என்றும், இந்த பரிவர்த்தனைகள் அத்தனையும் வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு விட்டது என்றும் அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டது என்றும்,  தெரிவித்திருந்தேன். இதற்குப் பிறகும், இந்தக் கடன் பரிவர்த்தனை குறித்து மத்திய புலனாய்வுத் துறை நீதிமன்றத்திலே குறிப்பிட்டுள்ளது. எனவே, மத்திய புலனாய்வுத் துறைக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்த விதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போ வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சியின் கணக்குகளை சரிபார்த்து தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். அதற்கு எங்களுக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இல்லை. சரத்குமார், நிர்வாக இயக்குநர், கலைஞர் தொலைக்காட்சி.

கனிமொழி : நாமாக முன் வந்து தெரிவித்தது போல ஆகி விடும்.  நல்லது.

ஜாபர் சேட் : ஆமாம் மேடம்.

கனிமொழி :   மீசையில மண் ஒட்டலன்னா கூட,

ஜாபர் சேட் :   பொதுமக்கள் என்ன நினைப்பார்கள் என்றால், இவர்கள்தான் வெளிப்படையாக இருக்கிறார்களே.. என்று நினைப்பார்கள்.

கனிமொழி :  நாமும் அவர்களை அதற்கு தயார்ப்படுத்துகிறோம் அல்லவா ?

ஜாபர் சேட் :  ஆமாம் மேடம். ஒரு பத்து பர்சென்ட் பேர் இது எல்லாம் செட்டப்புன்னு சொல்லுவான்.  அதை எப்படியும் சொல்லத்தான் போறான். அட்லீஸ்ட் 70 பர்சென்ட் பேரு கலைஞர் டிவி சர்ப்ரைஸ்ட் னு சொல்றதுக்கு பதிலா, நாம ஏற்கனவே திறந்த புத்தகம்னு சொல்றோம்.. வாசிச்சிட்டு போங்கன்னு சொல்றோம். இப்போ படிச்சுட்டு போங்க நாங்க லைப்ரரின்னு சொல்றோம்.

கனிமொழி :  ஆமாம்... ஆமாம்...

ஜாபர் சேட் : நான் தலைவர்கிட்ட இந்த ஐடியாவை சொன்னேன்.  இது முந்தையதை விட பெட்டர் இல்லையா மேடம்...

கனிமொழி :  நிச்சயமாக  அவர் என்னமோ தமாஷாக பேசிக்கொண்டு இருக்கிறார்.  இப்போது வருவார்கள்.. அப்போது வருவார்கள். யாருக்கும் தெரியாது.. என்று அவர் கூறுகிறார்.

ஜாபர் சேட் : அவர்கள் (சிபிஐ) முன்னதாகவே சொல்லி விட்டுத்தான் வருவார்கள் மேடம்.

கனிமொழி :  ஆமாம்.. அதுவும் சரிதான்.     நம்ப ஆளுங்களா இருப்பாங்க வேற..

ஜாபர் சேட் :   நாளைக்கு எல்லாரும் போட்ருவான்.. சிபிஐ விசாரணைக்கு சரத் குமார் தயாருன்னு...

கனிமொழி :   எந்த சரத்துன்னு கரெக்டா போடச் சொல்லுங்க.

ஜாபர் சேட் :   நான் என்ன கீழ நாடார் பேரவைன்னு போட்றவா மேடம்.. கீழ இவர் ஊனமுற்ற சரத் குமார்னு சொல்லட்டா மேடம்.

கனிமொழி :  ஊனமுற்ற இல்ல... மாற்றுத் திறனாளி..

ஜாபர் சேட் :  சாரி மேடம். எங்க ஊர்ல எல்லாம் மேடம்.. எங்க டிபார்ட்மென்டுல ஒரே பேர்ல ரெண்டு பேர் இருந்தானுங்கன்னா அவனுங்களுக்கெல்லாம் அடை மொழி கொடுத்துடுவோம். ஃபார் எக்சாம்பிள் மாலைக்கண் சுரேஷ், ப்ளேடு ரவி அப்படி.  அது மாதிரி இவனுக்கு ஒத்தக் கால் சரத்னு குடுத்துடுவோம்.

கனிமொழி :  நீங்க கஸ்டடியில எடுத்தாவது அவனை காப்பாத்துவீங்கன்னு நெனைச்சா அதுவும் இல்லாம போயிடுச்சு.

ஜாபர் சேட் :   மேடம் யு ஆர்  தி ஒன்லி கார்டியன் ஏஞ்சல் டு ஹிம். நான் சிறு அளவில் உதவி செய்கிறேன். அவ்வளவுதான்.

கனிமொழி :  பாவம் ஆனா. நீங்க வேற..

ஜாபர் சேட் :  நான்தானே மேடம்.

கனிமொழி :    நீங்களும் அவரும்... ரெண்டு பேரும் சேத்து.    இங்க பி.எஸ் ஸ்கூல்ல வச்சிருக்காங்க.

ஜாபர் சேட் :   அது உங்களுக்கு வசதியாக இருக்கிறதா.. அல்லது வேறு இடம் ஏற்பாடு செய்யச் சொல்லவா ?

கனிமொழி :  இல்ல இல்ல. இட்ஸ் ஓகே.  மரமெல்லாம் இருக்கு.

ஜாபர் சேட் :  லன்ச் எப்படி மேடம்?

கனிமொழி :   அவங்க ஏற்பாடு செய்வாங்கள்ல..

ஜாபர் சேட் : அது ஓகே மேடம்.  உங்களுக்கு ?

கனிமொழி :  போதும்... போதும். இதுவே போதும்.  நான் மட்டும் தனியாக சாப்பிட்டால் ஒரு மாதிரியாக இருக்கும் அல்லவா ?

ஜாபர் சேட் :  இந்த கல்யாண மண்டபத்துக்கு மட்டும் ஏதாவது ஸ்பெஷலா ஆர்கனைஸ் பண்ணச் சொல்லிடலாம்.

கனிமொழி :    நீங்கதான் ஏற்பாடு செய்வீங்களா.. இவங்க பண்ண மாட்டாங்களா?

ஜாபர் சேட் : அவங்கன்னா யாரு டி.எம்.கே.லயா?

கனிமொழி :  ஆமாம்.

ஜாபர் சேட் :  நோ... நோ... கஸ்டடியில இருக்கும்போது, லன்ச் வழங்குவது அரசின் கடமை.   உங்கள் தகவலுக்காக ஒரு விஷயம்.  இது குறித்து நாங்கள் போராடிக் கொண்டு இருக்கிறோம். ஏனென்றால், ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு அரசு வழங்கும் தொகை வெறும் பத்து ரூபாய்.

கனிமொழி :   எங்கயுமே சாப்பாடு வாங்கிக் கொடுக்க முடியாதே...

ஜாபர் சேட் :  ஆமாம். அதனாலதான் எங்க ஆளுங்க இது மாதிரி நெறய்ய அரெஸ்ட் இருக்கும்போது, வெளியில போய் வாங்கித் தர்றாங்க. சரவண பவனை மொட்டையடிச்சிடுவானுங்க.

கனிமொழி :  அது நல்ல விஷயம்தான்.

ஜாபர் சேட் :  ஆமாம். எங்க ஆளுங்க போயி நீ குடுக்குறியா... இல்லை உனக்கு சாப்பாடு தரவான்னு கேப்பானுங்க.

கனிமொழி :  பத்து ரூபா ரொம்ப அநியாயம் இல்ல?

ஜாபர் சேட் :  ஆமாம் மேடம்.  நீங்க ஏதாவது பண்ணுங்க...

கனிமொழி :  பேசாம நீங்களே ஒரு கிச்சன் ஆரம்பிச்சிடுங்களேன்..

ஜாபர் சேட் :  மேடம் என்னோட ஆலோசனையும் அதுதான்.  காவல்துறையினருக்கும், கைதாகுபவர்களுக்கும் சேர்த்து. ஆனால், டி.ஜி.பி. ஒத்துக் கொள்ள மாட்டேன்னுட்டாங்க.

கனிமொழி :  ஆமாம் அது நல்ல யோசனை.

ஜாபர் சேட் : நான் டி.ஜி. ஆகும்போது பண்ணிட்றேன் மேடம். நீங்க மறக்காம என்னை டி.ஜி.பி. ஆக்குங்க.

கனிமொழி : நீங்கதான் என்னோட எதிர்காலத்தை சொல்றேன்னு இருக்கீங்களே...

ஜாபர் சேட் : நான் சொல்லிட்டேன் மேடம்.. என்னது.  மன்னர் வழி ஆட்சிதான்.

கனிமொழி : அதெல்லாம் வேண்டாம்.  நான் வீட்டுக்கு வந்ததும் அதுல பேசறேன்.

ஜாபர் சேட் : ஓகே மேடம்.

உரையாடலை பார்த்து விட்டீர்களா ?  கலைஞர் டிவி சினியுக் நிறுவனத்திடமிருந்து வாங்கிய 200 கோடி ரூபாய் சாதாரண பணப்பரிவர்த்தனை அது லஞ்சம் அல்ல என்பதுதான், ஆனால், ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விசுவாசமாக நடக்க வேண்டிய ஜாபர் சேட், எப்படி ஒரு ப்ரோக்கர் போல, பேசுகிறார் பாருங்கள்.  மத்திய புலனாய்வுத் துறை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு விசாரணையை திசைத்திருப்ப, எப்படி ஒரு அறிக்கையை ஜாபர் சேட் தயாரித்து, அந்த அறிக்கைக்கு கருணாநிதியிடம் ஒப்புதல் வாங்கி விட்டு, கருணாநிதியின் மகளிடம் எப்படி ஒப்புதல் பெறுகிறார் பாருங்கள். சொல்லியதோடு, பொதுமக்களை முட்டாளாக்க இந்த அறிக்கை உதவும் என்பதை எப்படி பெருமையோடு சொல்கிறார் பாருங்கள்.  சிபிஐ வருவதென்றால் முன்னதாகவே சொல்லி விட்டுத்தான் வருவார்கள் என்றும் கூறுகிறார்.  கனிமொழி வருபவர்கள், நம்ப ஆட்களாகத்தான் இருப்பார்கள் என்கிறார். சிபிஐ விசாரணைக்கு கலைஞர் டிவி தயார் என்று ஊடகங்கள் எழுதும், இதன் மூலமாக, பொதுமக்களின் கருத்தை திசைத்திருப்பலாம் என்றும் கூறுகிறார் ஜாபர் சேட்.

மீனவர்களைக் காப்பாற்றுவதற்காக முற்றுகை போராட்டம் நடத்தி கைதாகியிருக்கும் ஒருவரிடம் ஒரு காவல்துறை அதிகாரி பேசுவது எத்தகைய சட்ட விரோதம் ?  எத்தகைய விதி மீறல் ?  அதைத் தொடர்ந்து என்னை டிஜிபி ஆக்குங்கள் என்று எப்படி வெட்கமே இல்லாமல், ஜாபர் சேட் கேட்கிறார் பாருங்கள் !!!! கனிமொழி தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு மட்டும் சிறப்பு உணவை ஏற்பாட செய்கிறேன் என்கிறார் ஜாபர் சேட்.   எத்தகைய நாடகத்தை நடத்தி மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது புரிகிறதா ?  எத்தகைய அயோக்கியர்கள் இவர்கள்.... ?

மன்னர் வழி ஆட்சி என்பதால், அடுத்த முதல்வர் கனிமொழி என்றும் எப்படி சொல்கிறார் பாருங்கள்.  இத்தகைய ஆபாகமான அதிகாரிகளைத்தான் கருணாநிதி நம்பியிருந்தார்.   இத்தகைய அயோக்கியத்தனமான அதிகாரி, பணி இடைநீக்கம்  செய்யப்பட்ட போதுதான், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டதாக நீலிக்கண்ணீர் வடித்தார் கருணாநிதி.   16.02.2011 அன்று, கலைஞர் டிவி சார்பாக ஜாபர் சேட் படித்த அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கிறார் கனிமொழி.  இரண்டே நாட்களில், கலைஞர் டிவி அலுவலகத்தை சோதனையிடுகிறது சிபிஐ.

சோதனையிட்ட அன்று கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து என்ன பேசுகிறார் என்று கேளுங்கள்.

சோதனை நடந்ததே எனக்குத் தெரியாது. நான் அலுவலகத்துக்கு போகவேயில்லை. கலைஞர் டிவியின் நிலைபாடு என்ன என்பது, சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அதற்கு மேல் விளக்கம் வேண்டியதில்லை.

ஒரு நாளுக்கு முன்னதாக, சிபிஐ அதிகாரிகள் வருவதற்கு முன்பாக சொல்லி விட்டுத்தான் வருவார்கள், அறிக்கையில் எந்த சரத்குமார் என்று தெளிவாகப் போடுங்கள், பொதுமக்களை தயார் செய்வதற்காக இந்த அறிக்கை தயார் செய்கிறோம் என்று ஜாபர் சேட்டோடு விவாதித்த கனிமொழி, சோதனைகள் நடந்த அன்று எப்படிப் பேசுகிறார் பாருங்கள்.

 வீடியோ இணைப்பு

அடுத்த உரையாடல், இதை விட மோசமானது.

உரையாடலில் இணைப்பு

ஜாபர் சேட் மற்றும் கனிமொழி இடையே அடுத்த உரையாடல். 23 நவம்பர் 2010 அன்று நடைபெற்ற உரையாடல்.

ஜாபர் சேட் :  முரசொலி ஆபீஸ்ல.... அங்க கேட்டேன். என்னய்யா... மக்கள்லாம் என்ன பேசிக்கிறாங்கன்னு கேட்டேன்.

கனிமொழி :  ம்ம்.

ஜாபர் சேட் :  என்னன்ணே எல்லாம் அதான் பேசறாங்க.  தலைவர் தங்கமான தலைவரு.. அவரைப்போயி இவ்வளவு கெட்ட பேர் வாங்கிக் கொடுத்துட்டாங்க. அவர் பண்ண சாதனையெல்லாம் இப்போ இதாயிடுச்சு இப்போ.

கனிமொழி :  ம்ம்.

ஜாபர் சேட் :  என்னய்யா இப்படி முட்டாள்த்தனமா பண்ணியிருக்கான். நான் சொன்னேன்யா அப்ப இருந்தே.. ஏலம் உட்டுட்டுப் போ... ஏலம் உட்டுட்டுப் போன்னு. அவன் கேக்கல.

கனிமொழி :  ம்ம். எப்படி. ஹவ் தே வொர்க் இல்ல..

ஜாபர் சேட் :  ஆமாம் மேடம்.. தட்ஸ் வெரி வெரி...  நான் அதிர்ந்து விட்டேன்.

கனிமொழி :  ஏற்கனவே.. இட் வாஸ் கொயிட்.. ஸ்கூல் எஜுகேஷன் மினிஸ்டரா இருந்தப்போ. ஒன்... திங் ஆப் செலிபிரேஷன் வில் பி தேர் நோ...

ஜாபர் சேட் :  எங்க.. இருந்தப்போ... திருச்சியில.

கனிமொழி :  ஆங்... நோ.. நோ... எதுவும் சொல்ல மாட்டாங்க... பட்.

ஜாபர் சேட் :  மூட் தெரியுமில்ல மேடம்.

கனிமொழி :  திஸ் ஈஸ்... எப்படி இப்படி வொர்க் பண்றாங்க.. நாம எதுக்கெடுத்தாலும் பிராமின்ஸை திட்டறோம்... இவங்க எப்படி வேலை பாக்கறாங்க.

ஜாபர் சேட் :  நாம அவங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டு அவங்களை வீழ்த்துவோம்.  நேத்து திரும்ப டிவி மேட்டர் வந்தது.

கனிமொழி :  ம்ம்.

ஜாபர் சேட் :  திரும்ப. தலைவர் என்ன சொன்னார்னா யாருமே என்கிட்ட இதை சொல்லலையேன்னு சொன்னார்.

கனிமொழி :  அய்யய்யோ...

ஜாபர் சேட் :  தீக்கதிர்ல ஒரு மோசமான கட்டுரை வந்திருக்கிறதே. அதுல இந்த வோல்டாஸ்... கீல்டாஸ் எல்லாம் இருக்கு. இதெல்லாம் எனக்கு யாருமே சொல்லல. எல்லாத்தையும் மறைச்சிட்டீங்கன்னு சொன்னாரு.  இதெல்லாம் உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கு.  அதையெல்லாம் சரி பண்ணியாச்சு. எல்லாம் சரியாயிடுச்சு. என்னென்ன பண்ணனுமோ பண்ணியாச்சு.

கனிமொழி :  அது அவங்களுடையதே இல்லல்ல... வேற யாருடையதோ அல்லவா அது.

ஜாபர் சேட் :  எது மேடம்?

கனிமொழி :  அதுதான் சட்டப்படி அது அவங்களுடையதே இல்லை அல்லவா (வோல்டாஸ் கட்டிடம் டாட்டாவுக்கு சொந்தமானது அல்ல என்கிறார்)

ஜாபர் சேட் :  சட்டப்படி இல்லைதான்.. ஆனால் ட்ரில் மற்றும்.. அது இல்லாமல் தீக்கதிரில் விரிவாக எழுதியிருக்கிறார்களே... ட்ரில் பற்றி

கனிமொழி :  ட்ரில் என்றால் என்ன ?

ஜாபர் சேட் :  டாட்டா ரீட்டெயில் இன்ஃப்ரா ஸ்டரக்சர்

கனிமொழி :  ஓ.. ஓ.கே.

ஜாபர் சேட் :  வோல்டாஸ் அதன் துணை நிறுவனம் அல்லவா ?

கனிமொழி :  ஆமாம்...

ஜாபர் சேட் :  இந்த நீரா ராடியாவை வாயிலேயே சுடணும்.

கனிமொழி :  இன்னைக்கு யாரோ கேட்டாங்க. அவரது இடத்தில் யாராக இருந்தாலும். அவர்கள்தான் அதற்கு வழி வகை செய்து தந்திருக்க வேண்டும். அந்த இடத்தில் இருந்த யாருக்கும் தெரிந்திருக்கும். அந்த இடத்தில் இருந்த இவருக்கு தொலைபேசித் துறை ஒட்டுக் கேட்கிறது என்பது தெரிந்திருக்க  வேண்டும். அப்புறம் எப்படி அவருக்கு தெரியாமல் போனது..

ஜாபர் சேட் :  அதைத்தான் நானும் சொல்கிறேன்..

கனிமொழி :  நம்மையெல்லாம் அலர்ட் செய்திருக்க வேண்டுமல்லவா ?

ஜாபர் சேட் :  எனக்கு என்னவென்றால், நீங்கள் அவரோடு பேசுகிறீர்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்தால் நான் உங்களுக்கு உடனடியாக சொல்லியிருப்பேன். அது இல்லாமல் அவருக்குத் தெரியும்.

கனிமொழி :  அப்படியா.. ?

ஜாபர் சேட் :  ஆமாம்.  அவர்கள் சொல்கிறார்கள். நான் உங்களுக்கு சொன்னேன் அல்லவா ?   அவரது தொலைத்தொடர்புத் துறை தலைவர் உளறுகிறார் என்று?

கனிமொழி :  ம்ம்..

ஜாபர் சேட் :  அவருடைய அலுவல்ரீதியான தொலைத் தொடர்பை டேப் செய்திருக்கிறார்கள்.

கனிமொழி :  வெகுளியாக இருப்பதற்கான விலையையும் கொடுக்கத்தானே வேண்டும்.

ஜாபர் சேட் :  அவர் வெகுளிதான். அதில் சந்தேகம் இல்லை. இந்தியாவின் முன்னாள் பிரதமரைப் போன்ற நண்பர்கள் இருக்கும் போது.  ஒரே ஒரு அறிக்கையில் மொத்த விஷயத்தையும் திசை திருப்பி விட்டார்.

கனிமொழி :  அது இயல்புதானே... அவர் அரசியல்வாதி அல்லவா ? எல்லாவற்றிற்கும் பிறகு. அது புத்திசாலித்தனமான அறிக்கையும் கூட. நான் சில சேரிகள் அல்லது கிராமத்திற்கு... அல்லது ஒரு சேரியில் சென்று, இது பற்றி உங்களுக்குத் தெரியுமா என்று கேட்க வேண்டும்.

ஜாபர் சேட் :       அது ஏதோ உரம் அல்லது யூரியா என்று சொல்வார்கள்.

கனிமொழி :   என்ன பண்ணுவது.. ஏதாவது பண்ணி இதை சரி பண்ண வேண்டும் அல்லவா?  அவருக்கும் தெரியும்.

ஜாபர் சேட் :  தலைவரின் பிரச்சினை என்னவென்றால் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு, தெரியவே தெரியாது என்கிறார்.

கனிமொழி :  எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பிறகு.. குறிப்பாக சொல்ல வேண்டாம் என்று சொல்வார்கள்.

ஜாபர் சேட் :  மேடம்.. நாம் தலைவரிடம் சொன்னோம். குறிப்பாக அந்த பவர் ப்ளான்ட் தொடர்பாக ஒரு பெரிய சோர்சிடமிருந்து.... நாம் அதில் 50 சதவிகிதம் பெற்றுக் கொண்டோம்.  இன்று, தீக்கதிர் பற்றி கேட்கும்போது... வேகமாக கேள்வி கேட்டார். எங்கிருந்து பணம் வருகிறது... யாரிடமிருந்து என்ன கான்ட்ராக்ட் என்று கேட்டார். நான் இதைப் பற்றி உங்களுக்கு சொல்லியிருக்கிறேன் என்று சொன்னேன்.  இல்லை... இல்லை... நீ இது பற்றி சொல்லவேயில்லை என்று சொன்னார். நான் சொன்னேன், அது பற்றிச் சொல்லியிருக்கிறேன்.  இப்போது அவை அனைத்தையும் விற்று விட்டோம் என்று சொன்னேன்.  அவர் எனக்கு தெரியவே தெரியாது என்று சொன்னார். நான் என்ன பண்றது?

கனிமொழி :  டிவியைப் பற்றியும் அவர் அதேதான் சொல்கிறார் அல்லவா?

ஜாபர் சேட் :  ஆமாம். டிவியை பற்றியும் யாரும் எனக்குச் சொல்லவில்லை. உடனே டிவியை க்ளோஸ் பண்ணுங்கள் என்கிறார்.

கனிமொழி :  அச்சச்சோ... எப்படிப் பண்றது? டெலிவிஷனையா?

ஜாபர் சேட் :  ஆமாம்...

கனிமொழி :  அதுவும் நல்ல யோசனைதான்.

ஜாபர் சேட் :  நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை.. அதுவாகவே போய்விடும்.

கனிமொழி :  அதற்கு அருகில்தான் இருக்கிறோம்.  டிவியை மூடி விட்டால், நான் பணமில்லாமல் இருக்க வேண்டியது இருக்காது அல்லவா ?

ஜாபர் சேட் :  நான் இன்று மாலை டெல்லி வருகிறேன்.

கனிமொழி :  அப்போது உங்களை நாளை பார்க்கிறேன். முடிஞ்சா... ஏதாவது... நீங்களும் ஒரு அளவுக்கு மேல சொல்ல முடியாது.

ஜாபர் சேட் :  நான் என்ன மேடம்.. நான் சொன்னேன். இதுல சில பி.ஆர். வொர்க் பாக்கலாம். சி.ஏ.ஜி. அறிக்கையிலேயே நமக்கு சாதகமான பல அம்சங்கள் இருக்கிறது. அதை ஹைலைட் பண்ணணும்.  நீங்க பண்ண வேண்டியதுதானே என்றார்.  இப்பதான் நமக்கு ஆள் கிடைச்சிருக்கான். டெல்லியில ஆள் கிடைக்கிறதே கஷ்டம்.  டெல்லியில நமக்கு எஸ்டாபிளிஷ்மென்டே கிடையாது. இப்பதான் ஒருத்தன் கிடைச்சிருக்கான். ஸ்டார்ட் பண்றோம் மெதுவா.

கனிமொழி :  எனக்குத் தெரியல... நான் வந்து இறங்குன உடனே... ஆல். செல்வ கணபதியிலேர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் சில பேர் வந்து. எப்படி நீங்க வந்து கூட்டுப் பாராளுமன்றக் குழு விசாரணைக்கு ஆட்சேபணை இல்லைன்னு சொல்றீங்கன்னு கேட்டாங்க.

ஜாபர் சேட் :  நீங்க அத பாஸ்கிட்ட சொல்லாம இருந்திருக்கலாம் இல்ல.

கனிமொழி :  என்னங்க நீங்க. ஒன்னும் பேசாம சும்மா போறது கூட பிரச்சினையா போகுதுங்க. வெறும் வதந்தி கூட பிரச்சினையாகுது.

ஜாபர் சேட் :   ஒரு நிமிஷம் மேடம். வேறு தொலைபேசியில் பேசுகிறார்.  கொஞ்ச நேரம் கழிச்சு பேசச் சொல்லுங்க. எஸ் மேடம்.

கனிமொழி :  என்ன பண்றதுன்னே தெரியலை.

ஜாபர் சேட் :  யாராவது ஒருத்தராவது சொல்ல வேண்டும் மேடம். இல்லையென்றால்,இதெல்லாம் பெரிய பிரச்சினையாகும்.

கனிமொழி :  என்ன விஷயம் என்றால், அவர்கள் கூட்டுப் பாராளுமன்றக் குழு விசாரணைக்கு ஒரு போதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். சுஷ்மா சுவராஜ் ஒரு புத்திசாலி. அவர் பிரதமரிடம் மென்மையாக நடந்து கொள்வார். அவரே, தேவைப்பட்டால் பிரதமரையே ஜே.பி.சி. சம்மன் செய்யச் சொல்வோம் என்று கூறுகிறார்.

ஜாபர் சேட் :  ம்ம்.

கனிமொழி :  இப்போ காங்கிரஸ் உறுதியாக இருக்கிறார்கள். உறுதியாக அது வேண்டாம் என்று.  எப்படி இப்படி சொல்கிறீர்கள் என்று சொல்லி விட்டார்கள். இறுதியாக எல்லார் பெயரும் இதில் இழுக்கப்படும்.  பிரதமரையே அழைத்து விட்டால் யாரை அழைக்க மாட்டார்கள்.  காங்கிரஸில் நாராயணனும் அப்படித்தான் சொல்றாங்க. தேர்தலை வைத்துக் கொண்டு எப்படீங்க?

ஜாபர் சேட் :  நேத்து தலைவரிடம் அதுதானே சொன்னோம்.  இதைவிட தெளிவாக தலைவரிடம் எப்படி சொல்ல முடியும்?  டெல்லியில் என்ன நடந்தாலும் சரி, உடனடியாக சி.எம்.மிடம் அதைச் சொல்ல வேண்டும். உங்களுக்கு சொல்லத் தயக்கமாக இருந்தால், வேறு யார் மூலமாவது, அதைச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் நாராயணசாமி மூலமாக சொல்ல வேண்டும்.

கனிமொழி :  செல்வகணபதி மூலமாக சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

ஜாபர் சேட் :  அது நல்ல யோசனை அப்படியாவது செய்யுங்கள்.

கனிமொழி :  அவரு கொஞ்சம் கச கசன்னு பேசிட்றாரு.. நானே கொஞ்சம் ஆடிப்போயிட்டேன். சேலத்துக்கு போனப்போ, என்னை ராங் ரூட்லயெல்லாம் இழுத்துட்டு போயி ஒரு மாதிரி பண்ணிட்டாங்க.  நான் தலைவர்கிட்ட இதைப் பத்தியெல்லாம் சொல்லல.  ஆனா, இப்போ அவர் அப்பாகிட்ட பேசும்போது, எல்லாத்தையும் சொல்லிட்டுப் போயிட்டாரு.

ஜாபர் சேட் :  ஓ... செல்வகணபதி எதைப் பற்றிப் பேசவும் தயங்க மாட்டார்.

கனிமொழி :  நான் சற்று கவனமாக இருக்க வேண்டும். சரி நாளை உங்களை பார்க்கும் போது பேசுகிறேன்.

ஜாபர் சேட் :  நானும் எம்.பி.யாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  பதினொன்றரைக்கெல்லாம் உங்களுக்கு லீவ் விட்டு விடுகிறார்கள்.

கனிமொழி :  ஜாலி இல்ல...  உங்களுக்குத்தான் நேரம் காலமேயில்ல.

உரையாடலை பார்த்து விட்டீர்களா... ?  இந்த உரையாடல் நடைபெற்றது 23 நவம்பர் 2010ல்.  அப்போது ஆ.ராசா கைதாகவில்லை.

ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடு, ஏலம் விடு என்று நான் சொன்னேன். ராசா கேட்கவில்லை என்று கருணாநிதி சொன்னதாகக் கூறுகிறார் ஜாபர் சேட். தீக்கதிரில் வோல்டாஸ் பற்றி ஒரு கட்டுரை வந்திருப்பதாக கூறுகிறார் ஜாபர் சேட்.

இது பற்றி 28 பிப்ரவரி 2011 அன்று, ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையை படித்து விடுங்கள். பிறகு தொடர்ந்து விவாதிப்போம். "சில மாதங்களுக்கு முன்பு, களங்கத்திற்கு ஆளான அரசியல்​ வணிகர் தரகர் நீரா ராடியாவுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராசாத்திக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து இந்திய ஊடகங்கள் விரிவாக செய்திகளை வெளியிட்டன. இந்த உரையாடலின் போது, ராசாத்தியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவரும், ராசாத்தியின் தணிக்கையாளருமான ரத்னம், மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் ராசாத்திக்கு உதவி புரிந்தார். இந்த உரையாடலின் சாராம்சம் என்னவென்றால், டாடா குழுமம் உறுதி அளித்த நில விவகாரம் முடிவடையாததால் ராசாத்தி வருத்தமடைந்த நிலையில் இருந்தார் என்பது தான். இந்த உரையாடலில், சென்னையின் மையப் பகுதியில் உள்ள மிகப் பெரிய இடத்தை பயன்படுத்தி கொண்டிருக்கின்ற டாடா குழுமத்தின் நிறுவனமான வோல்டாஸ் பெயர் குறிப்பிடப்படுகிறது. பின்னர், மேற்படி நிலம் தொடர்பாக ராசாத்தியின் கூட்டாளியான சரவணன் என்பவருக்கும் ராசாத்தியின் பினாமியாக கருதப்படும் சண்முகநாதன் என்பவருக்கும் இடையே விற்பனை ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பது ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. இந்த ஆவணத்தின்படி, 350 கோடி ரூபாய் மதிப்புடைய சென்னையின் பிரதானப் பகுதியான அண்ணா சாலையில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடத்தின் செயலுரிமை ஆவணத்தைப் பெற்ற சரவணன், சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநரான சண்முகநாதன் என்பவருக்கு அடிமாட்டு விலையான 25 கோடி ரூபாய்க்கு இதனை விற்று இருக்கிறார். இந்த இடத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வோல்டாஸ் நிறுவனம் இயங்கி வந்ததை வைத்து, இந்த இடத்தைப் பற்றி தான் ராசாத்தியும், ரத்தினமும், ராடியாவிடம் பேசினார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

இந்த ஆவணங்கள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்தவுடன், தனக்கும், அந்த இடத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்ற அளவில் ராசாத்தி ஓர் அறிக்கை வெளியிட்டார். சரவணன் தன்னுடைய ராயல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் என்றும் ராசாத்தி தெரிவித்தார். சரவணன் தற்போது தனது நிறுவனத்தின் பணியாளர் இல்லை என்றும், தற்போது அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார் என்பதற்காக, தன்னை இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தக் கூடாது என்றும் கூறினார். சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் சண்முகநாதனைப் பொறுத்தவரையில், அவர் மலேசியாவை சேர்ந்த ஒரு வியாபாரி என்றும், அவருக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும் ராசாத்தி தெரிவித்தார். அண்மையில் கோத்தகிரியின் விண்ட்ஸர் எஸ்டேட்டை சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் இயக்குநர் சண்முகநாதன் வாங்கியிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த எஸ்டேட் கனிமொழி எஸ்டேட் என்று உள்ளூர்காரர்களால் பேசப்படுகிறது. 525.98 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த எஸ்டேட் ஆவண எண் 2057/2006 மூலம் 16.12.2006 அன்று வெறும் 2.47 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறது. ராசாத்தியின் கூற்றுப்படி, இந்த எஸ்டேட்டை வாங்கிய சண்முகநாதனுக்கும், ராசாத்திக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், சண்முகநாதனால் வாங்கப்பட்ட விண்ட்ஸர் எஸ்டேட்டின் ஆவணத்தில் சென்னை, தி.நகர், 12, செளத் வெஸ்ட் போக் ரோடு என்ற முகவரியில் வசிக்கும் கே. சேஷாத்ரியின் மகன் எஸ். சீனிவாச ரத்னம் என்பவர் சாட்சிக் கையெழுத்து போட்டு இருக்கிறார். அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் ராசாத்தி பேசும் போது அவருக்கு உதவி புரிந்த தணிக்கையாளர் ரத்தினத்திற்கும், எஸ். சீனிவாச ரத்தினற்கும் ஒரே முகவரி தான்! அவரே தான் இவர்! சண்முகநாதனின் வோல்டாஸ் நில விற்பனையில் தொடர்புடையவர் ராசாத்தியின் முன்னாள் பணியாளர் சரவணன். சண்முகநாதனின் விண்ட்ஸர் எஸ்டேட் நில விற்பனையில் தொடர்புடையவர் ராசாத்தியின் தற்போதைய ஆடிட்டர் ரத்னம். விண்ட்ஸர் எஸ்டேட்டை உள்ளூர் மக்கள் கனிமொழி எஸ்டேட் என்று தான் அழைக்கிறார்கள். யதேச்சையாக ஏற்படும் ஒத்த நிகழ்வுகளுக்கும் ஓர் எல்லை உண்டு, அல்லவா? இப்பொழுதாவது, ராசாத்தியும், கனிமொழியும் உண்மையை வெளிப்படுத்துவார்களா ?"

படித்து விட்டீர்களா ?  இப்போது தொடர்ந்து பார்ப்போம்.   சென்னை அண்ணா சாலையில் உள்ள கட்டிடம்தான் வோல்டாஸ் கட்டிடம். இந்த கட்டிடம் 17 பேருக்கு சொந்தமானது.  17 பேருக்கு கூட்டாக சொந்தமான இந்தக் கட்டிடத்தை டாடா குழுமத்தைச் சேர்ந்த வோல்டாஸ் நிறுவனம் 1975ம் ஆண்டு, 30 ஆண்டுகளுக்கு லீசுக்கு எடுக்கிறது.  அடுத்த 30 ஆண்டுகளுக்கு அந்த லீஸ் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தம் இருந்தது.  இந்த ஒப்பந்தத்தை மீறி, அந்த 17 பேர் லீஸை புதுப்பிக்க மறுத்த காரணத்தால், டாடா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது.  சம்பந்தப்பட்ட 17 பேருக்கும் நோட்டீஸ் போகாமலேயே வழக்கு விசாரணை நடந்து வருகிறது.  இந்த நிலையில், திடீரென்று, 2008ம் ஆண்டு மற்றும் 2009ம் ஆண்டில், இந்த 17 பேரும், சரவணன் என்பவருக்கு அதிகார பத்திரம் வழங்குகின்றனர்.

இந்த சரவணன், இந்த வோல்டாஸ் நிறுவனத்தை, 10.09.2008 மற்றும் 27.04.2009 ஆகிய நாட்களில் சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்துக்கு பத்திரப்பதிவு செய்து தருகிறார்.  இந்த சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் 1992ம் ஆண்டு, டாக்டர் சண்முகநாதன் என்பவரால் தொடங்கப்படுகிறது.  இந்த நிறுவனம், சில ஆண்டுகளுக்குப் பிறகு செயலிழந்து எவ்விதமான பரிவர்த்தனையும் இன்றி முடங்கிக் கிடந்த ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்தின் பெயரில்தான் வோல்டாஸ் நிறுவனத்தின் கட்டிடம் பதிவு செய்யப்படுகிறது.

directors_Page_1

directors_Page_3

IMG_0002

IMG_0003

IMG_0009

IMG_0010

உதகமண்டலத்தில் உள்ள, 525 ஏக்கர் வின்ட்ஸர் எஸ்டேட்டும், இதே சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெயரில்தான் பதிவு செய்யப்படுகிறது.  இந்த இடத்தில் ஜெயலலிதாவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். "சண்முகநாதனால் வாங்கப்பட்ட விண்ட்ஸர் எஸ்டேட்டின் ஆவணத்தில் சென்னை, தி.நகர், 12, செளத் வெஸ்ட் போக் ரோடு என்ற முகவரியில் வசிக்கும் கே. சேஷாத்ரியின் மகன் எஸ். சீனிவாச ரத்னம் என்பவர் சாட்சிக் கையெழுத்து போட்டு இருக்கிறார். அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் ராசாத்தி பேசும் போது அவருக்கு உதவி புரிந்த தணிக்கையாளர் ரத்தினத்திற்கும், எஸ். சீனிவாச ரத்தினற்கும் ஒரே முகவரி தான்! அவரே தான் இவர்! சண்முகநாதனின் வோல்டாஸ் நில விற்பனையில் தொடர்புடையவர் ராசாத்தியின் முன்னாள் பணியாளர் சரவணன். சண்முகநாதனின் விண்ட்ஸர் எஸ்டேட் நில விற்பனையில் தொடர்புடையவர் ராசாத்தியின் தற்போதைய ஆடிட்டர் ரத்னம்."

நீரா ராடியா - ராசாத்தி அம்மாள் உரையாடலின் இணைப்பு

இப்போது ஜாபர் சேட் கனிமொழி உரையாடலுக்கு வருவோம்.  வோல்டாஸ் விவகாரம் பற்றி தனக்குத் தெரியாது என்று கருணாநிதி கோபப்பட்டதாக சொல்லும் ஜாபர் சேட், தனக்குத் தெரியாமல் அனைத்தையும் மறைத்து விட்டதாக கருணாநிதி கூறுவதாக கூறுகிறார்.   ஆனால், எல்லாவற்றையும் சரி செய்து விட்டதாக கூறுகிறார். அதற்கு கனிமொழி, சட்டப்படி வோல்டாஸ் கட்டிடம் டாடாவுக்கு சொந்தமானதே அல்ல என்று கூறுகிறார்.

IMG_9180

IMG_9184

எப்படி இருக்கிறது பார்த்தீர்களா ?  சட்டப்படி அந்தக் கட்டிடம் வோல்டாஸ் நிறுவனத்துக்கு சொந்தமானதாக இல்லாமல் இருந்தால், இவர்களுக்குத் தர வேண்டுமா ?  யார் அப்பன் வீட்டு சொத்து அது ?  எத்தனை பேராசை இவர்களுக்குப் பார்த்தீர்களா ?

அடுத்த பகுதி மிக முக்கியமானது.  "மேடம்.. நாம் தலைவரிடம் சொன்னோம். குறிப்பாக அந்த பவர் ப்ளான்ட் தொடர்பாக ஒரு பெரிய சோர்சிடமிருந்து.... நாம் அதில் 50 சதவிகிதம் பெற்றுக் கொண்டோம்.  இன்று, தீக்கதிர் பற்றி கேட்கும்போது... வேகமாக கேள்வி கேட்டார். எங்கிருந்து பணம் வருகிறது... யாரிடமிருந்து என்ன கான்ட்ராக்ட் என்று கேட்டார். நான் இதைப் பற்றி உங்களுக்கு சொல்லியிருக்கிறேன் என்று சொன்னேன்.  இல்லை... இல்லை... நீ இது பற்றி சொல்லவேயில்லை என்று சொன்னார். நான் சொன்னேன், அது பற்றிச் சொல்லியிருக்கிறேன்.  இப்போது அவை அனைத்தையும் விற்று விட்டோம் என்று சொன்னேன்.  அவர் எனக்கு தெரியவே தெரியாது என்று சொன்னார். நான் என்ன பண்றது ?"

அந்த பவர் ப்ளான்ட் தொடர்பாக பெரிய சோர்சிடமிருந்து 50 சதவிகிதம் பெற்றுக் கொண்டோம் என்று கூறுகிறார் ஜாபர் சேட்.  இவர் பெற்றுக் கொண்டோம் என்று கூறுவதே, ஏதோ, இவர் கருணாநிதியின் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போலவே பேசுகிறார்.   அந்த பெரிய சோர்ஸ் யார் என்பது தீவிரமாக விசாரணை செய்யப்பட வேண்டிய விவகாரம்.    அடுத்ததாக ஜாபர் சேட்டிடம் கருணாநிதி, என்ன காண்ட்ராக்ட், எங்கிருந்து பணம் வருகிறது என்று கேட்டதாகவும், அனைத்தையும் அவரிடம் விளக்கிச் சொல்லி விட்டதாகவும் கூறுகிறார். பிறகு அனைத்தையும் விற்று விட்டதாகவும் கூறுகிறார்.   இது அனைத்தும் கருணாநிதிக்கு தெரியும் என்றும் கூறுகிறார்.

எவ்வளவு இலகுவாக, ஊழல் பேரங்களை விவாதிக்கிறார்கள் பார்த்தீர்களா ?  டாடா நிறுவனம் இந்தியாவின் ஒரு திமிங்கல நிறுவனம்.   அந்த நிறுவனம் 300 கோடி ரூபாய் பெருமானமுள்ள ஒரு நிலத்தை கருணாநிதி குடும்பத்துக்கு சும்மா தூக்கிக் கொடுத்து விடாது.  அப்படிக் கொடுத்தால், 3000 கோடிக்கு ஆதாயம் பெற்று விடுவார்கள்.  அப்படி டாடா நிறுவனம் பெற்ற ஆதாயங்களின் ஒன்றுதான், தமிழக அரசின் போக்குவரத்துத் துறைக்கு, டாடா சப்ளை செய்த லோ போர்ட் பேருந்துகள்.   தமிழக அரசு பேருந்துகள் கொள்முதல் செய்தபோது, அதில் குறைந்த விலைக்கு பேருந்துகளை வழங்க முன் வந்தது, அசோக் லைலேண்ட் நிறுவனமே.  ஆனால், என்ன நடந்தது என்றே தெரியவில்லை, அடுத்த இடத்தில் இருந்த டாடா நிறுவனத்துக்கு அந்த ஒப்பந்தம் கிடைத்தது.  இந்த விவகாரம், நீரா ராடியா டேப்புகளில் விவாதிக்கப்பட்டதால், உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. இணைப்பு

1997ம் ஆண்டு திமுக அரசால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.  பிறகு 2001ம் ஆண்டு, அப்போதைய ஜெயலலிதா அரசால், தூத்துக்குடியில் 10,000 ஏக்கர் பரப்பளவில் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை தொடங்க திட்டமிடப்பட்டது. 2002ம் ஆண்டு, அப்பகுதி மக்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பின் காரணமாக இத்திட்டத்தை கைவிட்டார் ஜெயலலிதா.    2007ம் ஆண்டில், சுற்றுச் சூழலை கடுமையாக பாதிக்கும் இந்தத் திட்டத்தை கருணாநிதி மீண்டும் தொடங்கினார் இணைப்பு.   தூத்துக்குடி பகுதியின் மீண்டும் எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக, இத்திட்டத்தை கருணாநிதியும் கைவிட்டார்.

இந்த நெருக்கத்தின் அடிப்படையிலேதான், ரத்தன் டாடா, ஆ.ராசாவை வானளாவப் புகழ்ந்து, தன் கைப்பட கடிதம் எழுதுகிறார்.   டாடா நிறுவனத்துக்கு 2001 விலையில் 2008ல் ஸ்பெக்ட்ரம் (Dual license) ஒதுக்கீடு செய்த வகையில் மட்டும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 22,535.6 கோடி என்கிறது மதிப்பீடு.

slide-11-1024

Annexure_E_TATA_letter_Page_1

Annexure_E_TATA_letter_Page_2

ஆனால், வேதனை அளிக்கும் வகையில், 2ஜி வழக்கை விசாரிக்கும் சிபிஐ, டாடா நிறுவனத்தையோ, வோல்டாஸ் சொத்து குறித்தோ, போலிப் பாதிரி  ஜெகத் கஸ்பரின் தமிழ் மையம் குறித்தோ எந்த விசாரணையும் நடத்தவில்லை.   தனக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றையை ஜப்பானை சேர்ந்த டோக்கோமோ நிறுவனத்துக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்த ரத்தன் டாட்டா எவ்விதமான விசாரணைக்கும் உட்படுத்தப்படவில்லை.

Annexure_F_Tamil_NGO_audit

இப்படிப்பட்ட முடைநாற்றமெடுக்கும் ஊழலில் ஊறித் திளைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதி ஊழலைப் பற்றிப் பேசலாமா ?

இதையெல்லாம் சவுக்கு "சொன்னா ஒதப்பீங்க"

குறிப்பு 1

இந்த உரையாடல் வெளியானதும் அதிமுக அரசு என்ன செய்திருக்க வேண்டும் ?  உடனடியாக ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து, டாடா நிறுவனத்தோடு, திமுக அரசு செய்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் விசாரிக்க உத்தரவிட்டிருக்க வேண்டும்.   ஜாபர் சேட் மீது புதிய வழக்கை பதிவு செய்திருக்க வேண்டும்.  ஆனால், உரையாடல்கள் வெளியாகி இரண்டு மாதங்கள் கடந்தும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.   இது நியாயமாக செய்ய வேண்டிய நடவடிக்கை என்பது மட்டுமல்ல..... அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுக்கு இது எத்தகைய ஆதாயத்தை அளிக்கும் ?  ஆனால், எதுவுமே செய்யாமல் இருப்பதால்தான், ஜெயலலிதா அரசு முட்டாள் அரசு.

குறிப்பு 2

சவுக்கு தளத்தை முடக்குவதன் மூலம், எப்படியாவது திமுகவை காப்பாற்றி விட வேண்டும் என்று, தனக்கு விசுவாசமான, மாநகர உளவுத்துறை இணை ஆணையர் வரதராஜுவின் துணையோடு, புதிய வழக்கை பதிவு செய்து, காவல்துறையை கைது வேட்டையில் ஈடுபட அனுப்பி வைத்திருக்கும் நீதி நாயகர் சி.டி.செல்வத்துக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.

"திமுகவுக்கு நான் ஹெல்ப் பண்றேனோ இல்லையோ....          நீங்க நல்லா பண்றீங்க சார்..."

சவுக்கு தளத்தை பத்து நாட்களில் முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

$
0
0

savukku_image

சவுக்கு தளத்தை முடக்க, சென்னை உயர்நீதிமைன்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் பல்வேறு நபர்கள் இணைந்து சதிச்செயலில் ஈடுபட்டதும், அதன் விளைவாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, சி.டி.செல்வம் முன்பு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்ததும், சவுக்கு வாசகர்கள் அறிந்ததே.

அதன் தொடர்ச்சியாக இன்று இந்த வழக்கு, நீதிபதி சி.டி.செல்வம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தள வடிவமைப்பாளர் முருகைய்யன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், நீதிபதி சி.டி.செல்வம் குறித்தே, சவுக்கு தளத்தில் பல்வேறு கட்டுரைகள் வந்திருப்பதால், சி.டி.செல்வம் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று, தலைமை நீதிபதியிடம் புகார் மனு அளிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த மனு நிலுவையில் இருக்கையில் சி,டி.செல்வம் இந்த வழக்கை விசாரிப்பது முறையல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது.

நான் அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மாட்டேன் என்றும், தற்போது தீர்ப்பு தரப்போகிறேன் என்றும் கூறினார் சி.டி.செல்வம்.  முருகைய்யன் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், இப்படி ஒரு மனு நிலுவையில் இருக்கையில், தீர்ப்பு வழங்குவது, முறையற்ற செயல், அது நீதிப் பிறழ்வாகும் என்று வாதிட்டார்.  அதை காதிலேயே வாங்கிக் கொள்ளாத சி.டி.செல்வம், சவுக்கு தளத்தை, சென்னை மாநகர காவல்துறை பத்து நாட்களுக்குள், முடக்கியே தீர வேண்டும் என்று உத்தரவிட்டார்.  சவுக்கு தளத்தால் பாதிக்கப்பட்டோர் யாராக இருந்தாலும், இது தொடர்பாக புகார் அளிக்கலாம் என்றும், ஏற்கனவே ஐந்து வழக்கறிஞர்கள் புகார் அளித்திருப்பதாகவும் அதையும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

சவுக்கு தளம் நடத்தப்படும் நோக்கம் குறித்து, வாசகர்கள் நன்கு அறிவீர்கள்.  உங்களுக்கு மீண்டும் விளக்க வேண்டியதில்லை.  நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படும் இத்தளத்தை, முடக்க, நூறு சி.டி.செல்வங்கள் வந்தாலும் அது முடியாது.  savukku.net முடக்கப்பட்டால், இது போன்ற பெயரில் நூறு தளங்கள் தொடங்கப்படும்.   முன்னை விட பெரிய வீச்சோடு இத்தளம் செயல்படும்.   இது உறுதி.

இத்தகைய நெருக்கடியான சூழலில், இத்தளம் தொடர்ந்து செயல்பட ஒரே காரணம், அன்பான உறவுகளான வாசகர்களின் தொடர்ந்த ஆதரவும் அன்பும் மட்டுமே.  இந்த அன்புக்கு, சவுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.   இதற்கு பிரதிபலனாகத்தான், இத்தளம் தொடர்ந்து நடத்தப்படும்.

இது நீதிக்கான போர்.  இதில் நாம் நிச்சயம் வெல்வோம். இறுதி வெற்றி நமதே....

Kamarajlkl

மிஸ்டர் சி.டி.செல்வம்......

பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ.....!!!!!!

அன்பார்ந்த சி.டி.செல்வம்....

$
0
0

உங்களை நீதிபதி சி.டி.செல்வம் என்று ஏன் அழைக்கவில்லை தெரியுமா ? நீதிபதிகளாக நடந்து கொள்பவர்களைத்தான் நீதிபதி என்று அழைக்க முடியும். திமுகவின் வட்டச் செயலாளர் போல நடந்து கொள்பவர்களை நீதிபதி என்று அழைக்க இயலாது.

TOI_0026

முதலில், உங்கள் தீர்ப்பை படித்து விடுவோம். பிறகு விவாதிப்போம்.

இடைக்கால மனு எண் 3 / 2014 தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, இந்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பிக்கிறது.

ஏற்கனவே, இந்த நீதிமன்றம் 07.01.2014 அன்று அளித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்ததைப் போல, தகவல் தொழில் நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதலும், துஷ்பிரயோகம் செய்து ஒரு நபரை அவமானப்படுத்துதல் மற்றும் ஆபாச படங்களை ஏற்றுதல் குறித்து இந்த வழக்கில் மனுதாரர் (மகாலட்சுமி) முக்கியமான பிரச்சினையை எழுப்பியுள்ளார். அவதூறான கட்டுரைகளும் இந்த வகையில் சேரும்.

இந்த விஷயத்தின் முக்கியத் தன்மை கருதி, வழக்கறிஞர்களை, இந்த விஷயத்தை அணுகுவது குறித்து ஆலோசனைகளை வழங்குமாறு கேட்கப்பட்டிருந்தது. அதே போல இவ்வழக்கின் தீவிரத்தன்மை கருதி, மூத்த வழக்கறிஞர் பி.குமார் அவர்களை, இந்த வழக்கில் உதவுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அவர் மிக நீண்ட வாதங்களை எடுத்து வைத்தார். அவர் எடுத்து வைத்த விஷயங்களும், மற்ற விஷயங்களும், இந்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் எடுத்துரைக்கப்படும். மனுதாரர் எடுத்து வைத்த ஆவணங்களை வைத்துப் பார்க்கையில், இந்த தளத்தின் பின்னணியில் உள்ள நபர் / நபர்கள் மனுதாரருக்கு சொல்லோன்னா துயரத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இதைத் தவிரவும், இந்த வழக்கில் சவுக்கு தளத்தில் வெளியான பல்வேறு விஷயங்கள் இந்நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன.   அவற்றுள், தனி நபர் சுதந்திரத்தில் குறுக்கீடு, பலரின் நற்பெயருக்கு களங்கம், என்று பலருக்கு வேதனை ஏற்படுத்தியுள்ளது. இந்த தளத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து வழக்கறிஞர்கள், இந்நீதிமன்றத்தின் முன் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளனர். ஏறக்குறைய அரை டஜனுக்கும் குறையாத நீதிபதிகள், பல வழக்கறிஞர்கள், பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோர் இந்த விஷம் கக்கும் தளத்தால் தளத்தால் கடுமையாக தாக்கப்பட்டு, பாதிக்கப்பட்டள்ளனர். இது அனைத்தும், இத்தளத்தை நடத்துவது யார் என்பதை வெளியில் சொல்லக் கூட துணிச்சல் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் இணைய தளம் நடத்த வழிவகை செய்யும் நிறுவனங்கள், இணைய தளம் நடத்துவதற்கு, அந்த இணையதளங்களை நடத்துபவர்கள் அவர்களின் விபரங்களையும், முகவரிகளையும் வழங்க வேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளனர்.   ஆனால், இந்த நேர்வை பொறுத்தவரை, பெயரும், முகவரியும் தவறாக வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தளத்தில் உள்ள விஷயங்கள் எந்த அளவுக்கு அவமானகர மானதாகவும், வெறுக்கத் தக்கனவாகவும், ஆபத்தானதாகவும் உள்ளதென்றால், அவற்றை இந்த நீதிமன்றத்தில் ஆணையில் எழுத முடியாத அளவுக்கு உள்ளது. இது போன்ற தளங்கள் தொடர்ந்து நடக்க அனுமதிக்கப்பட்டால் சமுதாயத்துக்கு இதனால் நேரும் தீங்கை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.   காதலிப்பவர்கள் திருமணம் புரிய மாட்டார்கள்.   பல தம்பதிகள் பிரிந்து போவார்கள், பல குழந்தைகள், பெற்றோரோடு இணைந்திருப்பதற்கு பதிலாக யாரோ ஒரு பெற்றோரின் கையைப் பிடித்துக் கொண்டு நிற்கும் அவலம் நேரிடும்.   இது போல சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இந்த இடைக்கால உத்தரவின் மூலமாக, குழு ஒருங்கிணைப்பாளர் (இணைச் செயலாளர்) இணைய சட்டப் பிரிவு, தகவல் தொழில் நுட்பத் துறை, தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம், மத்திய அரசு, எலெக்ட்ரானிக் நிகேதன், எண் 6, மத்திய அரசு அலுவலக வளாகம், புது தில்லி என்பவருக்கு, இந்த தளம் www.savukku.net இந்த ஆணை கிடைத்த உடன், முழுமையாக தடை செய்ய உத்தரவிடுகிறது.

மாநில அரசு தலைமை வழக்கறிஞர் கவலை தெரிவித்தபடி, அவர் கூறிய வாதங்களை பதிவு செய்து கொண்டு, இந்த நீதிமன்றம் மேற்கூறிய உத்தரவை பிறப்பிக்கிறது. தலைமை வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க சிறப்புப் படை நியமிக்கப்பட்டிருப்பதாகவும், குற்றவாளி எங்கிருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த வழக்கின் புலன் விசாரணை தீவிரமாக நடைபெறும் என்றும் கூறியதை இந்நீதிமன்றம் பதிவு செய்து கொள்கிறது.

இந்த வழக்கில் பிறப்பித்துள்ள இந்த இடைக்கால உத்தரவோடு இப்போதைக்கு இந்த விவகாரம் முடிவடைகிறது. ஆனால், இந்த தளத்தில் உள்ள ஒவ்வொரு மோசமான கட்டுரையும், தனித் தனி புகார்கள் அடிப்படையில் தனித்தனி வழக்குகள் பதிவு செய்ய உகந்தது.   உத்தரவு நிலுவையில் இருப்பதனால், மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து வரலாம். அதை இந்த நீதிமன்றம் விசாரிக்கும்."

இதுதான் உங்களின் தீர்ப்பு.   இப்போது விவாதிப்போம். அன்பார்ந்த சி.டி.செல்வம் அவர்களே.   மகாலட்சுமி அளித்த புகாரின் மீதான உங்கள் கரிசனம் உண்மையிலேயே புல்லரிக்க வைக்கிறது. மகாலட்சுமி அளித்த புகார் என்ன ? சவுக்கு தளத்தில், அவர் குறித்து வெளிவந்துள்ள, மூன்று கட்டுரைகளை நீக்க வேண்டும் மற்றும் தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் கீழ், சவுக்கு தளத்தை நடத்துபவர் மற்றும், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றும் அவர் தம்பி மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே. மகாலட்சுமி என்பவர் யாரென்றே தெரியாது. அவர் குறித்த தகவல்கள் எப்போது வருகிறதென்றால், அவர், ஸ்கை வாக்கில் தோழிகளோடு இரவு உணவு அருந்த வந்த அவரது தம்பி மனைவியை தன் குடும்பத்தினரோடு சேர்ந்து, பொது இடத்தில் அடித்து உதைத்த போதுதான். பெரியார் குடும்பத்தைச் சேர்ந்த அந்த பெண்ணை, மகாலட்சுமி பொது இடத்தில் அனைவர் முன்னிலையிலும் அடித்து உதைத்ததோடு நிற்கவில்லை. அது குறித்து மறுநாள் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற அந்தப் பெண்ணை, வழக்கறிஞர் என்ற தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, மீண்டும் மிரட்டுகிறார். காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்ய விடாமல், வழக்கறிஞர்களை அழைத்து சென்று கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்.

பாதிக்கப்பட்ட பெண், புதிய தலைமுறையில் பணியாற்றுவதால், அவரும் அழுத்தத்தை அளித்து, எப்ஐஆர் பதிவு செய்ய வைக்கிறார். ஒரு நேர்மையான காவல் ஆய்வாளர், நாகப்பட்டினத்துக்க தப்பிச் சென்ற, மகாலட்சுமியின் தம்பி மற்றும் தாயாரை, கைது செய்து நீதிமன்றம் அழைத்து வருகிறார். நீதிமன்றத்தில் அவர்கள் இருவரையும் நீதித்துறை நடுவர் முன்னிலையில் நேர் நிறுத்துகையில், நூறு வழக்கறிஞர்களை அழைத்து சென்று, நீதித்துறை நடுவரை மிரட்டி, அவர்களை புழல் சிறைக்கே எடுத்து செல்ல விடாமல், மிரட்டி ஜாமீன் பெறுகிறார் மகாலட்சுமி.   இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் மகாலட்சுமியைப் பற்றியே தெரிய வருகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரைகள்தான், சூது கவ்வும் மற்றும் பால் கனகராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் அடாவடி ஆகிய கட்டுரைகள்.

மகாலட்சுமி ஒரு ஆணை விரும்புகிறார்.   ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற மகாலட்சுமி மற்றொரு ஆணை விரும்புவது அவரது தனிப்பட்ட விருப்பம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படி மகாலட்சுமி விரும்பும் அந்த ரூபன் என்ற அந்த நபருக்கு திருமணமாகிறது. அந்த திருமணத்தை மகாலட்சுமி விரும்பவில்லை. அதை எப்படியாவது முறிக்க வேண்டும் என்று முயல்கிறார். அதுவும் அவரது தனிப்பட்ட விருப்பமே.   ஆனால், அந்த திருமணத்தை முறிப்பதற்காக, ரூபனை திருமணம் செய்து கொண்ட பெண் மீது இல்லாத ஒரு உறவை இருப்பதாக குற்றம் சாட்டுகிறார். கல்லூரியில் பணியாற்றும் அந்தப் பெண், தன் மாணவனோடு உறவில் இருப்பதாக ஆதாரங்களை ஜோடிக்கிறார் மகாலட்சுமி.   அந்தப் பெண், ஒரு தீவிரமான கிறித்துவ பக்தை.   தன்னை கடவுள் கணவனுக்கு உண்மையாக இருக்கிறாரா என்று சோதிக்கிறார் என்று இறைவனை வேண்டும் அந்தப் பெண், இந்த சோதனைகள் அனைத்தையும் தாங்கிக் கொள்கிறார். எந்த ஆதாரங்களும் எடுபடாமல் போனதால், இறுதியாக அந்த மாணவனிடம் பணம் கொடுத்து, அந்தப் பெண்ணோடு உறவு இருப்பதாக, குடும்ப நல நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்ல வைக்கிறார்.

நீதிமன்றத்திலேயே கதறி அழுத அந்தப் பெண் இனியும் பொறுக்க முடியாது என்று, விவாகரத்து அளிக்க சம்மதிக்கிறார்.   அந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம் எந்தப் பெண்ணுக்கும் நிகழலாம். ஆண் பெண் உறவு என்பது, தனி நபர் விருப்பம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே நேரத்தில், சம்பந்தமே இல்லாத ஒரு அப்பாவிப் பெண்ணை, தன்னுடைய விருப்பம் நிறைவேற வேண்டும் என்பதற்காக, அவமானப்படுத்தி, சிறுமைப்படுத்தி, நீதிமன்றத்தை ஏமாற்றியது தனி நபர் விஷயம் அல்ல என்பதும் உண்மை. மகாலட்சுமியால் தனது வாழ்க்கையை தொலைத்து, அவமானப்படுத்தப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்டு, புலம்பித் தவித்து கண்ணீர் விடும் ஒரு அபலைப் பெண்ணுக்கு என்ன நியாயத்தை செய்து விட முடியும் ? அவள் வாழ்க்கையை நாம் திருப்பித் தர முடியுமா ? அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீருக்கு விடையாக எழுதப்பட்டதே இரண்டு பேர் ஏழு காதல் கட்டுரை. இந்தக் கட்டுரையால் மகாலட்சுமி கோபமடைந்தது நியாயமான விஷயமே. அவர் தனிப்பட்ட வாழ்வை குறி வைத்து எழுதப்பட்ட கட்டுரை. இதற்காக அவர் எழும்பூர் நீதிமன்றத்தில், சவுக்கு இணையதளம் மற்றும், அவர் தம்பி மனைவி மீது மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.   இதுதான் சட்டரீதியாக எடுக்கக்கூடிய நடவடிக்கை.

ஆனால், இது தொடர்பாக கிரிமினல் வழக்கு பதிவு செய்யவே முடியாது. மகாலட்சுமி, ஒரு வழக்கறிஞர் என்ற தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, கிரிமினல் வழக்கு பதிய வைக்கிறார். வழக்கு பதிவு செய்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில்தான் வழக்கு நீதிபதி சி.டி.செல்வம் முன்பு விசாரணைக்கு வருகிறது.

மகாலட்சுமி எப்படிப்பட்டவர் என்று தெரியுமா ? சவுக்கு தளத்தில் உள்ள கட்டுரையை எடுக்க வேண்டும் என்றால், 50 லட்ச ரூபாய் தர வேண்டும் என்று அடையாளம் தெரியாத ஒரு நபர், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மகாலட்சுமியை மிரட்டினாராம். அவர் பயந்து போய், காவல்துறையில் புகார் செய்தாராம். மிரட்டிய அந்த நபர், ஆச்சிமுத்து சங்கர், மற்றும் ஐந்து பேர் அனுப்பிய நபராம். அந்த ஐந்து பேரும், மகாலட்சுமிக்கு பிடிக்காத அவர் உறவினர்கள். அவரின் முதல் கணவர், அவர் தம்பி, மகாலட்சுமியின் தம்பி மனைவி, சன் டிவி ராஜா மீது புகார் கொடுத்த அகிலா, அவர் நண்பர் கண்ணன் ஆகியோர் தான் அந்த ஐந்து பேர். இதன் பேரிலும் காவல்துறை தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. இது வரை சவுக்கு தளம் மீதும், மகாலட்சுமியின் தம்பி மனைவி மீதும் 31 புகார்களை அளித்துள்ளார் மகாலட்சுமி. சவுக்கு தளத்தை விட, குடும்பத் தகராறை தீர்த்துக் கொள்வதில், மகாலட்சுமி முனைப்பாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  சன் டிவியில் செய்தி வாசித்துக் கொண்டே, வழக்கறிஞராக பணியாற்றுபவர்.  இப்படி பணியாற்றுவது, வழக்கறிஞர்கள் சட்டத்தின்படி குற்றம்.   மகாலட்சுமி வழக்கறிஞராக பணியாற்றுவதை தடை செய்யும் அளவுக்கு சீரியசான குற்றம். இது குறித்து, தற்போது பார் கவுன்சிலில் மகாலட்சுமி மீது விசாரணை நடைபெற்று வருகிறது. 

சவுக்கு தளத்தில் தொடர்ந்து நீதிபதிகளைப் பற்றி எழுதப்பட்டு வந்தது அறிந்து கடுமையான எரிச்சலில் இருந்த பல நீதிபதிகள், சவுக்கு தளத்தை முடக்க எடுத்த முயற்கிகளை நீங்களும், வழக்கறிஞர் சங்கரசுப்புவும் சேர்ந்து, மகாலட்சுமியை ஒரு கருவியாக பயன்படுத்தத் தொடங்கினீர்கள் என்பது நான் அறியாதது இல்லை செல்வம் அவர்களே.   மகாலட்சுமி குறித்து சவுக்கு தளத்தில் வந்த கட்டுரை மிக மிக சாதாரணமானது. இணைய தளத்தில் பெண்களுக்கு எத்தனை இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன தெரியுமா செல்வம் ? முகநூலில் ஆபாச படங்களை வெளியிடுவதிலிருந்து, பர்சனல் மின்னஞ்சல்களை வெளியிடுவது வரை ஏராளமான நெருக்கடிகளை பெண்கள் சந்தித்தே வருகிறார்கள். அந்தப் புகார்களின் மீது சென்னை மாநகர காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அமைதியாக வரும் பெண்களிடம், பொறுமையை வளர்த்துக் கொள்ளச் சொல்லி அறிவுரை கூறி வருகிறது என்பதும் உங்களைப் போன்ற கற்றறிந்த அறிஞர் அறியாதது அல்ல.

உண்மையிலேயே இணைய தளத்தில் பெண்கள் குறித்த அக்கறை உங்களுக்கு இருக்குமானால் என்ன செய்திருக்க வேண்டும் நீங்கள் ? இது போல எத்தனை புகார்கள் உங்களிடம் நிலுவையில் இருக்கிறது என்பதை காவல்துறையிடம் கேட்டிருக்க வேண்டுமா இல்லையா ? ஆனால் உங்கள் நோக்கம் என்ன என்பது உங்கள் நடவடிக்கைகளிலும், உங்கள் தீர்ப்பிலும் வெளிப்பட்டுள்ளது.

அனைத்து வழக்குகளும், நீதிபதியின் முன் பட்டியலிடப்படும். சாதாரணமாக ஒரு நீதிபதியின் முன்பு, 100 அல்லது 150 வழக்குகள் பட்டியலிடப்படும். அன்றைய வேலைப்பளுவைப் பொறுத்து, சில வழக்குகள் விசாரிக்கப்படாமல் செல்வது கூட உண்டு. ஆனால், இந்த வழக்கை தினமும் 2.15 மணிக்கு விசாரிக்குமாறு தொடர்ந்து பட்டியலிட உத்தரவிட்டீர்கள். 2.15 மணிக்கும், வேறு சில வழக்குகளோடு இது சேர்ந்து வந்ததால், ஒரு நாள் விசாரிக்க முடியாமல் போனது. அதன் பிறகு, இந்த வழக்கை தினமும் 12 மணிக்கு விசாரிப்பது போல தனி வழக்காக பட்டியலிட உத்தரவிட்டீர்கள். இப்படியெல்லாம் நீங்கள் எந்த வழக்கையும், தனி வழக்காக விசாரித்த வரலாறே இல்லை. (திமுக மூத்த வழக்கறிஞர்கள் எடுத்து வரும் பசையான வழக்குகளை தவிர்த்து).

அப்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் ஒரு நாளில்தான், நாளை, சவுக்கு வடிவமைப்பாளரையும், சவுக்கு தளம் நடத்துபவரையும் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டீர்கள். அரசுத் தரப்பில் ஒரு வாரம் அவகாசம் கேட்டும் அவசர அவசரமாக மறுத்து, நாளையே கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டீர்கள். அப்படி அவசர அவசரமாக உத்தரவிட வேண்டிய காரணம், சவுக்கு தளத்தின் வசம் ஜாபர் டேப்புகள் சிக்கிய விபரம், உங்களுக்கு திமுக தலைமை மூலமாக சொல்லப்பட்டது. ஒரு தளத்தில் வரும் கட்டுரைக்கு தள வடிவமைப்பாளர் எந்த வகையில் பொறுப்பாவார் செல்வம் ? உங்கள் உத்தரவு எப்படி இருக்கிறது தெரியுமா ? புதிதாக கட்டிய வீட்டில் ஒரு கொலை நடக்கிறது என்றால், அந்த வீட்டை கட்டிய மேஸ்திரியை கைது செய்ய உத்தரவிட்டது போலத்தான் இதுவும். அந்த அளவுக்கா உங்கள் ஆத்திரம் உங்கள் அறிவையும் கண்களையும் மறைத்து விட்டது ? முருகைய்யன் கைது செய்யப்பட்ட பிறகு, ஒவ்வொரு நாளும், இன்னொரு நபரை ஏன் கைது செய்யவில்லை என்று, உங்கள் சேம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை அழைத்து, தினமும் 'ஏன் அவனைக் கைது செய்யவில்லை..... துப்பு கெட்ட காவல்துறை' என்று நீங்கள் கடிந்து கொண்டதெல்லாம் தெரியும்.

உங்களைப் பற்றி சவுக்கு தளத்தில் எத்தனையோ கட்டுரைகள் வந்திருக்கின்றன. சட்டம் படித்த உங்களுக்கு Nemo iudex in causa sua என்ற லத்தீன் நியதி தெரிந்திருக்கும். no-one should be a judge in his own cause. தன்னுடைய வழக்குக்கு யாரும் தானே நீதிபதியாக முடியாது. உங்களைப் பற்றி பல கட்டுரைகள் வந்திருந்தும், துளியும் வெட்கமேயின்றி, நீங்களே இந்த வழக்கை விசாரித்தீர்கள். உங்களுக்குத்தான் வெட்கமே இல்லை என்பதால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, அநியாயமாக 21 நாட்கள் சிறையில் இருந்த முருகைய்யன் நீங்கள் இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று தலைமை நீதிபதியிடம் மனு அளித்தார். அந்த மனுவும் உங்கள் பார்வைக்கு தலைமை நீதிபதியால் அனுப்பப்பட்டது. ஆனாலும் நீங்கள் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்தே வந்தீர்கள்.

இந்த நிலையில், நீங்கள் இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று முருகைய்யன் சார்பில் உங்கள் முன்னாலேயே அந்த மனு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை ஏற்காமல் தள்ளுபடி செய்ய உங்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. ஆனால், அப்படி தள்ளுபடி செய்வதற்கான காரணங்களை நீங்கள் உங்கள் தீர்ப்பில் விவாதிக்க வேண்டுமா இல்லையா ? ஒரே வரியில், " இடைக்கால மனு எண் 3 / 2014 தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து" என்று எழுதி விட்டு, எந்த விளக்கமும் அளிக்காமல் தீர்ப்பெழுதுவதற்கு பெயர் என்ன தெரியுமா ?

கோழைத்தனம். அந்த மனுவை ஏன் தள்ளுபடி செய்கிறேன் என்ற காரணங்களைப் பதிவு செய்யக் கூட துணிச்சல் இல்லை உங்களுக்கு.   முருகைய்யன் சார்பில் வாதிட்ட, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனை பேசவே விடாமல், அவர் பேசுபதை காது கொடுத்து கேட்காமல் ஒதுக்கியதும் உங்கள் கோழைத்தனமே.

நீதிபதி சந்துருவோடு 'வாடா போடா' என்று உரையாடும் அளவுக்கு நெருக்கமான வழக்கறிஞர் ஒருவர் இருக்கிறார். அவர் சந்துரு முன்பு தனது வழக்குகள் வந்தால், வேறு வழக்கறிஞரை வைத்து வாதாட சொல்வார். "சார்... அவர் உங்கள் நண்பர்தானே... ஏன் நீங்களே வாதாடக்கூடாது" என்று கேட்டால் என் நண்பர் என்பதற்காகவே நியாயமான வழக்கைக் கூட டிஸ்மிஸ் செய்து விடுவான். அதற்காகத்தான் வேறு வழக்கறிஞரை அனுப்புகிறேன் என்று கூறுவார். நீதிபதி என்றால் இப்படி இருக்க வேண்டும் செல்வம்.

நேரடியாக நீங்களே இந்த தளத்தை தடை செய்ய இயலாது என்பதால், நீங்கள், வழக்கறிஞர்களின் துணையை நாடினீர்கள்.   சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள பல நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் இந்த தளத்தின் விசிறிகள் என்பது உங்களுக்குத் தெரியாது செல்வம்.

உங்களைப் போன்ற ஊழல் பேர்விழிகளும், அடாவடி செய்யும் சங்கரசுப்பு போன்ற பேர்விழிகளுக்கும்தான் சவுக்கை பிடிக்காது. நியாயமாக தொழில் செய்யும் பல நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களுக்கு சவுக்கு தளத்தை பிடிக்கவே செய்யும். குறிப்பாக, நீதிபதிகளின் ஊழல் விவகாரங்களை சவுக்கு அம்பலப்படுத்துகையில் வெகுவாக ரசிக்கவே செய்கிறார்கள்.

அடுத்ததாக, "இதைத் தவிரவும், இந்த வழக்கில் சவுக்கு தளத்தில் வெளியான பல்வேறு விஷயங்கள் இந்நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன.   அவற்றுள், தனி நபர் சுதந்திரத்தில் குறுக்கீடு, பலரின் நற்பெயருக்கு களங்கம், என்று பலருக்கு வேதனை ஏற்படுத்தியுள்ளது. இந்த தளத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து வழக்கறிஞர்கள், இந்நீதிமன்றத்தின் முன் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளனர். ஏறக்குறைய அரை டஜனுக்கும் குறையாத நீதிபதிகள், பல வழக்கறிஞர்கள், பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோர் இந்த விஷம் கக்கும் தளத்தால் தளத்தால் கடுமையாக தாக்கப்பட்டு, பாதிக்கப்பட்டள்ளனர்." என்று கூறியுள்ளீர்கள்.

எது தனி நபர் சுதந்திரம் செல்வம் ? நீதிபதி நியமன ஆணை வந்த பிறகு அரசியல் கட்சித் தலைவரை சென்று பார்ப்பதா ? 120 நாட்கள் காவல்துறையை ஏமாற்றி தப்பி ஓடிய க்ரானைட் திருடன் துரை தயாநிதிக்கு முன் ஜாமீன் வழங்குவதா ? திமுக பிரமுகர் கேசிபி பழனிச்சாமியின் மகன் சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணையே இன்றி இடைக்காலத் தடை வழங்குவதா ? இப்படி நீதியை விலைக்கு விற்று, கருணாநிதியின் காலடியிலோ, காசு உள்ளவன் காலடியிலோ நீங்கள் அடகு வைப்பீர்கள்... அது குறித்து ஊடகங்கள் எழுதினால் நீதிமன்ற அவமதிப்பு என்று மிரட்டுவீர்கள்... அது பற்றி ஒரு இணையதளம் எழுதினால் தடை செய்வீர்களா ? உங்களுக்கெல்லாம் பெயரே இல்லை. பிறகு என்ன நற்பெயர்.   அரை டஜனுக்கும் குறையாத நீதிபதிகளைப் பற்றி எழுதியதாக கூறியுள்ளீர்கள்.   சிபிஐ பறிமுதல் செய்த சுரானா கார்பரேஷனின் 400 கிலோ தங்கத்தை பணத்தை வாங்கிக் கொண்டு விடுவிக்க முயன்ற சி.எஸ்.கர்ணனைப் பற்றி எழுதுவது குற்றமா ? அப்பாவி நீதிமன்ற ஊழியரைப் பார்த்து உன் மீது காவல் நிலையத்தில் எஸ்.சி எஸ்டி புகார் கொடுப்பேன் என்று மிரட்டும் கர்ணணைப் பற்றி எழுதுவது குற்றமா ?   மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் நீதிபதி தனபாலன், 10 கோடி ரூபாய் செலவில் தன் மகனுக்கு எப்படி திருமணம் செய்தார் என்று எழுதுவது குற்றமா ? நீதிபதி தனபாலன் திருமணத்துக்கு வரவேண்டும் என்பதற்காகவே, சென்னையில் மாவட்ட நீதிபதிகளுக்கு பயிற்சி அரங்கம் ஏற்பாடு செய்த மோசடியைப் பற்றி எழுதுவது குற்றமா ? கையில் ஒரு வழக்கும் இல்லாத நீதிபதி தனபாலனின் மகன் பிரபு, 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆடி கார் எப்படி வாங்கினார் என்று எழுதுவது குற்றமா ? பல்வேறு வழக்குகளின் பணத்தை வாங்கிக் கொண்டு சுற்றுச் சூழலுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதி எலிப்பி தர்மாராவைப் பற்றி எழுதுவது குற்றமா ?   கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாமல், தங்களுக்கு தெரிந்தவர்களை அரசு ஊழியர்களாக நியமித்த அத்தனை நீதிபதிகளையும் பற்றி எழுதுவது குற்றமா ?

ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளைப் பற்றி இந்தத் தளத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்று அங்கலாய்க்கிறீர்களே செல்வம்.... உலகத்திலேயே ஊழல் பேர்விழிகள் இந்த அதிகாரிகள்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், உங்களைப் போன்ற நீதிபதிகளோடு ஒப்பிடுகையில் அவர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது.   அதிகாரிகளை விசாரிக்கவாவது அமைப்புகள் இருக்கின்றன. நீதிமன்றங்கள் இருக்கின்றன. ஆனால் உங்களைப் போன்ற ஊழல் நீதிபதிகளை விசாரிக்க அல்ல... விமர்சிக்கக் கூட வழியில்லாத அவலச் சூழல்தான் இங்கே நிலவுகிறது. கட்டுப்பாடோ, விமர்சனமோ இல்லாத அதிகார மையங்கள் ஜனநாயகத்துக்கு மிகப் பெரும் ஆபத்து. அப்படிப்பட்ட அதிகார மையங்களாகத்தான் உங்களைப் போன்ற நீதிபதிகள் விளங்குகிறீர்கள்.

அடுத்ததாக "இது அனைத்தும், இத்தளத்தை நடத்துவது யார் என்பதை வெளியில் சொல்லக் கூட துணிச்சல் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் இணைய தளம் நடத்த வழிவகை செய்யும் நிறுவனங்கள், இணைய தளம் நடத்துவதற்கு, அந்த இணையதளங்களை நடத்துபவர்கள் அவர்களின் விபரங்களையும், முகவரிகளையும் வழங்க வேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளனர்.   ஆனால், இந்த நேர்வை பொறுத்தவரை, பெயரும், முகவரியும் தவறாக வழங்கப்பட்டுள்ளன." என்று கூறுகிறீர்கள்.

யார் நடத்துவது என்று விபரங்கள் இல்லாதபோதே தளத்தை வடிவமைத்தவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடுகிறீர்கள்.   நடத்துபவர் யாரென்று தெரிந்தால் அவனை என்கவுன்டரில் சுட உத்தரவிடமாட்டீர்கள் ?

அடுத்ததாக "இந்தத் தளத்தில் உள்ள விஷயங்கள் எந்த அளவுக்கு அவமானகரமானதாகவும், வெறுக்கத்தக்கனவாகவும், ஆபத்தானதாகவும் உள்ளதென்றால், அவற்றை இந்த நீதிமன்றத்தில் ஆணையில் எழுத முடியாத அளவுக்கு உள்ளது. இது போன்ற தளங்கள் தொடர்ந்து நடக்க அனுமதிக்கப்பட்டால் சமுதாயத்துக்கு இதனால் நேரும் தீங்கை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.   காதலிப்பவர்கள் திருமணம் புரிய மாட்டார்கள்.   பல தம்பதிகள் பிரிந்து போவார்கள், பல குழந்தைகள், பெற்றோரோடு இணைந்திருப்பதற்கு பதிலாக யாரோ ஒரு பெற்றோரின் கையைப் பிடித்துக் கொண்டு நிற்கும் அவலம் நேரிடும்.   இது போல சொல்லிக் கொண்டே போகலாம்."

அவமானகரமானதும், வெறுக்கத்தக்கதும், ஆபத்தானதும் எது தெரியுமா செல்வம் ?   நீங்கள் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று மனு அளித்துள்ளேன் என வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடம் நேரடியாக மனுவாக தெரிவித்தும், அந்த நீதிபதி தொடர்ந்து அந்த வழக்கை விசாரிப்பதோடு அல்லாமல், ஒரு கட்டுரை சரியில்லை என்பதற்காக ஒட்டுமொத்த தளத்தையும் தடை செய்வதே.   இது ஆபத்தானது மட்டுமல்ல. ஆபாசமானதும் கூட.  கூடுதலாக அறிவில்லாததும் கூட.   முகநூலில் ஒரு அவதூறு பதிவு வந்ததற்காக, முகநூலை தடைசெய்வதற்கு ஒப்பாகும் இது.

இணையத்தில் இன்று 42 லட்சம் தளங்கள், வெறும் நீலப்படங்களை மட்டுமே காட்டிக்கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா செல்வம் ?   அமெரிக்காவே தடை செய்தும் கூட, குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாச படங்கள் வைத்துள்ள இணையதளங்களும் செயல்பாட்டில் இருக்கத்தான் செய்கிறது. அதை விடவா சமுதாயத்துக்கு சவுக்கு தளத்தால் தீங்கு நேர்ந்து விடப் போகிறது ? அந்த தளங்கள் எத்தகைய தீங்கை ஏற்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா ? அத்தகைய ஆபாச தளங்களை கட்டுப்படுத்த என்றாவது முயன்றிருக்கிறீர்களா செல்வம் ? அதை விடவா சவுக்கு தளம் ஆபத்தானது ?

அடுத்ததாக நீங்கள் சொல்லியிருக்கும் விஷயம்தான் மிகுந்த நகைச்சுவையானது. "காதலிப்பவர்கள் திருமணம் புரிய மாட்டார்கள்.   பல தம்பதிகள் பிரிந்து போவார்கள், பல குழந்தைகள், பெற்றோரோடு இணைந்திருப்பதற்கு பதிலாக யாரோ ஒரு பெற்றோரின் கையைப் பிடித்துக் கொண்டு நிற்கும் அவலம் நேரிடும்.   இது போல சொல்லிக் கொண்டே போகலாம்." இது போன்ற கிறுக்குத்தனமாக, முட்டாள்த் தனமான, அரை வேக்காட்டுத் தனமான, அறிவில்லாத பகுதிக்கு எந்த விளக்கமும் விரும்பவில்லை.   ஆனால், சவுக்கு தளத்தின் மீது உங்களுக்கு இருந்த கட்டுப்படுத்த முடியாத கோபத்தை இந்த பகுதி வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

"இந்த வழக்கில் பிறப்பித்துள்ள இந்த இடைக்கால உத்தரவோடு இப்போதைக்கு இந்த விவகாரம் முடிவடைகிறது. ஆனால், இந்த தளத்தில் உள்ள ஒவ்வொரு மோசமான கட்டுரையும், தனித் தனி புகார்கள் அடிப்படையில் தனித்தனி வழக்குகள் பதிவு செய்ய உகந்தது.   உத்தரவு நிலுவையில் இருப்பதனால், மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து வரலாம். அதை இந்த நீதிமன்றம் விசாரிக்கும்"

நீங்கள் விசாரித்துக் கொண்டிருக்கும் வழக்கில், சம்பந்தப்பட்ட நபருக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளது என்றதும், வெளிப்படையாகவே அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளீர்கள். எப்படியாவது அந்த நபரை கைது செய்ய வேண்டும் என்பதில் உங்களுக்கு உள்ள வெறி, " இந்த தளத்தில் உள்ள ஒவ்வொரு மோசமான கட்டுரையும், தனித் தனி புகார்கள் அடிப்படையில் தனித்தனி வழக்குகள் பதிவு செய்ய உகந்தது" இந்தப் பகுதியின் மூலம் வெளிப்படுகிறது.

ஒரு வழக்கில் முன்ஜாமீன் பெற்றாலும், அடுத்தடுத்து சவுக்கு தளத்தில் உள்ள 400 கட்டுரைகளுக்கு 400 வழக்கு பதிவு செய்யலாம்,

செய்ய வேண்டும் என்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.   கருணாநிதி இட்ட உத்தரவை நிறைவேற்றுவதில், இத்தனை முனைப்பு காட்டும் நீங்கள்தான் இந்த சமுதாயத்துக்கு மிகுந்த ஆபத்தானவர் செல்வம்.   இந்தத் தீர்ப்பை பயன்படுத்தி, பல்வேறு வழக்கறிஞர்களை தொடர்ந்து புகார் அளிக்கச் சொல்லுங்கள். இந்த தீர்ப்பின்படி காவல்துறை வழக்கு பதிவு செய்தே ஆக வேண்டும் என்பதற்கான உத்தரவுதான் இது என்று காவல்துறையிடம் கூறுங்கள். பதிவு செய்ய மறுத்தால், என் நீதிமன்றத்திலேயே வழக்கு தாக்கல் செய்யுங்கள் என்று நீங்கள் வழக்கறிஞர் சங்கரசுப்புவிடம் சொல்லியிருப்பதும் எங்களுக்கு தெரியும் செல்வம்.

1896798_707164405972128_1089508624_n1

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நீதிபதிகளின் பொறுப்பு (Portfolio) மாற்றப்படும். ஆனால், மார்ச் முதல் வாரத்தில் அனைத்து நீதிபதிகளின் பொறுப்பும் மாற்றப்பட்டும், நீங்கள் மட்டும் தொடர்ந்து வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்படும் 482 நீதிமன்றத்திலேயே இருக்க வேண்டும் என்று பொறுப்பு நீதிபதியான அக்னிஹோத்ரியிடம் மன்றாடி, இதைக் கேட்டுப் பெற்றீர்கள் என்பதும் தெரியும் செல்வம்.

உங்களைப் போல சவுக்கு பெரும் பணக்காரனல்ல செல்வம். பிறக்கும்போதே உங்களைப் போல வாயில் வெள்ளிக்கம்பியோடு பிறக்கவில்லை.   ராவ் பகதூர் சர் ஆரோக்கியசாமி தாமரைசெல்வம் பன்னீர்செல்வத்தின் பேரனில்லை. மிராசு பரம்பரையின் வாரிசு இல்லை.   செல்வச் செழிப்போடு வளர்ந்ததில்லை.

இந்தத் தளம் எப்படி உருவானது தெரியுமா சிரில் தாமரைச் செல்வம் ?   நிர்வாணப்படுத்தப்பட்டு, இரவு முழுவதும் போலீசிடம் அடி வாங்கி, கை விலங்கிட்டு வீதிகளில் இழுத்து செல்லப்பட்டு, மீண்டும் பொய் வழக்கில் கைதாகி, பழைய வழக்குக்காக தினந்தோறும் நீதிமன்றத்துக்கு அலைந்து, குடும்பத்தை கவனிக்க முடியாமல், நாள்தோறும் போராட்டம் நடத்தி உருவான தளம் இது.

செல்வச் செழிப்போடு வளர்ந்து, திமுக அரசில் அரசு வழக்கறிஞராகி, கருணாநிதி தயவில் நீதிபதியாகி, கருணாநிதி சொல்லும்படியெல்லாம் தீர்ப்பு எழுதும் உங்களுக்குத் தெரியாது இந்த தளத்தின் அருமை.

உங்களைப் போல கோடிக்கணக்கில் சொத்துக்கள் இல்லாமல் இருக்கலாம்.   ஆனால், லட்சக்கணக்கான சவுக்கு வாசகர்களின் அன்பும் ஆதரவும் உண்டு.   கடுமையாக ஆபத்துகளை சந்தித்து, உயிரைப் பணயம் வைத்து உருவாக்கிய தளம் இது.

ctsj_Page_1

ctsj_Page_2

ctsj_Page_3

ctsj_Page_4சி.டி.செல்வத்தின் சொத்துப் பட்டியல்

அத்தனை எளிதில் இந்த தளத்தை மரணிக்க விட்டு விட மாட்டோம். வாசகர்களும் விட மாட்டார்கள்.

அன்புடன்

 

சவுக்கு

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து.

 

கருணாநிதி எழுதிய உரை.

உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.

சவுக்கு இந்த ஜனநாயகத்தின் அச்சாணி என்பதை புரிந்து கொள்ளுங்கள்

அடக்குமுறை அச்சாரம் - தினமணி தலையங்கம்

$
0
0

Dinamani_logo

ஊடகங்கள் அரசியல்வாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகும் காலம் இது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல நீதித்துறையும் ஊடகங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதுதான் விசித்திரமாக இருக்கிறது. தனி மனித சுதந்திரத்திற்கும், பேச்சு சுதந்திரத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் நமது அரசியல் சட்டத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டிய, காப்பாற்ற வேண்டிய நிர்வாகத் தலைமையும், நீதித்துறையும் ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவும் விமர்சிக்கவும் முற்படுமேயானால், அது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகத்தான் கருதப்பட வேண்டும்.

தேசியப் பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் மீது, முன்னாள் சட்டப் பயிற்சி மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுப் புகார் எழுப்பிய பிரச்னையில், அதுபற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடுவதற்கு தில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதே போன்ற புகார்தான் பத்திரிகையாளர் தருண் தேஜ்பால் மீதும், மேற்கு வங்க மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி அசோக்குமார் கங்குலி மீதும் சுமத்தப்பட்டது. அவர்களுக்கு இல்லாத நீதித்துறைப் பாதுகாப்பு நீதிபதி ஸ்வதந்தர் குமாருக்கு மட்டும் வழங்கப்பட்டது ஏன்? ஆஸ்ரம் பாபு தன்னைப் பற்றிய செய்தி வெளியிடுவதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தால் அப்படிப்பட்ட கோரிக்கையை ஏற்க முடியாது என்று தீர்ப்பே இருக்கும்போது, தில்லி உயர்நீதிமன்றம் எப்படி இதுபோன்று ஒரு கட்டளையைப் பிறப்பித்தது என்கிற கேள்வி எழுகிறது.

இரண்டு நாள்கள் முன்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் தொடர்பான செயல்பாடுகளையும், 2ஜி அலைக்கற்றை முறைகேடுகள் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்களையும் வெளியிட்ட ஒரு இணையதளச் செய்தி மடலை முடக்க வேண்டும் என்றும், அதன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு வழக்கில் மனுதாரர் ஆட்சேபணை செய்யும் குறிப்பிட்ட செய்தித்தகவலை விரிக்கும் "திறப்புகளை' மூடுவதற்கு உத்தரவிடுவதுதான் வழக்கம். ஆனால் இணைய இதழை முழுமையாக முடக்க வேண்டும் என்பது தவறான முன்னுதாரணத்துக்கு வழிவகுத்து விடக் கூடும்.

இதுபோன்ற இணையதள இதழ்களை அமெரிக்காவிலோ, அண்டார்டிக்காவிலோ இருந்தபடியே கூட நடத்த முடியும். அவற்றை முடக்குவதும், நடத்துபவரைக் கைது செய்வதும் எளிதானதல்ல. இணையதளத்தில், இந்திய குற்றவியல் சட்டத்தின்படி தண்டனைக்குரிய பல செய்திகளும், படங்களும், கருத்துகளும் வெளியிடப்படுகின்றனதான். ஆனால், அதையெல்லாம் நீதிமன்ற உத்தரவால் கட்டுப்படுத்திவிட முடியும் என்று நினைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். கருத்து சுதந்திரம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் உலக சூழலில், விமர்சனங்களையும் வக்கிரங்களையும் பொருள்படுத்தாமல் விட்டுவிடுவதுதான் சிறந்த வழி.

அரசியல் கட்சிகள் வழக்கம்போல, தங்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் பத்திரிகைகள், ஊடகங்கள் மீது வெறுப்பை உமிழ்வது அதிகரித்திருக்கிறது. பா.ஜ.க.வில் சேர்ந்திருக்கும் இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி வி.கே. சிங் சில நாள்களுக்கு முன்னால், பத்திரிகையாளர்களை "விபசாரிகள்' என்று வர்ணித்தார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவாளோ, தனது செயல்பாடுகளை விமர்சிக்கும் ஊடகங்கள் சிலரின் சுய ஆதாயத்திற்குத் துணை போவதாகவும், ஊழல்வாதிகளுக்கு விலை போவதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படும் ஊடகங்களை நசுக்கி விடுவதாக எச்சரித்திருக்கிறார். "உள்துறை அமைச்சரான என்னிடம்தான் புலனாய்வுத் துறையும் இருக்கிறது. நான் எல்லா ஊடகங்களையும் கண்காணித்து வருகிறேன். அவர்களின் செயல்பாடுகளை எப்படித் தடுப்பது என்று எனக்குத் தெரியும்' என்று மிரட்டுகிறார்.

தான் ஊடகங்களைக் குறிப்பிடவில்லை என்றும் சமூக வலை தளங்களைத்தான் குறிப்பிட்டதாகவும் இப்போது சப்பைக் கட்டுக் கட்டுகிறார் ஷிண்டே. சமூக வலைதளங்களை தடை செய்ய முடியுமா? மற்றவர்கள் ஊடகங்களைக் குற்றம் சாட்டுவதற்கும் உள்துறை அமைச்சர் ஷிண்டே எச்சரிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. ஊடகங்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்டியவர் பேசும் பேச்சா இது?

அரசு இயந்திரம் ஊடகங்களுக்கு எதிராகச் செயல்படும் அவலத்துக்கு அச்சாரம் போட முற்பட்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர். கருத்து சுதந்திரம் எந்த அளவுக்கு இந்தியாவில் அச்சுறுத்தப்படுகிறது என்பதற்கு இன்னும் ஏராளமான உதாரணங்களைக் குறிப்பிட முடியும். இந்தப் போக்கு இப்போதே தடுக்கப்படாவிட்டால், இந்தியா மீண்டும் ஒரு அவசரச் சட்ட கால நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிடும்

நன்றி தினமணி.

ஊடகங்கள் அரசியல்வாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகும் காலம் இது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல நீதித்துறையும் ஊடகங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதுதான் விசித்திரமாக இருக்கிறது. தனி மனித சுதந்திரத்திற்கும், பேச்சு சுதந்திரத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் நமது அரசியல் சட்டத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டிய, காப்பாற்ற வேண்டிய நிர்வாகத் தலைமையும், நீதித்துறையும் ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவும் விமர்சிக்கவும் முற்படுமேயானால், அது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகத்தான் கருதப்பட வேண்டும்.

தேசியப் பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் மீது, முன்னாள் சட்டப் பயிற்சி மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுப் புகார் எழுப்பிய பிரச்னையில், அதுபற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடுவதற்கு தில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதே போன்ற புகார்தான் பத்திரிகையாளர் தருண் தேஜ்பால் மீதும், மேற்கு வங்க மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி அசோக்குமார் கங்குலி மீதும் சுமத்தப்பட்டது. அவர்களுக்கு இல்லாத நீதித்துறைப் பாதுகாப்பு நீதிபதி ஸ்வதந்தர் குமாருக்கு மட்டும் வழங்கப்பட்டது ஏன்? ஆஸ்ரம் பாபு தன்னைப் பற்றிய செய்தி வெளியிடுவதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தால் அப்படிப்பட்ட கோரிக்கையை ஏற்க முடியாது என்று தீர்ப்பே இருக்கும்போது, தில்லி உயர்நீதிமன்றம் எப்படி இதுபோன்று ஒரு கட்டளையைப் பிறப்பித்தது என்கிற கேள்வி எழுகிறது.

இரண்டு நாள்கள் முன்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் தொடர்பான செயல்பாடுகளையும், 2ஜி அலைக்கற்றை முறைகேடுகள் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்களையும் வெளியிட்ட ஒரு இணையதளச் செய்தி மடலை முடக்க வேண்டும் என்றும், அதன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு வழக்கில் மனுதாரர் ஆட்சேபணை செய்யும் குறிப்பிட்ட செய்தித்தகவலை விரிக்கும் "திறப்புகளை' மூடுவதற்கு உத்தரவிடுவதுதான் வழக்கம். ஆனால் இணைய இதழை முழுமையாக முடக்க வேண்டும் என்பது தவறான முன்னுதாரணத்துக்கு வழிவகுத்து விடக் கூடும்.

இதுபோன்ற இணையதள இதழ்களை அமெரிக்காவிலோ, அண்டார்டிக்காவிலோ இருந்தபடியே கூட நடத்த முடியும். அவற்றை முடக்குவதும், நடத்துபவரைக் கைது செய்வதும் எளிதானதல்ல. இணையதளத்தில், இந்திய குற்றவியல் சட்டத்தின்படி தண்டனைக்குரிய பல செய்திகளும், படங்களும், கருத்துகளும் வெளியிடப்படுகின்றனதான். ஆனால், அதையெல்லாம் நீதிமன்ற உத்தரவால் கட்டுப்படுத்திவிட முடியும் என்று நினைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். கருத்து சுதந்திரம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் உலக சூழலில், விமர்சனங்களையும் வக்கிரங்களையும் பொருள்படுத்தாமல் விட்டுவிடுவதுதான் சிறந்த வழி.

அரசியல் கட்சிகள் வழக்கம்போல, தங்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் பத்திரிகைகள், ஊடகங்கள் மீது வெறுப்பை உமிழ்வது அதிகரித்திருக்கிறது. பா.ஜ.க.வில் சேர்ந்திருக்கும் இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி வி.கே. சிங் சில நாள்களுக்கு முன்னால், பத்திரிகையாளர்களை "விபசாரிகள்' என்று வர்ணித்தார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவாளோ, தனது செயல்பாடுகளை விமர்சிக்கும் ஊடகங்கள் சிலரின் சுய ஆதாயத்திற்குத் துணை போவதாகவும், ஊழல்வாதிகளுக்கு விலை போவதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படும் ஊடகங்களை நசுக்கி விடுவதாக எச்சரித்திருக்கிறார். "உள்துறை அமைச்சரான என்னிடம்தான் புலனாய்வுத் துறையும் இருக்கிறது. நான் எல்லா ஊடகங்களையும் கண்காணித்து வருகிறேன். அவர்களின் செயல்பாடுகளை எப்படித் தடுப்பது என்று எனக்குத் தெரியும்' என்று மிரட்டுகிறார்.

தான் ஊடகங்களைக் குறிப்பிடவில்லை என்றும் சமூக வலை தளங்களைத்தான் குறிப்பிட்டதாகவும் இப்போது சப்பைக் கட்டுக் கட்டுகிறார் ஷிண்டே. சமூக வலைதளங்களை தடை செய்ய முடியுமா? மற்றவர்கள் ஊடகங்களைக் குற்றம் சாட்டுவதற்கும் உள்துறை அமைச்சர் ஷிண்டே எச்சரிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. ஊடகங்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்டியவர் பேசும் பேச்சா இது?

அரசு இயந்திரம் ஊடகங்களுக்கு எதிராகச் செயல்படும் அவலத்துக்கு அச்சாரம் போட முற்பட்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர். கருத்து சுதந்திரம் எந்த அளவுக்கு இந்தியாவில் அச்சுறுத்தப்படுகிறது என்பதற்கு இன்னும் ஏராளமான உதாரணங்களைக் குறிப்பிட முடியும். இந்தப் போக்கு இப்போதே தடுக்கப்படாவிட்டால், இந்தியா மீண்டும் ஒரு அவசரச் சட்ட கால நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிடும்

Viewing all 244 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>